Monthly Archives: செப்ரெம்பர் 2012

என்னென்ன செய்தாலும் புதுமை எங்கெங்கு தொட்டாலும் இளமை; அற்பத்தனம்

நடிகை லட்சுமியும்-புரட்சித்தலைவரும் ஏதோ ஒரு படத்திற்காக.. யாரையும் நீங்கள் பாராட்டவே மாட்டிர்களா, ஓருவரை புகழ்வதே தவறா? -கவி ஒருவரிடம் பாராட்டுக்குரிய அம்சம் என்ன இருக்கிறதோ அதை குறிப்பிட்டு பாராட்டுவது தவறில்லை. அதை செய்யவும் வேண்டும். மிகப் பெரும்பாலும், ஒருவரிடம் இல்லாத திறமையையும் குணத்தையும் குறிப்பிட்டு பாராட்டுவதே, நமது மரபாக இருக்கிறது. அப்படி பாராட்டுவதின் மூலம் பாராட்டுகிறவர் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 10 பின்னூட்டங்கள்

கண்ணதாசனும் கடவுள் ஆகலாம் பச்சை தண்ணியும் போதையாக்கலாம்

மதி, உங்களுக்கு மன ரீதியாக பிரச்சினைகள் இருக்கிறது. அதனால்தான் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களையும் இந்து மதத்தையும் விமர்சித்துக் கொண்டே இருக்கிறீர்கள். இந்து மதத்தின் மாபெரும் கவிஞர்களான பாரதி, கண்ணதாசன் போன்றவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறீர்கள். உங்கள் மனத்தை விசாலப்படுத்திக் கொள்ளுங்கள், கவியரசு கண்ணதாசனின், மனம் இருந்தால்பறவைகூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் துணிந்து … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 16 பின்னூட்டங்கள்

என்ன செய்து கிழித்தார் பெரியார்?-அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பேரன்கள்

  பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும் பெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியாது. அப்படி நேரடியாக பெரியாரியத்தோடு மோதுகிற திராணி பார்ப்பனர்களுக்கும் கிடையாது. இந்த நெருக்கடி பெரும்பாலும், ‘வளத்த கடா முட்ட வந்தா, … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

உதயகுமார் கைது முயற்சி; தமிழக அரசின் தந்திரம்

‘அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது திட்டமிட்டத் தாக்குதல், போராட்டக்காரர்கள் மீது வழக்கு, உதயகுமார் உள்ளிட்ட அமைப்பாளர்களை கைது செய்தே தீருவது’  இதுபோன்ற நெருக்கடிகளின் மூலமாக, போரட்டக்கார்களை திசை திருப்புகிற முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஜெயலலிதா அரசு. அதற்கு துணையாக பத்திரிகைகள், உதயகுமாரை ஒரு மர்மமான நபராக சித்திரித்து, ‘உதயகுமார் சதி அம்பலம், உதயகுமாரை பிடிக்க போலிஸ் திணறுகிறது. … Continue reading

Posted in பதிவுகள் | 5 பின்னூட்டங்கள்

மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு: அன்று புரட்சித் தலைவர் இன்று புரட்சித் தலைவி

அன்று மெரினாவை அழகாக்க மீனவர்களை அப்புறப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தி சென்னை மீனவர்களை சுட்டுக் கொன்றார், புரட்சித்தலைவர். இன்று மனித உயிரை பலிகொண்டு, அணுஉலையை பாதுகாக்க, இடிந்தகரை மீனவர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார் புரட்சித்தலைவி. தனது போர்குணத்தால், சென்னை மீனவர்கள், ‘மீனவநண்பன்’ எம்.ஜி.ஆருக்கு தக்கப்பாடம் புகட்டினார்கள். இறுதியில் சென்னை மீனவர்களே வெற்றி பெற்றார்கள். அணுஉலைக்கும், … Continue reading

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்

தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்

சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் மீண்டும் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள் மன்னிக்கவும் கொத்தடிமைகள் கொல்லப்படுவது; நீண்டநாள் நோய்வாய்பட்டவர்களின் மரணம்போல் எதிர்பார்த்த ஒன்றாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. பலமுறை பட்டாசு பலிவாங்கிய உயிர்களில் ஒரு உயிர்கூட பட்டாசு அதிபர்களின் உயிரில்லை என்பதே இது விபத்தல்ல, கொலைதான் என்பதற்கு சாட்சி. பச்சைத் தமிழர்களால் நடத்தப்படுகிற இந்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்