அன்னா அசரே…. ஏற்கனவே சொன்னதுதான்..

அன்னா அசாரே

அன்னா அசாரே, மோடி எல்லாம் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள்?

-க. மதிவாணன், திருநெல்வேலி.

வறுமைக்கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கான மக்கள் மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல் பட்டினியால் சாகும் நாட்டில், உண்ணாவிரதத்தை ஒரு   போராட்டமாக கடைப்பிடிப்பது எவ்வளவு மோசடியானது.

சோத்துக்கு வழியில்லாமல் சுருண்டு சாகுற சோமாலியா மக்கள் மத்தியில் இருந்து கொண்டு தினமும் தின்று கொழிக்கிற ஒருவன், ‘உண்ணாவிரத போராட்டம்’ என்று அறிவித்தால் அவனை எவ்வளவு கேவலமாக பார்ப்பார்கள். அதுபோல்தான் இந்தியாவிலும் உண்ணாவிரதத்தை பார்க்க வேண்டும்.

ஆனாலும், காந்தியால் பிரபலபடுத்தப்பட்ட இந்த அநாகரீகம், உண்ணாவிரதத்திற்கு எதிரான கருத்துக் கொண்டவர்களையும், வேறு வழியில்லாமல் உண்ணாவிரத முறைக்கு தள்ளியிருக்கிறது.

அப்படித்தான், தான் கொண்ட கொள்கைக்காக, திலீபன் உண்ணாமல் தன் உயிரை  தியாகம் செய்தார்.

சமீபத்தில் மூவரின் தூக்கிற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள், உண்ணாமல் சுருண்டு கிடந்தார்கள்.

அணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த மீனவர்கள், மயக்கமாகி கிடந்தார்கள்.

ஆனாலும், அந்தக் காலத்து காந்தியிலிருந்து, இந்தக் காலத்து அன்னா அசாரே, மோடி வரை, ஒரு வேளைக்கு இரண்டு FULL MEALS சாப்பிட்டா மாதிரி, உற்சாகமா உண்ணாவிரதம் இருக்கிறார்களே எப்படி? சைடுல எதாவது சப்ளை ஆவுதோ என்ன கர்மமோ?

அன்னா அசாரே மாதிரி காந்தியவாதிகள், ‘ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்தாலும் உற்சாகமாக இருப்பது எப்படி?’ ‘காந்தி பாணி உண்ணாவிரதம் – வாங்க ஜாலியா உண்ணாவிரதம் இருக்கலாம்’

இது போன்ற புத்தகங்களையும், உண்ணாவிரத ட்ரைனிங் சென்டர்களையும் ஆரம்பித்தால், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நம்மளும் போய் கத்துக்கணுங்க.

ஏன்னா எதிர்காலத்துல உண்ணாவிரதம் முக்கியமான உபசரிப்பாகவும், பொழுது போக்கு அம்சமாகவும் மாறிடும்.

“ஒரு நாள் நீங்க எங்க வீட்டுக்கு குடும்பத்தோடு வந்து கண்டிப்பா ஒரு வேளை உண்ணாவிரதம் இருக்கனும். மறந்துடாதீ்ங்க, நிச்சயம் வரணும்”

“என்னங்க இந்த லீவுக்கு நீங்க பசங்கல கூட்டிக்கிட்டு சுற்றுலா போறிங்களா? இல்ல உண்ணாவிரதம் இருக்கப் போறிங்களா?”

தொடர்புடையவை:

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

*

காந்தி நண்பரா? துரோகியா? புத்தகத்திலிருந்து…

புத்தக வெளியீடு

‘அங்குசம்’

ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384


This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

2 Responses to அன்னா அசரே…. ஏற்கனவே சொன்னதுதான்..

  1. K. Jayadev Das சொல்கிறார்:

    \\மோடி எல்லாம் உண்ணாவிரதம் \\ தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் வரவு செலவு போக ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் உபரி பணம், பூரண மதுவிலக்கு, காங்கிரஸ் இலவசம் தருகிறேன் என்று போன தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதிகள் கொடுத்த போதும் இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வெளிப்படையாக அறிவித்தது, மாநிலம் முழுவதும் தடையற்ற மின்சாரம், லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அலுவலகங்கள், ஆயிரக்கணக்கான கிலோமீடீர்கள் தொலைவுக்கு குடிநீர்க் குழாய்கள், சூரிய மின்சாரம், பெண்கல்வி என்று எல்லா விதத்திலும் மக்கள் நன்மைக்காக செயல் படும் ஒரு மனிதரை, அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தை/கட்சியைப் பிடிக்காது என்ற ஒரே காரணத்துக்காக எதிர்த்து பொய்ப் பிரச்சாரம் செய்வது தகுமா? தமிழக அரசியல்வாதிகள் செய்த ஒரு ஊழலின் மதிப்பே ஒன்னே முக்கால் லட்சம் கோடி, மாநிலத்தின் கடன் ஒரு லட்சம் கோடி, ஊர் பூராவும் சாராயம், சாப்பிடுவது இலவச அரிசி, ஆட்சியில் இருப்பவன் பெண்டாட்டி பிள்ளைகள் கொழுக்கிறது, மக்கள் பஞ்சத்தின் பிடியில் – இந்த மாதிரி ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் முன்னால்/இந்நாள் முதல்வர்களின் யோக்யதையை பார்த்த பின்புமா இப்படி இருப்பீர்கள்?

  2. R Chandrasekaran சொல்கிறார்:

    ஜெயதேவ் சார்.. அது வேற சார்… சரி யா புரிஞ்சுக்குங்க.. இதுதான் ஃபார்முலா.. நல்லா மனப்பாடம் பண்ணும்…..
    பிஜேபி=இந்து மதம் = பார்ப்பனீயம் = நல்லது செஞ்சாலும் ம்ஹீம் =படு பிற்போக்கு
    குடும்ப அரசியல் = திராவிடம் = என்ன ஊழல் பண்ணிலாலும் டவுள் ஓக்கே = படு படு முற்போக்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s