..இவர்களுடன் எம்.ஜி.ஆரும் கலைஞரும் மலையாளிகளும்; தீர்வு தமிழ்த்தேசியம்!?

Mosquitoதிராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர் கலைஞர் மு. கருணாநிதியையும் பார்ப்பனர்கள் ஆதரிப்பது அரிது.

இத்தனைக்கும் திமுகவோ அதன் தலைவரோ, தங்களை பார்ப்பனர்களுக்கு நெருக்கமானவர்களாகவே காட்டி வருகிறார்கள். அல்லது ‘நாங்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்களோ, இந்து மத எதிர்ப்பாளர்களோ அல்ல’ என்றும் அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இருந்தாலும் அவர்களை ‘அவாளு’க்கு அறவே பிடிப்பதில்லை.

அப்படியும் தேடி பிடித்து பார்த்தால், தனிப்பட்ட முறையில் தலைமையோடு தொடர்பு உள்ளவர்கள், லாபம் அடைந்தவர்கள் என்று ஒன்றிரண்டு பேரையாவது திமுக ஆதரவாளர்களாக பார்ப்பனர்களில் பார்க்க முடிகிறது.

ஆனால் தமிழகம் வாழ் மலையாளிகளில், ஒரே ஒரு திமுக மற்றும் கலைஞர் ஆதரவாளரை பார்ப்பது முடியாததாகவே இருக்கிறது.

திமுக ஆட்சியில் ஓணத்திற்கு தமிழ்நாட்ல லீவெல்லாம் விட்டப் பிறகும் அதே நிலைதான்.

மலையாளிகள் கேரளாவில் காங்கிரஸ், பாஜக, சிபிஎம் என்று பல கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும்; தமிழகத்திற்கு வந்தால், அவர்கள் கருணாநிதி எதிர்ப்பாளர்களாகவும் எம்.ஜி.ஆர் மேல் ஈடுபாடு கொண்டாவர்களாகவும் அண்ணா திமுகவின் ஆதரவாளராகவுமே இருக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தையும், மலையாளிகளையும் கடுமையாக விமர்சிக்கிற தமிழ்த்தேசியவாதிகளும், தமிழகம் வாழ் மலையாளிகளும் ஒரே மாதிரியான அரசியல் நிலைபாட்டை தமிழகத்தில் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ஆனாலும் ஆச்சரியமாகவே இருக்கிறது.

சமச்சீர் கல்வி எதிர்ப்பு, தமிழ்வழி கல்வி எதிர்ப்பு, தமிழ்த்தேசிய எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் எதிர்ப்பு,  மூவரை தூக்கிலிடுவதில் பேரார்வம் காட்டுகிற பார்ப்பனர்கள், பார்ப்பன பத்திரிகைகள் குறிப்பாக தினமணி போன்றவைகளோடு இணைந்து,

திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு ( நல்ல திறமைசாலியா இருக்கேளே..) மற்றும் எம்.ஜி.ஆர் மீது ஈடுபாடு, அண்ணா திமுக ஆதரவு என்று செயல்படுகிற தமிழ்த்தேசியவாதிகள், மலையாளிகளுடன் இணைந்து தமிழ்த்தேசியத்தை வளர்த்தெடுக்காமல் இருப்பது?

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

தொடர்புடையவை:

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம்; டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி: இதுதாண்டா தமிழ்த்தேசியம்

பாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

6 Responses to ..இவர்களுடன் எம்.ஜி.ஆரும் கலைஞரும் மலையாளிகளும்; தீர்வு தமிழ்த்தேசியம்!?

  1. நலங்கிள்ளி சொல்கிறார்:

    நீங்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசியத்தை அநாகரிகமாக எழுதுவது கண்டனத்துக்குரியது. முதலில் நீங்கள் யார்? தமிழ்த் தேசியரா? இந்தியத் தேசியரா? நாங்கள் எங்கள் தேசம் தமிழ்த் தேசம் என்கிறோம். ஜெயலலிதாவை ஆதரிக்கும் தமிழ்த் தேசியர் யார்? தியாகு, மணியரசன் போன்ற தீவிரத் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் ஜெயலிலிதாவை சேலை கட்டிய கருணாநிதி என்றும், கருணாநிதியை வேட்டிய கட்டிய ஜெயலிலிதா என்றுமே பார்வையை முன்வைத்து வருகின்றனர். இன்று ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்குச் சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதனை வைத்து அவரை சீமான், நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியர்கள் ஆதரிப்பது உண்மையே. ஆனால் இதே நெடுமாறன் ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டுக் கொண்டிருந்த காலத்தில் கூட கலைஞரோடுதான் செயல்பட்டார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டார். ஈழத் தமிழர்களின் அழிப்பை நிறுத்தச் சொல்லி திமுக நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டார். கடைசில் கலைஞர் வாக்களித்தபடி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லாததைக் கண்டவுடன்தான் நெடுமாறன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. சீமானைப் பொறுத்த வரை ஒரு காலத்தில் அவர் தீவிர கலைஞர் ஆதரவாளர் என்பதை நாடறியும். ஆனால் இப்போது சீமானும் நெடுமாறனும் கூடங்குளம் அணுஉலை, ஜெயலலிதாவின் ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பு ஆகியவற்றை எதிர்த்தே வருகின்றனர். அதிமுகவை ஆதரித்துக் கலைஞரை எதிர்ப்பதாக நீங்கள் கூறும் அந்தத் தமிழ்த் தேசியர்கள் யார்? ஏதோ இன்று பார்ப்பனர்கள் கலைஞரை எதிர்ப்பதாகக் கதையளக்கிறீர்கள். என். ராம் இந்து ஆசிரியராக இருந்த போது கலைஞருக்கு எப்படி எல்லாம் ஜால்ரா அடித்தார் என்பதை நாடறியும், விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் ஜெயலலிதாவும் கலைஞரும் ராஜபட்சேவுக்கும் மத்திய அரசுக்கும் நல்ல ஆதரவளித்ததாக அண்மையில் புகழாரம் சூட்டினார் ராம் ஐயங்கார், நல்ல தெளிவான பார்ப்பனர்கள் கலைஞர் நம்மாள் எனப் புரிந்து கொண்டு வெகுநாள் ஆகி விட்டது, சோ போன்ற பார்ப்பனப் பித்துக்குளிகள் மட்டுமே என்னானுலும் நம்மவா ஜெயாதான் என நம்புகின்றனர்,

    நலங்கிள்ளி

  2. Pingback: உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்! | வே.மதிமாறன்

  3. Pingback: அண்ணாவிற்கு பிறகு நெடுஞ்செழியனா.. கலைஞரா? ‘ஜஸ்ட் மிஸ்’ | வே.மதிமாறன்

  4. Pingback: எம்.ஜி.ஆரையே வீழ்த்திய அன்பழகன் | வே.மதிமாறன்

  5. Pingback: புரட்சித்தலைவரின் புரட்சிகரப் பாடல் | வே.மதிமாறன்

  6. Pingback: புரட்சித் தலைவர் தந்த ‘தடி’ விருந்து | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s