Monthly Archives: மே 2013

எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்

எழுத்தாளனை மதிக்காத சமூகம் உருப்படாது என்று எழுத்தாளர்கள் ஜெயமோகனும், மனுஷ்யபுத்திரனும் வெறுப்பாக எழுதி வருகிறார்களே? –தமிழன்வேலு. வாசகர்கள் எழுத்தாளர்களின் தகுதிக்கு மீறிதான் அவர்களை கொண்டாடுகிறார்கள். ‘செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பதுபோல், ‘பிரபலமானவர்கள்தான் அறிவாளிகள்’ என்கிற மூடத்தனத்தின் தொடர்ச்சியாக, பிரபலமானவர்களையே எழுத்தளார்களாக மதிக்கிற மனோபாவமும் சமூகத்தில் நிரம்பி இருக்கிறது. அதனாலேயே எழுதுபவர்கள் எப்படியாவது பிரபலமாகிவிடவேண்டும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

‘காலச்சுவடின்’ சில்லரைத் தனம்

காலச்சுவடு இதழ், ‘பெரியார்: ஒரு பார்வை’ என்ற தலைப்பில், பார்ப்பனர் பி. ஏ. கிருஷ்ணன் என்பவர் 8 ஜனவரி 2012 அன்று சென்னையில் ‘சங்கம் 4’ – விழாவில் பேசியதன் ‘திருத்தப்பட்ட’ முழுவடிவத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் பார்ப்பனர் பி. ஏ. கிருஷ்ணன், அவரே தன் ஜாதியை குறிப்பிட்டு ‘நான் பேசப்போவது பிராமணர்கள் பார்வையில் எனக்குத் தெரிந்த … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

குரலிசை நாயகன் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவாக…

சிவாஜி கணேசன் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஏற்ப எப்படி தன் முகபாவங்களை, உடல்அசைவுகளை; உணர்வுபூர்வமாக, இயல்பாக, மிகையாக வெளிப்படுத்தினாரோ அதுபோல், பாடல்களில் பல பாவங்களை தன் குரலால்; உணர்வுபூர்வமாக, இயல்பாக, மிகையாக நடித்துக் காட்டியவர் டி.எம்.எஸ். குரலிசை நாயகன் டி.எம்.சவுந்தரராஜனின் நினைவாக… தங்கம் இதழில் வாசகர் கேள்விகளுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய பதில்களை மீண்டும் வெளியிடுகிறேன். … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

கீரை விற்பவர் இலக்கியவாதியாக மாறினால், இலக்கியவாதிகள் என்ன ஆவார்கள்?

  ‘சீரியஸ் எழுத்தாளர்கள் கதைகளை சீரியஸாக படிக்கிறார் ஒரு ஆட்டோ டிரைவர்’ என்று சீரியஸ் எழுத்தாளர்கள் சில நாட்களுக்கு முன்பு ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ஆட்டோ ஓட்டுநர்களைப் பற்றி (தொழிலாளர்கள்) இவர்களுக்கு உள்ள மட்டமான அபிப்ராயமே கதை எழுதுகிற ஆட்டோக்காரரை குறித்து பெருமையாக பேச வைத்தது. தன் கதைகளில் பொருளாதர ரீதியாக ஜாதி ரீதியாக உயர்ந்தவனை கிரிமினல் … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

இரண்டாம் பாகம்: சென்னையில் ஒரு நாள்

சென்னையில் ஒரு நாள் போன்ற நல்ல படங்களையே சரியில்லை என்கிறீர்களே, நீங்கள் வந்து படம் எடுத்துப் பாருங்கள். -டி. சௌமியா, சென்னை. சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகம் எடுக்கலாமென்று இருக்கிறேன். ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக, போலிசார் போக்குவரத்தை நிறுத்தி வைத்ததில் எத்தனை உயிர்கள் பலியாகின என்ற விவரங்களோடு. விபத்தில் படுகாயமுற்றவர், பிரசவ வேதனையில் துடித்த … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

தங்கமும் இரும்பும் – ஆதி சங்கரரும் அட்சயதிரிதியையும்

அட்சயதிரிதியை முன்னிட்டு இன்று (13-05-2013) கேப்டன் நியுஸ் சேனலில் ஒளிபரப்பான என்னுடைய பேட்டி: தங்கம் பயனற்ற உலோகம். இரும்பு தான் மனித குலத்தை மேம்படுத்தியது நகை வாங்குவதல்ல, தானமாக தருவது; அட்ச திரிதியை அன்று ஆதி சங்கரர் அதைதான் சொன்னார். தொடர்புடையவை: இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம் இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும் பேச்சுக்கு பேச்சு … Continue reading

Posted in பதிவுகள் | 5 பின்னூட்டங்கள்

வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள். ‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை’ என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை. ஆனால்; … Continue reading

Posted in கட்டுரைகள் | 176 பின்னூட்டங்கள்