தலித் ‘ஞானப்பழம்’

???????????????????????????????

இப்போதெல்லாம் தலிதல்லாதவர்கள், தலித் அரசியலை, தலித் எழுத்தாளர்களை, ஆதரிக்கிறார்களே?

-வினாயகம், பாண்டி.

தீவிரமான இந்துமத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, காந்தி எதிர்ப்பு, இடை நிலை ஜாதிகளின் தலித் விரோத ஜாதி வெறியை அம்பலப்படுத்துவது இவைகளின் வழியாக டாக்டர் அம்பேத்கரை புரிந்து கொள்வது. தலித் அல்லாதவர்களிடம் அவரை பற்றி பேசுவது, எழுதுவது இதுதான் தலித் ஆதரவு அரசியல்.

மாறாக, இவைகள் எதையும் பெயரளவில் கூட செய்யாமல்;  பவுத்தத்தை, தலித் எழுத்தாளரை, தலித் பத்திரிகையாளரை, தலித் தலைவரை ஆதரிப்பதும், ஒப்புக்கு அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவதும், அம்பேத்கருக்கு மாற்றாக தலித் உட்ஜாதி தலைவரை நிறுவுவதும் அதன் மூலம் தன்னுடைய ‘தலித் ஆதரவு கணக்காக’ எழுதிக் கொள்வது கடைதெடுத்த அயோக்கியத்தனம் மட்டுமல்ல; அதுக்குப் பேர்தான் ‘நோவாம நோம்பு கும்புடறது’.

‘அம்மையப்பன்தான் உலகம் உலகம்தான் அம்மையப்பன்’ என்று ஞானப்பழத்தை அபகரித்துக்கொண்ட விநாயகனின் மோசடிக்கு இணையானது.

இப்படி செய்வதின் மூலமாக இவர்கள் தங்களின் தலித் விரோதிகளின் தோழைமையை தக்க வைத்துக் கொள்கிறார்கள். தங்களின் சுயஜாதி உணர்வை மறைத்துக் கொள்கிறார்கள். இவைகளோடே தலித் ஆதரவாளர்களாகவும் இருந்து கொண்டு, தங்களை எல்லா தரப்பிற்கும் ஏற்ற ஏகாம்பரமாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்களால் பாராட்டபட்ட தலித் எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் அதற்கு கைமாறாக, சந்தர்ப்பவாதிகளை பெரிய போராளியாக பாராட்டி சான்றிதழ் வழங்கி விடுகிறார்கள்.

சந்தர்ப்பாதிகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்குமான அக்ரிமெண்ட்.

மாறாக,  டாக்டர் அம்பேத்கரை அவரின் போர்குணத்தோடு கடைப்பிடிப்பவர்களையும் தலித் விரோதிகளை அம்பலப்படுதுபவர்களையும் தலித் – தலித் அல்லாதவர்களின் இந்தக் கூட்டணி ஒன்று சேர்ந்து புறக்கணிப்பார்கள் என்பது அதில் சிறப்பு செய்தி.

*

தங்கம் 2013 ஏப்ரல்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

`தலித்துகள்’ என்று சொல்வது தவறு

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது

என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

அம்பேத்கர் என்னும் ஆபத்து

‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

12 Responses to தலித் ‘ஞானப்பழம்’

 1. ராமய்யா சொல்கிறார்:

  தமிழன்கிட்ட ஒற்றுமையே ஏற்படக்கூடாது. அடிச்சுக்கிட்டு சாகணுங்கிறது தான் உன்னை மாதிரியான மதிகெட்ட மாறன்களோட எண்ணம். இந்த ஒற்றுமை இல்லாததால் ஈழத்துல வாங்கின அடிபத்தாதா.

 2. Tamil Kalanchiyam சொல்கிறார்:

  தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்… வளர்க தமிழ்.

 3. மனோகரன் வெங்கடாசலம் சொல்கிறார்:

  டேய் ராமையா, மதிமாறன் பொறக்கறதுக்கு முன்னாடி என்னமோ எல்லாரும் ஒத்துமையா இருந்த மாதிரியும் மதிமாறன் எழுத ஆரம்பிச்ச பிறகு தான் ஒத்துமை கொலைஞ்சு போய் எல்லாரு அடிச்சிக்கிட்டிருக்க மாதிரி ஏண்டா கெளப்பி உடுற. வேளா வேளைக்கு உடல் கழிவுகளை வெளியேத்துனா இப்படி கண்ட நேரத்துல காத்து உட்டு நாறடிக்கிற நெலமை வருமா! போய் போய் பொழப்பப் பாரு

 4. inthiyan kural சொல்கிறார்:

  எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் உதவித்தொகை
  எஸ்சி, எஸ்டி, பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் முதல் வகுப்பில் (60% க்கு மேல் ) தேர்ச்சி பெற்றிருப்பின், பல்வேறு உதவித்தொகைகளை திராவிட நலத்துறை வழங்கப்பட உள்ளது.

  BRIGHT STUDENTS AWARD
  பத்தாம் வகுப்பில் மாவட்டத்திலியே முதல் மாணவராக வருபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினை ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் வழங்குவார்.
  PRIZE MONEY AWARD
  முதல் அமர்வில் எல்லா பாடங்களிலும் 60 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
  STATE SCHOLARSHIP
  மாநில அளவில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  POST MATRIC SCHOLARSHIP
  மேல்நிலை முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களும் உதவித்தொகையை பெறலாம்.
  கட்டண விலக்கு:
  அரசு/அரசு மானியம் பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு, அக்கல்வி நிலையத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையுடன் இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது.
  SPECIAL LOAN
  விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு இந்த உயர் கல்வி சிறப்பு உதவித்தொகையை அளிக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 7000 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
  வருமான வரம்பு:
  உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ மாணவியரின் பெற்றோர்/பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.50,000க்கும் அதிகமாக இருக்க கூடாது.
  உதவித்தொகை:
  பட்டப் படிப்பு – ரூ.6,500 – ரூ.7,000
  தொழிற் படிப்பு – ரூ.7,000
  மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 75 சதவீத மானியமாகவும் 75 சதவீத கடனாகவும் வழங்கப்படுகிறது.
  எங்கே விண்ணப்பிப்பது?
  மாணவர்கள் பயிலும் கல்வி நிலையத்திலியே விண்ணப்பங்கள் கிடைக்கும். முதல்வர் / இயக்குநர் மூலம் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  மற்ற பிரிவினருக்கு அடுத்த பதிவில் உதவிக்கு இந்தியன் குரல் உதவிமையங்களை அணுகலாம்

  அனைத்து சமுதாய மக்களும் பெரும்பான்மை மக்களின் பொது நலன் கருதி பாடுபட வேண்டும்.தான் சார்ந்த சமுதாய மக்கள் முன்னேற பாடுபடுவது இட ஒதுக்கீட்டுப் பயன் பெற்ற அனைவரின் கடமை. ஒரு முறை இட ஒதுக்கீடு பெற்று அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் அதன் பிறகு அவர்கள் குடும்பத்தினர் யாரும் இட ஒதுக்கீடு மூலம் எந்த அரசு உதவியையும் கேட்கக் கூடாது.
  அவ்வாறு செய்தால் தான் அவர்கள் சார்ந்த மற்ற பிள்ளைகள் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் . ஒருமுறை இட ஒதுக்கீடு மூலம் பலன் பெற்றவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு நல்ல பணம் கட்டி தனியார் பள்ளிகள் மூலம் கல்வியைக் கொடுத்து மீண்டும் இடஒதுக்கீட்டு வரிசையில் முன்னாளல் நிற்பது நியாயமா?.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அதே சமுதாய பிள்ளைகள் அவர்களுடன் போட்டி போட்டு இட ஒதுக்கீடு பெற முடியுமா? வசதியான் நிலையில் இருந்தால் தானே அவர்களுடன் போட்டிபோட்டு வெற்றிபெற முடியும் .

  போட்டியில் தோற்றவர்களை அவர்களது சமுதாய வசதிபடைத்த மக்களால் அடிமையாக நடத்தப் படுகிறார்களே. தன சுய மரியாதையை இழந்து தன சமுதாய பெரிய மனிதர்களுக்கு அவர்கள் மேலும் வளம் பெற இவர்களது வாழ்க்கையை வேலைக்காரனாக, கூலியாக, கையாளாக,அடியாளாக அடமானம் வைக்கின்றார்களே. அனைத்து சமுதாய சமூக ஆர்வலர்களே சிந்தியுங்கள்.

  தீர்வு:
  இட ஒதுக்கீடு பெரும் அனைத்து சமுதாய மக்களும், அனைத்து சமுதாய பெரிய மனிதர்களும் உண்மையாக விழிப்புணர்வு செய்து தான் சார்ந்த சமுதாய மக்கள் மேம்பட செயலாற்ற வேண்டும். அல்லது அரசே இதற்கான சட்டம் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும். செய்வார்களா?

 5. Anand சொல்கிறார்:

  பெரும்பாலோனோரின் உண்மையான நோக்கம், இரு தரப்பினரை அடித்துக்கொள்ள விட்டு வேடிக்கை பார்ப்பதே.

 6. Pingback: வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா? | வே.மதிமாறன்

 7. பூஆ.இளையரசன் சொல்கிறார்:

  …………….பவுத்தத்தை, தலித் எழுத்தாளரை, தலித் பத்திரிகையாளரை, தலித் தலைவரை ஆதரிப்பதும், ஒப்புக்கு அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவதும், அம்பேத்கருக்கு மாற்றாக தலித் உட்ஜாதி தலைவரை நிறுவுவதும் அதன் மூலம் தன்னுடைய ‘தலித் ஆதரவு கணக்காக’ எழுதிக் கொள்வது கடைதெடுத்த அயோக்கியத்தனம் மட்டுமல்ல; அதுக்குப் பேர்தான் ‘நோவாம நோம்பு கும்புடறது’.

  *டாக்டர் அம்பேத்கரை அவரின் போர்குணத்தோடு கடைப்பிடிப்பவர்களையும் தலித் விரோதிகளை அம்பலப்படுதுபவர்களையும் தலித் – தலித் அல்லாதவர்களின் இந்தக் கூட்டணி ஒன்று சேர்ந்து புறக்கணிப்பார்கள் என்பது அதில் சிறப்பு செய்தி.

  தோழர் அருமையான பதிவு.

 8. பூஆ.இளையரசன் சொல்கிறார்:

  ‘சந்தர்ப்பாதிகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்குமான அக்ரிமெண்ட்.’

  தலித் அரசியல் என்று வேடம் போட்டுக்கொண்டு அலப்பரை கொடுப்பவர்களை நன்றாக அம்பலப்படத்தியுள்ளீர்கள் வாழ’த்துக்கள்…!

 9. பெ.இளங்கொவன் புதுச்சேரி சொல்கிறார்:

  ‘அம்மையப்பன்தான் உலகம் உலகம்தான் அம்மையப்பன்’ என்று ஞானப்பழத்தை அபகரித்துக்கொண்ட விநாயகனின் மோசடிக்கு இணையானது.
  அருமையான பதிவு.

 10. Pingback: ஆ. ராசா வெற்றிபெற வேண்டும்.. | வே.மதிமாறன்

 11. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  பார்ப்பனர் சாப்பிட்ட புனித எச்சிலையில் உருண்டு மகிழ்ந்து பிறவிப்பயன் பெறும் தலித்துக்கள். சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட பன்றிக்களை யாரால் திருத்த முடியும்?. ஆகையால்தான் அம்பேத்கர் இவர்களை இட ஒதுக்கீடு எனும் ஜாதி சாக்கடையில் அடைத்து கல்லா கட்டினார்.
  ———————————–

  “ஜாதி இல்லை, இல்லை, இல்லவே இல்லை.…”

  ஒரு பெரிய பெரியாரிஸ்ட்டும் சின்ன தலித்தும் ப்ரண்ட்ஸ். ஒரு நாள் பெரியாரிஸ்ட்கிட்ட தலித் ஒரு டவுட்ட கேக்கறாரு….

  தலித்: அண்ணே… ஒரு சின்ன டவுட்டு…

  பெரியாரிஸ்ட்: ம்ம்… சொல்றா…

  தலித்: அண்ணே… ஜாதி இல்ல ஜாதி இல்லனு ஒங்க ஆளுங்க மேடைல பேசறாங்க… ஆனா கடைசில, அவுங்கவுங்க ஜாதிக்குள்ளதானெ சம்பந்தம் வக்கறது, கொடுக்கறது வாங்கறது எல்லாம் பண்றாங்க… எங்கள கீழ்ச்சாதியா ஒதுக்கிதான வக்கறாங்க… எங்கண்ணே பெரியாரு ஜாதிய ஒழிச்சாரு?.

  பெரியாரிஸ்ட்: ஓஹோ.. அப்படி வர்ரியா… சரி.. என் ஜாதி என்னடா?

  தலித்: தேவருங்க…

  பெரியாரிஸ்ட்: ஒன் ஜாதி என்னடா?

  தலித்: பறயனுங்க…

  பெரியாரிஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்கா?

  தலித்: இல்லண்ணே…

  பெரியாரிஸ்ட்: ஒன் ஜாதி எங்கிட்ட இருக்கா?

  தலித்: இல்லண்ணே…

  பெரியாரிஸ்ட்: அப்ப ஜாதி எங்கடா?

  தலித்: இப்படி சொன்னா எப்படிண்ணே…. ஒங்க ஜாதி ஒங்ககிட்ட…

  பெரியாரிஸ்ட்: டேய்…. ஜாதி இருக்குனு எப்பவாச்சும் நாங்க சொன்னோமாடா?.

  தலித்: இல்லண்ணே… ஜாதி இல்லேன்னுதாண்ணே சொல்றீங்க…

  பெரியாரிஸ்ட்: (சிவாஜி ஸ்டைலில், கண்கள் சிவக்க) அதத்தான் திருப்பி திருப்பி சொல்றேன்… ஒன் ஜாதி எங்கிட்ட இருக்காடா?.

  தலித்: இல்லண்ண….

  பெரியாரிஸ்ட்: என் ஜாதி ஒங்கிட்ட இருக்காடா?.

  தலித்: (கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டார்) இல்லண்ணே….

  பெரியாரிஸ்ட்: (கையில் பீச்சட்டியுடன்) ஜாதி இருக்காடா பற நாயே?.

  தலித்: இல்லண்ணே…இல்லண்ணே.. ஜாதி இல்லவே இல்லண்ணே… (அழுது கொண்டே தலைதெறிக்க ஓடுகிறார்)

 12. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  ஜாதி சாக்கடையில் சுகம் கண்ட தலித் துரோகி அம்பேத்கர்:

  “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி” என தந்தை பெரியார் போதித்தார். அதாவது, பார்ப்பனீயத்தை வேரறுத்தால், சூத்திரனுக்கு விடிவுகாலம் வந்துவிடும் என்பதே பெரியாரின் வியூகம்.

  1930களில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த காலம். பாக்கிஸ்தானை உருவாக்குவதில் முஸ்லிம்கள் மும்முரமாக இருந்தனர். அதே சமயம், திராவிட நாட்டை உருவாக்க தந்தை பெரியாரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். பார்ப்பனரல்லாத தேவர், முதலியார், கள்ளர், கவுண்டர் போன்ற ஆதிக்க ஜாதியெல்லாம் தந்தை பெரியாரோடு தோளோடு தோள் நின்று பாப்பானின் பூணூலை மும்முரமாக அறுத்துக் கொண்டிருந்தனர்.

  இந்த சமயத்தில், “ஹிந்துவாக பிறந்து விட்டேன், ஹிந்துவாக சாகமாட்டேன்” என பீலா விட்டுக்கொண்டிருந்த அம்பேத்கர், 1932ல் காந்தியோடு பூனா ஒப்பந்தம் செய்து தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிசாக்கடையில் அடைத்து கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்.
  —————–

  ஏன் அம்பேத்கர் பார்ப்பனீயத்திடம் சரணடைந்தார்:

  ஒவ்வொரு தலித்தும், பாப்பான் போல் வேதம் ஓதும் அர்ச்சகனாகவே ஏங்குகிறான். அடிமனதில் தலித் பெண்களை தலித் வெறுக்கிறான். இட ஒதுக்கீட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என பெரிய பதவி பெற்ற பெரும்பாலான தலித்துக்கள், அழகான பார்ப்பன பெண்களை மணமுடித்து நவீன பார்ப்பனராகி விட்டது கண்கூடு. பதவி பணம் வந்ததும், அம்பேத்கரும் அவாளோட அத்திம்பேர் ஆகிவிட்டார்.

  பிள்ளையார் சிலையை பெரியார் செருப்பால் அடித்து சுக்கு நூறாக உடைக்கும் போதெல்லாம், அவருக்கு பாதுகாப்பாக நின்றவர் உயர்ஜாதி ஹிந்துக்களே. ஒரு தலித் தலைவர் கூட பெரியாருக்கு ஆதரவு தரவில்லை.

  ஆண்டைகள் தலித்துக்களை உதைக்க உதைக்க, தலித் தொகுதிகளில் தலித் அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு மழை கொட்டுகிறது. அவர்களும் பின்கதவு வழியாக அய்யா அம்மாவின் காலில் விழுந்து “எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கு நன்றியுள்ள நாயா இருப்பேன் அய்யா, அம்மா. இவனுகள நல்லா ஒதைங்க” என பெட்டி வாங்கிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வழிந்தோட ஓடுகின்றனர்.

  பணமும் பதவியும் வந்ததும், அம்பேத்கர் போல் ரஜினியும் அவாளோட அத்திம்பேராகி விட்டார். இதுதான் தலித் தலைவர்களின் லட்சணம். இந்த லட்சணத்தில், கீழவெண்மணியில் ஏன் பெரியார் தலித்துக்களை காப்பாற்ற வரவில்லை என கேட்பது நியாயமா?.
  ————————

  1. பாப்பானின் பூணுலை அறுத்து, மேல்ஜாதி ஹிந்துக்களின் உரிமைகளை பெரியார் காப்பாற்றிவிட்டார். பெரியாருக்கு எதிராக பாப்பாத்தி மூச்சு விடமாட்டாள். தி.க’வுக்கு தரவேண்டிய பங்கை, இன்றைக்கும் சரியாக வீடு தேடி வந்து பாப்பாத்தி தருகிறாள்.

  2. மேல்ஜாதி ஹிந்துக்கள் தலித்துக்களை உதைக்கும் போதெல்லாம் “நீ ஜாதி சாக்கடையில் இருப்பதால்தானே அவன் உதைக்கிறான்?. ஜாதியை விட்டு வெளியேறு. இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என அட்வைஸ் செய்தார். “அய்யோ ராசா.. போய்ட்டியாடா… ஜாதி ஒழிக.. தீண்டாமை ஒழிக” என பீலா உட்டு கல்லா கட்டவில்லை.

  அதாவது, மேல்ஜாதி ஹிந்துக்கள் உதைத்தால்தான் தலித்துக்கள் இஸ்லாத்துக்கு ஓடி வருவர். பல மீனாட்சிபுரங்கள் ரஹ்மத் நகராக மாறும். ஒரு கட்டத்தில், முஸ்லிம்கள் மெஜாரிட்டியாகி தமிழகம் முஹம்மத் பட்டினமாக மாறிவிடும்,

  இதுதான் ரகசிய முஸ்லிம் வாப்பா பெரியாரின் திட்டம். புரிஞ்சா சரி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s