நாறும் தமிழ் மூச்சும் மணக்கும் சமஸ்கிருத‘வாயு’த் தொல்லையும்’ இதுதான் ஞானக்கூத்து!

bad-breath

அகநாழிகை கவிஞர் பொன்.வாசுதேவன் தன்னுடைய facebook ல்  எழுதியதும் அதற்கு நான் எழுதிய மறுப்பும்:

பொன்.வாசுதேவன்:

பொதுவாக தமிழ் மொழியாய்வுகள் மூன்று அடிப்படையில் இருந்து வந்துள்ளன. சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழினை ஆய்வு செய்யும் மொழியாய்வுகள் ஒரு வகை. இம்மாதிரியான மொழியாய்வுகளில் தமிழின் வேர்ச்சொல்லை தேடும்போது சமஸ்கிருதத்திலிருந்து உதாரணம் காட்டி எழுதுவார்கள். இது ஒரு வகையான ஒப்பு நோக்கல். தனக்கு நன்கு புலமையுள்ள ஒன்றோடு வேறொன்றை இணை நோக்கிப் பார்ப்பது இயற்கைதானே.

அடுத்தபடியாக மேலை மொழிகளோடு இணைத்து தமிழ் மொழியை ஒப்பு நோக்குதல். தமிழின் வேர்ச்சொல் பாரசீக மொழியிலிருந்தோ, உருது மொழி அல்லது வேறொரு மொழியிலிருந்தோ மருவிய வார்த்தைகள் என்ற ஒப்பாய்வு. உதாரணத்திற்கு, அரிசி என்ற வார்த்தையை ‘ரைஸ்‘, என்பதிலிருந்து வந்ததாக சொல்வது. அல்லது ரைஸ் என்ற வார்த்தை ‘அரிசி‘யிலிருந்துதான் வந்தது என்று கூறுவது.

மொழியாய்வின் மூன்றாவது பார்வை, தமிழியம், திராவிடம் சார்ந்த பார்வை. தமிழ்தான் அனைத்திற்கும் வேர்ச்சொல் என்ற பார்வை.
மொழியாய்வின் வழியே நாம் கூறும் கற்பிதங்களுக்கு, நிரூபணச் சாத்தியங்களை உண்டாக்குவது மிகவும் முக்கியமானது. இவையெல்லாம் ஒரு தொடக்கப்புள்ளிகள். அல்லது ஒரு புள்ளியின் நீட்சிகள் மட்டுமே. இவ்வாறான மொழியாய்வுகள் தொடரப்படுவது மொழியின் செழுமைக்கும், பூரணத்துவத்துக்கும் வழி வகுக்கும்.

ஞானக்கூத்தனின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.
எனக்கும்
தமிழ்தான் மூச்சு
ஆனால் பிறர்மேல்
அதை விடமாட்டேன்.

மொழிப்பற்று என்பது வேறு, மொழி வெறி என்பது வேறு என்பதை நாம் உணர வேண்டும். மொழி என்பது ஒரு உணர்வாக இருக்க வேண்டும். எனது தாய், எனது மனைவி, எனது மகள் என்பது போல எனது மொழி என்கிற உணர்வும், புரிதலும் அவசியம்.

-பொன்.வாசுதேவன்

**


நான் எழுதியது..

அடுத்த மொழியை இழிவாக பேசுவதும், தன் மொழியை அடுத்த மொழிபேசுகிறவர்கள் மீது திணிப்பதும்தான், தன் மூச்சை அல்ல, தன் ‘வாயுவை’ அடுத்தவர் மீது விடுவதை விட மோசமானது.

இந்திய வரலாற்றில் இந்த இழிவான வேலையை சமஸ்கிருதமே தொடர்ந்து செய்திருக்கிறது. தமிழ் போன்ற பிற மொழிகளை இழிவான மொழி என்றும், சமஸ்கிருதமே தெய்வபாஷை என்றும் இன்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதனால்தான் வழிபாட்டுக்கு தகுதியற்ற மொழி என்று தமிழை ஏளனமும் இழிவும் செய்து ‘ஞானக்கூத்தா’டுகிறார்கள் அவாள்கள்.

ஆனால், தமிழ் எந்த மொழி மீதும் ஆதிக்க செலுத்தியது இல்லை. தமிழ் மீது, பேசுவதற்கே ஆளில்லாத சமஸ்கிருதம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த வரலாற்றுப் பார்வையோடு ஞானக்கூத்தன் நேர்மையாக எழுதியிருந்தால், இப்படித்தான் எழுதியிருக்கவேண்டும்,

‘எனக்கும்
சமஸ்கிருதம்தான் மூச்சு
ஆனால் பிறர்மேல்
அதை விடமாட்டேன்.’

தொடர்புடையவை:

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

‘சமஸ்கிருத கலப்பே தமிழை மேம்படுத்தும்’

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

5 Responses to நாறும் தமிழ் மூச்சும் மணக்கும் சமஸ்கிருத‘வாயு’த் தொல்லையும்’ இதுதான் ஞானக்கூத்து!

  1. அ ன்புமணி. சொல்கிறார்:

    சாட்டையடி தோழர் .! .ஞான ?கூத்தனின் இந்த வரிகளை 20 ஆண்டுகளுக்கு முன் படித்ததாக நினைவு.அது இன்றும் இது போன்ற ஆட்களுக்கு தவறான எடுத்துக்காட்டுக்கு பயன்படுகிறதுஇது மாதிரி ஆட்களுக்கு ஞான பீடை விருது நோபல் விருது போன்றதெல்லாம் கொடுக்கனும்னு ஜால்ரா அடிக்க ஆட்கள் இருக்காங்க. .

  2. Pingback: தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் வளர்த்து ஜாதி காத்தார் | வே.மதிமாறன்

  3. Pingback: ஜெயகாந்தன்- தி இந்து: தமிழ் – தமிழர் விடுதலை | வே.மதிமாறன்

  4. Pingback: தினத்தந்தியின் சாட்டையடி! | வே.மதிமாறன்

  5. Pingback: உயிரைப் பணயம் வைத்து வாழும்.. | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s