பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

bus

டந்த திங்கள்கிழமை சென்னை பெருங்குடி அருகே நேரிட்ட விபத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் துயரமான சம்பவத்தின் அதிர்ச்சிக் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன் வந்து வழக்கு தொடர்ந்தது.

இது போன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பது பற்றி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நேற்று (12-12-12) தமிழக அரசின் விளக்கத்திற்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்:

பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து அவர்களின் பெற்றோர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸார் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த நடவடிக்கை மட்டும் போதாது.

தொடர்ந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி அல்லது கல்லூரியின் முதல்வருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பிய பின்னர், அந்த மாணவர்களை கல்வி நிலையங்களிலிருந்து நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அரசுக்கு பரிந்துரை செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இது உத்தரவு என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சீயோன் பள்ளி வாகனத்திலிருந்த ஓட்டையின் வழியாக ஒரு குழந்தை விழுந்து இறந்போது, நீதி மன்றம் தானாகவே முன்வந்து பல  முக்கியமான உத்தரவுகளையும்  ஆலோசனைகளையும் தந்தது.

ஆனால், பெருங்குடி சம்பவத்தில், அரசும் நீதி மன்றமும் மாணவர்களையே குற்றவாளிகளாகக் காட்டியிருக்கின்றன.

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிகமான அளவில் அரசு பஸ்களில் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். மிகப் பெறும்பாலும் நடுத்தர வர்க்கம் அதற்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகள். குறி்ப்பாக தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மாணவ, மாணவிகள் இருக்கிறார்கள். இவர்களின் வீட்டிற்கு அருகே பள்ளிகள் இல்லாததால், 5 கிலோ மீட்டரிலிருந்து 15 கிலோ மீட்டர் வரை பயணம் செய்து பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் கூட்டம் கூடுதலாகிறது.

படிக்கட்டுகளில் பயணிப்பது உயிருக்கு ஆபத்து என்பதைத் தாண்டி, பஸ்சின் உள்ளே நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறி, வேர்வை நாற்றத்தில் பயணிப்பதை விட காற்றோட்டமாக படிக்கட்டில் தொங்குவது எவ்வளவோ மேல் என்பதினாலும் படிக்கட்டு பயணம் தொடர்கிறது.

உண்மையில் பிரச்சினையின் அடிப்படை, பள்ளிக்கூட நேரங்களில் தேவையான அளவிற்கு பேருந்துகள் இல்லாததுதான். அதிகமான கூட்டம் காரணமாகவே, மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லும் பழக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

அதன் காரணமாகவே, மாணவர்களுக்கும் பஸ் கண்டைக்டர், டிரைவர்களுக்குமிடையே ஒர் நல்லுறுவு இல்லாமல் போனது.

இதற்கு நிரந்தர தீர்வு, மாணவர்கள் தங்கள் வீட்டருகே உள்ள பள்ளிக்கூடங்களில் படிப்பதற்கு முதலில் தரமான அரசுப் பள்ளிக்கூடங்களை கூடுதலாக திறக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற, அரசு பள்ளிகளை, நல்லத் தரத்திற்கு உயர்த்த வேண்டும்.

இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு, பள்ளிக்கூட நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்குவது முக்கியமானது.

மாணவர்கள் நெரிசலில் சிக்கி செத்தாலும் கூடுதலாக பஸ் இயக்குவதில்லை. அதற்கு நேர் எதிராக நெரிசலைத் தவிர்க்க, ஏ.சி பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வாங்கிக் கொண்டு, தங்கள் மாணவர்களுக்கு என்று தனியாக பஸ்கள் இயக்குகின்றன.

அதுபோல், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த அந்த பள்ளிகளுக்கு  மட்டுமே என்ற முறையில் காலை, மாலை நேரங்களில் இலவச பஸ்களை அரசு இயக்க வேண்டும். இப்போது உள்ளது போலவே மற்ற பஸ்களிலும் பயணிக்கும் இலவச பாஸ் உரிமையும் இத்துடன் இருக்கவேண்டும்.

மிக முக்கியமாக பஸ்சில் உள்ள இருக்கை அமைப்பு முறையை மாற்றியமைக்க வேண்டியது அதைவிட கூடுதல் முக்கியத்தும் வாய்ந்தது.

ஆம், பஸ்சில் பெண்களின் இருக்கைகள், இரண்டு படிக்கட்டுகளை ஒட்டியே இருக்கின்றன.

பஸ்சில் பயணம் செய்யும் இளம் பெண்களை, மாணவிகளை தங்கள்பால் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டுகளில் தொங்கி பல்வேறு சாகசங்களை செய்கின்றனர். இருக்கை அமைப்பு முறை, மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்குவதற்கான மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

அதனால், பெண்களின் இருக்கைகளை பஸ்சின் வலது புறம் மாற்றுவது இன்றே  செய்ய வேண்டிய மிக முக்கியமானது.

அதன் மூலம் மிக அதிக அளவிலான மாணவர்கள் பஸ்சின் உள்ளே சென்று பயணிப்பார்கள். பெண்களுக்கும் கூடுதல் இருக்கைகள் கிடைக்கும்.

பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்க முடியாத ஆண்கள், பஸ்சின் உள்ளே பயணிக்கும்போது, பெண்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகள் பக்கம் திரும்பி நின்று கொண்டுதான் வருவார்கள். வயதான ஆண்களே அப்படி என்றால், இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்? அதனாலேயும் அவர்கள் படிக்கட்டுகளில் தொங்குகிறார்கள்.

ஆகவே, பெண்களின் இருக்கைகளை உடனடியாக பஸ்சின் வலது புறம் மாற்ற வேண்டும். அது படிக்கட்டு பயணங்களை தவிர்க்கும். பரிதாப மரணங்களை தடுக்கும்.

போக்குவரத்து ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் சண்டைகள் குறைந்து, நல்லுறவை வளர்க்கும்.

நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பில் இவைகளை உறுதி செய்யும் என்று நம்புவோமாக.

தொடர்புடையவை:

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவை, இலவசத் தாலி அல்ல; சானிடரி நாப்கின்தான்

சானிடரி நாப்கின்; நமது கருத்தும், அதிமுக அரசின் திட்டமும்

இலவச சானிடரி நாப்கின் திட்டம்: இந்தியாவிலேயே முதன்முறையாக

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

19 Responses to பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

 1. malar சொல்கிறார்:

  உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி….

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 2. Iqbal Selvan சொல்கிறார்:

  நல்ல ஐடியாத் தான், ஆனால் கல்லூரி மாணவர்கள் கூட பேருந்தில் செல்கின்றார்கள். மாணவர்களுக்கும் பாதுகாப்பான பயணங்கள் குறித்த விழிப்புணர்வும் தேவை, பள்ளி தொடங்கும் நேரங்களில் கூட மாற்றங்கள் தேவை.

 3. dharumi சொல்கிறார்:

  எல்லாப் பேருந்துகளிலும் தானியியங்கி கதவுகள் ஏன் வைக்கக் கூடாது?
  கதவு பூட்டியிருந்தால் தான் பேருந்து கிளம்பும்……

 4. கோவை சதீஷ் சொல்கிறார்:

  பாதுகாப்பான பயணம் , விழிப்புணர்வு என்பதெல்லாம் கேணத்தனமான யோசனைகள். காசில்லாதவன் நேரத்துக்கு வேலைக்கு போகவும் , ஏழை மாணவன் பள்ளிக்கு போகவும் சிரமபடுவதுக்கு காரணம் போதுமான எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இல்லாததுதான், சொகுசு பஸ் விடதெரிந்த அரசாங்கத்துக்கு எளியவர்களின் பயணம் பற்றி ஒரு கவலையும் இல்லை. பஸ்சுக்குள்ள நின்னு பயணம் பண்ணனும் , கதவு வெக்கணும் அப்டின்னு யோசனை சொல்லாதீங்க, பஸ்சுக்குள்ள என்ன சுரங்கமா தோண்டி வச்சுருக்காங்க உள்ள போயி நிக்கறதுக்கு? இந்த விபத்துக்கு காரணம் வக்கிலாத அரசுதான் என்பது நீதி மன்றத்துக்கு தெரியாதா? தினமும் ஒரு மாணவன் செத்துட்டு இருந்த போது எவனும் கண்டுக்கல, அரசாங்கமும் கவலப்படுல, இப்போ நாலு மாணவங்க செத்ததும் கூச்சப்படாம மாணவங்க மேலே பழிய போடுறானுங்க.

 5. dharumi சொல்கிறார்:

  //கதவு வெக்கணும் அப்டின்னு யோசனை சொல்லாதீங்க, //

  சரிங்க …

 6. Cinema News சொல்கிறார்:

  நல்ல பயனுள்ள யோசனை
  நடை முறைக்கு வருமா?

 7. Sathiaraj சொல்கிறார்:

  திரைப்படங்களில் பேருந்து காட்சிகளில் ஹீரோ தோன்றுகிறார் என்றால் அவர் படிகட்டில்தான் பயணம் செய்வார் என்பது சினிமா விதிகளுள் ஒன்று. சத்யா, காதலன்,முதல்வன் , அட்டைக்கத்தி என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

 8. கில்லாடி சொல்கிறார்:

  //பஸ்சில் பயணம் செய்யும் இளம் பெண்களை, மாணவிகளை தங்கள்பால் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் மாணவர்கள், இளைஞர்கள் படிக்கட்டுகளில் தொங்கி பல்வேறு சாகசங்களை செய்கின்றனர்.//

  நீதிமன்றத்தின் ஆலோசனை ஒரு விதமான அதிர்ச்சியளித்தால் அண்ணணின் தியரி மேலும் அதிர்ச்சியளிக்கிறது. வலது பக்கம் பெண்களின் இருக்கையை மாற்றினால் இதை விட அதிகமாக கூரை மேலேறி ‘சாகசம்’ செய்ய மாட்டார்களா என்ன?

  பல வகையான வாகனப் போக்குவரத்து வரவேண்டும். பஸ்ஸை நம்பி காலம் தள்ளமுடியாது.

 9. venkatesan சொல்கிறார்:

  மெட்ரோ ரயில், மோனோ ரயில் அப்படின்னு சொல்றாங்களே தவிர ஒன்னும் வந்த வழியாக் காணோம். இப்படி ஏதாவது நடந்தாதான் விமோசனம் வரும்னு தோணுது.

 10. RAJA சொல்கிறார்:

  Arasukkum,Manavarkalukum nalla alaosanai……

 11. சௌதா ரஷ்மி சொல்கிறார்:

  பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்..இதனால் .இரண்டு சக்கர வாகன நெரிசலும் குறையும்…

 12. கவிமதி சொல்கிறார்:

  அருமையான ஆலோசனை இதை உடனே நீதிமன்றம் ஏற்று ஆணைபிறப்பித்தால் நன்றாக இருக்கும்.

 13. Pingback: நடிகர் சிவகுமார் பெரியார் தொண்டன் காலில் விழ வேண்டாம் « வே.மதிமாறன்

 14. அசோக் சொல்கிறார்:

  இறந்த 4 மாணவர்கள் பெண்களை பார்த்துக்கொண்டேவா படிக்கட்டில் பயணம் செய்தனர்.

  கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு சில ஆயிரம் பேருந்துகள் என விடும் அரசை கண்டிக்காமல், பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்- மாணவர் உயிரை காப்பாற்றுங்கள் என எழுதுவது எப்படி சரியாகும்…

  முற்போக்காக சிந்திக்கும் உங்களிடம் இருந்து இதனை எதிர்பார்க்கவில்லை….

  ஏற்கனவே வீரமணி தொடர்ந்து விடுதலைசிறுத்தைகள் ரவிக்குமாரை தொடர்ந்து கூப்பிடாமல் திருமாவுடன் நெருக்கமாக இருப்பதை வரவேற்று இருந்தது குறித்து நான் சொன்ன கருத்துக்கு பதில் கூறாதது போல இதற்கும் பதில் கூறாமல் விட்டுவிடாதீர்கள்….

 15. Pingback: வாகன விபத்து-நெரிசல்: அரசுப் பள்ளி மாணவர்களா audi car மாணவர்களா? « வே.மதிமாறன்

 16. Pingback: தமிழக அரசின் பள்ளி நேர மாற்றம்; மாணவர்களை மயக்கமடைய செய்யும் « வே.மதிமாறன்

 17. Pingback: ‘மெக்காலே’ வின் கல்வியும் ‘தினமணி’ யின் தகுதி, திறமையும் | வே.மதிமாறன்

 18. krishnan சொல்கிறார்:

  இதற்கு பார்ப்பன சதி தான் காரணம் பார்ப்பன வெட்டு பிள்ளைகள் நாகரிகமாக சைட் அடிக்கிறார்கள் பெரியார்
  தத்துவப்படி சூத்திர பிள்ளைகள் நாகரிகம் இல்லாமல் சைட் அடிப்பதால் இறக்கிறார்கள்

 19. Pingback: சிங்கப்பூரை விட சிறப்பான சென்னை | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s