‘நீர்ப்பறவை’ : மீனவர் வழக்கா? தேவர் வழக்கா?

நீர்ப்பறவை

கோவையிலிருந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தம்பி தமிழரசன், வாரத்திற்கு ஒருமுறையாவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என் நல விசாரிப்புகளோடு சமூக பிரச்சினைகள் குறித்தும் பேசுவார்.

நேற்று மாலையும் தொடர்பு கொண்டார். அதில் சிறப்பு தகவலாக, ‘அண்ணா, நீர்ப்பறவை படம் ரொம்ப நல்லாயிருக்குண்ணா. நீங்க பாருங்க,’ என்றார்.

‘என்ன களம்?’ என்றேன்.

‘மீனவர் வாழ்க்கை’ என்றார்.

‘ஆனால், தொலைக்காட்சியில் அந்தப் பட விளம்பரங்களில் சரண்யாவும் மற்றும் பலரும் பேசுகிற தமிழில், வழக்கம்போல் மதுரை மாவட்ட பின்னணியை கொண்ட தேவர் வட்டார தமிழ் வாடை அடிக்கிறதே’ என்றேன்.

*

ஆம், மீனவ மக்களின் தமிழில் ஒரு ‘லயம்’ இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்கே உரிய வட்டார வழக்கில் இருந்தாலும், அது ஒரு தனித்த அடையாளம் கொண்டது. சென்னை தமிழை சென்னை மீனவர்கள் பேசுகிற அழகு, மற்ற தமிழர்களிடம் இருந்து நிரம்ப வேறுபட்டது.

அதுபோலவே, தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள கிறித்துவ மீனவர்களிடம் இந்த லயம் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். தமிழை லாவகமாக நீட்டி பாடலுக்குரிய தொனியோடு பேசுவார்கள்.

வட்டார வழக்கோடு இணைந்து, வாயை கொஞ்சம் அகட்டி அவர்கள் பேசுகிற அந்த அழகு; அவர்களின் தொழில் சார்ந்து வருவது.

மீனவர்களின் இந்த அழகிய தமிழோடு, இதுவரை ஒரே ஒரு திரைப்படமல்ல; ஒரே ஒரு மீனவ கதாபாத்திரம் கூட வந்ததில்லை.

‘நீர்ப்பறவை’ யில் வந்திருக்கிறதா?

பார்த்துவிட்டு எழுதுவோம்.

தொடர்புடையவை:

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

7 Responses to ‘நீர்ப்பறவை’ : மீனவர் வழக்கா? தேவர் வழக்கா?

 1. தமிழன் சொல்கிறார்:

  பார்த்துவிட்டு எழுதுவோம்.;////

  பார்த்துட்டே எழுதி இருக்கலாம்ல. அப்புறம் எதுக்கு அப்பு அவசரப்பட்டு அனாவசியமா ஒரு பதிவு.

 2. saravana raja சொல்கிறார்:

  தமிழன், உங்க கமெண்ட்டை லைக் பண்ண வழி இல்லாம போச்சே!

 3. Tamil Breaking News சொல்கிறார்:

  படம் மிகவும் நன்றாக உள்ளது.

 4. Pingback: பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன் | வே.மதிமாறன்

 5. Pingback: மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும் | வே.மதிமாறன்

 6. Pingback: மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும் | வே.மதிமாறன்

 7. Pingback: K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது! | வே.மதிமா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s