நடிகர் சிவகுமார் பெரியார் தொண்டன் காலில் விழ வேண்டாம்

sivakumar

‘வயித்தில வந்த கட்டி கேன்சரா இல்லையா என்று பரிசோதனை செய்து கொள்ளும்போது எப்படிபட்ட நாத்திகனும், அது கேன்சர் கட்டியா இருக்கக் கூடாது என்று கடவுளை கும்பிடுவான். அப்படிப் பட்டவர்கள் இல்லை என்றால் என்னிடம் அழைத்து வாருங்கள் நான் அவர்கள் காலில் விழுகிறேன்’ என்று நடிகர் சிவகுமார் சவாலாக சொல்லியிருக்கிறாரே?

-ச. ராமச்சந்திரன், உடுமலை.

அப்போ கடவுள கும்பிடுகிறவர்கள் எல்லாம் வயித்தில கேன்சர் கட்டி பரிசோதனை செஞ்சிக்கிட்டவங்களா?

கடவுள் மறுப்புக் கருத்தை வரட்டுத் தனமாக புரிந்து கொள்வதினால் வருகிற குழப்பம் இது.

தந்தை பெரியாருக்கு நாக்கில் புற்றுநோய் வந்தது, ‘அவர் கடவுளை திட்டியதால்தான் வந்தது’ என்று சிவகுமார் போன்ற சிந்தனை உள்ளவர்கள் அப்போது பற்ற வைத்தார்கள்.

பெரியார் அதன் பிறகுதான் மிகக் கடுமையாக கடவுள் மறுப்புக் கருத்தை பேசினார். புற்றுநோயையும் வெற்றிக் கண்டார்.

பெரியாரை போல், பல தோழர்கள் அதே வீரியத்தோடு இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களை என்னால் காட்ட முடியும்.

அவர்கள் காலில் எல்லாம் சிவகுமார் விழ வேண்டியதில்லை. ஏனென்றால் காலில் விழுவதை பெரியார் தொண்டர்கள், கடவுளை வழிபடுவதை விடவும் இழிவாக கருதுவார்கள்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்பில்லாதது:

பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

17 Responses to நடிகர் சிவகுமார் பெரியார் தொண்டன் காலில் விழ வேண்டாம்

 1. malar சொல்கிறார்:

  உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி….

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 2. Sathiaraj சொல்கிறார்:

  சிவகுமாரும் நாத்திகராய் இருந்து ஆத்திகராய் மாறியவர்தான். அப்போது நாத்திகர்களை ஏமாற்றிகொண்டிருந்திருப்பார். இப்போது ஆத்திகர்களை ஏமாற்றிகொண்டிருக்கிறார். சிவகுமார்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை- ரமணர் புற்றுநோய் வந்துதான் செத்துப்போனார் என்பது உட்பட. ஓவியர், நடிகர் என்பதையெல்லாம் கடந்து பேச்சு வியாபாரி ஆகிவிட்டவர்களில் இவரும் அடக்கம்.

 3. மா. தமிழ்ப்பரிதி சொல்கிறார்:

  வரட்டுவாதம் செய்யும் சிவகுமாருக்கு சரியான மருந்தளித்தீர்கள் தோழர். தொடரட்டும் உங்கள் சமூக சமத்துவப்பணி.

 4. மாசிலா சொல்கிறார்:

  சாவுக்கு பயந்தவனும் உயிர் மேல் கொண்ட நப்பாசையாலும்தான் சிவகுமார் போன்றகள் இப்படி உளறி கொட்டுவாங்க. இவங்க போன்ற வசதி கொண்டவங்க பணத்தால் எதையும் சாதிக்க முடியும். இருந்தும் இப்படி பினாத்துகிறார்கள் என்றால் உண்மையில் அவர்களுக்கு சாவை பற்றிய கிலி பிடித்துவிட்டதே என வெளிச்சம். சொர்க்கம், நரகம், அடுத்த ஜென்மம் போன்ற மத நம்பிக்கையில் ஊறினவரகள் பேசுகிற பேச்சுதான் இது.

  பகிர்வுக்கு நன்றி.

 5. மணிமகன் சொல்கிறார்:

  பந்தை அடிக்க முடியாதவர்கள்,பந்தாடும் காலை அடிப்பார்கள்.அந்த இயலாமைக்காரர்கள் ரகத்தினர்தான் இப்படிப்பட்டவர்கள்.பெரியார் கேட்ட பகுத்தறிவுக் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்லமுடியாதவர்கள் பெரியார் மீது அவதூறு பொழிந்தார்கள்.நாத்திகர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தார்கள்.அந்தப் பட்டியலில் சிவகுமார் சேர்ந்துள்ளார்.மரணம் என்பது இயற்கை.அது எப்போது வந்தாலும் வரவேற்கும் மனவலிமையே நாத்திகர்களின் தனித்தன்மை.பயந்தாங்கொள்ளி ஆத்திகர்களுக்கு அந்தத்துணிச்சல் எப்போதும் வராது.சாவுக்குப் பயந்தவர்கள் நாத்திகர்களைப் பற்றிப் பேசக்கூடாது.அப்படிப்பேச எந்தத்தகுதியும் அவர்களுக்குக் கிடையாது.

 6. அறிவாளன் சொல்கிறார்:

  சிந்தனைத் தெளிவினாலும்,அறிவியல் கற்பது மூலமாகவும் வருவதே உண்மையான நாத்திகம் என்பது திரு. சிவகுமாருக்குத் தெரியவில்லை. சொந்த வாழ்க்கையின் அடிப்படையில் தோன்றும் நாத்திகம், நிலையானதில்லை என்று பலரும் புரிந்து கொள்வதில்லை.

 7. thiyagarajan.s சொல்கிறார்:

  ஏனென்றால் காலில் விழுவதை பெரியார் தொண்டர்கள், கடவுளை வழிபடுவதை விடவும் இழிவாக கருதுவார்கள்….அப்ப ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் நின்னுகிட்டு ரெங்கநாதரைப் பார்த்து கும்பிடு போடுற ஈ.வே.ரா சிலைக்கு மாலைபோட்டு கும்புடுறீங்களே அதுக்கு என்ன பேரு…

 8. amiramki சொல்கிறார்:

  sivakumar pls clarify ur thoughts abt kadavul & pakuttarivu

 9. Pingback: ‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை | வே.மதிமாறன்

 10. gna. suresh சொல்கிறார்:

  //வயித்தில வந்த கட்டி கேன்சரா இல்லையா என்று பரிசோதனை செய்து கொள்ளும்போது எப்படிபட்ட நாத்திகனும், அது கேன்சர் கட்டியா இருக்கக் கூடாது என்று கடவுளை கும்பிடுவான்//

  katti, cancernu vayathulayo illa vera engeyaavatho illaatha pothu eththanai aathigargal kadavulai kumbidugiraargal…?

  gna.suresh

 11. Pingback: பெரியார் எதிர்ப்பும் பெரியார் மறுப்பும் ஜாதி வெறியே | வே.மதிமாறன்

 12. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  “முன் மாதிரி மனிதர் எனப்படும் ஒரு தமிழர் –
  அவருக்கு மனதில் பட்ட யதார்த்தத்தைச் சொன்னால், திருக்கோவில்களில் அர்ச்சகப் பணி செய்ய இயலாத / திராணியற்ற /விரும்பாத/சம்பந்தமில்லாத – திராவிடத் தமிழர்களுக்கும்/ பச்சைத் தமிழர்களுக்கும்/ பகுத்தறிவுத் தமிழர்களுக்கும் கோபம் வரத் தானே செய்யும்.” ஹி ஹி ஹி தெருக் கோவில்களில் நாங்க தானே எல்லாம்!!!

 13. Alhaj M.S.Mohamed Ali Jinna சொல்கிறார்:

  Valal vettapattu uyir pogumpothu nan vetri petru vitten entru solbavarkalum ulagathil irunthargal arinthu kollungal!

 14. shanmugamchinnaswamy சொல்கிறார்:

  இது சரியான பதில்.நன்றும் தீதும் பிறர்தரவார.இது முது மொழி.நம் என்ன செயல் செய்தோமோ அதுதான் விளைவாக வரும் என்பது இயற்கை சட்டம் . நம் விழிப்போடு செயல் செய்யும்போது தும்பம் நீங்கி வாழலாம்.மயக்கத்தில் செயல் ஆற்றும்போது துன்பத்தில் வாழலாம்.

 15. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” திரு மோடி அவர்களின் கழிவறை குறித்த கருத்து- நாட்டின் / மக்களின் மிகவும் அத்தியாவசியத் தேவை பற்றியது தானே??? இதில் நல்லவர்கள் யாரும் குற்றம் காண மாட்டார்கள்.

  http://dinamani.com/latest_news/2013/10/03/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/article1816687.ece

 16. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பதும் மாறாதோ??

  //அர்ச்சகர் பணி: பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு- ராஜஸ்தான்.//

  “படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை”

  ஹிஹும்..ஹிஹும்….ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பதும் மாறாதோ?? கேள்வி பிறந்தது அங்கு…. நல்ல பதில் கிடைத்தது அங்கு…

  http://myhoo.in/devasthan-dept-notification-2013-rajasthan-for-65-govt-jobs/

  http://dinamani.com/india/2013/10/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-30-%E0%AE%87/article1837342.ece

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s