குழந்தையை கொன்ற வேங்கட ராஜபக்ச ஜலபதி!

prabakaran

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன், சிறுவன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாகக் கொன்றுள்ளனர். சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள படம் தெளிவாக சாட்சி சொல்கிறது.

பாலசந்திரனுக்கு உண்பதற்கு பிஸ்கட்டும், குளிருக்கும் உடையும் தந்த பிறகு கொன்றிருக்கிறார்கள்.

குழந்தையை ராணுவம் பிடித்து வைத்து, அவனுடன் உரையாடி அவன் ‘பசியும் குளிருமாக இருக்கிறேன்’ என்று சொன்ன பிறகு, அதற்கு உடையும், உணவும் தந்துவிட்டு, ‘முக்கியமானவரின்’ உத்தரவுக்காக காத்திருந்திருந்திருக்கிறார்கள்.

உத்தரவு வந்தவுடன் கொன்றிருக்கிறார்கள்.

அந்த உத்தரவை ராஜபக்சேவைத் தவிர வேறு யார் தந்திருக்க முடியும்?

‘தமிழர்களுக்கு எதிராக எவ்வளவு கொடூரம் செய்தாலும் திருப்பதி வேங்கடாஜலபதி (இந்தியா) துணையாக இருக்கும் வரை என்னை யார் என்ன செய்ய முடியும்?’ என்ற திமிரோடு இருக்கும் தேவந்திர ராஜபக்சேவின் கொலைவெறிக்கு திருமாலே (இந்தியா) காரணம்.

சர்வேதச குற்றவாளிகளாக அறிவிக்கப்படவேண்டியது ராஜபக்சே அரசு மட்டுமல்ல; சோனியா அரசும்தான்.

தொடர்புடையவை:

அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

ராஜபக்சேவை தடுத்து திருப்பிய லண்டன் வாழ் தழிர்கள்.. ஆனால் நம்மால்..?

கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

12 Responses to குழந்தையை கொன்ற வேங்கட ராஜபக்ச ஜலபதி!

 1. Nithil சொல்கிறார்:

  Not only Sonia govt but the major ally, DMK lead by Karunanidhi

 2. arasu சொல்கிறார்:

  கூமுட்டை. இந்த பதிவை வாசி. வேங்கடாஜலபதியா, அல்லாவான்னு புரியும்.

  http://vanjoor-vanjoor.blogspot.in/2013/02/blog-post_20.html

 3. R Chandrasekaran சொல்கிறார்:

  அய்யா அரசு மதியால் அல்லாவையும் திமுகவையும் பார்க்க இயலாது.. பூனை கண்களை மூடிக்கொள்ளும் என்று தெரியாதா .. அதை முதலில் நீர்புரிந்து கொள்ளும்

 4. Anantha Putthiran சொல்கிறார்:

  உயிர்களை கொல்வது பாவம். அதற்கு விடுதலை புலிகளுக்கு தண்டனை கிடைத்துவிட்டது. ஆனால் இலங்கை அரசுக்கு!?

 5. Natarajan சொல்கிறார்:

  தி மு க பல்லிழந்த புலி போல் உள்ளது. –தி மு க செய்த பெரிய தவறு காங்கிரசுடனும் பா ஜ க வுடனும் கூட்டணி வைத்தது.– நாயர் பிடித்த புலிவால் போல ஆனது.– தானாக ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை.– இலங்கை போரின் போது 2008 அல்லது 2009 ல் தன்னுடைய எம் பி பதவியை தமிழக ஆட்சியையும் துறந்திருக்க வேண்டும். –அ தி மு க ஆட்சிக்கு வரக் கூடாது என்பது ஒன்றே ஒரே குறிக்கோளுடன் ஆட்சி செய்தால் சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது. –ஆட்சி வரும் போகும் என்று ஆட்சி போன பின் புலம்புவதை விட முன்பே ஆட்சியைத் துறந்தால் மதிப்பு பெருகி இருக்கும்.– மக்களிடமும் மதிப்பு பெருகி இருக்கும்.– இப்பொழுதாவது இலங்கை காவேரி விவகாரத்தில் மத்தியில் பதவியை துறந்திருக்கலாம்.– இப்பொழுது கூட செய்யலாம்.

 6. gnanasekaran சொல்கிறார்:

  சரியாக சொன்னீர்கள் . சோனியா இருக்கும் வரை இந்தியாவுக்கு எந்த முனேற்றமும் இல்லை

 7. Paiya சொல்கிறார்:

  muttaaL

 8. வாஞ்சூர் போன்றவர்களுக்கு இலங்கையில் இஸ்லாமியர்களும் மொத்தமாகத் துடைத்தெறியப்பட்ட பிறகு தான் புத்தி வரும் போலிருக்கிறது 😦

 9. அண்டியன் சொல்கிறார்:

  தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இளந்தளிரான சிறுவனின் கோரப் படுகொலை!
  ‘‘இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்… பாலக்குமாரா’’ நண்பர் மதிமாறன்.
  இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்… இரத்த வெறிபிடித்த இந்தியாவே?
  அண்டியன்.

 10. venkatesan சொல்கிறார்:

  புத்தர் (இலங்கை) தமிழர்களை கொன்று குவித்தார். கர்த்தர் (அமெரிக்கா) ஈராக்கை நாசம் செய்தார். ஜெஹோவா (இஸ்ரேல்) பாலஸ்தீனிய மக்களை கொன்றொழித்தார். அல்லா (இஸ்லாமிய தீவிரவாதிகள்) உலகெங்கும் வெடிகுண்டு வைத்து பொது மக்களை கொல்கிறார்.

 11. RAMASAAMI சொல்கிறார்:

  வயிறு எரிகிறது …. அந்த கொடுங்கோலனுக்கு நமது நாட்டில் இரத்தின கம்பள வரவேற்பு .. திருப்தியில் வீ ஐ பீ தரிசனம் வேறு ….
  மனம் வலிக்கிறது நண்பர்களே ….

 12. durai சொல்கிறார்:

  சோனியாவுக்கு துணை போன திராவிட இயக்க வழிவந்த தலைவரைப்பற்றி ஒரு வார்த்தை காணோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s