பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

பெரியார் என்ன கடவுளா விமர்சிக்கக் கூடாதா?

கனல்

அப்படின்னு எந்த கூமுட்ட சொன்னான்?

இது அடிப்படை அறிவற்ற கேள்வி.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இதை கேட்பது கேவலம்.

அதையும் பெரியாரோடு தொடர்பு படுத்திக் கேட்டபது மகா கேவலம்.

உலகிலேயே கடவுளை கடுமையாக விமர்சித்த ஊர் தமிழ்நாடுதான். அதை செய்தவர் பெரியார்.

அப்படியிருக்கையில் பெரியாரை கடவுளோடு ஒப்பிட்டு விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக கேட்பது, கேனத்தனமான கேள்வி என்று யாரவது சொன்னால் கடுமையான வார்த்தையல்ல.

தான் வாழ்ந்த காலத்திலேயே தன்னுடைய கொள்கைகளுக்காக மிக மோசமாக விமரிக்கப்பட்டவரும், எதிரிகளால் செருப்பால் தாக்கப்பட்டதும் அப்படி தாக்குதலுக்கு உள்ளானபோதும்கூட அதை விமர்சன கண்ணோட்டத்தோடு அனுகிய ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே.

‘பெரியார் என்ன கடவுளா விமர்சிக்க கூடாதா?‘ என்கிற தமிழ்த் தேசியவாதிகள்தான் பிரபாகரனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக கட்டமைக்கிறார்கள்.

‘பெரியார் மட்டும் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்; பிரபாகரன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?‘ என்று கேட்கிற தைரியம், பெரியார் இயக்கங்களுக்கே இல்லை என்பதால்தான், கண்ட கழிசடைகள் எல்லாம் பெரியாரை அவதூறு செய்கிறது.

பெரியாரை ஆதரிப்பதற்கு யாராவது வெளிநாட்டிலிருந்து பணமாகவோ, பொருளாகவோ அல்லது பதிப்பகம், சினிமா, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் பங்குதாரராகவோ சேர்த்துக் கொண்டால், பெரியாரை கேவலமாக விமர்சிப்பவர்களே, அவரை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பார்ப்பார்களோ!

பணத்துக்கு என்ன பண்றது?

தொடர்புடையது:

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

20 Responses to பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

 1. siddhan சொல்கிறார்:

  பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளர் ஆக பார்ப்பன ஆதரவை பெற்று பிழைப்பு நடத்துகின்றன இந்த டம்ளர் தேசிய கூட்டங்கள்…
  பிராமணன் பேரமணன் ஆனபோது இவர்கள் குணம் அம்மணம் ஆனது தெரிந்து விட்டது

 2. சகா சொல்கிறார்:

  கீற்று இணையதளத்தில் ஒரு கூமுட்டை விமர்சிக்கக் கூடாத கடவுளா பெரியார்? என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தது

 3. பெரிய தம்பி சொல்கிறார்:

  அடுத்தவங்கள் பெரியார் பேசினப்ப பல் இளிச்சீங்க. இப்ப பெரியாரை பேசினா மட்டும் ஏப்பா அழுவுறிங்க. கண்ணை துடைச்சுகங்க.

 4. மணிமகன் சொல்கிறார்:

  பிரபாகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்டு.அது பெரியாரிஸ்டுகளுக்குத் தெரியும்.ஆனால்,ஈழத்தில் போர்ச்சூழலில் போது அதனைப் பெரிதுபடுத்த பெரியாரிஸ்டுகள் விரும்பவில்லை.பெரியாரிஸ்டுகளுக்கு அது வேலையுமில்லை.அவர்களின் கவலை எல்லாம் தமிழீழம் பிறக்க வேண்டும் என்பதுதான்.அதனால்தான் இருக்கும் அமைப்புகளில் பலமுள்ள அமைப்பான விடுதலைப் புலிகளை,பிரபாகரனை ஆதரித்தனர்.எப்போதும் காரியமே முக்கியம்;வீரியம் அல்ல என்பது பெரியார் பாணி.தம்மை இழ்ந்து தான் இந்த மக்களை இழிவுகளிலிருந்து தந்தை பெரியார் மீட்டார்.அதே முறையிலேயே பெரியாரிஸ்டுகளும் செயல்படுகின்றனர்.இப்படி ஒரு நிலையை இதுவரைக் கடைபிடித்தது சரிதான்.ஆனால்,இப்போது அப்படியே இருக்கவேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.தோல்விகளில் இருந்து பாடம் பெறவேண்டும்.அதற்கு தயவு தாட்சண்யம் இன்றி எல்லாத்தரப்பின் மீது விமர்சனங்களை வைக்க வேண்டும்.அதற்கான காலம் வந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

 5. Karikalan சொல்கிறார்:

  /*‘பெரியார் என்ன கடவுளா விமர்சிக்க கூடாதா?‘ என்கிற தமிழ்த் தேசியவாதிகள்தான் பிரபாகரனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக கட்டமைக்கிறார்கள்.*/

  ஏன் இதில் பிரபாகரனை இழுக்குறீர்கள்? பெரியார் பற்றிய விமர்சனத்திற்கு இது பதிலல்ல.

  மணிமகன் அவர்களே நூறு சதவீதம் சரியான மனிதன் இந்த உலகத்திலே கிடையாது. பிரபாகரன் தவறே பண்ணி இருந்தாலும் அதை குறை கூற யாருக்கும் தகுதி கிடையாது. தற்பொழுதுள்ள சூழலில் ஒருவன் இன்றொரு கருத்தும் நாளை ஒரு கருத்தும் சொல்லி வருகிறான், அதே போல் பணம் பதவி குடும்பம் என்று அதன் பின்னே நிற்கிறான். ஆனால் தேசிய தலைவர் ஒருவரே இறுதி வரை ஒரே குறிகோளுடன் வாழ்ந்தவர் வீட்டுக்கு ஒரு பிள்ளை கேட்டவர் இறுதியில் தன் பிள்ளைகளையே போர் முனைக்கு அனுப்பியவர் தன் குடும்பத்தையே போருக்கு பரிசாக கொடுத்தவர் . இப்படியான தகுதிகள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்கள் மட்டும் அவரை விமர்சிக்கலாம். மற்றவர்கள் அவர் பெயரை கூட கூற தகுதியானவர்கள் கிடையாது. ஈழ மக்களுக்கும் அவர் பின்னே இறுதி வரை நின்றவர்களுக்கு அந்த தகுதி உண்டு நம்மை போல் இங்கு சுகமாக இருந்து கொண்டு குறை கூற நமக்கு என்ன தகுதி உள்ளது?

 6. மணிமகன் சொல்கிறார்:

  கரிகாலன் அவர்களுக்கு…நண்பரே..பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் அவரை யாரும் விமர்சிக்கலாம்.விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று யாரும் இல்லை.ஒருவரை விமர்சிக்க இன்னின்ன தகுதிகள் வேண்டும் என்று வரையெல்லாம் வகுக்க முடியாது.விமர்சனத்தின் தன்மையை மட்டுமே பார்க்கவேண்டுமே தவிர விமர்சிப்பவர் யார் என்பதைப் பார்க்கக் கூடாது.விமர்சனத்தின் பதிலில் மனநிறைவடையாமல் இருக்கலாம்.அது தவறு அல்ல.ஈழமக்களுக்கும் அவர் பின்னே நின்றவர்களுக்கும் மட்டும்தான் அவரை விமர்சிக்க உரிமை உண்டென்றால்,ஈழப்பிரச்சினையில் ஆதரவு கேட்டு தமிழகத்துக்கு வந்தது ஏன்?ஆதரித்தவர்களை அவமானப்படுத்துவது,அசிங்கபடுத்துவது ஏன்?ஆதரிக்கும் தமிழ்நாட்டினர் நீங்கள் என்ன சொன்னாலும் வாய் மூடிக் கேட்டுக் கொண்டு மட்டுமே இருக்கவேண்டும் என்று கருதுவது எந்த நியாயத்தின் அடிப்படையில் சரி?இது ஒரு வகையான பாசிசம் அல்லவா?தமிழ் மண்ணின் தன்மை புரியாமல் ஈழத்தின் அரசியல் நிலையை மட்டுமே வைத்து இங்கும் அரசியல் செய்வது எப்படி வெற்றியை அளிக்கும்?நீங்கள் வேண்டுமானால் சுகமாக இருந்திருக்கலாம்.நாங்கள் அப்படி இல்லை.1983 லிருந்து ஆதரித்தவர்கள்.நிதி திரட்டி அளித்தவர்கள்.பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள்.இன்றும் தமிழ் ஈழமே தீர்வு என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள்.பல ஆண்டுகள் புலிகளோடு சுற்றித் திரிந்து தம்முடைய இளமைக் காலத்தை இழந்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.காலத்தை உணர்ந்து அரசியல் செய்தால் தான் வெல்ல முடியும்.இதை அறியாமல் போனதால்தான் நமக்கு இந்தத் தோல்வி என்பதை நாம் உணராதவரை இன்றைய நிலையிலிருந்து மீள முடியாது என்பதை உணரவேண்டும்.”ஞாலம் கருதினும் கை கூடும்,காலம் கருதி இடத்தாற் செயின்’’என்ற வள்ளுவன் காக்கை நாம் அறியவில்லை;ராஜபக்சே அறிந்துள்ளான்.அதனால்தான் அவன் நம்மை வீழ்த்திவிட்டான்.போதும்… இத்தோடு நிறுத்துகிறேன்.ஈழப்போராளிகளை ஆதரித்தவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.அது நல்லதல்ல.நாங்கள் இன்னும் ஈழ மக்களைப் பிரித்துப் பார்க்கவில்லை.நாம்..நாம்…என்றுதான் உணர்கிறோம்.எங்களைப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.இன்னும் பேசுவோம்.

 7. நலங்கிள்ளி சொல்கிறார்:

  பெரியார் குறித்துப் பெ. மணியரசன் அவர்கள் கூறிய விமர்சனங்களை எடுத்து வைத்து அது அவதூறா என்று ஆய்ந்திருந்தால் அது நேர்மையுள்ளவர் செய்யும் செயலாக இருந்திருக்கும். அதை விடுத்து விமர்சனம் செய்பவர்கள் மீது தறிகெட்டுப் பாய்வது பகுத்தறிவாகாது. பெரியார் குறித்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லாமல், இப்படிப் புழுதியை வாரிப் பூசினால் அவரைக் கடவுள் ஆக்க முயல்கிறீர்கள் என்றுதானே பொருள்? திரு கொளத்தூர் மணி அவர்களை ஆனந்த விகடன் ஒரு முறை நேர்காணல் செய்தது. பெரியார் கொள்கையில் விட்டு விட வேண்டியவை எவை என்று அவரிடம் வினா தொடுக்கப்பட்டது. அதற்குப் பெரியாரிடமிருந்து விட்டு விட வேண்டியவை என்று எதுவுமில்லை என்கிறார் மணி. இது பெரியாரைக் கடவுள் ஆக்கும் முயற்சி இல்லாமல் வேறு என்ன? நான் நேரடியாகவே கேட்கிறேன். உலகில் எங்கேனும் அயல் மொழி படித்து சனநாயகம் தழைக்கப் பாடுபட்ட அமைப்பை உங்களால் காட்ட முடியுமா? அப்படிப் புரட்சி செய்த ஒரு நாட்டை உங்களால் காட்ட முடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் பெரியார் திரும்பத் திரும்பத் தமிழர்கள் தமிழை மறந்து விட வேண்டும் என்றார். அனைவரும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்றார். திமுக ஆட்சிக் கட்டிலேறியதும் உயர் கல்வியில் தமிழ்வழிப் படிப்புக்கு முயன்ற போது, அதைக் கடுமையாக எதிர்த்தார் பெரியார். பெரியார் வழியில் சிந்திப்பவர் எவரும் தமிழ்வழிக் கல்வி என்றெல்லாம் பேசக் கூடாது என்றார். எங்கேனும் பெரியார் தமிழ்வழிக கல்வியை ஆதரித்ததாக உங்களால் ஒரே ஒரு சான்றையேனும் காட்ட முடியுமா? தமிழைத் தமிழ்நாட்டை விட்டு ஒழித்து விட்டுச் சமூகநீதியை எப்படி நிலைநாட்ட முடியும் எனக் கருதுகிறீர்கள்? பெரியாரின் இந்த மொழியியல் பார்வையை விமர்சிப்பது என்ன தவறு எனக் கருதுகிறீர்கள். அவர் விரும்பிய பார்ப்பனிய ஒழிப்பைத் தமிழ்வழிக் கல்வியின்றி எப்படிச் சாதிக்க முடியும் எனக் கருதுகிறீர்கள்? உங்களைப் போன்று தமிழ்த் தேசியர்களும் தமிழ் பழித்து ஆங்கில பஜனை செய்து சமூகநீதி காக்க வேண்டும் என்கிறீர்களோ?

 8. காசிமேடுமன்னாரு சொல்கிறார்:

  மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைய நண்பர்களோடு இணைந்த மகிழ்சியோடு…

  தந்தைபெரியாரை விமர்சித்ததற்காகவெல்லாம் பெரியார் தொண்டன் வருந்தமாட்டான். விமர்சிக்க வேண்டுமென்றுதான் விரும்புவான். அப்படியாவது தமிழனுக்கு ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் திறன் வராதா என்ற ஆவலில்தான். அதற்காகத்தான் அய்யாவும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் போய் பரப்புரை செய்தார். படுக்கையில் ஆனபிறகும் சிறுநீர் பையத் தூக்கிக் கொண்டு, முடியாத நிலையிலும் தியாகராயநகரில் இறுதி மரண சாசன உரையை நிகழ்த்தினார்.
  தாராளமாக விமர்சியுங்கள், ஆனால் சரியாகத் தெரிந்துகொண்டு விமர்சியுங்கள்… இதுதான் உண்மையான பெரியார் தொண்டர்கள் உங்கள் முன் வைக்கும் வேண்டுகோள். அதல்லாமல், பெரியார் வீட்டுக்குள்ள கோயில் கட்டி வச்சாரு, அதுல தினமும் பயபக்தியோடுதான் சாமி கும்புடுவாரு…. கும்புட்டுட்டு வெளிய வந்து பீயில் புரட்டிய செருப்பை எடுத்து இந்து சாமி, கிறித்தவ சாமி, முசுலீம் சாமி எல்லா எளவு சாமிகளையும் அந்த பீசெருப்பாலத்தான் அடிப்பாரு, அடிச்சாரு… அப்படிங்கிறமாதிரியான முக்கால் கிறுக்குத்தனமான விமர்சனங்கள் வரும்போதுதான் ஏடாகூடமான சொற்கள் வெளிய வர்ற மாதிரியாயிடுது.
  அய்யா அவர்கள் நமது தமிழ் மொழியை விமர்சித்ததுக்கு வலுவான காரணம் உண்டு. ஆன்மீக வாதிகளால் மட்டுமே நமது தமிழ் அப்போது முன் மொழியப் பட்டது. தமிழ் நூல்கள் என்றாலே ஆன்மீகப் புரட்டும், பெண்ணடிமைத்தனமும், மூடத்தனமுமான நூல்களே முன்வைக்கப் பட்டதாலும், மூடத்தனமான கடவுள்கள் கூட தமிழ் மொழியின் பெயராலேயே மக்களிடம் பரப்பப் பட்டன, உலகிலேயே தன் தாய்மொழியை கடவுளாக்கிய அயோக்கியத்தனம் செய்தது நம்மாட்களே… இப்படி மடத்தனமான கடவுள்கள் தமிழ் மொழியோடு கூட்டு சேர்ந்து தமிழர்களின் சொரணையை இல்லாமலாக்கியதால் கடவுள் என்ற நாதாரித்தனத்தோடு சேர்ந்து எமது தமிழ் மொழியையும் சேர்ந்து ஒருகட்டத்தில் எதிர்க்க வேண்டி வந்தது. இது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையேக் காரணம். தந்தை பெரியார் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டாலும் வீட்டை விட்டு பல தலைமுறைகளுக்கு முன்பே கன்னடம் வெளியேறி விட்டது. அவர் படித்ததும் தமிழ்தான், வீட்டில் பேசுவதும் தமிழில்தான், கையெழுத்து இடுவதும் தமிழில்தான். இந்தித் திணிப்பின் போது அதற்கு எதிராய் தமிழ் மொழிக்கு பாதுகாப்பாய் களம் இறங்கிப் போராடியதும் அவரேதான். தந்தை பெரியார் அடிக்கடி சொல்வது ஒன்றே.. ‘‘இந்த இராமசாமி சொல்றான் னு எதையும் ஏத்துக்காத. உன் அறிவுக்கு சரின்னு பட்டா ஏத்துக்க. தப்புன்னா தள்ளிடு..‘‘
  தந்தை பெரியாரே தன்னுடைய நிலைப்பாட்டை அடுத்தவரின் விமர்சனத்தினால் மாற்றியிருக்கிறார் பலமுறை! தன்னுடைய கருத்து தப்பு என்று அவர் உணரும் பட்சத்தில் அதைத் திருத்தியிருக்கிறார். மாறாக அதைப் பூசி மெழுகி சமாளித்ததில்லை! யாரைக் கண்டும் பயந்து அவர் பின்வாங்குவது மில்லை! காசிமேடுமன்னாரு.

 9. rasheedkhan சொல்கிறார்:

  கடந்த சில நாள்களில் ந்ண்பர்களோடு பேசியபோது கிடைத்த சேதி. தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரஙகன் அவர்களிடம் பேச்சுவாக்கில் பேசும்போது பெரியாரை எந்த அளவு ஒப்புகிறீர்கள் என்று தோழர் இளங்கோவன் கேட்டபோது அவர் 95% என்றாறாம். அந்த 5% என்ன என்ற போது “நான் சொல்வதை ஆராய்ந்து பார் ,நம்பவேண்டும் என்று அவசியமில்லை, அனால் ஆராயாமல் இருந்துவிடாதே, ” என்று பெரியாரே சொன்னது என்றாறாம்.

 10. Pingback: ‘பல்’ சொத்தை முதல், எல்லா சீர்கேடுகளுக்கும் அந்தாளுதாங்க காரணம்! | வே.மதிமாறன்

 11. Pingback: தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? | வே.மதிமாறன்

 12. Pingback: பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற.. | வே.மதிமாறன்

 13. Pingback: யுவன் சங்கர் ராஜா மதம் மாறினார் இளையராஜா இழிவுபடுத்தப்படுகிறார் | வே.மதிமாறன்

 14. Pingback: சுப்ரீம் ஸ்டாருக்கு கண்டனமும் நன்றியும் | வே.மதிமாறன்

 15. Pingback: எச்சரிக்கை | வே.மதிமாறன்

 16. Pingback: பிரபாகரன் – டாக்டர் அம்பேத்கர் – பெரியார் | வே.மதிமாறன்

 17. Pingback: ‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..? | வே.மதிமாறன்

 18. Pingback: இரண்டில் ஒன்று.. எது? | வே.மதிமாறன்

 19. J Dexter சொல்கிறார்:

  Fool போலி * பெற்று இங்கே பள்ளா் கீழ்சாதியை சோ்ந்தவன் கரையாா் பள்ளா் வழி வந்ததாக பதவிட்டுள்ளான் இது முற்றிலும் தவறானது முட்டாள்தனமாது பள்ள௫க்கும் கரைய௫க்கும் எந்த சம்மந்தமும் கிடையாது // **

 20. J Dexter* சொல்கிறார்:

  இங்கே பள்ளா் கீழ்சாதியை சோ்ந்தவன் கரையாா் பள்ளா் வழி வந்ததாக பதவிட்டுள்ளான் இது முற்றிலும் தவறானது முட்டாள்தனமாது பள்ள௫க்கும் கரைய௫க்கும் எந்த சம்மந்தமும் கிடையாது *

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s