இஸ்லாம் எதிர்ப்பு படமும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பும்

மோடியின் தாக்குதலால் தன் குடும்பத்தை இழந்த இஸ்லாமியார்

இஸ்லாம் மதத்தை கேவலமாக சித்தரித்த திரைப்படத்தை கண்டித்து, அமெரிக்க தூதரகத்திற்கு எதிரான முஸ்லிம்களின் போராட்டம் சரியானதுதானா?

-மகேஸ்வரன், தூத்துக்குடி.

கிறித்துவ மத கண்ணோட்டம் உள்ள ஒருவர், இன்னொரு மதத்தை விமர்சிப்பது மிக தவறானது. இதுபோன்ற மத வெறி சம்பவங்களே மத கலவரங்களுக்கு காரணமாக அமைகிறது.

இதில் முஸ்லிம்களின் எதிர்வினை மிக வேகமானதாக, ஆக்ரோஷமானதாக இருந்தது.

இஸ்லாம் மதத்தின் மீது அவதூறு மற்றும் விமர்சனம் வரும்போது, பொங்கி எழுகிற இஸ்லாமியர்கள்,

இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும்போது இப்படி பொங்கி எழுவதில்லை.

குறிப்பாக, குஜராத்தில் மோடியும். ஈராக்கில் அமெரிக்காவும், இஸ்லாமியர்களை கொன்று குவித்தபோது இந்த கோபம் இஸ்லாமியர்களுக்கு வரவில்லை. மாறாக அச்ச உணர்வே அவர்களிடம் மேலோங்கி நின்றது.

இதுதான் முற்போக்காளர்களுக்கும் மதவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்.

பகுத்தறிவாளர்கள், கம்யுனிஸ்டுகள் இஸ்லாம் மதத்தை ஆதரிப்பதில்லை. இஸ்லாமியர்களை ஆதரிக்கிறோம்.

அதனால்தான் பெரியார் கடவுளை மற, மனிதனை நினை என்றார்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 அக்டோபர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்

சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்

தீ வெட்டியுடன் நிற்கும் அமெரிக்க ‘சுதந்திர’ தேவி

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

8 Responses to இஸ்லாம் எதிர்ப்பு படமும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பும்

 1. buruhani சொல்கிறார்:

  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அன்போடும் பண்போடும் வாழ பல்கி கொள்ள வேண்டும் .தலைவர்களை குற்றம் சொல்லி ஒரு பியோஜனமும் இல்லை .

 2. iniyavan சொல்கிறார்:

  வணக்கம் நண்பரே,

  //பகுத்தறிவாளர்கள், கம்யுனிஸ்டுகள் இஸ்லாம் மதத்தை ஆதரிப்பதில்லை. இஸ்லாமியர்களை ஆதரிக்கிறோம்.

  அதனால்தான் பெரியார் கடவுளை மற, மனிதனை நினை என்றார்.//

  மிக‌வும் ச‌ரியாக‌ச் சொன்னீர்க‌ள் க‌ட‌வுளை ம‌ற‌ந்தாலே ம‌த‌ம் ம‌ங்கிவிடும், க‌ட‌வுளும் க‌ரையைக் க‌ட‌ந்துவிடும்,பிற‌கென்ன‌ ம‌னித‌ம் வ‌ள‌ரும் இதை சிந்திப்ப‌வ‌ர்க‌ளால் எப்பொழுதும் ஆப‌த்தில்லை.

  இனிய‌வ‌ன்…

 3. rasiga சொல்கிறார்:

  //கிறித்துவ மத கண்ணோட்டம் உள்ள ஒருவர், இன்னொரு மதத்தை விமர்சிப்பது மிக தவறானது.//
  //பகுத்தறிவாளர்கள், கம்யுனிஸ்டுகள் இஸ்லாம் மதத்தை ஆதரிப்பதில்லை. இஸ்லாமியர்களை ஆதரிக்கிறோம்.//

  மனிதனை தானே நினை என்றார் .. நீங்கள் இன்னும் இஸ்லாமியர்,கிறஸ்தவர் என்ற அடைமொழியிலே பிரித்து குறிப்பிடுவது சரியா?

  //இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும்போது இப்படி பொங்கி எழுவதில்லை//

  நடக்கும் தாக்குதல்களை பார்க்கும் போது நீங்கள் சொல்வது சரிதானா???

 4. காசிமேடுமன்னாரு சொல்கிறார்:

  உண்மையான பொதுவுடமையாளர்களுக்கும், தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டர்களுக்கும் இசுலாமியர் மற்றும் கிறித்தவர் மீது இயல்பிலேயே சற்று அனுதாபம் மட்டுமே உண்டு! காரணம், இந்து மதம் என்ற கொடுமையான, மூடத்தனமான மதத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் அவர்கள் வாழவேண்டிய ஒரு சூழ்நிலையில் அந்த அனுதாபம் அவர்கள் மேல் இயல்பாக எழக்கூடிய ஒன்றே!
  என்றாலும் அவர்களின் மதவெறி என்று வரும்போது அடிப்பவனை விட அடிவாங்குபவனுக்கு கொடுக்கக் கூடிய சற்று ஆறுதல் மட்டுமே அவர்களுக்குக் கிடைத்து வருகிறது. இதை மற்றவர்கள் சமனற்ற ஒரு நிலையாக நினைப்பது அவர்களது சரியற்ற, தெளிவற்ற நிலைப்பாட்டின் வெளிப்பாடே! என்றாலும் தந்தை பெரியாரின் தொண்டர்களுக்கு இந்தக் குற்றச்சாட்டு ஒரு பொருட்டல்ல!
  இந்து மதம் பெற்று வளர்த்த பிள்ளைகளல்லவா..! அவர்களிடமிருந்து எப்படி அவ்வளவு எதிர்பார்க்க முடியும்? தீவிரவாதத்தை இந்திய வரலாற்றில் முதன்முதலாகப் பிறப்பித்து, இசுலாமியர்களின் குருதியை ஊற்றி அதை செழித்து வளர்த்தவர்களல்லவா…! அப்படித்தான் இருப்பார்கள்!
  நண்பர் மதிமாறனின் நியாயமான பதிலுக்கு நன்றிகள் பல! வாழ்த்துகள் மதி!
  காசிமேடுமன்னாரு.

 5. மணிமகன் சொல்கிறார்:

  பெரியார் தொண்டனாய் தங்கள் கருத்தில் இணைகிறேன்.

 6. Saheed சொல்கிறார்:

  இது போன்ற கேள்விக்கு சிறிய விளக்கம் அழிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை !!
  நான் தமிழ்நாட்டையே உதாரனமாக எடுத்துக்கொள்கிறேன் !!

  என்னிடம் இந்தக் கேள்விக்கான நீண்ட ஒப்பீட்டுப் பட்டியல் இருக்கிறது …. வேண்டுமானால் தறுகிறேன் ??

  சமீபத்திய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது முஸ்லிம்களா அல்லது முற்போக்குவாதிகளா ??

  1. பரமக்குடியில் அனாதையாக 8 தலித்துகள் சுட்டுக்கொள்ளப்பட்டபோது அங்கு முதலில் சென்று கள ஆய்வுசெய்து போராட்ட்த்தை சந்தித்த்து முஸ்லிம்களின் SDPI எனும் கட்ச்சி , அவர்கள் மூலம் உருவாக்கப்பட்ட திரு மார்க்ஸ் தலைமையிலான NCHRO என்ற மனித உரிமை குழு . (இது தொடர்பாக திரு ஜான்பாண்டியன் வெளியிட்ட அறிக்கை இருக்கிறது)
  >> எங்கே சென்றார் வைகோ , கம்யூனிஸ்டுகள் , முற்போக்குவாதிகள் ??

  2. கூடங்குளம் மக்களுக்காக மிக அதிகமாக போராடியது முஸ்லிம் அமைப்புகள்தான் , இது டி.நகர் பொதுக்கூட்டத்தில் திரு உதயகுமாரே கூறியது , பல்லாயிரக்கனக்கனோர் சிறையும் சென்றிருக்கிறார்கள். இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியது ஒரு முஸ்லிம் கட்ச்சியான மனிதநேய மக்கள் கட்ச்சியின் ஜாவகிருல்லாஹ் மட்டுமே !!

  >> எங்கே சென்றார் வைகோ , கம்யூனிஸ்டுகள் , முற்போக்குவாதிகள் ??

  சமையல் அரிவாயு விலை உயர்வு , சில்லறை வனிகத்தில் அந்நியமுதலீடு , கல்விக்கட்டன உயர்வு , விலைவாசி உயர்வு , மதுக்கடக்கெதிராக , அனுவுலைக்கெதிராக , சிவகாசி படாசு விபத்திற்காக, காவிரி பிரச்சினைக்காக , முல்லைப்பெரியாறு பிரச்சினைக்காக என தங்களுக்கே ஆயிரம் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களுடன் தினமும் போராட்டத்தை சந்திக்கிறது இந்த முஸ்லிம் சமூகம் ,
  இதையெல்லாம் மீடியாக்கள் மரைக்கின்றன என்பதற்காக அதை முற்போக்குவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முஸ்லிம்களின் பாதுகாவலன் நாங்கள் தான் என அடையாளப்படுத்த முயற்ச்சிக்கிறார்கள் !!

  தமிநாட்டில் அரசியலுக்காக அல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவது முஸ்லிம்கள் மட்டுமே இதில் மாற்று கருத்துள்ளவர்கள் இங்கு வரட்டும் …

  வைகோவின் போராட்டமும் குரலும் பெரிதுபடுத்தப்படுவதெல்லாம் மீடியாவின் கைகர்யம் ,
  ஒரே ஒரு உதாரனம் ,

  இந்த மாத தொடக்கத்தில் மதுவிலக்குக்கெதிராக போராடி கைது செய்யப்பட்டவர்கள்

  மதிமுக – 1200க்கும் கீழ்
  முஸ்லிம்கள் – பத்தாயிரத்திற்க்கும் மேல் ….

  மகஇக, SFI, RSYF , மதிமுக , வலதுசாரிகள், பெரியார் திக, திக , என எல்லோருடைய போராட்டத்துடனும் முஸ்லிம்களின் போராட்டத்தை ஒப்பிட்டு , எவ்வளவு வீரியமானது என நிரூபிக்க என்னிடம் பட்டியல் உள்ளது … எங்களுக்காக பேசுவதற்க்கு பிரபலமான முகங்கள் இல்லை என்பதற்காக முற்போக்கு சக்திகள் எங்களுடைய போராட்ட களத்தை களவாட நினைக்க வேண்டாம் …

  இந்த சமூகத்திற்க்கு யாரும் போராட்ட குணத்தை சொல்லித்தர தேவையில்லை , அது எங்களின் மார்க்கக் கடமை ….

  மதங்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு , அந்த மதம் கற்றுக்கொடுத்த அளவிலாவது நம்முடைய கொள்கை மக்களை போராட தூண்டியிருக்கிறதா என்பதை சிந்தியுங்கள் தோழர்களே !!

 7. Pingback: பாண்டவருக்கும் பாகிஸ்தான்காரர்களுக்கும் பங்காளித் தகராறு! | வே.மதிமாறன்

 8. Pingback: மதம் மாறினால் பணம் கிடைக்கும் ஜாதி கிடைக்குமா? | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s