தமிழகத்தில் வேற்றுக்கிரக வாசிகள்

ரம், செடி, கொடி, மலை இவைகளுக்காக குரல் கொடுக்கிற பல சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், ஆதிக்க ஜாதிகளுக்கு எதிரான கருத்துச் சொல்வதில் அமைதிக் காக்கிறார்கள்.

குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க ஜாதிக்காரர்களால். தாக்குதல்களுக்கு உள்ளாகும் போது; மரம், செடி, கொடிகளைப்போலவே மவுனம் காக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களை ‘ஈனப் பறையர்கள்..’ என்று விளித்து, “காக்கை, குருவி எங்கள் ஜாதி..’ என்று பறவைகைளைப் பாசத்தோடு, பார்த்த பாரதியைப் போல்,

‘செல்போன் போன்ற நவீன அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, சிட்டுக்குருவி இனமே அழிந்து விட்டது’ என்று துயரப்படுகிற சிட்டுக் குருவியின் சினேகிதர்கள், ஜாதிவெறியால் ரத்தம் சொட்ட வெட்டுப்பட்டு நிற்கிற தாழ்த்தப்பட்டவரை பார்த்தால் பதறுவதில்லை.

“நமது புராணங்களில். இந்து மரபில் காடு பற்றியும் காட்டூயிர் பற்றியும் அக்கறை இருந்தது,” என்று தனது கலை இலக்கிய விமர்சனத்தோடு, காடுகள் பற்றியும் இந்து பெருமையோடு கவலைப்படுகிற முன்னாள் தபால்காரரர்கள், தொலைபேசி இலாகவில் வேலை செய்கிற சினிமா வசனகர்த்தாக்கள், வங்கியில் இலக்கியம் வளர்ப்பவர்கள், இலக்கியவாதிகளாக இருந்து வசனகர்த்தாவாக அவதாரம் எடுத்தவர்கள் இவர்கள் யாரும்,

தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதலை கண்டிப்பதில்லை.

ஏதோ தமிழகத்திற்கு புதியதாக வந்திருக்கிற வேற்றுக்கிரக வாசிகளைப் போலவே நடமாடுகிறார்கள்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பில் தன் கருத்தை முதன்மையாக, தீவிரமாக பதிவு செய்கிறவர்களில் பலர், ஜாதி வெறியர்களின் செய்கையில் ‘மவுனமே’ அவர்களின் பதிவாக இருக்கிறது.

இவர்களின் மவுனம் ஜாதி வெறிக்கு எதிரானதா ஆதரவானதா?

ஆனால், ‘மவுனம் சம்மதம்’ என்ற தொடர் நமக்கு நினைவுக்கு வராமல் இருந்தால், இவர்களின் மவுனத்தை ஜாதி வெறிக்கு எதிரானதாக புரிந்து கொள்ளலாம்.

சரி போகட்டும்,

ஜாதி வெறிக்கு எதிரானவர்கள் என்ற நிலையிலிருந்தல்ல; சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்கிற முறையில் கூட இவர்கள் தருமபுரியில் எரிக்கப்பட்ட, குடிசைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கலாமே?

அதான், ‘300 குடிசைகளை ஒரே சமயத்தில் எரித்ததால், தருமபுரி பகுதிகளில் காற்று மாசுபட்டிருக்கிறது’ என்றாவது ஒரு பதிவை செய்யுங்கள்.

அதனால், உங்களின் சுற்றுச் சூழல் அரசியலுக்கு எந்த ‘மாசும்’ ஏற்பட்டு விடாது.

தொடர்புடையவை:

அழகான பொண்டாட்டியும் அரசியல் பிரச்சினைகளும்

மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு: அன்று புரட்சித் தலைவர் இன்று புரட்சித் தலைவி

மீனவர்களுக்கான தமிழகரசின் சலுகையும், கூடங்குளம் அணு மின் எதிர்ப்பு உரிமையும்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பும் 8 மணிநேர மின்வெட்டு எதிர்ப்பும்

உதயகுமார் கைது முயற்சி; தமிழக அரசின் தந்திரம்

அணு உலை பாதுகாப்பானது; அந்த அய்யப்பனே நம்ப மாட்டான்!

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

11 Responses to தமிழகத்தில் வேற்றுக்கிரக வாசிகள்

 1. ramaswamy சொல்கிறார்:

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவன் பாரதி… உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத முட்டாள் பிராமிணன்…

  தன் சமகாலத்தில் தன் சொந்த சமூகத்தால் வெறுத்து ஒதுக்க பட்டவன் அவன் இறப்பிற்கு வந்தவர்களை விட அவன் உடலில் மொய்த்த ஈக்கள் அதிகம்.. உங்கள் சொந்த காழ்புணர்ச்சியை அவன் மீது kaatta வேண்டாமே …

  I dont like brahmins but i love him…

 2. கார்த்திக் சொல்கிறார்:

  பள்ளன் – பறையனால் பேருந்துகள் தீக்கிரையாக்கப்படும் போது ஏற்படும் போது ஏற்படும் மாசுபற்றியும் மதிமாரன் எழுதினால் நன்றாக இருக்கும்.

  பள்ளன் – பறையனைப் போல் பார்பான் யாரையும் ரத்தம் சொட்ட சொட்ட வெட்டிக் கொல்வதில்லை. பள்ளன் – பறையனால் சிந்த வைக்கப்பாடும் ரத்தத்திற்கும் மதிமாரன் கண்ணீர் சிந்தினால் நன்றாக இருக்கும்.

  தான் தனக்கு வந்தால் அது ரத்தம்; மற்றவனுக்கு வந்தால் அது தக்காளி சட்னி 🙂 பகுத்தறிவு பாசறையில் மதிமாரன் படித்தது.

 3. R Chandrasekaran சொல்கிறார்:

  ஏதோ நீர் தலித்துக்கு எதிரான தாக்குதலை கண்டிப்பதாக காட்டிக் கொள்கிறீர்.. அப்படி எதுவுமே உம் வலை பக்கத்தில் காணோம்.. உமக்குத் தெரிந்தது இரண்டே இரண்டுதான்
  1) அய்யோ பாவம் தலித்…. கொல்றாங்கப்பா… கொல்றாங்கப்பா
  2) பார்ப்பன எதிர்ப்பு எதிர்ப்பு ….எதிப்போ எதிப்பு

  ,இரண்டை மட்டும் செய்து விட்டு அய்யோ அவன் கண்டிக்கலை இவன் கண்டிகலை.. நல்ல சீன்பா

 4. சிலந்தி சொல்கிறார்:

  அட ஞான சூனிய பார்ப்பன பதர்களே, இந்திய தண்டனை சட்டம் கொலை செய்தவனை விட

  அதற்கு தூண்டுகோலாக இருப்பவனுக்கு தண்டனை அதிகம் என்கிறது.

  நாதாறிகளே உங்கள் மனு தர்மம் அல்லவா பறையனை விட படையாச்சி மேல் என்கிறது.

  முழு முதல் குற்றவாளிகள் நீங்கள் தானே.பருப்பு சாப்பிடும் பார்ப்பனர்கள் கத்தியை தூக்கித்தான்

  பாருங்களேன்.எந்த மதவெறி,சாதிவெறி கலவரத்திலும் பாப்பான் களத்தில் இருப்பதில்லை.

  பின்னால் இருந்து இயக்குவதில் கில்லாடிகள் அல்லவா உங்கள் கூட்டம்.

 5. ssk சொல்கிறார்:

  தமிழ் இனத்தையே இழி நிலையில் வைத்திருக்க வந்தது இந்த சாதி … பார்ப்பான் கண்டு பிடித்த கொடுத்த இந்த சாதி எப்போது ஒழியுமோ…
  இதுவே ஒரு பார்பான் பாதிக்கபட்டு இருந்தால், இந்திய முழுக்க பெரிய செய்தியாக ஆகி இருந்திருக்கும்..
  என்ன செய்வது பாதிக்க பட்டவர்கள் தமிழர்கள் ஆயிற்றே …

 6. அப்பு சொல்கிறார்:

  நல்ல கருத்து சிலந்தி அவர்களே சாதிய வேற்றுமையை தோற்றுவித்த பார்ப்பான் நல்லவன் என்று கூறும் வீனர்களின் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது நமது கடமை.

 7. R Chandrasekaran சொல்கிறார்:

  //பின்னால் இருந்து இயக்குவதில் கில்லாடிகள் அல்லவா உங்கள் கூட்டம்.///
  அஞ்ஞானசூனிய சிலந்தி .. தருமபுரி கலவரத்தில எந்த பாப்பான் வன்னியர தூண்டிவிட்டான்னு கண்டு புடிச்சு போலீசுக்குத் தகவல் கொடுப்பா.. அப்படி கொடுக்கலன்னா நீ ஏதோ உண்மைய மறைக்கறன்னு உம்ம மேலய குத்தம் சொல்லவேண்டியதுதான்…

 8. கில்லாடி சொல்கிறார்:

  எதையும் பாரதியுடன் முடிச்சுப் போட்டு எழுதுவதில் கில்லாடியண்ணே நீங்க!! அதுவும் அவனைக் கேவலப்படுத்தும் பொழுது கிடைக்கும் திருப்தி வேறு எதிலாவது வருமா?

 9. Fredrick சொல்கிறார்:

  பல குடிசைகளை எரித்த போது வராத , கோபம் பாரதியை திட்டும் போது பொத்துகிட்டு வருதே பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே ?

 10. கில்லாடி சொல்கிறார்:

  தாழ்த்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் பொழுதுக் கூட பாரதியக் கேவலப்படுத்தும் அளவுக்கு திருப்தி இல்லைண்ணே. அதான்…

 11. Pingback: ..இதுகூடவா இந்து மதத்திற்கு எதிரானது? | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s