Monthly Archives: ஜூன் 2013

‘பல்’ சொத்தை முதல், எல்லா சீர்கேடுகளுக்கும் அந்தாளுதாங்க காரணம்!

பெரியாரை எல்லோரும் கடுமையாக விமர்சிப்பதின் காரணமென்ன? ––ரவிச்சந்திரன் முதன்மையான முழுமையான காரணம், பெரியார் அவுங்க ஜாதிக்காரர் இல்லை அப்படிங்கறதுதான். பெரியார் எதிர்ப்பாளர்களெல்லாம் என்ன காரணம் சொல்லி பெரியார் மீது அவதூறு சொல்கிறார்களோ; அந்த அவதூறை உண்மையாகவே செய்த, செய்கிற தன் ஜாதிக்காரர்களை வெறி கொண்டு ஆதரிக்கிறார்கள், விமர்சிக்க மறுக்கிறார்கள் என்பதே அதற்கு சாட்சி. அது மட்டுமல்ல, … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 6 பின்னூட்டங்கள்

கருணாநிதி எதிர்ப்பு: Be Careful

கருணாநிதி ஒரு தமிழனத் துரோகி. ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது பதவி சுகம் அனுபவித்தவர். கனிமொழிக்காக கட்சிகளிடம் கையேந்தும் கருணாநிதி, ஈழத் தமிழர்கள் நலனுக்காக இப்படி செய்ததுண்டா? தன் குடுபத்திற்காக கட்சி நடத்துகிறார். இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவர். திருவாரூரி்ல் இருக்கும்போது சோத்துக்கு சிங்கி அடித்துக் கொண்டிருந்தவர். இன்றைக்கு இந்த நாட்டையே விலைக்கு வாங்கும் அளவிற்கு … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 10 பின்னூட்டங்கள்

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட சமயங்களிலெல்லாம் அதை வெற்றி கொண்டு மீண்டு வந்த இயக்குநர் மணிவண்ணன், திடீரென்று மரணமடைந்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அவர் குடும்பத்தாருக்கும் அவரோடு நெருக்கமாக பழகியவர்களுக்கும் அதிர்ச்சி கூடுதலாகவே இருக்கும். 2012 ஆம் ஆண்டு பிப்பரவரி 14 ஆம் தேதி காதலர் தின நிகழ்ச்சிக்காக பெரியார் திராவிடர் கழகம் கோவையில் நடத்திய விழாவில் … Continue reading

Posted in கட்டுரைகள் | 15 பின்னூட்டங்கள்

பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு

“இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும், முறைகளும் சரிவர நடைபெறா. அப்படி எங்காவது நடைபெற்றாலும் நிலைத்திருக்க முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படியே இருக்குமானால் 4 அல்லது 5 பெண்கள் கூடி ஒரு ஆணை தங்கள் இன்பத்திற்கென்று ஏற்படுத்தி, அவனுக்கு நல்ல போஷணயும், அழகும் செய்து அடைத்து வைத்து அவனைத் தங்கள் காம இச்சை தீர்க்கும் இன்பப் பொருளாக … Continue reading

Posted in கட்டுரைகள் | 23 பின்னூட்டங்கள்

நாறும் தமிழ் மூச்சும் மணக்கும் சமஸ்கிருத‘வாயு’த் தொல்லையும்’ இதுதான் ஞானக்கூத்து!

அகநாழிகை கவிஞர் பொன்.வாசுதேவன் தன்னுடைய facebook ல்  எழுதியதும் அதற்கு நான் எழுதிய மறுப்பும்: பொன்.வாசுதேவன்: பொதுவாக தமிழ் மொழியாய்வுகள் மூன்று அடிப்படையில் இருந்து வந்துள்ளன. சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழினை ஆய்வு செய்யும் மொழியாய்வுகள் ஒரு வகை. இம்மாதிரியான மொழியாய்வுகளில் தமிழின் வேர்ச்சொல்லை தேடும்போது சமஸ்கிருதத்திலிருந்து உதாரணம் காட்டி எழுதுவார்கள். இது ஒரு வகையான … Continue reading

Posted in பதிவுகள் | 5 பின்னூட்டங்கள்

உண்மையான தமிழ்த் தேசியவாதிகள்!

பலரின் பேச்சுகளைக் கேட்டும், எழுத்துகளைப் படித்தும்கூட தமிழ்தேசியம் என்றால் என்னவென்று புரியவில்லை. சரியான தமிழ்த் தேசியம் என்றால் என்ன? யார் சரியான தமிழ்த்தேசியவாதிகள்? -சாமுவேல். தமிழ்த் தேசியம் என்பது, தி.மு.க.வையும் அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக விமர்சிப்பது, திட்டுவது. அ.தி.மு.க.வையும் அதன் தலைவர் ஜெயலலிதாவையும் தீவிரமாக ஆதரிப்பது, புகழ்வது. இதுதான் சரியான தமிழ்த் தேசியம். ராஜாவை … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 4 பின்னூட்டங்கள்

சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்? திமுகவால் நேர்ந்த..

கடந்த வாரம் நீங்கள் எழுதிய ‘எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்’ என்ற பதிலில், “எழுத்தாளனோ ரஜனி, கமல் இன்னும் பிற நடிகர்கள், இயக்குநர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு ‘அய்யா எதவாது பாட்டெழுத, வசனம் எழுத வாய்ப்பிருந்த போடுங்கய்யா..’ என்று குரலெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. ”  என்று  எழுதியிருந்தீர்கள். நீங்கள் எழுதிய இதே கருத்தை இரண்டு நாட்கள் கழித்து, … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 5 பின்னூட்டங்கள்