வெங்காயம்: கலங்க வைத்த கூத்துக் கலைஞன்; இயக்குநர் சேரனுக்கு நன்றி

பாராட்டுக்குரிய சேரனுடன் ராஜ்குமார்

னிதர்களை இழிவாக நடத்துகிற மதம், ஜாதி அவைகளின் தொடர்ச்சியான மூடநம்பிக்கை; இவைகளின் மீதான கோபம், வெறுப்பு, பிரபலங்களின், ‘அறிவாளி’களின் முட்டாள்தனத்தால் அவர்கள் மீது ஏற்படுகிற அலட்சியம் என்று பல நிலைகளில் பெரியார் பயன்படுத்திய சொல் ‘வெங்காயம்’.

பல மோசடி மூடர்களின் தோலை ‘உரி’ த்த பெரியார், ‘உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லை’ என்ற அர்த்தத்தில்தான் ‘வெங்காயம்’ என்ற சொல்லை பயன்படுத்தினார்.

‘ஒன்றுமில்லை’ என்ற அர்த்ததில் பெரியார் உச்சரித்த ‘வெங்காயம்’ என்ற சொல்லுக்கு தமிழக அரசியலில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

பெரியாரின் உணர்வைப் போலவே, கோபம், அலட்சியம். வெறுப்பு என்று சமூக பிரச்சினையை அலசி இருக்கிறது. சங்ககிரி ராஜ்குமாரின் ‘வெங்காயம்’.

இரண்டாம் முறையாக வெளியாகி இருக்கிறது.

முதல் முறை வெளியானபோது, திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே… ‘ஓடி’ முடிந்துவிட்டது.

சரி இனி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்று முடிவான பிறகு, இயக்குநர் சேரன் பெருமையுடன் வழங்கும் என்ற வித்தியாசமான முறையோடு தினத்தந்தியில் வெளியான விளம்பரம் பார்க்க தூண்டியது.

CHALLENGE நிறுவனத்தின் இந்த விளம்பர யுக்தி, பல புதிய பார்வையாளர்களை படத்திற்கு பெற்று தந்திருக்கிறது.

படம் புதிய யுக்திகளை குறிப்பாக வசனம் பேசும் முறை, கிராமப்புற நடிகர்களின் நடிப்பு இதுவரை எந்த படத்திலும் இவ்வளவு இயல்பாக வந்ததில்லை.

அதிலும் குறிப்பாக தெருக்கூத்து கலைஞராக வருகிறவரின் யதார்த்தமான நடிப்பு, இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒன்று.

அவர், அவருடைய மகள், மகன் மூவரும் கலங்க வைக்கிறார்கள். படம் பார்த்த யாருடனும் இந்த மூவரும் இரண்டு நாட்கள் அவர்களின் தூக்கத்தில் கூட பயணிப்பார்கள்.

இந்த படத்தை எடுத்த சங்ககிரி ராஜ்குமாருக்கும் தயாரிப்பாளரான அவருடைய தந்தைக்கும் நன்றி சொல்வதைவிட,

இதை பலரும் பார்க்கும் வண்ணம் தன் பணத்தை வாரி இறைத்து தைரியத்துடன், சமூக பொறுப்புடன் மீண்டும் வெளியிட்டிருக்கிற இயக்குர் சேரனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு

ஜோதிடத்தால், ஏற்படுகிற அழிவை காட்டுகிறது படம்.

வேதத்தில், மகாபாரதத்தில், ராமாயணத்தில் இருக்கிறது ஜோதிடம். அதன் மூலவர்கள் பார்ப்பனர்களே. அவர்களிடம் இருந்தே மற்றவர்கள் கற்றுக் கொண்டார்கள். படத்தில் வரும் மூன்று ஜோதிடர்-சாமியார்களில் ஒருவரைகூட பார்ப்பனராக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் காட்டவில்லை.

ஆனாலும், ஒரு பார்ப்பனர்கூட இந்த படத்தை பாராட்டி எழுதவில்லை என்பதை பெரியாரின் தொண்டரான இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் குறித்து வைத்துக் கொண்டு அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளவேண்டும்.

தொடர்புடையது:

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

மெரினா: பெண்கள் மீது வெறுப்பு

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

12 Responses to வெங்காயம்: கலங்க வைத்த கூத்துக் கலைஞன்; இயக்குநர் சேரனுக்கு நன்றி

 1. ராஜா சொல்கிறார்:

  //அதிலும் குறிப்பாக தெருக்கூத்து கலைஞராக வருகிறவரின் யதார்த்தமான நடிப்பு, இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒன்று.//

  கூத்துக் கலைஞராக நடித்திருப்பவர் தான் இயக்குநரின் தந்தை மற்றும் தயாரிப்பாளருமானவர்.

 2. வைசூரி அய்யர் சொல்கிறார்:

  வெங்காயத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கும் முயற்சியில் வெங்காயத்தின் சாரமே அதன் தோல் அடுக்குகளில்தான் இருக்கிறது என்பது புரிந்துவிட்டால் வெங்காயத்தின் தனிச்சிறப்பு தெளிவாகிவிடும். எதையோ தேடி அது இல்லாதபோது அதற்குப்பதில் இருந்ததுதான் தேடும் பொருள் என்று உணராமல் எதுவும் இல்லை என்று கூறுவது சரியான தேடல் அல்ல…. இத்தனை தத்துவச் சிறப்புமிக்க வெங்காயச்சாமியை பிராமணர்கள்தான் விலக்கினார்கள் என்றால் பெரியாரும் அவமதித்துவிட்டாரே..

 3. தமிழமணி சொல்கிறார்:

  ///வேதத்தில், மகாபாரதத்தில், ராமாயணத்தில் இருக்கிறது ஜோதிடம். அதன் மூலவர்கள் பார்ப்பனர்களே. அவர்களிடம் இருந்தே மற்றவர்கள் கற்றுக் கொண்டார்கள். படத்தில் வரும் மூன்று ஜோதிடர்-சாமியார்களில் ஒருவரைகூட பார்ப்பனராக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் காட்டவில்லை.

  ஆனாலும், ஒரு பார்ப்பனர்கூட இந்த படத்தை பாராட்டி எழுதவில்லை என்பதை பெரியாரின் தொண்டரான இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் குறித்து வைத்துக் கொண்டு அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளவேண்டும்.///

  இதற்கு இயக்குநர் ராச்குமார் என்ன பதில் சொல்வார்?

 4. eraeravi சொல்கிறார்:

  வெங்காயம் பார்ப்பதற்கு உள்ளே எதோ இருப்பதுப்போலத் தோன்றும் .ஆனால் உரித்துப் பார்த்தல் உள்ளே ஒன்றும் இருக்காது .கடவுள் என்பதும் கற்பிக்க பட்ட ஒன்று .கடவுள் இல்லை என்பதை உணர்த்தவே குறியீடாக வெங்காயம் என்று தந்தை பெரியார் உரைத்தார்.வெங்காயம் மருத்துவ குணம் உள்ளது என்பது வேறு செய்தி .

 5. வே. மதிமாறன் சொல்கிறார்:

  //இதற்கு இயக்குநர் ராச்குமார் என்ன பதில் சொல்வார்?//

  இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் என்னுடைய facebook Messages பகுதியில் அதற்கான காரணமாக சென்சார் பிரச்சினையை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
  அந்த பதிலை அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்ததால் அதை நான் இங்கு முழுவதுமாக வெளியிட விரும்பவில்லை.

 6. thirupurkings சொல்கிறார்:

  இயக்குர் சேரனுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 7. Tharman சொல்கிறார்:

  சிறப்பான படம். வாழ்த்துக்கள் ராச்குமார்

 8. shanmuganantham.e. சொல்கிறார்:

  படம் பார்க்காமல் கதை சொல்வது தவறு. விரைவில் படம் பார்த்து விடுகிறேன்.

 9. ஒரு பார்ப்பனர்கூட இந்த படத்தை திட்டிகூட எழுதவில்லையா?

 10. raavanan சொல்கிறார்:

  வைசூரி அய்யரே ,
  உங்க தோல் (சமாச்சாரம்) நல்லா தெரிஞ்சு போச்சு ஓய்

 11. வைசூரி அய்யர் சொல்கிறார்:

  துஷ்டப் பிராமணன் ராவணனின் பெயரை வெச்சுண்டு என்னத்தை தெரிஞ்சுண்டீர் ஓய்

 12. Pingback: ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s