உதயகுமார் கைது முயற்சி; தமிழக அரசின் தந்திரம்

‘அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது திட்டமிட்டத் தாக்குதல், போராட்டக்காரர்கள் மீது வழக்கு, உதயகுமார் உள்ளிட்ட அமைப்பாளர்களை கைது செய்தே தீருவது’  இதுபோன்ற நெருக்கடிகளின் மூலமாக, போரட்டக்கார்களை திசை திருப்புகிற முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஜெயலலிதா அரசு.

அதற்கு துணையாக பத்திரிகைகள், உதயகுமாரை ஒரு மர்மமான நபராக சித்திரித்து, ‘உதயகுமார் சதி அம்பலம், உதயகுமாரை பிடிக்க போலிஸ் திணறுகிறது. கடலுக்குள் தப்பி ஓட்டம்’ என்று மட்டமான மர்ம நாவலைப்போல் செய்திகள் வெளியிடுகிறது.

தங்கள் போராட்டத்தை அணுஉலை எதிர்ப்பிலிருந்து மாற்றி, `உதயகுமாரை பாதுகாப்பது, தங்கள் மீது போடப்படும் பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்’ என்று கோருவது  என இவைகளை முதன்மைபடுத்தி போராடுவதின் மூலமாக அணுஉலை எதிர்ப்பை திசை திருப்பி அதை இரண்டாம் கட்ட பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கிறது தமிழக அரசு.

தொடர்புடையவை:

மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு: அன்று புரட்சித் தலைவர் இன்று புரட்சித் தலைவி

மீனவர்களுக்கான தமிழகரசின் சலுகையும், கூடங்குளம் அணு மின் எதிர்ப்பு உரிமையும்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பும் 8 மணிநேர மின்வெட்டு எதிர்ப்பும்

அணு உலை பாதுகாப்பானது; அந்த அய்யப்பனே நம்ப மாட்டான்!

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

5 Responses to உதயகுமார் கைது முயற்சி; தமிழக அரசின் தந்திரம்

 1. malar சொல்கிறார்:

  உண்மை தகவலுக்கு நன்றி..

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 2. ayyanar சொல்கிறார்:

  நீங்கள் தந்த பதிவுகளுக்கு ஆயிரம் நன்றிகள் வேதிமாறன் சார் .

 3. nadodi சொல்கிறார்:

  மதிப்பிறிகுரிய மதிமாறன்,

  கூடன்குளம் அணு மின்உலைப்பிரச்சினையில் மூன்று உட்பிரிவுகள் இருப்பதாக நான் புரிந்துகொள்கிறேன்.

  1 அணு மின்உலை தேவையா இல்லையா என்பது
  2. அணு மின் உலை எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தும் உதயகுமார் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் பூவுலகின் நண்பர்கள்—பிரஷாந்த் பூஷன் போன்றவர்களின் பலகுரல் கோரிக்கைகளில் எது முதன்மையானது என்பது.

  3. இந்த பிரச்சினையை செல்வி ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசு கையாண்ட, கையாளும் விதம்.
  இதில் அணு உலை தேவை என்று நினைக்கும் எங்களைப்போன்றவர்கள் இதில் இருக்கும் ஆபத்துக்களை உணரந்தே இருக்கிறோம். அலோபதி மருத்துவத்தின் பெரும்பகுதி சிகிச்சை முறைகள் ஏதோஓருவித பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அதை பெரும்பான்மை மக்கள் (நான் உட்பட) தொடர்வதைப் போலவே அணுமின்சாரத்தையும் பார்க்கிறோம். அதனாலேயே ஏற்கிறோம். இதில் நீங்கள் என்னுடன் உடன்படமாட்டீர்கள் என்று தெரியும் அதனால் என் மறுப்பு அது குறித்தல்ல.
  அதேபோல இந்த பிரச்சினையை ஜெயலலிதாவின் அரசு இதுவரை கையாண்டவிதம், இன்று கையாளும் விதம், எதிர்காலத்தில் அது கையாளப்போகும் விதம் இதில் நானும் நீங்களும் ஒரே கருத்து என்றே நான் புரிந்துகொள்கிறேன். காரணம் ஜெயலலிதாவின் அரசியலை ஆரம்பம் முதலே கவனிக்கும் யாரும் அவரை இந்த பிரச்சினையில் நம்பி கெட வாய்ப்பில்லை. அப்படி நம்பி கெட்டதாக யாராவது சொன்னால் சொல்பவரின் நம்பகத்தன்மை தான் கேள்விக்குள்ளாகும். எனவே இந்த விடயத்திலும் உங்களுடன் வாதாட நான் வரவில்லை.
  (உதயகுமார் தான் இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் ஜெயலலிதாவை புரட்சித்தலைவி அம்மா என்றார். பிறகு மாண்புமிகு முதல்வர் அம்மா என்றார். இப்போது ஹிட்லர் என்கிறார். ஒரு ஆண்டுக்கு முன்னர் புரட்சித்தலைவி அம்மாவாக இருந்தவர் இன்று ஹிட்ரலராக மாறிய பரிணாமம் இந்த ஒரு ஆண்டில் நடந்த திடீர் நிகழ்வல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இன்னும் தெளிவாக சொல்வதானால் தமிழக முதல்வர் பதவிக்கு வந்த நூறு நாட்களிலேயே இங்கே ஒரு ஹிட்லர் என்று ஜெயலலிதாவை நக்கீரன் இதழ் க சுப்பு மூலம் அடையாளம் காட்டியது. நக்கீரனின் அந்த மதிப்பீட்டில் இருந்து இன்றுவரை ஜெயலலிதா மாறவில்லை என்பது தான் எங்களைப்போன்றவர்களின் நிலை)
  என்னுடைய கேள்வியெல்லாம்—இந்த அணுமின் உலையை எதிர்க்கும் குழுவினர், குறிப்பாக உதயகுமார் தலைமையிலான குழுவினருடைய கோரிக்கையும், அவரை ஆதரிப்பவர்களின் கோரிக்கையும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே அது ஏன் என்பதே? ஒருபக்கம் உதயகுமாரும் அவரது அதிதீவிர ஆதரவாளர்களும் அணு மின் உலையை முற்றாக மூடவேண்டும் என்கிறார்கள். ஆனால் அவரது வெளிவட்ட ஆதரவாளர்களோ அணு மின்உலையில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதப்பிரதிவாதங்களில் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் அணு மின் உலை தேவையில்லை என்பது எங்களின் கோரிக்கையல்ல என்றும் தெளிவாக தெரிவித்திருக்கிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அதை உறுதி செய்துகொண்டிருப்பதோடு, தங்களின் பங்குக்கு தாங்களும் (அதாவது நீதிபதிகளும்) அணு மின் உலைக்கு எதிரானவர்களல்ல என்றுலாறிவித்து விட்டார்கள். (http://www.thehindu.com/news/national/article3892860.ece)
  இந்த பின்னணியில் அணு மின்உலை பாதுகாப்பை இந்திய மத்திய அரசு உறுதி செய்தால் உச்சநீதிமன்ற வழக்கு வேகமாக முடிவுக்கு வரும். அதிகபட்சம் 24 மாத கால அவகாசத்தில் பாதுகாப்புக்கான புதிய ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டு அணு உலை திறப்பதில் இந்திய அரசும், பூவுலகின் நண்பர்களும், பிரஷாந்த் பூஷனும் உச்சநீதிமன்றமும் உடன்படக்கூடும். மத்திய அரசின் வழக்கறிஞர் கொஞ்சம் புத்திசாலித்தனமாக வாதிட்டால் இந்த காலக்கெடுவைக் கூட குறைக்கலாம்.
  உண்மை நிலை இப்படி இருக்க ஊடகங்களை குறை சொல்லி என்ன பயன்? உதயகுமாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்குமே தங்களின் முதன்மையான கோரிக்கை என்ன, அதை அடைவதற்கான வழிமுறைகள் என்ன என்பதில் தெளிவில்லாமல் இருக்கும் போது, அரசையோ ஊடகங்களையோ குறை சொல்வது உதயகுமார் தப்பிக்க உதவலாமே தவிர உண்மையாகிவிடுமா?
  பாரதியை பகுத்தாய்ந்த மதி நுட்பம் மிக்க உங்களுக்கு உதயகுமாரின் உதார் அரசியலின் பின்புலம் புரிபடவில்லை என்று என்னால் நம்பமுடியவில்லை. உணர்ச்சிமயப்பட்ட நிலையில் நாம் அனைவரும் செய்யும் அதே தவற்றை நீங்கள் இப்போது செய்கிறீர்களோ என்கிற ஆதங்கமே இந்த எதிர்வினை.
  நட்புடன்
  நாடோடி

 4. Lourdu Sraj சொல்கிறார்:

  Double action dissolved

 5. Pingback: ஜாதிவெறியால் மாசுபடும் சுற்றுச் சூழல் அல்லது தமிழகத்தில் வேற்றுக்கிரக வாசிகள் « வே.மதிமாறன

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s