குஷ்புவின் தமிழ் உணர்வும் திமுகவின் தமிழ் விரோதமும்

நக்கீரனுக்கு நன்றி

இன்றைய இளைய தலைமுறைகளிடம் தமிழ்மொழி உணர்வு குறைந்துள்ளதாக குஷ்பு சொல்கிறாரே?

-மொய்தீன், திருநெல்வேலி.

ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், அவருடைய அண்ணன் மகன் தயாநிதி அழகிரி இவர்களின் ‘தமிழ் உணர்வை’ வைத்து அந்த முடிவுக்கு வந்திருப்பாரோ?

தமிழ் மொழிக்காகவே தன் கட்சியை அர்பணித்திருப்பதாக சொல்லுகிற திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நடைபெற்ற கலைமாமணி விருது விழாவின் தொகுப்புரையை குஷ்புவிற்கே அளித்திருந்தனர்.

மேடையில் தமிழ் உணர்வும், பகுத்தறிவும் பொங்கி வழிகிற அதன் தலைவர்களுக்கு முன், ‘பெரியார் கொள்கை’ என்று சொல்வதற்கு பதில் ‘பெரியார் கொள்ளை’ என்று பேசியவர்தான் குஷ்பு.

தமிழ் சரியாக பேச வராத தன்னை, முக்கியமான தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, நடத்துனராக நியமித்து, அதில் தவறாக பேசிய பிறகும் தனக்கு கட்சியில் முக்கிய பதவியும் தந்த தன் கட்சியின் தமிழ் உணர்வை கிண்டல் செய்கிறாரோ என்னவோ?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையது:

குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

4 Responses to குஷ்புவின் தமிழ் உணர்வும் திமுகவின் தமிழ் விரோதமும்

 1. தங்களின் பதில் தெரிந்தால்…அதற்கும் தன்னிலை விளக்கம் அளிப்பார். இனமான தலீவர்….

 2. வைசூரி அய்யர் சொல்கிறார்:

  ” ‘பெரியார் கொள்கை’ என்று சொல்வதற்கு பதில் ‘பெரியார் கொள்ளை’ என்று பேசியவர்தான் குஷ்பு. “

  கொள்ளுதல் – கொள்கை என்பதே திரிந்து கொள்ளை ஆனது. அது போலவே பெரியார் கொள்கை என்பது திரிந்து பெரிய கொள்ளை ஆனது. குசுபுவின் நுட்பமான தமிழறிவை மட்டமாக எடைபோடும் நீங்கள் ஒரு ஆணாதிக்கவாதிவீர்.

 3. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  “வாழ்க திருவள்ளுவர் ஆண்டு (2043)”.

  //மறைமலை அடிகள் காட்டுவித்த திருவள்ளுவர் ஆண்டைத் தமிழரின் ஆண்டு முறையாகக் கொண்டு தைக்குப் பதிலாக சித்திரையையே ஆண்டுப்பிறப்பாகக் கொண்டால் திருவள்ளுவர் ஆண்டு மக்களின் நடைமுறைக்கு வந்துவிடும். இல்லாவிடில் சித்திரைப் பிறப்பை நந்தன ஆண்டுப் பிறப்பாகவே கருணாநிதி ஏளனம் செய்வார்.

  திருவள்ளுவர் ஆண்டு சித்திரை முதல்நாளில் பிறக்கிறது என்னும் சிறு மாற்றத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டத்தில் செய்தால் போதும்!
  சித்திரை என்னும் வழமையும் நிலைபெறும்; வள்ளுவர் ஆண்டும் மக்களிடையே பழக்கத்திற்கு வந்துவிடும்!”-”காலக்கணிதத்தை ஒழுங்குபடுத்திய முதல்வர்’ என்று ஜெயலலிதாவை வரலாறு சுட்டும்!”
  -பழ. கருப்பையா //

  தமிழ் மொழி வாழ் மக்களின் நோக்கம் ஒன்றே ஆனால்-
  தையும் சித்திரையே!!! சித்திரையும் தையே!!!

  ஏட்டிக்கு போட்டியை எல்லோரும் தவிர்ப்பதே நாட்டிற்கு நல்லது.
  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
  “வாழ்க திருவள்ளுவர் ஆண்டு (2043)”.

  வாழ்க மொழி உணர்வு/அண்ணா நூலகம்/ புதிய தலைமைச் செயலகம்,

 4. Pingback: திருவள்ளுவர் – காமராஜர் – குஷ்பு – கலைஞர் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s