விஸ்வரூப விவகாரமும் இஸ்லாமிய தலைவர்களும்

Viswaroopam

விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினையில் இஸ்லாமிய தலைவர்கள் நடந்து கொண்டது சரிதானா?

-கே. சாதிக், திருநெல்வேலி.

இஸ்லாமியர்கள் எதிர்ப்பு கண்ணோட்டம் கொண்ட சினிமா மற்றும் இலக்கியத்தை முதலில் கண்டித்தது இஸ்லாமியர்களோ அல்லது இஸ்லாமிய அமைப்புகளோ அல்ல.

பெரியாரிய சிந்தனையாளர்கள்தான் அதை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செய்தனர்.

பொதுவாக இஸ்லாமிய அமைப்புகள்,  திரைப்படங்களில் இஸ்லாமியர்களை இழிவாக காட்டுவதை பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை; மாறாக இஸ்லாத்தை இழிவாக சித்தரித்தால்தான் பொங்கி எழுவார்கள்.

அதனால்தான் இஸ்லாத்தை உயர்வாக காட்டிவிட்டு இஸ்லாமியர்களை இழிவாக சினிமா எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

துப்பாக்கி பட எதிர்ப்பிலிருந்துதான் ஆரோக்கியமான மாற்றம் இஸ்லாமியர்களிடம் நிகழ்ந்தது. பிறகு கமலின் இஸ்லாமியர் எதிர்ப்பிற்கு எதிராகவும் இஸ்லாமியர்களின் ‘விஸ்வரூபத்தை’  பார்க்க முடிந்தது.

ஆனாலும் இஸ்லாமிய தலைவர்களிடம் விஸ்வரூப எதிர்ப்பில் தன்முனைப்பு கூடுதலாக தெரிந்தது.

கமல் விஸ்வரூபத்தில் சித்தரித்ததைவிட, விஸ்வரூப விவகாரத்தில் ஊடகங்கள் இஸ்லாமிய தலைவர்களை வில்லன்களாக சித்தரித்தது அதிகம்.

அதை புரிந்து கொள்ளாமல், தொலைக்காட்சி பேட்டிகளில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொண்டார்கள் தலைவர்கள். இஸ்லாமிய மக்களிடம் இந்த விவகாரத்தில் யார் பெயர் எடுப்பது என்ற பாணியில் இருந்தது அந்த அணுகுமுறை.

கமலும் அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

*

தங்கம் 2013 மார்ச்  மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

This entry was posted in கேள்வி - பதில்கள் and tagged . Bookmark the permalink.

4 Responses to விஸ்வரூப விவகாரமும் இஸ்லாமிய தலைவர்களும்

 1. princenrsama சொல்கிறார்:

  பாபர் மசூதி இடிப்பின் பின்னான இந்துத்துவ அரசியலுக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிகப்பெரியது. ஆனால் அதே ஊடகங்கள் தாங்கள் இஸ்லாமியரைக் குற்றம் சாட்டிய பெரும்பாலான வழக்குகளின் பின்னணியில் இருக்கும் காவித் தீவரவாதத்தை வெளிச்சமிட்டுக் காட்டவேயில்லை. இப்படிப்பட்ட ஊடகங்களை, திரைப்படங்களை இந்திய அளவில் முற்போக்கு சக்திகள் தொடர்ந்து அம்பலப்படுத்தியே வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்த அளவில், திராவிடர் கழகமும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும், இதர முற்போக்கு இயக்கங்களும் இந்துத்துவத்தின் இந்தச் சதியை எழுத்தின் மூலமாகவும், பேச்சின் மூலமாகவும் தொடர்ந்து மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

  இந்தப் பின்புலத்தில் தான் விஸ்வரூபம் படப் பிரச்சினையை நாம் அணுக வேண்டியிருக்கிறது; இஸ்லாமிய இயக்கங்களின் அணுகுமுறை சரியானது தானா? என்பதையே நாம் ஆராய வேண்டியிருக்கிறது. ரோஜா முதலான இஸ்லாமிய எதிர்ப்புப் படங்களுக்கு எதிராக எழுதிய பேசிய இந்த முற்போக்கு இயக்கங்கள் இப்போது எதுவும் செய்வதில்லையா? அவர்களுக்கு அக்கறை இல்லாததால் இஸ்லாமிய அமைப்புகள் நேரடியாகக் களமிறங்கியிருக்கின்றனவா? என்ற கேள்வி எழுகிறது. ஒட்டுமொத்த சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள் குரல் எழுப்பாவிடில் பாதிக்கப்படுபவர்கள் எழுப்பத்தானே செய்வார்கள் என்றொரு கருத்தும் எழுகிறது. ஆனால் இக்கருத்து குறித்து ஆராய்வதற்கு முன் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் படத்திற்கு எழுந்த எதிர்ப்பை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் குறும்படத்தை எடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த இருவர், அதனை யூ டியூப் இணையதளத்தில் வெளியிட்டார்கள். அப்படத்தைத் தடை செய்யவேண்டும் என்று உலக அளவில் இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சி சென்னையில் மிகப்பெரிய ஊர்வலமாகவும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரக வாயிலில் ஏற்பட்ட பிரச்சினையுமாக வெளிப்பட்டது. இதனை முன்னெடுத்தவை இஸ்லாமிய இயக்கங்கள்.

  சொன்ன காரணம் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்பது! இஸ்லாமியர்கள் மீதான மதவாத, அரசியல் காழ்ப்புணர்வில் அரசியல், சமூக ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டபோதும், திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட போதும், இஸ்லாமியர்கள் மீதான ஊடகப் போர் பற்றியும், இந்துத்துவத்திலிருந்து காக்கும் கேடயமாகக் குரல் கொடுத்த முற்போக்கு சக்திகள் இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்கவும் முடியாது. காரணம் – மத உணர்வுகள் புண்படுகிறது என்பது பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகள் எல்லாவற்றிற்கும் எதிராகச் சொல்லப்படும் சாக்கு! தலையில் ஏன் தேங்காய் உடைக்கிறீர்கள் என்றாலும், பர்தா ஏன் அணிய வேண்டும் என்று கேள்விகேட்டாலும் எங்கள் மத உணர்வு அது என்று தான் பதில் வரும். எனவே மத உணர்வுகள் புண்படுகிறது என்ற வாதம் எந்த மதத்திலிருந்து வந்தாலும் அது குறித்து பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்கள் கவலை கொள்ள முடியாது. மனித உரிமைகள் தான் நமக்குக் கவலை.

  எனவே, அதுவரையில் இஸ்லாமியர் மீதான கடந்த 20 ஆண்டுகள் நடந்த மறைமுக திரைப்பட யுத்தத்தின் போதெல்லாம் பெரும் குரல் எழுப்பாத இஸ்லாமிய இயக்கங்கள் (இதற்கிடையில் உன்னைப் போல் ஒருவன் படம் குறித்து நேரடியாகக் கமலையே சந்தித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்), இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்க்கு எதிரான போராட்டத்தின் வெற்றியால், இத்தகைய போராட்டத்தைத் (துப்பாக்கிக்கான எதிர்ப்பு உள்பட) தாங்களே கையில் எடுத்துக் கொண்டார்கள் என்றே கணிக்க முடிகிறது. ரிஸானா மரணதண்டனைக்கு எதிரான மனிதநேயக் கருத்துகளைத் தெரிவித்தவர்கள் மீதும், மோசமான தாக்குதலை செய்தவர்கள் தான் இப்பிரச்சினை குறித்தும் வேகமாகத் தங்களைக் காட்டிக் கொண்டார்கள். ஒரு சிலரின் வேகம் பிற இயக்கங்களையும் இழுத்து வந்தது. படம் வெளிவரும் முன்பே, படத்தைப் பார்க்காமலேயே இது குறித்த கருத்துகளை ஊடகங்களில் தெரிவிக்கவும், காவல்துறையிடம் மனு கொடுக்கவும் தொடங்கிவிட்டார்கள். படம் பார்த்த பின்னும் அப்படியே நடந்து கொண்டார்கள். http://www.unmaionline.com/new/66-unmaionline/unmai2013/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28/1324-viswaroopam.html

 2. தமிழானவன் சொல்கிறார்:

  விஸ்வரூபம் பட விவகாரத்தில் இஸ்லாமியத் தலைவர்கள் இந்து இயக்கத் தலைவர்கள் போலவே நடந்து கொண்டார்கள். விஸ்வரூபம் ஆப்கானியர்களைத் தவறாக சித்தரித்தது, அமெரிக்க அடிமைத்தனத்தையும் ஏற்றிப் போற்றியது. அமெரிக்க இந்திய உளவுத்துறை அடியாளாக ஒரு இஸ்லாமியனைச் சித்தரித்தது. அதை இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் அப்படியே மதத்துக்கு எதிரானது, இவ்வளவு கீழ்த்தரமாக இஸ்லாத்தை இழிவுசெய்து இதுவரை படமே வரவில்லை என்று இஸ்லாமியரிடையே மதவாத உணர்ச்சியைக் கிளப்பினார்கள். இறைவனின் திருப்பெயரால் ஒடவிடமாட்டோம். உங்க தோழர்கள் வினவு, செங்கொடி சொல்வதும் இந்த ரீதியில்தான். ஆனால் நீங்கள் மட்டும் இன்னும் இஸ்லாமியரை இழிவுபடுத்தியதாக எழுதி வருகிறீர்கள். வெளிநாட்டு இயக்கங்கள் செய்யும் குண்டு வெடிப்புகளைக்கொண்டு இந்திய இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி வருகின்றன ஊடகங்கள். வேறு அரசியல் காரணங்களால் இஸ்லாமிய இயக்கங்கள் செய்வதற்கும் இங்கிருக்கும் இஸ்லாமியர்களைத் தொடர்புபடுத்தக் கூடாது என்றுதானே சொல்லி வருகிறோம். ஆனால் இவர்களோ தாலிபன்களை முஸ்லிம்கள் என்ற கட்டத்துக்குள் அடைத்து எங்களை இழிவுபடுத்துகிறார்கள் என்று இவர்களாகவே பேரைக் கெடுத்துக் கொள்கிறார்கள். விஸ்வரூபம் படம் பார்த்தவர்கள் இதில் அப்படி ஒண்ணுமே இல்லையே என்றுதானே சொன்னார்கள். இஸ்லாமிய இயக்கங்கள் நினைத்தால் மதத்தின் பெயரால் மக்களைக் கிளப்ப முடியும் என்பதும், மதம் என்றால் முஸ்லிம்கள் என்ன ஏதென்று கேட்காமலே எதிர்ப்பார்கள் என்பதும் நிரூபணமானது.

  இஸ்லாமிய மதவாதிகளின் நோக்கம், இஸ்லாமியர்களை இழிவாக சித்தரிக்கும் படங்கள் ஊடகங்களை எதிர்ப்பதையும், இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை விமர்சிப்பவர்களையும் ஒரே இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்று திசைமாற்றும் தந்திரமே.

  //விளம்பரம் செய்வதில் கில்லாடி நாயகன் அதைத் தனக்குச் சாதகமாக மடைமாற்றினார். இந்திய தேசியவாதத்தை மயிர்க்கூச்செரிய சிலாகிக்கும் கமல்ஹாசன் எவ்விதம் அர்ஜுன், விஜயகாந்த் படங்களிலிருந்து வேறுபடுகிறாரென்றால் பிரதமராக, முதலமைச்சராகவோ ஒருநடிகரைக் காட்டாமல் ஜெயலலிதா, முக, மன்மோகன் சிங் ஆக அப்படியே காட்டி விடுவார். //

  துப்பாக்கி எதிர்ப்பில்தான் இஸ்லாமியரிடம் ஆரோக்கிய மாற்றம் நிகழ்ந்தது, அது விஸ்வரூபத்தில் மதநோயாக மாறி விட்டது. இஸ்லாமியதலைவர்களை ஊடகங்கள் சித்தரித்ததை விட நீங்கள் விஸ்வரூபத்த எதிர்த்த விதம் உங்கள் மீதான எனது அபிமானத்தை மாற்றி விட்டது. “விஸ்வரூபம் தடை கமலுக்கு ஆதரவான நடவடிக்கை” பின்பு மீண்டும் “தமிழக அரசு எதற்காக தடை செய்தது என்பது தேவையில்லை ஆனால் தடையை ஆதரிப்போம்.” படத்தைப் பார்த்துவிட்டு “படம் நன்றாக இல்லை” என்றெல்லாம் நீங்கள் எழுதிய பதிவுகள் விஜய் படத்தைக் கண்டு விமர்சிக்கும் அஜித் ரசிகனின் மனநிலையயே காணமுடிந்தது. அவர்கள் சௌதி, பர்தா, ஷரியா, – இவைகளை ஆதரிக்காதவன் இஸ்லாமிய த்ரோகி, இனம் என்று தமிழ்தேசியவாதிகள் ரேஞ்சுக்கு பட்டையைக் கிளப்பிக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். மலாலாவை சுட்டதை ஆதரித்து எழுதிய பதிவுகள் இணையத்தில் கிடக்கின்றன. நீங்கள் இன்னும் இஸ்லாமியரின் வீட்டில் தயிர்சாதம் கேட்கக்கூடாது என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். பிஜே மனுஸ்யபுத்திரனையும், கமலையும் இழிவு செய்து எல்லா இடத்திலும் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்ததால் நீங்களும் அவர்களை அதிகம் தாக்காமல் அடக்கி வாசிக்க வேண்டியதாயிற்று.

  மலாலா ஒரு மார்க்ஸிஸ்ட் என்று ஃபேஸ்புக்கில் சொல்லிக் கொள்கிறார்கள்.

  சரி, தாலிபன்கள் அமெரிக்காவிடம் காசு வாங்கிக் கொண்டுதான் அமெரிக்காவுக்கு எதிராகவே போராடுகிறார்களாமே ?

  ஈராக்கில் அமெரிக்கனை விட்டு விட்டு ஷ்யாக்களும், சுன்னிகளும் மாறி மாறி போரிட்டு மடிகிறார்களே

  சிரியாவில் அமெரிக்க அடிமைகளாக அந்நாட்டுக்கு எதிராக போராடுகிறவர்கள் மற்ற நாட்டு முஸ்லிம்களே

  அமெரிக்க கூட்டாளியான சௌதியை விமர்சித்தால் என்ன வகையான எதிர்வினை வருமென்பதைப் ரிஸானா வரை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

  அதே நேரம் சௌதியின் அமெரிக்க நட்பை பெரியளவில் விமர்சிக்கக் காணோம், நீங்க எப்படி இளையராசாவைக் கண்டு கொள்ளாமல் ரஹ்மானின் பார்ப்பனக் கைக்கூலித்தனத்தினைக் கண்டுபிடித்து விமர்சிக்கறீங்களோ அது போல.

  ஜெயா கமல் வணிகப்போட்டியில் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களையும் இஸ்லாமியர்களையும் பற்றி ஒன்றும் சொல்லாமல் இன்னும் அதே பழைய பாட்டையே பாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

  நான் சொன்னதெல்லாம். உன்னைப் போல் ஒருவனுக்கும் இனி வரவிருக்கும் விஸ்வரூபம் படத்திற்கும் பொருந்தாது. இந்தியாவில் நடக்கவிருக்கும் கதையான விஸ்வரூபம் 2 நிச்சயமாக இஸ்லாமியரை இழிவுபடுத்தும் காட்சிகளுடன் வரும். அதற்கு ஏற்பட வேண்டிய நியாயமான எதிர்ப்பை ஓவர் ஸ்மார்ட்டாக விஸ்வரூபத்தின் முதல் பாகத்திற்குக் காட்டி கமலுக்கு ஏற்படும் சங்கடங்களைத் தவிர்த்து விட்டார்கள்.

 3. Dr.A.Anburaj சொல்கிறார்:

  Dr.A.Anburaj,
  இந்துக்கள் காபீர்களாம்.பிஜி கூறுகிறார்.
  குரான் கூறுகிறது.,இந்துக்களோடு பழகாதே.நண்பர்களாக இந்துக்களை வைத்துக்கொள்ளாதே. தெய்வகுற்றம் வரும் என்று முகம்மது மிரட்டுகின்றார்.குரானின் யோ்க்கியதைஇதுதான். இதை நம்புகிறவன் எப்படியிருப்பான். படித்துவிட்டு கவிதை வரையலாமே
  காபிர்களோடு பழகக்கூடாது, நட்பு பாராட்டக்கூடாது.
  Qur’an 3:118
  3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்.
  4:144. முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
  5:57. முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
  60:4. இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”
  9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

 4. siraaj சொல்கிறார்:

  அன்புராஜ் அவர்களே … காபிர் என்பது தரக்குறைவான வார்த்தை கிடையாது. காபிர் என்றால் ஓர் இறை கொள்கையை நிராகரிப்பவர் என்று அர்த்தம். முன் பின் குரான் வசனங்களை கத்தரித்துவிட்டு எதற்காக எந்த சூழ்நிலையில் கூறப்பட்டது என்பதை எல்லாம் மறைத்துவிட்டு காழ்புனற்சியோடு இஸ்லாமை விமர்சிப்பவர்களில் நீங்களும் ஒருவர். இரண்டு விஷயங்களை மட்டும் கூறுகிறேன் நபி அவர்களுக்கு உதவியாளராக இருந்தவர் ஒரு யூதர். நபி அவர்கள் வறுமையின் காரணமாக 2 மரக்கால் கோதுமைக்காக தன் கவச உடையை ஒரு யூதரிடம் அடகு வைத்து மீகபடாமலேயே மரணித்தார்கள். நடுநிலையோடு இஸ்லாத்தை பாருங்கள். இஸ்லாமின் மகத்துவம் புரியும் நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s