கண்ணதாசனும் கடவுள் ஆகலாம் பச்சை தண்ணியும் போதையாக்கலாம்

மதி, உங்களுக்கு மன ரீதியாக பிரச்சினைகள் இருக்கிறது. அதனால்தான் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களையும் இந்து மதத்தையும் விமர்சித்துக் கொண்டே இருக்கிறீர்கள். இந்து மதத்தின் மாபெரும் கவிஞர்களான பாரதி, கண்ணதாசன் போன்றவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறீர்கள்.

உங்கள் மனத்தை விசாலப்படுத்திக் கொள்ளுங்கள், கவியரசு கண்ணதாசனின்,

மனம் இருந்தால்பறவைகூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துணிந்து விட்டால் தலையில் எந்தசுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அதுகோவிலாகலாம்

இந்த வரிகளை ஆழ்ந்து சிந்தித்து உணருங்கள். உங்கள் மன பிரச்சினை நீங்கும்.

-பாலா

என் மீது அக்கறை கொண்டு எனக்கு கவுன்சிலிங் கொடுத்தமைக்கு நன்றி.

பிரச்சினை எனக்கல்ல, கற்பனாவாதத்தால் பிரச்சினைகளை தீர்த்துவிடலாம் என்று கனவு காண்கிற உங்களுக்கும் கண்ணதாசனுக்கும்தான்.

நடைமுறையில் பிரச்சினைகளை நேரடியாக பார்ப்பதற்கும் தீர்ப்பதற்கும் வக்கற்று, கனவுலகில் விடைதேடி அலைவதால், அடுத்தவர்களை ஏமாற்ற இதுபோன்ற அற்ப ஆலோசனைகளில்தான் மதம் வாழ்கிறது.

உங்கள் கவியரசர் கண்ணதாசனின்,

மனம் இருந்தால்பறவைகூட்டில் மான்கள் வாழலாம்..
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்..

இந்த வரிகளை ஆழ்ந்து சிந்தித்து உணர்ந்ததால், கண்ணதாசன் பாணியிலேயே கேட்கிறேன்,

பாட்டு எழுதன கண்ணதாசனுக்கு பணத்திற்கு பதில், காகிதத்தை கொடுத்தால் அவர் மனம் அதை பணமாக பார்த்திருக்கமா?

இல்லை, அவர் அடித்த சரக்கிற்கு பதில், பச்சை தண்ணீரை ஊற்றிக் கொடுத்து, ‘இத சரக்கா நினைச்சி குடிச்சிக்க..’ என்றால் கண்ணதாசன் போதையாகத்தான் இருந்திருப்பாரா?

‘மனம் இருந்தால்பறவைகூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

மனம் இருந்தால் வெறும் காகிதமும் பணமாகத் தெரியலாம்..       வழியிருந்தால் தண்ணிக்கூட போதையாக்கி மட்டையாக்கலாம்..

‘துணிந்து விட்டால் தலையில் எந்தசுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அதுகோவிலாகலாம்

துணிந்துவிட்டால் எவன் தலையினிலும் மொளக அரைக்கலாம்..           கோவில்! கோவில்! அது டாஸ்மாக்கும் ஆகலாம்…

டாஸ்மாக்கும் கூடதான் கோவிலாகலாம்..

தொடர்புடையவை:

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று

கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

16 Responses to கண்ணதாசனும் கடவுள் ஆகலாம் பச்சை தண்ணியும் போதையாக்கலாம்

 1. Gopalakrishnan.S சொல்கிறார்:

  மிக அருமையான பதில் மதிமாறன் சார்.

 2. மணிமகன் சொல்கிறார்:

  நெத்தியடி….

 3. Nanethan சொல்கிறார்:

  Ungal nanbar Bala solvathi sari polathan irukku. kavaniyungal.

 4. மலர்வண்ணன் சொல்கிறார்:

  ரணகளமான பதில்..!

 5. Aappu சொல்கிறார்:

  /**** குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களையும் இந்து மதத்தையும் விமர்சித்துக் கொண்டே இருக்கிறீர்கள் ****/
  பின்ன விமர்சிக்காம என்ன பண்ணனும் …
  செருப்ப கழட்டி அடிக்காம விமர்ச்கரதொட நிறுதிகிடாறேனு சந்தோஷ படு பாலா ,,,
  எங்க ஜாதி மட்டும் பிரமாவோட தலைல இருந்து வந்தோம்.. மத்த ஜாதி காரன் எல்லாம் முட்டில இருந்தும் கால்ல இருந்து வந்தவங்க …நு சொன்னதுக்கு செருப்ப கழட்டி அடிகரமாதிரி விமர்சிகாம வேற என்ன பணனனும்ம் பார்பான் பாலா நினைகராரு ?

 6. vadivel சொல்கிறார்:

  `உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்… புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’
  == கவியரசு கண்ணதாசன் .

 7. Aappu சொல்கிறார்:

  /*** மனம் இருந்தால்பறவைகூட்டில் மான்கள் வாழலாம்
  வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் … ***/
  லூசுதான் இந்த மாதிரி கவித எழுதும்…
  நல்ல வேல இதுக்கு விளக்கமா பாலா, சுஜாதா மாதிரி புராணத்துல இருந்து நாங்க அப்போவே புஸ்பவாகனம் உட்டோம் கும்பகர்ணன் சத்தமா ஏப்பம் உட்டான் அந்த சத்தமும் அதுவும் இப்போ போற எலிகாப்டர் சத்தமும் ஒன்னு நு…சொல்லாம போனாரே …

 8. Aappu சொல்கிறார்:

  /*** புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’ ***/
  இங்க யாரும் யாரையும் பின்பற்றல வடிவேல் .. விமர்சனம் தான் பண்றாங்க..

 9. Aappu சொல்கிறார்:

  /*** இந்து மதத்தையும் விமர்சித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.***/

  ஹிந்து மதத்த மாதிரி கேவலமான மதம் வேற எதுவும் கிடையாது..அத நாளத்தான் விமர்சனம் பண்றோம் பாலா..
  1 . கடவுள பாக்க வேற எந்த மததுலேயும் காசு வாங்க மாட்டாங்க ஹிந்து மதத்த தவிர .. (திருபதி) அதுலயும் பணக்காரனுக்கு ஒரு வரிசை ஏழைக்கு ஒரு வரிசை ..
  விமர்சனம் பண்ணனுமா பண்ணகுடாதா ?(அறிவு இருக்கற எவனும் கண்டிப்பா கேள்வி கேட்பான் ..அறிவு இல்லாதவன் கேள்வி கேட்க மாட்டான் )
  பாலா கேட்க மாட்டாரு ..
  2. கடவுள் ஹிந்து மதத்துல இருக்க மாதிரி திருபதில போய் மரஞ்சிகிட்டு இருக்க மாட்டாங்க…

 10. Vijay Gopalswami சொல்கிறார்:

  புத்தகத்தப் பின்பற்று எழுதுனவன் வாழ்க்கையைப் பின்பற்றாதேன்னு சொல்றத விட ஒரு மகா அயோக்கியத் தனம் இருக்க முடியுமா? எழுதுனவனாலயே பின்பற்ற முடியாததை, அவன் இன்னொருத்தனுக்கு சிபாரிசு பண்றது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

  மதிமாறனுடன் தனிப்பட்ட முறையில் பழகியவன் என்பதால் அவர் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாமல் வாழ்பவர் என்பதை நேர்படக் கண்டவன் நான். மதிமாறனின் நூல்களைப் படிக்காதவர்களால் தான் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க முடியும். பார்ப்பனரான வி.ஆர்.கிருஷ்னையரை தூக்கு தண்டனைக்கெதிரான அவருடைய செயல்பாடுகளுக்காக மதிமாறன் பாராட்டியிருப்பதை எத்தனை பேர் அறிவார்கள்? எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிற கண்ணதாசனையும் பாரதியையும் போற்றுகிறவர்கள் கொஞ்சம் மதிமாறனின் நூல்களையும் வாசித்துவிட்டு விமர்சிக்க வந்தால் நல்லது.

 11. காசிமேடுமன்னாரு சொல்கிறார்:

  ஒரு கோப்பையில் என் குடியிருப்பு… ஒரு கோலமயில் என் துணையிருப்பு… இந்த வரிகள் படத்துக்கான கற்பனை வரிகளல்ல..! கண்ணதாசனின் வாழ்க்கை முறையைத்தான் அவர் இப்படிச் சொன்னார். அவருடைய பல பாடல்கள் உருவானதே அவருடைய அனுபவத்திலிருந்துதான்.. இதை அவரே பலமுறை சொல்லியுமிருக்கிறார். ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாதோ அப்படி வாழ்ந்தவர் அவர்! அவரது பாடல்களை வேண்டுமானால் முதல் நான்கு வரிகளை இரசிக்கலாமே தவிர மற்ற வரிகள் பெரும்பாலும் மனதில் நிற்பதில்லை, அதன் மெட்டுக்கள் மட்டுமே நினைவில் நிற்கும். (கருத்து உதவி நண்பர் மதிமாறன்.) இது முழுக்க உண்மை. ஒரு குடிகாரனின் பேச்சுக்கு நாம் என்ன மதிப்பு கொடுப்போமோ, அந்த சிறு கவனம் கூட கண்ணதாசனின் பேச்சுக்கு கொடுப்பது நமக்கு மதிப்பாக இராது. காரணம் கண்ணதாசன் குடிகாரன் மட்டுமல்ல, மொடாக்குடிகாரனும், பொம்பளப் பொறுக்கியும் கூட…! ஒரு பொறுக்கியை நாம் எப்படிக் கையாள்வோமோ அப்படியே கண்ணதாசனையும் கையாளவேண்டும்.
  நண்பர் மதிமாறனின் இந்தப் பதில் என்றுமே நம் மனதில் நிற்கும் அரிய கருத்து. மக்கள் மேல் அக்கரையுள்ளவர்களுக்கு இந்தக் கருத்து ஒரு போர்க்கருவி போன்றது. நன்றி மதி! காசிமேடுமன்னாரு.

 12. Ravi சொல்கிறார்:

  முற்போக்கு சிந்தனை கொண்டவர் என்ற அடையாளத்திற்காக இப்படியெல்லாம் வலுவில் யோசிப்பீர்களோ…மதி சார்?

 13. MNGK சொல்கிறார்:

  //பார்ப்பனரான வி.ஆர்.கிருஷ்னையரை தூக்கு தண்டனைக்கெதிரான அவருடைய செயல்பாடுகளுக்காக மதிமாறன் பாராட்டியிருப்பதை எத்தனை பேர் அறிவார்கள்? //

  அதாவது 7௦௦௦ கோடி முறைக்கு ஒரு முறை அண்ணன் பாராட்டியிருக்கிறார்.

  //எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிற கண்ணதாசனையும் பாரதியையும் போற்றுகிறவர்கள் //

  பாரதி? அண்ணன் ஏற்கிறாரா?

 14. Pingback: ‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை | வே.மதிமாறன்

 15. Pingback: எது மாயத்தோற்றம்? | வே.மதிமாறன்

 16. Pingback: போலீஸ் தொல்லையுடன் சிறப்பாக நடந்த நாத்திகர் விழா | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s