அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்

dk

லித் விரோத ஜாதி வெறியர்களை கண்டித்து, தர்மபுரியில் ‘ஜாதி-தீண்டாமை ஒழிப்பு’ மாநாடு நடத்தும் திராவிடர் கழகத்திற்கு முதலில் நன்றியும் வாழ்த்தும்.

அந்த மாநாடிற்கு பேராசிரியர் அ.மார்க்சை அழைத்தமை சிறப்பு.

விடுதலைப் புலிகளை விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை திட்டமிட்டு பெரியார் இயக்கங்கள் புறக்கணித்தன.

ஆனால், திராவிட இயக்கத்தை பெரியாரை; மறைமுகமாக, நேரடியாக மோசமாக, இழிவாக விமர்சிப்பர்களோடு இணைந்து விடுதலைப் புலி ஆதரவு, பிரபாகரன் ஆதரவு, ஈழ ஆதரவு என்று பெரியார் இயக்கங்கள் செயல்பட்டன.

திராவிட இயக்கத்தின் மீது, பெரியார் மீது சொல்லப்பட்ட அவதூறுகளுக்கு பதிலளிக்கும் வேகத்தைவிட; பிரபாகரன், விடுதலைப் புலிகள் மீது சொல்லப்பட்ட அவதூறுகளுக்கு பதில் அளிப்பதில் பெரியார் தொண்டர்களும் பெரியார் இயக்கங்களும் வேகம் காட்டினர்.

இது போன்ற செயல்பாட்டினால், பிரபாகரனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராகவும், பெரியார் மட்டும் விமர்சனங்களுக்கு உட்பட்டவராகவும் பார்க்கிற நிலை உருவானது.

அதன் விளைவு அந்த மோசடி பேர்வழிகள், பெரியார் நமக்கு எதற்கு? பிரபாகரன்தான் தலைவர், திராவிட இயக்கம் தமிழகத்தை கெடுத்துவிட்டது என்று அவதூறும் குழப்பமும் செய்ய ஆரம்பித்துவிட்டன.

தமிழ்த் தேசிய வேறுபாடுகளை தவிர்த்து, பெரியார் தொண்டர் என்கிற அடிப்படையில் அ. மார்க்சை அழைத்தமைக்காக திராவிடர் கழகத்தை நாம் பாராட்டுவோம். அதற்கு மட்டுமல்ல,

பெரியார், டாக்டர் அம்பேத்கர் பற்றி அவதூறு பரப்புபவர்களை; இலங்கை பிரச்சினை, விடுதலைப் புலிகளின் ஆதரவு, தமிழ்த் தேசியம் போன்ற எந்தக் காரணம் கொண்டும் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத திராவிடர் கழகத்தின் செயலுக்காகவும் பாராட்டுவோம்.

தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகளோடு தோழமையாக  இருந்தும் பெரியார் குறித்து மோசமாக எழுதிய ரவிக்குமாரை எப்போதுமே எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்காததற்காகவும் பாராட்டுவோம்.

விடுதலைப்  புலிகள். தமிழ்த் தேசியம் போன்றவற்றில் மாற்று கருத்து கொண்டவர்கள் என்ற காரணங்களுக்காகவே புறக்கணிக்கபட்ட பல பெரியார் தொண்டர்களையும் அரவணைத்து பெரியார் பணியை தொடருவோம்.

தொடர்புடையவை:

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

11 Responses to அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்

 1. அசோக் சொல்கிறார்:

  தோழர் அவர்களுக்கு…
  இப்பதிவில் பொத்தாம் பொதுவாக பெரியார் தொண்டர், பெரியாரை மோசமாக எழுதாதவர் என்ற அடிப்படையில் அ.மார்க்ஸ்,வீரமணி,திருமாவளவன் ஆகியோரை ஆதரிபப்து போல உள்ளது என தோன்றுகிறது.
  குறிப்பாக பெரியாரை மோசமாக எழுதிய ரவிக்குமாரை என்றைக்கும் அழைக்காமல் திருமாவுடன் நெருக்கமாக இருப்பதை வரவேற்று இருப்பது..
  இதுபோல தலித் மக்களை வெட்டுவேன் என்ற காடுவெட்டு குருவை அழைக்காமல் ராமதாஸ் உடன் மட்டும் நெருக்கமாக இருப்பவரை நாம் ஆதரிக்க முடியுமா?

 2. nagoreismail786 சொல்கிறார்:

  அருமை

 3. ponnusami சொல்கிறார்:

  ELLAA AEJENTUM ONAAIYITEENGALAA? VAAZHGA THRAAA…….

 4. மணிமகன் சொல்கிறார்:

  ///விடுதலைப் புலிகள். தமிழ்த் தேசியம் போன்றவற்றில் மாற்று கருத்து கொண்டவர்கள் என்ற காரணங்களுக்காகவே புறக்கணிக்கபட்ட பல பெரியார் தொண்டர்களையும் அரவணைத்து பெரியார் பணியை தொடருவோம்///
  – இதுதான் சரியான பார்வை.
  நமக்கு தமிழ்நாடுதான் அடித்தளம்.நம் சிக்கல்களைத் தீர்ப்பதே முதன்மைப் பணியாக இருக்கவேண்டும்.பெரியாரின் அடிப்படைப் பணி என்பது ஜாதி-தீண்டாமை ஒழிப்புதான்.உண்மையான பெரியார் தொண்டன் ஜாதி ஒழிப்புக்கே முதலிடம் கொடுக்கவேண்டும்.அதற்கு அடுத்துதான் மற்ற சிக்கல்கள் என திட்டம் வைத்துக்கொள்ளவேண்டும்.

  ஈழச்சிக்கலில் சற்று அதிகமாகவே செயல்பாடுகளை அமைத்துக் கொண்ட பெரியார் தொண்டர்கள் தம்மை அக ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையே தருமபுரி நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

 5. அனொன் சொல்கிறார்:

  ஆமா, பெரியாரை விமர்சித்தாலும் அவரின் பல கருத்துக்களை ஆதரிப்பவர்கள், மார்க்சை அவமதிக்கும் அமார்க்சை விட மேல். இடதுசாரி, முற்போக்கு என்ற போர்வையில் முழுக்க முழுக்க பிற்போக்கையும் விடுதலைப் போராட்டங்களை எதிர்க்கும் முதலாளியப் பார்வையும், உலகமயக்கலையும் கக்கித் திரியும் அமார்க்ஸ்களை அழைப்பதுக்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் இவர்கள்.

 6. RAJA சொல்கிறார்:

  Not only marx even Suba ve also verymuch insultaed by this groups.But from starting the DK shoows full support for these peoples…..

 7. மணிமகன் சொல்கிறார்:

  தருமபுரி மாநாட்டில் அ.மார்க்ஸ் உரை சில பகுதிகள்:தக்க நேரத்தில் இந்த மாநாட்டை அறிவித்து எழுச்சி யுடன் நடத்துகின்ற திராவிடர் கழகத் துக்கும், அதன் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் நன்றியையும், பாராட்டு தலையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் மார்க்ஸ் அவர்கள், இது அரசியல் தேர்தல் கூட்டணியல்ல – மாறாக ஜாதி ஒழிப்புக் கூட்டணி – தீண்டாமை ஒழிப்புக்கூட்டணி – பாதிக்கப்பட்ட, ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கூட்டணி – இந்தக் கூட்டணியில் ஒன்றுபட்டு நிற்கிறோம்.

  திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் தலைமையிலே இவற்றிற்காக நாங்கள் அணி வகுத்து நிற்கத் தயார்.

  காதலை எதிர்த்து. ஜாதி சங்கங்களைக் கட்டுவது, கண்டிக்கத்தக்கதாகும். திராவிட என்பதை எதிர்த்துப் பேச ஆரம்பித்துள்ளனர் சிலர் – அதுவும் தவறான கருத்தாகும். திராவிடர் என்பது – ஒரு குறியீடாகும்.

  ஜாதியை எதிர்த்து தந்தை பெரியார் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். போராடினார். நூறு ஆண்டு களுக்கு மேலாக இதற்கான இயக்கம் நடத்தப் பட்டுள்ளது.

  சமூகத்தின் எதிரிகள் பார்ப்பனீயமும், முதலா ளித்துவமும்தான் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார்.28 ஆண்டு காலமாக உள்ள தீண்டாமை ஒழிப்பு வன்முறை கொடுமைத் தடுப்புச்சட்டம் ஓட்டைகள் கொண்டதாக உள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும்.

  காவல்துறையிலும் ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் இருக்க வேண்டும்.தருமபுரியில் தாழ்த்தப்பட்டவர் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டதே – பாதிக்கப்பட்ட பகுதிக ளுக்கு சென்றுவர்கள் யார்? செல்லாதவர்கள் யார்? என்பதிலிருந்தே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

  திராவிடர் கழகம் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபடவில்லை என்று செய்யப்பட்ட பிரச்சாரம் உண்மையல்ல. அது தவறு என்று இப்பொழுது நிரூபிக்கப்பட்டுவிட்டது. தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களை நோக்கி நாம் கேட்கும் வினா இதுதான்.

  தலித் அல்லாதவர்கள் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டனரே! அப்படியென்றால் தலித்துகள் தமிழர்கள் இல்லையா?

  மாநாட்டின் முழு நிகழ்வைப் படிக்க:
  http://www.viduthalai.in/e-paper/50485.html
  http://www.viduthalai.in/e-paper/50476.html
  http://www.viduthalai.in/e-paper/50503.html

 8. Pingback: இளையராஜா வை விட ‘Iyer Sisters’ great! | வே.மதிமாறன்

 9. Pingback: பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற.. | வே.மதிமாறன்

 10. Pingback: ஸ்டாலின்-அழகிரி இழிவான சண்டை – ஜெயேந்திரன் நடத்தியது புரட்சிகர போராட்டம் | வே.மதிமாறன்

 11. Pingback: பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s