தமிழனின் ஆட்சியை சோனியா தலைமையில் அமைப்போம்!

Sonia-Gandhi

கேரளா, கர்நாடக, ஆந்திரா உட்பட எல்லா மாநிலங்களில் அந்த மண்ணின் மைந்தர்களே ஆளுகிறார்கள். தமிழ்நாட்டை பெருந்தலைவர் காமராஜர் ஒருவரை தவிர, வேறு தமிழன் ஆளவில்லை.

ஈ.வெ.ராமசாமி போன்றவர்களாலும், திராவிட இயக்கத்தின் பேரிலும், வேற்று மொழிக்காரனே ஆண்டு இருக்கிறான். வந்தேறிகளை விரட்டி அடித்துவிட்டு இனிவரும் தேர்தல்களில் தமிழக முதலமைச்சராக ஒரு தமிழனை தேர்தெடுக்க வேண்டும்.

-சேனாதிபதி, சென்னை.

இதுவரை இருந்த முதல்வர்கள் தமிழர்களா இல்லையா என்கிற விவாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு; நீங்கள் சொல்வதை ‘உண்மை’ என்று ஒத்துக் கொண்டே பேசுவோம்.

மக்கள் விரோத; இதே நாடாளுமன்ற, சட்டமன்ற அரசியல் அமைப்புக்குள் மற்ற மாநிலங்களைப்போல் மண்ணின் மைந்தர்களே முதல்வராக வருவதுதான் உங்கள் லட்சியம் என்றால்,

அதுக்கு எதுக்கு பெரியார் எதிர்ப்பு, திராவிடர் எதிர்ப்பு, தமிழ்த் தேசியம் என்கிற ‘பில்டப்’.

காங்கிரஸ் என்ற புரட்சிகர கட்சிக்கு ஓட்டு போடுங்க ஜென்டில்மேன்; அது ப. சிதம்பரம், குமரி அனந்தன் போன்ற பச்சைத் தமிழர்களை உங்களுக்கு பரிசாகத் தரும்.

நீங்கள் சொல்கிற அண்டை மாநிலங்களில், காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற தேசிய கட்சிகள்தான் மண்ணின் மைந்தர்களை முதல்வராக்கி இருக்கிறது.

நம்ம பாண்டிச்சேரியில் கூட பச்சைத் தமிழர்களை காங்கிரஸ்தான் முதல்வராக்கி வருகிறது.

தமிழகத்தில்கூட தமழ்த் தேசியம் பேசிய பெரியாரை எதிர்த்துவிட்டு, இந்திய தேசியத்திற்காகவே வாழ்ந்த, தீவிர தமிழ்த் தேசியவாதிகள் கொண்டாடுகிற தேசியத் தலைவர் கமாராஜரை முதல்வராக்கியது காங்கிரஸ்தான்.

இப்போதுகூட அந்தக் கட்சி மட்டும்தான் மீண்டும் காமராஜ் ஆட்சியை கொண்டுவருவதாக அறிவித்திருக்கிறது.

சோனியா காந்தி தலைமையில் தமிழ்த் தேசியத்தை அணிவகுத்து, ஒரு பச்சைத் தமிழரை முதல்வராக கொண்டு வாருங்கள். வாழ்த்துகள்.

அன்னை சோனியாவின் ஆசிர்வாதங்கள் உங்களின் தமிழ்த் தேசிய கனவிற்கு முழுமையாக கிடைக்கிட்டும்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..

‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி

டாக்டர் அம்பேத்கரின் தமிழ் உணர்வும்; முற்போக்காளர்கள், அறிஞர்கள், தமிழனவாதிகளின் ஜாதி உணர்வும்

தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம்=பெரியார் எதிர்ப்பு

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல

பெண்களும் திருமணமும்: ஜாதி வர்க்கம் பெரியார்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

9 Responses to தமிழனின் ஆட்சியை சோனியா தலைமையில் அமைப்போம்!

 1. கார்த்திக் சொல்கிறார்:

  பக்தவச்சலம்
  ஓ.பன்னீர்செல்வம்
  ஆகிய முன்னாள் முதல்வர்களும் தமிழர்கள்தானே !

 2. RAJA சொல்கிறார்:

  varalatru thokupu ilatha,Arasil arivu ilatha -mika elumiyana,Average arivu erukaravanum purijikaramaruthi nalla pathil sollierukinga, Aana kelvi ketkaravanga,Ethey karutha solara Seeman,Manirasan ponravarkal Pathilai padipathiliye enna pannuvathu………….

 3. இராவணன் சொல்கிறார்:

  அன்னை சோனியா வடிவில் பாரத மாதா????????

 4. maduraitamilguy சொல்கிறார்:

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

  அன்புடன்
  மதுரைத்தமிழன்

 5. Guru சொல்கிறார்:

  தமிழ்த்தேசியத்தையும், இந்திய தேசியத்தையும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்?
  இரண்டும் வேறு வேறு.
  பெரியாரையோ, திராவிடக்கொள்கைகளையோ தமிழ்த்தேசியவாதிகள் யாரும் உரசவில்லை.

  பெரியார் முகமுடி அணிந்துக்கொண்டு இந்திய இறையாண்மை பின்னால் ஒளிந்துகொள்ளும் போலிகளைத்தான் அடையாளம் காட்டுகிறது தமிழ்த்தேசியம்.
  தமிழ்த்தேசியத்தின் முன்னோடி தந்தை பெரியார். அவரை வந்தேறி என்று யாராவது விமர்சித்தால் அவர்கள் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல.

 6. kn.vijayan சொல்கிறார்:

  ராஜிவ் காந்திக்கு கூஜா தூக்குகிற தமிழ் காங்கிரஸ் காரனைவிட சுயமரியதை உள்ள எவனும் தமிழ்நாட்டை ஆளலாம்.ஒரு காமராஜ்தான்.இன்னொரு காமராஜ் என்பதெல்லாம் கானல்நீர்தான்.

 7. Sishyan சொல்கிறார்:

  காமெடி பண்ணாதீங்க குரு. கேள்விய நல்ல பாருங்க //தமிழக முதலமைச்சராக ஒரு தமிழனை தேர்தெடுக்க வேண்டும்.// முதலமைச்சர்ர் என்றாலே அது இந்திய இறையாண்மையில் அடங்கியது தானே! தமிழ் தேசியவாதிகள் தனி தமிழ்நாட்டின் முதலமைச்சரை குறிப்பிடவில்லை.

 8. prabu சொல்கிறார்:

  annai sonia gandhi yaalpanahil konathu pothatha innum tamilan raththam venuma oru uyirukku oru lacham thaali aruththa seethevi sonia

 9. kumar சொல்கிறார்:

  unkalin anaithu eluthukkalilume kutharkkam therikirathu aanaal unmai illai. naan slvathu unkalukku puriyaathu yenenil purinthu kollum pakkuvam kadanthu vitteer

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s