கனடா: இளையராஜா நிகழ்ச்சியும் கவுண்டமணி பாணி தமிழ்த் தேசிய விமர்சனமும்

கனடாவில் நடைபெறும் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ஏன் தமிழ்த் தேசியவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?

ஸ்ரீதர்.

தமிழ்த் தேசியவாதிகளாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற சினமாக்காரர்கள்தான் தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இளையராஜா போன்ற உலக பிரபலங்கள், உலகத் தமிழர்களின் அழைப்பை ஏற்று சென்றால், அதன்பிறகு திரைப்படத்தில் வாய்ப்புகள் இல்லாத சினிமாக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வராது.

‘இப்படிவெளிநாடு வாழ் தமிழர்கள் இளையராஜா போன்ற ஆளுமைகளை அழைத்தால் அதன் பிறகு நம்மை அழைக்க மாட்டார்கள்’ என்ற கவலையே இதில் பிரதான பாத்திரம் வகிக்கிறது.

தனது ‘ஆதிபகவன்’ ஆடியோ வெளியீட்டை கனடா தமிழர்களிடையே நடத்திவிட்டு வந்த வாயோடு, ‘இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் நடப்பதால், ஈழத்தமிழர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடுமா? தமிழர்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா’ என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் கேட்கிறார் இயக்குநர் அமீர். (ஆதிபகவன் தயாரிப்பாளர், அதிமுக ஆதரவு தமிழ்த் தேசியவாதிகள் கடுமையாக எதிர்க்கிற திமுக சட்டமன்ற உறுப்பினர் இரா. அன்பழகன்.)

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இந்த முறை எப்படியாவது மாவீரர் நாளுக்கு கனடாவுக்கு நம்மள கூப்பிடுவாங்க… எவ்வளவு வேலை(?) இருந்தாலும், கனடா போயிட்டு வந்துடலாம் என்று இருந்தார்போல…

எந்த இந்திய ராணுவம் ஈழத் தமிழர்களை அமைதிப்படை என்கிற பெயரில் கொன்று குவித்ததோ,

அந்த இந்திய ராணுவத்திற்கும், இந்திய தேசியத்திற்கும் ஆதரவாக அதன் துரோகத்தை தியாகமாக பிரச்சாரம் செய்தும்,

இந்திய முஸ்லிம்களை இந்தியாவிற்கு துரோகம் செய்பவர்களாகவும், பாகிஸ்தானுக்கு காட்டிக் கொடுப்பவர்களாகவும் திரைப்படங்கள் எடுத்த இந்த ஆர்.கே. செல்வமணி போன்றவர்கள் பேசுகிற தமிழ்த் தேசியம் எவன ஏமாத்தி சாப்டன்னு தெரியலை?

எம்.ஜி.ஆர். போன்றவர்கள், தங்களை வள்ளல்களாக சித்தரித்துக் கொள்வதற்கு, தானம், தர்மம் என்ற புனைப்பெயர்களில் ‘செலவு செய்து பிரச்சாரம்’ செய்து கொண்டிருந்தபோது,

நடிகவேள் எம்.ஆர். ராதா சொன்னார்:

‘உண்மையிலயே நீங்க யோக்கியனா இருந்தா, சம்பதிக்கிற பணத்திற்கு ஒழுங்க கணக்கு காட்டி வருமான வரிய கட்டுங்கடா.. அது மக்கள் பணம்.. அத தின்னுட்டு என்னடா தானம், தரமம் என்று மக்கள ஏமாத்துறீ்ங்க..’ என்றார்.

தன்னோட கேவலமான, மட்டமான தமிழர் வீரோத திரைப்படங்கள் மூலமாக தமிழர்களை ஏமாற்றி, சூறையாடி படம் எடுத்து தின்னுபுட்டு, சினிமாவுக்கு வெளிய வந்து தமிழ் உணர்வு பேசுவது என்ன நியாயம்?

உங்க படங்களில் தமிழ்த் தேசிய கருத்துக்களை பேசிவிட்டு, வெளியில் வந்து தமிழர் விரோத கருத்துகளைக்கூட பேசுங்க…, உங்க பேச்சு குறைவான எண்ணிக்கையில்தான் மக்களை சென்று சேரும். சினிமா அதிகம் பேரை சென்றடையும்.

ஆனால், இத தலைகீழாக செய்கிறவர்கள் தங்களை தமிழ்த் தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக் கொள்வது, இந்திய, இலங்கை அரசுகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் பிணங்களின் மீது செல்வாக்குத் தேடுகிற மோசடி.

போக்குவரத்து விபத்துகளில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுகிறவனைப்போல் நடித்து, அவர்களின் பொருட்களை அபகரிக்கிறவனின் செய்கையைவிட மோசமானது.

ஒரு படத்துல கவுண்டமணி,

‘இந்த தொழில் அதிபர் தொல்ல தாங்கலடா… குண்டூசி விக்கிறவன்.. புண்ணாக்கு விக்கறவன் எல்லாம் தன்ன தொழில் அதிபர்ன்னு.. சொல்லிக்கிறான்..’ என்பார்.

‘புண்ணாக்கு விக்கிறவங்க தொழில் அதிபர் என்று சொல்லிக் கொள்ளக்கூடாதா?’ என்ற கேள்வியை எழுப்பவதாக இந்த வசனம் இருக்கிறது.

இதை இப்படி மாற்றி…

‘இந்த தமிழ்த் தேசியவாதிகள் தொல்லை தாங்க முடியலடா.. சினிமாவுல வாய்பில்லாதவன், வெளிநாட்டு தமிழரை தயாரிப்பாளரா மடக்கலாமா என்று முயற்சி பண்றவன்,

சினிமாவுல இக்கும்போது தமிழர்களுக்கு எதிரான குத்தாட்டம் போட்டு சினிமா எடுத்திட்டு; இப்ப நடக்க முடியாம இருக்கிறவன்,

ஜாதி வெறியோட படம் எடுத்தவன்,  காங்கிரசிலிருந்து வெளியவந்தும் இன்னும் காங்கிரஸ் காரனாகவே இருக்கிறவன்..

இவுங்கெல்லாம்கூட தன்னை தமிழ்த் தேசியவாதின்னு….’

என்று இப்பொழுது கவுண்டமணி பேசினால் பொருத்தமாக இருக்கும்.

தொடர்புடையவை:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்

பார்ப்பன எதிர்ப்பா?இளையராஜா மீதான வெறுப்பா?

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

‘தமிழகத் தலைவர்களை நம்பாதீர்கள்’ – புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வேண்டுகோள்

இலங்கையில் விழா;மனோவின் பொறுப்பும்;பாரதி பக்தர்களின் கள்ளத்தனமும் கோமாளித்தனமும்

ராஜபக்சேவை தடுத்து திருப்பிய லண்டன் வாழ் தழிர்கள்.. ஆனால் நம்மால்..?

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

3 Responses to கனடா: இளையராஜா நிகழ்ச்சியும் கவுண்டமணி பாணி தமிழ்த் தேசிய விமர்சனமும்

  1. princenrsama சொல்கிறார்:

    செம குத்து!

  2. சம்பூகன் சொல்கிறார்:

    அட்ரா சக்கை…அட்ரா சக்கை…அட்ரா…….சக்கை…தமிழ்நாட்டு சினிமா வியாபாரிகளின் தலையைத்தடவி விட்டு மொக்கைப் படத்தைக் கொடுக்கும் திடீர் இனவுணர்வுத்திலகங்கள் இப்படி ஈழப்பாசத்தைப் பொழிவது ஏன் தெரியுமா?கனடாவுலதான் காசு உள்ள ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் இலங்கையில் தொழில் தொடங்க முடியாத நிலையில் இந்தியாவில் பணம் போடலாம் என்று நினைக்கின்றனர்.அவர்களைக் கவிழ்க்கத்தான் இந்தக் கோஷ்டி முஷ்டி தட்டுகிறது.மாவீரர் நாள்,மாவீரர் வாரம்தான் அனுஷ்டிக்கப்படுகிறதே தவிர மாவீரர் மாதம் என்று எதுவும் இல்லை என புலம் பெயர் ஈழத்தமிழர்கள் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால்,இந்த தமிழ்தேசியக் கோஷ்டி புதிதாக மாவீரர் மாதம் என்று கூறுகிறது.பொதுவாக சினிமாக்காரர்கள் விளம்பரம் தேடி அலைபவர்கள்.மாதம் ஒருதடவையாவது பத்திரிகையில் பெயர் வரலைன்னா இப்படித்தான் ஏதாவது பேசி தங்கள் சுய அரிப்பைத்தீர்த்துக் கொள்வார்கள்.இவய்ங்க போதைக்கு இப்போதைக்கு இந்த மேட்டர்தான் ஊறுகாயோ…?

  3. Pingback: பாலுமகேந்திராவின் ‘வீடு’; இளையராஜா-ஜெயகாந்தன் – ‘பெரியார் என்கிற பேய்’ « வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s