‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..

திராவிட இயக்கம் மாயை என்றும் கருணாநிதியின் திராவிட இயக்க கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளாரே டாக்டர் ராமதாஸ்?

-திரவிடமணி, வேலூர்

திமுகவோடு தொடர்புபடுத்தி ஒட்டு மொத்தமாக பெரியார் அரசியலையும் உள்ளடக்கி திராவிடம் என்பது மாயை என்கிறார் ராமதாஸ்.

‘திமுக ஆட்சியில் தமிழகம் ஆற்று நீர் உரிமையை இழந்தது. தமிழை ஆட்சி மொழியாக்கவோ, உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வரவோ முயற்சி எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியிலும் தமிழகம் இருண்டுபோய் தான் இருக்கிறது.’

என்று டாக்டர் ராமதாஸ் குறிப்பிடுகிற குற்றச்சாட்டுகளோடு நாமும் உடன்படுகிறோம். இவை எல்லாவற்றையும் விட மிக மோசமான செயலை திமுகவும் அதிமுகவும் செய்திருக்கின்றன.

அதாங்க, பாட்டாளி மக்கள் கட்சி போன்ற இன்னும் சில ஜாதிக் கட்சிகளை வளர்த்துவிட்டு சமூகத்தில் ஜாதிவெறியை தூண்டிய பணியைதான் திராவிட கட்சிகள் தீவிரமாக செய்தன அதையும் அவர் சொல்லியிருக்கலாம்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2012 மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடயவை:

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

77 Responses to ‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..

 1. அருள் சொல்கிறார்:

  தமிழ்நாட்டில் பெரும்பான்மை தமிழ்ச் சாதிகளுக்கு எதிரான சிறுபான்மை ‘திராவிட’ ஆதிக்க சாதிகளின் வியூகம் மிகத்தெளிவாக இருக்கிறது. அதற்கேற்ற வகையில் பிரச்சாரத்தை செய்யும் ஊடக வலிமையும், பண வலிமையும் அவர்களுக்கு உண்டு.

  எனவே, “நாங்கள் பொதுவானவர்கள், சாதிக்கு அப்பாற்பட்டவர்கள், நல்ல அரசியலை விரும்புகிறவர்கள்” என்று வெளியில் பேசுகிறவர்கள் – உள்ளே ஆதிக்க திராவிடக் கூட்டத்தினராகவோ (தமிழை தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் என்று படிக்கவும்), அல்லது அவர்களது மூலைச்சலவைக்கு பலியானவர்களாகவோ இருப்பதுதான் இயல்பு.

  எனவே, மருத்துவரின் முற்போக்கு கருத்துகள் எதிர்க்கப்படுவது இயல்பானதே.

 2. அருள் சொல்கிறார்:

  // //பாட்டாளி மக்கள் கட்சி போன்ற இன்னும் சில ஜாதிக் கட்சிகளை வளர்த்துவிட்டு சமூகத்தில் ஜாதிவெறியை தூண்டிய பணி// //

  பாமக எப்போது? எந்த இடத்தில்? சாதிவெறியைத் தூண்டியது. சாதி அடிப்படையில் உரிமை கேட்பதும் சாதிவெறியும் ஒன்றா? உங்கள் மனதில் ஒளிந்திருக்கும் ‘பாமக’வுக்கு எதிரான சாதிவெறியை அகற்றுங்கள்.

  ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது ஒருபோதும் மோசமானதாக இருந்ததில்லை, எந்த காலகட்டத்திலும் பிற்போக்கானதாகவும் இருந்தது இல்லை.

  வரலாற்று ரீதியில் பார்த்தால் அரசியலில் சாதி கலந்ததாகக் கூறமுடியாது. மாறாக, சாதிதான் அரசியல் வடிவமெடுத்தது.

  1. இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு முறையை ஆங்கிலேயர்கள் 1860களுக்கு பின்பு அறிமுகப்படுத்தியபோது, ஒருசில சாதிகள் தீண்டத்தகாத சாதிகளாக ஆக்கப்படுவதை எதிர்க்க சாதி ரீதியிலான அணிதிரட்டல் நடந்தது.

  2. ஒருசில சாதியினர் குற்றப்பரம்பரையினர் என்று ஆங்கிலேயர்களால் வகைப்படுத்தப்பட்டபோது சாதி ரீதியிலான அணிதிரட்டல் தேவைப்பட்டது.

  3. தமிழ்நாடு திராவிட ஆட்சியாளர்களால் ஆளப்படும் ஒரு மாநிலமாக இருப்பதும், திராவிட கட்சிகள் ஒரு அசைக்கமுடியாத சக்தியாக இருப்பதற்கும் பின்னணி சாதி அரசியல்தான். “பார்ப்பனர்கள் ஒரு சாதி – பார்ப்பனர் அல்லாத மற்ற எல்லோரும் மற்றொரு சாதி” என்கிற தந்தை பெரியாரின் வகைப்படுத்தல்தான் திராவிட அரசியல் எழுச்சியின் அடிப்படை.

  4. அண்ணல் அம்பேதகர் அவர்களால் முன்வைக்கப்பட்டு, இன்று தலித் அரசியலாக வளர்ந்து நிற்கும் அரசியல் எழுச்சியின் அடிப்படையும் சாதிதான்.

  5. விடுதலையான காலகட்டத்தில் இந்தியாவின் சனநாயகத்தை வளர்க்க சாதியே வழிவகுத்தது. தேர்தல் முறையை ஊக்குவிக்கும்விதமாக பெருவாரியான மக்கள் தேர்தலில் பங்கேற்க செய்தவை சாதி அமைப்புகள்தான்.

  6. காங்கிரஸ் என்கிற ஒற்றைக்கட்சி சர்வாதிகாரத்தை வீழ்த்தி இன்று வட இந்தியாவில் பலம்பெற்று நிற்கும் கட்சிகள் பலவும் மண்டல் எழுச்சியால் உருவானவை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாலம் அமைக்கும் கன்சிராமின் கனவுதான் மாயாவதியின் வளர்ச்சியாக வடிவெடுத்தது.

  இப்படியாக, ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் என்பது – சாதி முறையை நீட்டிப்பதற்காகவோ, ஏற்றத்தாழ்வை தொடர்வதற்காகவோ ஏற்பட்டது அல்ல. மாறாக, சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வையும் அடக்குமுறையையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்டவே சாதி அரசியல் பயன்பட்டது.

  ஆக, மனுதர்மம் முன்னிறுத்திய ஏற்றத்தாழ்வான சாதி முறைக்கு நேர் எதிரானதாக – சாதித் தீமையை ஒழித்துக்கட்டும் ஒரே கருவியாக இருப்பது சாதி அரசியல் மட்டும்தான்.

  ஓரே இடத்தில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வழிவகுத்ததும் சாதி அரசியல்தான். ஆளும் சிறுபான்மைக் கூட்டத்திடமிருந்து ஆளப்படும் பெரும்பான்மைக் கூட்டத்திற்கு அதிகாரத்தை இடம்பெயரச் செய்யும் தொடர் முயற்சியே சாதி ஆரசியல் ஆகும்.

  இது எப்படி பிற்போக்கு ஆகும்?

 3. Jp சொல்கிறார்:

  மருத்துவர் அய்யா அவர்கள் கட்சி நடத்துவதன் நோக்கம் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட வேண்டும் என்பதே…அதற்காகவே கட்சியின் கோடியில் நீல நிறமும் சிவப்பு நிறமும் இடம் பெற்றுள்ளது…அவருடைய கொள்கைகள் மிகவும் முன்னோக்கிய சிந்தனையுடையதாக இருக்கும். கூட்டணி மாறுகிறார் கூட்டணி மாறுகிறார் என்கிறீகள்..?? தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரலாற்றை சுதந்திரத்திற்கு பின் எடுத்துப்பாருங்கள்…எந்தெந்த கட்சியெல்லாம் கூட்டணி வைததேன்று தெரியும்…சொல்லபோனால் காங்கிரெஸ் சை அளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே திராவிடர் இயக்கம்…காலத்தின் கோலமாக காங்கிரஸ் சும் திராவிடகட்சிகளுமே கூட்டணி வைத்துள்ளார்கள்…1998 இல் கோவை யில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகு அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முஸ்லிகள் வீட்டை விட்டே வெளியில் வரமுடியால் இருந்த கால கட்டத்தில் மருத்துவர் அய்யா தான் சிறுபான்மையின மக்களுக்காக போராடி கோவையில் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாழவழி செய்தார்…இன்றும் பா.ம.க வில் உள்ள அனைத்து மட்டத்தில் உள்ள பொருளாளர் பதவி ஒரு முஸ்லிம் தான் என்பது உங்களுக்கு தெர்யுமா?… இதெல்லாம் எதற்க்காக உங்களிடத்தில் சொல்கிறேன் என்றால் நீங்க ஒரு முஸ்லிம் என்பதால் உங்கள் சமுதாயத்திற்கு எந்த அளவில் அய்யா அவர்கள் போராடி உள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே…இதைபோன்று அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடிகொண்டுள்ளார். இதுவே ஒரு தாழத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கேட்டால் அவர்களுக்காக அய்யா என்ன செய்துள்ளார்கள் என்பதையும் சொல்ல முடியும்…..நன்றாக சிந்தித்து பாருங்கள்… பா.ம.க என்பது வன்னியர் சங்கத்திலிருந்து தோன்றியதால் தான் மற்ற சமுதாயத்தினரால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்பது உங்களுக்கு புரியும்….

 4. கோபால் படையாட்சி சொல்கிறார்:

  1987 அது வன்னிய சமூகத்திற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு,
  வன்னிய சமுதாயத்தின் கடைசி மனிதன் இருக்கும் வரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. இதுவரை தமிழகம் சந்திக்காத போராட்டத்தை வன்னிய சமுதாயத்தினால் சந்(சா)தித்தது. ஒருவார மறியல் போராட்டம், தமிழக தலைநகர் தென்மாவட்டங்களிலிருந்து துண்டிக்கப்பட்டது, வட மாவட்டம் முழுவதும் வாகனப்போக்குவரத்து இல்லை. இதில் நானும்தான் பாதிக்கப்பட்டேன் ஏழாவது படிக்கின்றபோது 4 கிலோமீட்டர்கள் நடந்து பள்ளிக்கு சென்றேன். அப்போது கூட எனக்கு கோபம் வரவில்லை என் சமூகத்துக்காக ஏதோ நடக்கிறது எனவே இந்த வலியை பொறுத்துக்கொள்ளவேண்டும் என தான் எண்ணினேன்.

  நமது அதிகார அமைப்பு எப்போதுமே ஒரு பிரச்சினை பெரிதானப்பின் தான் நடவடிக்கை எடுக்கும் அதுவரை வீம்புக்காக சூழ்நிலை கட்டுக்குள் இருப்பதைப்போல் காட்டிக்கொள்ளும். ஒரு வார மறியல் போராட்டம் ஏதோ திடீரென நடத்தப்படவில்லை, பல மாதங்களுக்குமுன் கோரிக்கை வைத்து அறிவிப்பு கொடுத்து, பல இடங்களில் பல முறை குடும்பத்தோடு ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என எல்லா போராட்டங்களும் அமைதியான முறையில் செய்து பின்தான் நடை பெற்றது இந்த சாலை மறியல் போராட்டம். முக்கிய முதல் நிலை தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், இதனால் போராட்டம் பிசு பிசுக்கும் என அரசாங்கமும் காவல்துறையும் நினைத்தது. ஆனால் அன்றைய கட்டத்திலே முதல் நிலை தலைவர்களின் வழிகாட்டிதல் படி இரண்டாம் நிலைத்தலைவர்களால் நடத்தப்பட்டது. இரண்டாம் நிலைத்தலைவர்களை கைது செய்ய முனைந்தபோது பலர் தலைமறைவு. சாலை மறியலுக்காக மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன, அதனால் இன்று வரை மரங்கள் வெட்டி வீசப்பட்டதை மரம்வெட்டி கும்பல் என நக்கல் அடிக்கப்பட்டு வரப்படுகின்றது, ஆனால் இந்த மரங்கள் யாருடைய மரங்கள்? அந்த மரங்கள் எல்லாம் அவர்கள் மற்றும் அவர்களின் தாய்,தந்தை, முன்னோர்கள் நட்டு வளர்த்த மரங்களே, மற்ற எல்லோரையும் விட அந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு அந்த மரங்களை வளர்த்த அந்த மக்கள் தான் வருத்தப்படுவர், ஆனால் அதையும் மீறி அவர்களுக்கு தேவை இருந்தது. (பசுமைதாயகம் அமைப்பு பல ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அதை மரங்களாகவும் ஆக்கி பிராயச்சித்தம் தேடிக்கொண்டது, ஆனால் மதத்தின் பெயரால் வட மாநிலங்களிலே வெட்டி வீழ்த்தப்பட்ட மனித உயிர்களை மதம் சார்ந்த அமைப்புகளும், கட்சியும் எப்படி பிராயச்சித்தம் தேடப்போகின்றன?)

 5. கோபால் படையாட்சி சொல்கிறார்:

  புதிய அரசியல் புதிய நம்பிக்கை” என்ற தலைப்பில் பாமக ஒரு தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதனை இங்கே காணலாம்.

  http://www.thepmk.in

  விரும்பினால் படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

 6. கோபால் படையாட்சி சொல்கிறார்:

  ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமதாசுவையும் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குகின்றன….?

  பத்தாம் வகுப்பு(மெட்ரிக்குலேசன்) மட்டுமே படித்த செல்வி.ஜெயலலிதாவை மாபெரும் படிப்பாளி, அறிவாளி போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஊடகங்கள் MBBS படித்த மருத்தவர் இராமதாசின் மீது ஏற்படுத்திய படிமம் நாம் அறிந்ததே, இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நிறைய உண்மைகள் புரியும், இன்று பத்திரிக்கை ஊடகம் யார் கையில் இருக்கின்றது என அனைவரும் அறிந்ததே. தமிழ் ஊடகங்களும், ஆங்கில மற்றும் தேசிய ஊடகங்களும் முழுக்க முழுக்க உயர்சாதியினரின் கையில் இருக்கின்றது, குமுதம், விகடன், தினமலர், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என பெரும்பாலான ஊடகங்களும் உயர்சாதியினரின் கையில் உள்ளது, ஏற்கனவே திராவிட கட்சிகளினால் தமிழகத்திலே ராஜரிஷி என்ற பட்டம் பறி போய் கிடக்கின்றது அவர்களுக்கு, இந்த நிலையில் இது என்னடா பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து இன்னுமொரு தலைவர், அவர் பின்னால் பலமானதொரு மக்கள் சக்தி… இப்படியே இவரை விட்டால் தற்போது தம் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் திராவிட கட்சிகளைப்போன்றதொரு பிரச்சினை பா.ம.க விடமும்.. இவர்களையும் வளரவிட்டால் இனி எந்த காலத்திலும் ராஜரிஷிப்பட்டம் என்பது கனவே என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டன, எனவே இப்போதே அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்திரிக்கைகள் வேறெவரையும் விட கண்மூடித்தனமாக பா.ம.கவின் மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதும் தாக்குகின்றன.

  இதில் ஓரளவு பத்திரிக்கைகள் வெற்றி கண்டுள்ளன…. வன்னிய இனம் தவிர்த்து மற்ற இனத்தினரின் பார்வை இந்த பத்திரிக்கைகளின் பொய்பிரச்சாரத்தால் மாறிக்கிடக்கின்றன…. ஏனெனில் பெரும்பாலானோர் பத்திரிக்கைகளின் வழியாகத்தான் பா.ம.க.வையும் மருத்துவர் இராமதாசுவையும் பார்க்கின்றனர், ஆனால் நாங்களெல்லாம் பாமக வினையும் மருத்துவர் இராமதாசுவையும் பத்திரிக்கை வழியாக பார்க்காமல் அருகிலிருந்து பார்க்கின்றோம்…

  ஆனால் சிறிது சிறிதாக இந்த நிலை மாறிக்கொண்டு வருகின்றது, எப்போதும் பா.ம.கவையும் மருத்துவரையும் கடுமையாக தாக்கிக்கொண்டுவந்த குமுதமும் விகடனும் தற்போது கண்மூடித்தனமான போக்கை சிறிது மட்டுப்படுத்தியுள்ளன… ஆனால் தினமலர் இன்னும் கண்மூடித்தனமான தாக்குதலை பாமகவின் மீது தொடர்கின்றன…

  மக்களின் பார்வையும் மாறிக்கொண்டுள்ளது, அவர்களுடைய முதல் சாய்ஸ் ஆக பாமக இல்லையென்றாலும் பா.ம.க வேண்டாமென்ற வெறுப்பு இல்லை…. பாமகவின் மீது உண்மையிலேயே வெறுப்பிருந்தால் கூட்டணியில் இருந்த போதிலும் மற்ற இனத்தவர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள், ஆனால் உண்மை என்னவெனில் தேர்தலுக்கு தேர்தல் வன்னிய இனம் தவிர்த்த மற்ற வாக்கு வங்கிகளிலும் பாமக ஊடுறுவிக்கொண்டுள்ளது…

  பிற அரசியல் தலைவர்களுக்கு மருத்துவரின் மீதான் மிகப்பெரிய எரிச்சல்களுக்கு காரணம் எந்த வித அரசியல், பண பின்புலங்கள் இல்லாமல் பேச்சுத்திறமையில்லாமல், திரைப்பட பின்னனியில்லாமல் மக்களை கவர்ந்திழுக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் இருந்த போது எப்படி இவரின் பின்னால் எப்போதும் பின் வாங்காத, அவரை வெறுக்காத ஒரு மக்கள் சக்தி உள்ளது என்ற பொறாமை….

  ஆனால் அவருடைய அற்பணிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்

  1987ல் வன்னியர் சங்க போராட்டத்தின் போது வன்னியர்கள் மீதும் வன்னிய கிராமங்களின் மீதும்
  கடும் வன்முறைத்தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கத்தால் (எந்த அரசாங்கமாயினும்) இன்று அதே இனத்தின் மீதோ வன்னிய கிராமங்களின் மீதோ கை வைக்கமுடியுமா?? உண்மையென்னவென்றால் அது எந்த அரசாங்கமானாலும் யாராலும் இனி வன்னிய கிராமங்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாது…

  குடிமக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் கையில் ஆனால் அதே அரசாங்கம் வன்முறை செய்யத்துனிந்தால் யார் காப்பது?? இனி அரச வன்முறை பிரச்சினை வன்னிய இனத்திற்கு இல்லை, ஆனால் அதே மாதிரியான பாதுகாப்பு மற்ற பலருக்கும் இல்லை… இந்த உண்மையை உணர்ந்த பலருக்கும் ஒரு இயலாமை, அது மருத்துவர் இராமதாசுவின் மீது வெறுப்பாக வெளிப்படுகின்றது…

  எங்கேயோ பெரு நகரங்களில் வாழ்ந்து கொண்டு பா.ம.க. வின் கொடிக்கம்பத்தைக்கூட பார்த்திராமல் பத்திரிக்கைகளின் செய்திகளை வைத்து பா.ம.கவை எடை போடுபவர்கள் அல்ல நாங்கள், பா.ம.க வின் அருகில், மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றோம்…

  பொதுவாக சொல்லப்போனால் பா.ம.கவின் மீதும் இராமதாசுவின் மீதுமான மற்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது போல விமர்சிக்காமல் கண்மூடித்தனமாக மிகக்கடுமையான விமர்சனம் செய்வதற்கு காரணம் பொறாமை, இயலாமை, அறியாமை ஆகிய மூன்று ஆமைகள் தான்….

 7. பாலு சொல்கிறார்:

  ‘திராவிட மாயை’ – மருத்துவர் அய்யா அவர்களின் பேச்சு இங்கே காணவும்
  http://www.thepmk.net/2012/03/blog-post.html

 8. அ.ப.சிவா சொல்கிறார்:

  “திராவிடம் என்ற சொல் சங்க இலக்கியங்களிலே கிடையாது. எனவே நாம் திராவிடர்கள் இல்லை” – டாக்டர் இராமதாஸ்.

  மருத்துவரே எற்கனவே வரிசையில் மணியரசன்,சீமான் இருக்காங்க..அவசரபடாதீங்க உங்க முரை வரும்…

  கோபலபுரதுக்கும் போயஸ் கார்டனுக்கும் போகும் போது மருத்துவர் சங்க இலக்கியம் படிக்கவில்லை போலும்….

 9. அழகாபுரம்.இரா.தங்கதுரை. சொல்கிறார்:

  மருத்துவர் இராமதாசு அவர்களின் கருத்துகளையும், மக்கள் நலப்பணிகளையும் ஏற்றுக்கொள்ளும் பலரில் சிலர், மருத்துவர் இராமதாசு அவர்களையும், அவர் நிறுவிய இயக்கத்தையும் ஏற்றுக்கொள்ள மனமில்லை. வரலாறுத் தெரியாத சிலர் சாதி வெறியைத் தூண்டும் கட்சி என்று சொல்கிறார்கள். மருத்துவர் இராமதாசு அவர்கள் தன இனத்தினர் வாழும் சில இடங்களில் இருந்துவந்த சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, தனது கொள்கையை நிலைநிறுத்தினார். அப்படிஇருக்கும்போது சாதி வெறியைத் தூண்டும் கட்சி என்று பாட்டாளி மக்கள் கட்சியை சொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

  அழகாபுரம்.இரா.தங்கதுரை.

 10. ஒன்றினை முதலில் தெளிவாகப்புரிந்து கொள்ள முயலுங்கள், அது நமது தமிழ் கலாச்சாரத்தினை அடியோடு சீர்குழைத்து தொடர்ந்து சீர்குழைத்துகொண்டிருக்கும் திரைதுறையின் அவசியம் இல்லாமல் திராவிடம் என்ற பசப்பு மொழியில்லாமல் மக்களின் சக்தியினை அறிவினை திரைப்படம் எனும் மாயவலையில் மங்கச்செய்துகொண்டிருக்கும் ஒரு அரை நூற்றாண்டு வேலையில் உழைக்கும் வர்க்கத்தின் பெரும் கூட்டத்தினை அடிப்படையாககொண்டு தோற்றிவிக்கப்பட்ட ஒரே ஒரு கட்சி மருத்துவம் படித்து இயல்பிலே தமிழ் உணர்வுகொண்ட விவசாய பின்புலம் கொண்ட‌ ஒரு போராளி மருத்துவர் இராமதாசு அவர்களால தோற்றுவிக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சிதான்! நிச்சயம் இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது!

  வேண்டுமானால் திரைப்படம் என்னும் போதை மருந்தினை பயன்படுத்தாமல் திராவிடம் என்ற பசப்பு மொழியில்லாமல் முழுக்க உழைக்கும் மக்களை கொண்டு தொலைநோக்கு பார்வையோடு அறிவுசார்ந்த திட்டங்கள் கொண்ட ஒரு கட்சியினை இங்கே யாருக்காவது திராணியிருந்தால் ஆரம்பிக்கட்டம் அல்லது நடத்திகாட்டட்டும் பார்ப்போம் நாங்களும் அவர்கள் பின்னால் வருகிறோம்! ஆனால எங்களால் நிச்சயம் கையில்அடித்து கூறமுடியும் இங்கு அவ்விதம் கட்சி நடத்த எந்த ஒரு கட்சிக்கோ அல்லது தலைவனுக்கோ அருகதை இல்லை இதை உங்களால் ம்றுக்க முடியுமா?

  ஆனால் இங்கு உழைக்காமல் தின்று கொளுத்த கூட்டமும் திராவிடம் என்ற இல்லாத கட்டுகதைகளை தொடர்ந்து கூறிகொண்டிருக்கும் பளுத்த ஓநாய் கூட்டமும்தான் இதை ஏற்க்க மறுக்கின்றன.

 11. ravi சொல்கிறார்:

  ராமதாஸ் பேச்சு : “2016 இல் பா ம க ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது” – வேல வெட்டி இல்லனா இப்படித்தான் சூரியன் உச்சிக்கு வருகிற வரைக்கும் தூங்க சொல்லும்….பகல் கனவு வரும்…….ஏலே அன்பு ….அப்பாவ எழுப்பு……. . நிறைய வேல கிடக்கு……. சீக்கிரம் போகணும்…… மரம் வெட்ட போகணும்…… அப்படியே தோட்டத்துக்கு போகணும், பெட்டி வாங்கணும், பாராளுமன்ற தேர்தல் நெருங்குது இல்லே……. அக்கா பேரில் இன்னொரு தோட்டம் வாங்கணும்……..கல்யாணத்துக்கு போவனும்…… அப்பாவி தொண்டர்கள் காதுலே பூ சுத்தணும் ……படிக்கிற பசங்க மனச கெடுக்கணும்….

 12. ravi சொல்கிறார்:

  ராமதாஸ் பேச்சு : “2016 இல் பா ம க ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது” – தமிழ் மக்கள் : “இன்று முதல் அய்யா அவர்களுக்கு “கனவுலக நாயகன்” என்ற பட்டத்தை பெருமையுடன் வழங்குகிறோம்…

 13. ravi சொல்கிறார்:

  தமிழர்களுக்கு கிடைத்த அரிய 2 பொக்கிஷங்கள்: திரைப்பட துறையில் ஒரு மருத்துவர் “பவர் ஸ்டார் சீனுவாசன்” அரசியலில் ஒரு மருத்துவர் “ராமதாஸ்” – “லொள்ளு” பண்ணுவதில், தமிழ் மக்களை மகிழ்விப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கிறார்கள்

 14. ravi சொல்கிறார்:

  அப்பாவும் மவனும் கனவில் மிதக்கிறபோது ……….(எங்கேயோ வானொலியில் பாடல் ஒலிக்கிறது)………”கனவு காணும் வாழ்க்கை யாவும், கலைந்து போகும் கோலங்கள்……….. ஆசைகள் என்ன…….ஆணவம் என்ன……. .தூக்கத்தில் பாதி……… ஏக்கத்தில் பாதி…….. போனது போக……… ஏது மீதம்……? பேதை மனிதனே….. கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்……..(மீண்டும்) கனவு காணும் வாழ்க்கை யாவும், கலைந்து போகும் கோலங்கள்……….”

 15. ravi சொல்கிறார்:

  ராமதாஸ் பேச்சு : “2016 இல் பா ம க ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது” – இங்கு “கிளி ஜோதிடம்” பார்க்கப்படும். குறிப்பாக 2016 இல் நடக்க போவதை முன்கூட்டியே சொல்லப்படும்…….

 16. ravi சொல்கிறார்:

  ராமதாஸ் பேச்சு : “2016 இல் பா ம க ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது” – மருத்துவர் அய்யா, பேசுங்க, தினமும் இதே மாதிரி எதையாவது பேசுங்க…ராத்திரி முழுக்க தூங்க முடியாம தவிக்கும் தமிழக மக்களுக்கு உங்களது பேச்சு ஒரு வரபிரசாதம். கொசுகடியால் சிரிப்பதையே மறந்து போன மக்களுக்கு உங்க பேச்சு பாலைவனச் சோலை. சுட்டெரிக்கும் வெயிலில் மின்சாரம் இல்லாமல் வாடிக்கிடக்கும் மக்களுக்கு உங்கள் பேச்சு ஒரு கோடை மழை! போன தடவை மஞ்ச துண்டு அய்யா இலவசமா ஏதேதோ தந்தாங்க இந்த தடவ அம்மாவும் ஏதேதோ இலவசமா தாராங்க உங்க பங்குக்கு நீங்களும் நகைசுவையா பேசி வடிவேலுவையே தூக்கி சாப்பிட்டு எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கறீங்க (எதுங்க இது இலவசம் தானே அப்புறம் பெட்டி கேட்க போறீங்க?)

 17. ravi சொல்கிறார்:

  ஒருத்தனுக்கு எழுந்திருச்சு நிக்கவே முடியலையாம்….அவன் ஏழெட்டு பொண்டாட்டி கேட்டானாம்….இவர் வாயிலேயே வடை சுட்டு வன்னிய மக்களை ஏமாற்றி வருவதை அந்த சாதி சனமே உணர்ந்து விட்டார்கள் (தானே புயலே அதற்க்கு அத்தாட்சி) ; இவர் பேசுவது மற்றவர்களுக்கு நகைசுவையாக இருப்பதை விட…… நிச்சயம் வன்னிய சாதியினர்……சிரித்து…….சிரித்து வயிறு புன்னாகியிருப்பார்கள்….

 18. ravi சொல்கிறார்:

  ராமதாஸ் பேச்சு : “2016 இல் பா ம க ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது” – இந்த மனுஷன் இதே மாதிரி பேசினே இருந்தார்னு வை…….ஒரு லெவலுக்கு மேல போனா அப்புறம் தமிழக மக்கள் எல்லாரும் கொந்தளிச்சி போய்…….. பக்கத்துக்கு நாட்டுக்கு போயிட போறாங்க “ராஜபக்ஷே கையிலே அடிபட்டு செத்தாலும் சாவேமே தவிர திரும்பி தமிழ் நாட்டு பக்கம் வரமாட்டோம் அப்படின்னு அடம் பிடிக்க போறாங்க”

 19. ravi சொல்கிறார்:

  ராமதாஸ் : எல்லாரும் கேட்டுகோங்க……… நானும் அரசியல்ல இருக்கேன்.. நானும் அரசியல்ல இருக்கேன்…… அதே போல் என் மவனும் இருக்கான்…… என் மவனும் இருக்கான்”

 20. ravi சொல்கிறார்:

  ராமதாஸ் பேச்சு : “2016 இல் பா ம க ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது” / ரவி : வேணாம்………. முடியல…………. வலிக்குது………….. அழுதுடுவேன்……… !!!

 21. ravi சொல்கிறார்:

  ராமதாஸ் பேச்சு : “2016 இல் பா ம க ஆட்சி அமைப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது” – இத படிச்சிட்டு பொறுமையா இருக்கறவங்க தெய்வத்துக்கு சமம்……..! அதுக்காக பொறுமையா இருக்க முயற்சி செய்யாதீங்க, ப்ளீஸ்……..கடவுளுக்கு கருணையே இல்லாம போயிடுச்சா…… இதையெல்லாம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்று எங்கள் விதி!

 22. அருள் சொல்கிறார்:

  “ஈழத் தமிழர்களுக்கான நியாயம் சிங்கள ஆட்சியாளர்களால் தொடர்ந்தும் மறுக்கப்படுமானால், தமிழீழ விடுதலைப் போர் மீண்டும் வெடித்துக் கிளம்புவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது”

  என்று “தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு” எனும் அமைப்பினர் பேசுகின்றனர்.

  திருவாளர் ரவி அவர்களே! நீங்கள் மேலே ‘மருத்துவரின் பேச்சுக்கு’ பதிலாக நீங்கள் பேசும் நக்கல் வார்த்தைகள் இதற்கும் பொருந்துமா?

 23. தம்பி ரவி நீ யார் பெற்ற பிள்ளையோ தெரியல இப்படி காப்பி அன்ட் பேஸ்ட் பன்ற! உனக்கு என்ன பிரச்சனைன்னு சரியாக கூறமுடியுமா?!

 24. அருள் சொல்கிறார்:

  “ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்தாலன்றி தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது! – தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகம்.”

  என்கிறது ஒரு செய்தி

  திருவாளர் ரவி அவர்களே! நீங்கள் மேலே ‘மருத்துவரின் பேச்சுக்கு’ பதிலாக நீங்கள் பேசும் நக்கல் வார்த்தைகள் இதற்கும் பொருந்துமா?

 25. Jp சொல்கிறார்:

  சிவா அவர்களே… ஏன் மருத்துவர் ஒரு செய்தியை சொன்னால் மட்டும் இப்படி நகைப்பதற்கு கங்கணம் கட்டுகொண்டு நிற்கிறீர்கள்? தானே புயலில் சினிமாகாரர்கள் பண உதவி செய்தார்களாம்… என் வன்னிய மக்கள் என்ன பிச்சைக்காரர்களா? நிதி உதவி செய்வதற்கு? படைநடத்தி பாராண்ட பேரினம் எங்கள் வன்னிய இனம்….இந்த புயலுக்காக எவனிடமும் உதவிக்காக கைநீட்டி நிற்க நிலையில் இல்லை எங்கள் மக்கள்…அங்குள்ள எம்மக்கள் அடிப்படையிலே வசதிபடைத்தவர்கள் தான்…அதற்காகத்தான் எங்கள் அய்யா அவர்களும் சின்ன அய்யா அவர்களும் இது போன்ற பேரிடர் ஏற்பட்டால் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கபெற வேண்டிய அடிப்படை உரிமைகளை பெற்று தருவதற்காக போராட்டம் நடத்தி அதை மக்களிடம் சென்றடைய செய்துள்ளனர்… அதுமட்டுமில்லாமல் மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அங்கு பல இடங்களில் மருத்துவ முகாமினை மருத்துவர் சின்ன அய்யா அவர்கள் நடத்தி மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்துள்ளார்… அதுமட்டுமில்லாமல் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய முந்திரி,பலா கன்றுகளை எங்கள் பாட்டாளி சொந்தங்கள் ஒவ்வொரு ஊரிலும் வைத்துள்ளார்கள்…இன்று களத்தில் இறங்கி கடலூர் மக்களுக்காக மருத்துவர் அய்யா வின் ஆணைகிணங்க எமது பாட்டாளி சொந்தங்கள் எல்லா விதமான தேவைகளையும் செய்துகொடுத்து கொண்டுள்ளனர்…

 26. அருள் சொல்கிறார்:

  “நமது தற்காலிக தோல்வியைக் கண்டு மனம் தளராதீர்கள். இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று ஆகஸ்டு 16, 1945 இல் கூறினார் நேதாஜி. இரண்டு ஆண்டுகள் கழித்து ஆகஸ்டு 15, 1947 இல் இந்தியா விடுதலை அடைந்தது.

  திருவாளர் ரவி அவர்களே! 1945 நீங்கள் இருந்திருந்தால் – நேதாஜியைப் பார்த்து “வேல வெட்டி இல்லனா இப்படித்தான் சூரியன் உச்சிக்கு வருகிற வரைக்கும் தூங்க சொல்லும்….பகல் கனவு வரும்” என்று சொல்லியிருப்பீரா?

  நேதாஜியைப் பார்த்து ““இன்று முதல் நேதாஜி அவர்களுக்கு “கனவுலக நாயகன்” என்ற பட்டத்தை பெருமையுடன் வழங்குகிறோம்…” என்று சொல்லியிருப்பீரா?

  நேதாஜியைப் பார்த்து “இந்தியர்களுக்கு கிடைத்த அரிய 2 பொக்கிஷங்கள்: திரைப்பட துறையில் ஒரு “பவர் ஸ்டார் சீனுவாசன்” அரசியலில் ஒரு நேதாஜி – “லொள்ளு” பண்ணுவதில், இந்திய மக்களை மகிழ்விப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்கிறார்கள்” என்று சொல்லியிருப்பீரா?

  சுதந்திர நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்வதும், அதற்காக முயற்சிப்பதும் அடிப்படையான அரசியல் உரிமை. அந்த உரிமையைப் பேசினால் உங்களுக்கு வயிறு எரிவது ஏன்?

  மருத்துவர் அவர்களைத் தூற்றுவதன் மூலம் உங்கள் ஆதிக்க சாதி வெறி அரிப்பைத் தீர்க்க முயற்சிக்கிறீர்களா?

 27. Jp சொல்கிறார்:

  ரவி பா.ம.க ஆட்சியை பிடித்தால் என்ன தவறு? 1980 இல் ஆரம்பித்து இன்று வரை மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் ஒரே போராளி மருத்துவர் அய்யா அவர்கள் மட்டும் தான்…உண்மையாக மக்களுக்காக போராடியதால் தான் இன்று வரை எங்களை ஒருசில பொரம்போக்குகள் ஏற்றுகொள்வதில்லை… அடித்தட்டு மக்களின் பிரச்சனைகள் பற்றி தெரிந்துள்ள எவனும் அய்யாவை பற்றி தவறாக பேச மாட்டான்…ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்கள் தான் அய்யா வை பற்றி தவறாக பேசுவார்கள்… ஏனெனில் அந்த ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவதே எங்கள் இனமான காவலர் மருத்துவர் அய்யா அவர்கள்தான்…உன்னிடம் பேசுவதெல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதுவதை போன்றதே…

 28. Jp சொல்கிறார்:

  ரவி அவர்களே! சுதந்திர நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்வதும், அதற்காக முயற்சிப்பதும் அடிப்படையான அரசியல் உரிமை. அந்த உரிமையைப் பேசினால் உங்களுக்கு வயிறு எரிவது ஏன்?

  மருத்துவர் அவர்களைத் தூற்றுவதன் மூலம் உங்கள் ஆதிக்க சாதி வெறி அரிப்பைத் தீர்க்க முயற்சிக்கிறீர்களா?

 29. அருள் சொல்கிறார்:

  ரவி said….// //“தானே புயல்” வந்தது….. அதுவும் வன்னிய சாதி அதிகம் நிறைந்த பகுதிகளிலே……! பாதிக்க பட்ட மக்களுக்கு என்ன செஞ்சீங்க? சினிமா கலாச்சாரத்தை அழிப்பென்னு சொல்றியே, அந்த சினிமா கலைஞர்களவாது அரசியலில் இருக்கிற விஜய்காந்த் லிருந்து, அரசியலுக்கு வராத மற்றவர்களும் உதவி செஞ்சாங்க (ரஜினிகாந்த் 10 லட்சம், கமலஹாசன் 15 லட்சம், சிவகுமார் சூரியா 25 லட்சம் ஏன் நயன்தார கூட 5 லட்சம் கொடுத்தாங்க….)// //

  திருவாளர் ரவி அவர்களே!

  தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவாக முதல் ஆளாகவும், அதிக முறையும் சென்றது பாமக தலைவர்கள்தான்.

  கடலூர் மாவட்ட மக்கள் மானம் உள்ளவர்கள். அடுத்தவனிடம் பிச்சைக்கேட்டு கையேந்தும் பிச்சைக்காரர்கள் அல்ல. சுனாமி தாக்கியபோது அளிக்கப்பட்ட ஏராளமான ‘நல்ல’ உடைகளை கடலூர் மாவட்ட மக்கள் தூக்கி எறிந்தனர். அவை சாலை ஓரங்களில் மலைபோல குவிந்து கிடந்தன. காரணம் – ஒருவர் உடுத்திய துணியை மற்றவர் உடுத்துவது அந்த மக்களின் கௌரவத்துக்கு இழுக்காகும்.

  இப்போது, சுமார் 25000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் – கடலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பது ‘மனித உரிமை’ அடிப்படையிலான முழு இழப்பீடு, அதுவும் அரசின் மூலமாகத்தான். எனவேதான், கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து முழுமையான மறுவாழ்வினை ஏற்படுத்த பாமக போராடுகிறது.

  மானமுள்ள மக்களின் உரிமைகளுக்காக திராவிடக் கூத்தாடிகள் போராடுகிறார்களா?

  சுமார் 25000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் – விஜயகாந்த், ரஜினி, நயன்தாரா என்று கூத்தாடிகளின் சில லட்சம் ‘பிச்சை’ அவர்களுக்கு தேவையில்லாதது.

 30. புதியகோணங்கி சொல்கிறார்:

  ஹா ஹா ஹா சரியான நகைச்சுவை பின்னூட்டங்கள். இதில் உச்ச கட்டம் அருள் என்பவரே பல பெயர்களில் எழுதியிருக்கின்ற படியால் அவசரத்தில் பெயர் மாற்ற மறந்து விடுகிறார் ஹி ஹி ஹி
  ராமதாஸூ அய்யா புகழை பாடணும்னா என் வாழ் நாள் பத்தாது அதனால ஒரு கமண்டுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு அப்பீட்டாக்கிறேன்

 31. புதியகோணங்கி சொல்கிறார்:

  //கடலூர் மாவட்ட மக்கள் மானம் உள்ளவர்கள். அடுத்தவனிடம் பிச்சைக்கேட்டு கையேந்தும் பிச்சைக்காரர்கள் அல்ல. சுனாமி தாக்கியபோது அளிக்கப்பட்ட ஏராளமான ‘நல்ல’ உடைகளை கடலூர் மாவட்ட மக்கள் தூக்கி எறிந்தனர்.//

  //என் வன்னிய மக்கள் என்ன பிச்சைக்காரர்களா? நிதி உதவி செய்வதற்கு? படைநடத்தி பாராண்ட பேரினம் எங்கள் வன்னிய இனம்….இந்த புயலுக்காக எவனிடமும் உதவிக்காக கைநீட்டி நிற்க நிலையில் இல்லை எங்கள் மக்கள்…அங்குள்ள எம்மக்கள் அடிப்படையிலே வசதிபடைத்தவர்கள் தான்//

  அப்புறம் என்னா எழவுக்கு தான்யா இட ஒதுக்கீடு கேட்டு மரத்தையெல்லாம் வெட்டிப்போட்டு சாலை மறியல் செஞ்சி மத்தவனுங்க தாலியை அறித்தீங்க.
  நீங்கதான் ‘பார்’ ஆண்ட பேரினம்மாச்சே உங்களுக்கு ஏன் அரசு வேலை

 32. புதியகோணங்கி சொல்கிறார்:

  ராமதாஸ் தான் பமக நிறுவன்ர் அதனால அவரை ஐயா நு மரியாதையா அழைக்கிறீங்களோன்னு நினைச்சேன்.

  இப்ப அன்புமணி சின்ன ஐயாவா… ஓ புரியுது…. புரியுது

  அப்படின்னா நம்ம அன்புமணி மவன் குட்டி ஐயா என்ன சரியா

  வாழ்க உங்க பாராண்ட பேரினம்

 33. புதியகோணங்கி சொல்கிறார்:

  அருளண்ணே,

  நேதாஜியும் ராம்தாஸும் ஒண்ணாண்ணே
  உங்க தேச பக்தி புல்லரிக்குதண்ணே

  உங்களுக்காகவே பாமக விலே கொள்கை பரப்பு செயலர் பதவி காத்திட்டிருக்கு
  போங்கண்ணே

 34. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  நாம் தமிழர் எனும் ஒற்றுமை காலத்தின் அவசியம்!!!

  தமிழ் நண்பர்களே!!!கொஞ்சம் சிந்திப்போமா- நாய்ப் புத்தி என்றால் என்ன என்று ??? தெருவில் வரும் பன்றி, எருமை,கழுதை …பல விலங்குகளை தெருவில் போக அனுமதிக்குமாம்.ஆனால் தன் இனமான வேறொரு நாய் வந்தால், தெரு எல்லை வரை துரத்தி அடித்த பின்னர் தான், நிம்மதி பெறுமாம்.

  உதாரணமாக -பூனைக்கு மணி கட்ட வலிமையான ஒருவர் தயாராக இருக்கிறார். மக்கள் பலமும், பண/ மீடியா வசதியும் கொண்டவர். வெற்றிபெற அணைத்து சாதி மத மக்களின் உதவியும் தேவை என்பதை அப்பொழுது உணர்வார்.

  நாலாயிரம் குறைந்த சம்பளம் பெற்ற செவிலியர்கள், பன்னிரண்டாயிரம் பெற்றதின் இரகசியம் என்ன???முதலில் ஒருவன் தைரியமாக சிந்தித்தல்- பின்னர் ஒற்றுமையுடன் போராடல்.ஆகையால் நாம் தமிழர் எனும் ஒற்றுமை காலத்தின் அவசியம்.

  குறிப்பு: வன்னிய சாதியைச் சேர்ந்தவனல்ல நான் .

 35. அருள் சொல்கிறார்:

  புதியகோணங்கி…

  // //அப்புறம் என்னா எழவுக்கு தான்யா இட ஒதுக்கீடு கேட்டு மரத்தையெல்லாம் வெட்டிப்போட்டு சாலை மறியல் செஞ்சி மத்தவனுங்க தாலியை அறித்தீங்க.// //

  வன்னியர்கள் “மத்தவனுங்க தாலியை” அறுக்கவில்லை. வரலாறு தெரிந்தால் பேசுங்கள். இல்லையென்றால் வாயையும் மற்றதையும் மூடிக்கொண்டு வேலையைப் பாருங்கள்.

  சமூகநீதிப் போராட்டத்தின் போது திராவிட ‘போலீஸ்’தான் 21 வன்னியர்களின் உயிரைப் பறித்தது.

  இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல, உரிமை. கல்வி, வேலையில் உரிமை என்பது எங்கள் நாட்டில் எங்கள் பங்கு. அது புதிய கோணங்கியின் குடும்ப சொத்து அல்ல.

  Mr. புதிய கோணங்கை, அண்ணல் அம்பேத்கரை, தந்தைப் பெரியாரைப் படியுங்கள். உங்கள் பைத்தியம் தெளியும்.

 36. அருள் சொல்கிறார்:

  புதியகோணங்கி…

  // //அருள் என்பவரே பல பெயர்களில் எழுதியிருக்கின்ற படியால் அவசரத்தில் பெயர் மாற்ற மறந்து விடுகிறார்// //

  பல பெயர்களிலோ புனைப்பெயரிலோ எழுதவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பல பெயரில் எழுதி அரிப்பைத் தீர்க்க நினைக்கும் அற்ப வேலையும் எனக்கு இல்லை.

  புதிய கோணங்கி அவர்களே. அருள் என்பதுதான் எனது உண்மைப் பெயர். நான் அந்த பெயரில் மட்டும்தான் எழுதுகிறேன். எனக்கு நானே சூட்டிய “கோணை” பெயர் எதுவும் இல்லை.

  http://arulgreen.blogspot.com

 37. அருள் சொல்கிறார்:

  கடலூர் சித்தன்.ஆர்

  // //உதாரணமாக -பூனைக்கு மணி கட்ட வலிமையான ஒருவர் தயாராக இருக்கிறார். மக்கள் பலமும், பண/ மீடியா வசதியும் கொண்டவர். வெற்றிபெற அணைத்து சாதி மத மக்களின் உதவியும் தேவை என்பதை அப்பொழுது உணர்வார்.// //

  தமிழர்களிடையே ஒற்றுமை தேவை என்கிற உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன். ‘தமிழ்நாடு திராவிட ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும்’ என்கிற மருத்துவர் இராமதாசு அவர்களின் கருத்துக்கு விளக்கம் கூறாமல், அவரது சாதியை இங்கே வம்புக்கு இழுக்கிறார்கள்.

  வன்னியர்களுக்கு எதிரான இந்த காழ்ப்புணர்ச்சிக்கு பின்னால் இருப்பது சாதி வெறிதான். (குறிப்பாக, ஆதிக்க சாதிவெறி)

 38. அருள் சொல்கிறார்:

  புதியகோணங்கி…
  // //அருள் என்பவரே பல பெயர்களில் எழுதியிருக்கின்ற படியால் அவசரத்தில் பெயர் மாற்ற மறந்து விடுகிறார்// //

  பல பெயரிலோ புனைப்பெயரிலோ எழுதவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பல பெயரில் எழுதி அரிப்பைத் தீர்க்க நினைக்கும் அற்ப வேலையும் எனக்கு இல்லை.

  புதிய கோணங்கி அவர்களே. அருள் என்பதுதான் எனது உண்மைப் பெயர். நான் அந்த பெயரில் மட்டும்தான் எழுதுகிறேன். எனக்கு நானே சூட்டிய “கோணை” பெயர் எதுவும் இல்லை.

  http://arulgreen.org/

 39. //புதிய கோ(ணா)மாளி//

  //அப்புறம் என்னா எழவுக்கு தான்யா இட ஒதுக்கீடு கேட்டு மரத்தையெல்லாம் வெட்டிப்போட்டு சாலை மறியல் செஞ்சி மத்தவனுங்க தாலியை அறித்தீங்க. நீங்கதான் ‘பார்’ ஆண்ட பேரினம்மாச்சே உங்களுக்கு ஏன் அரசு வேலை//

  போரட்டம்/ வீரம்/ சிந்தனை/ சமுதாயப் பற்று – இதைபற்றியெல்லாம் உன்னை போன்ற முட்டாள் கோமாளிக்கெப்படி தெரியும் ஏனென்றால் உம்மைபோன்ற கூட்டம்தானடா கூத்தாடிகளுக்கு பீர் அபிசேகம் செய்துகொண்டு பெற்ற தாய்தந்தையர்கள் நோய்வாயப்பட்டிருக்கும்போது அவர்களைகூட கவனியாமல் உன் கூத்தாடி தலைவனுக்கு மொட்டை அடித்தவரக்ள்தானடா நீங்கள்!! பின்பு உனக்கு எப்படி தெரியும் போராட்டம்/வீரம்/சிந்தனை/ சமுதாயப்பற்று என்பதைபற்றியெல்லாம்! மூடனே கண்மூடித்தனமாக எதையும் எழுதாமல் மல்லாக்க படுத்து கொஞ்சம் உமது மூளையினை (இருந்தால்) உபயோகித்துபார் எல்லாம் புரியவரும்!

 40. //ராமதாஸ் தான் பமக நிறுவன்ர் அதனால அவரை ஐயா நு மரியாதையா அழைக்கிறீங்களோன்னு நினைச்சேன்.
  இப்ப அன்புமணி சின்ன ஐயாவா… ஓ புரியுது…. புரியுது அப்படின்னா நம்ம அன்புமணி மவன் குட்டி ஐயா என்ன சரியா
  வாழ்க உங்க பாராண்ட பேரினம் //

  கூத்தாடிகளுக்கு அடிவருடி கோணாங்கியே!!

  சூப்பர் ஸ்டார், தல், தளபதி சுப்ரீம்ஸ்டார் இதெல்லாம் எந்த பல்கலைக்கழகத்தில் படித்து பெற்றது?!! இவர்கள் நாட்டிற்க்கு ஆற்றிய கடமைகள்தான் என்ன? அவர்கள் உங்களைபோன்ற ரசிகர்களை முட்டாள்களாக்கியதல்லாமல்!?

 41. //புதியகோணங்கி…// //ravi…//

  உமது காழ்ப்புணர்ச்சிகளையெல்லாம் தவிர்த்து ஏதேனும் அறிவுசார்ந்த விசயங்கள் பற்றி பதிவுசெய்! அது அழகாகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்! அதை தவிர்த்து ஒரு பெரும் சமுதாய தலைவரை அவர் என்ன சொன்னாலும் செய்ய பின்னால் இருக்கும் மக்களை இழிவாக பேசவும் வேண்டாம் எழுதவும் வேண்டாம்!

 42. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”

  Pl c link which is self explanatory:

  http://www.envazhi.com/jayalalithaa-a-specialist-of-empty-announcements/

  இவர்களுக்கு உள்ள இந்த சாமர்த்தியம்/ புத்திசாலித் தனம்/ நடைமுறை பகுத்தறிவு /ஆடுற மாட்டை ஆடி கறக்கும் திறமை -இவைகளில் ஒரு பத்து சதவிகிதம் நம் பின் தங்கியுள்ள தமிழர்களுக்கு- வேலை பார்க்கும் இடத்திலும்/ வியாபாரத்திலும்/காரியம் சாதிப்பதிலும்/ எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தால் – தமிழர்கள் எப்போதோ முன்னேறி இருப்பார்கள்.

  ஹி..ஹி..ஹி ..நம்ம தான் காது குத்து/மஞ்சள் நீர்/ வளைய காப்பு/ பத்திரிகையில் நம்ம பெயர் இடம் மாறியிருந்தாலோ / அல்லது விடுபட்டிருந்தாலோ – திராவிட பகுத்தறிவை பயன் படுத்தி உபயோகமுள்ள உறவுகளை எதிரிகளாக்கும் கலையை வளர்த்து வருகிறோமே???

  ஏன் நம்மை பத்து பதினைந்து சதவிகித மக்கள் ஆள முடியாது / எதிர்கட்சியாக உட்கார முடியாது???

 43. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  Pl c link which is self explanatory:

  http://www.envazhi.com/mr-katju-why-north-indians-not-try-to-learn-tamil/

  ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகமாகி உள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை. தமிழகத்தில்,அதே நிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில் வாழும் மக்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. இந்நிலை இந்திய ஒருமைப்பாட்டுக்கு/நமக்கு நல்லதல்ல. ஆகவே திறமையான தமிழ் வழிகாட்டிகள் தமிழகத்திற்கு உடனடியாகத் தேவை.”

  தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா? அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் துலைவில் இல்லை.

  தமிழன் நெல்லுக்காக இரைத்த நீர் எத்தனை சதவிகிதம் தமிழனை சேர்க்கிறது என்று கேட்ட ஒரே தலைவன் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே?? என்ன செய்வது – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே??? கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்??? சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். வாழ்க வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த தமிழ் நாடு.

  காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தையை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்?

  முதல் தலை முறை பட்டதாரிகள் அதிகம் கொண்ட பெரிய மாநிலம் தமிழகம். தமிழன் முன்னேறுவது சிலருக்கு பொறுக்கவில்லை/ பிடிக்கவில்லை. உதவி செய்வதாக நினைத்து கெடுத்து விடாதீர்கள் – அது தமிழருக்கு நன்மை பயக்காது.காரணம் கற்றறிந்தோர் அறிவர்.
  தமிழா ! நடந்ததை மற. நடப்பதை நினை. இனஉணர்வு கொள்!

  ஹி..ஹி..ஹி.. தமிழாவது கத்திரிக்காவாவது ? ராஜா காது! கழுதை காது!!- ரொம்ப நல்லாயிருக்கு இல்லே???

 44. புதியகோணங்கி சொல்கிறார்:

  ஆஹா! பாமக செயற்குழு மெம்பெர்ஸ் எல்லோரும் இங்கே தான் இருக்காங்க போல ;)))

 45. புதியகோணங்கி சொல்கிறார்:

  //Jp (14:49:20) :

  அடே புதியகோணங்கி மட பைய மவனே…நீ போடுற பிசைக்கும் அரசாங்கத்திடம் உள்ள உரிமைக்கு போராடுற போராட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாதாடா உனக்கு?????????
  ஏன்டா புதியகோணங்கி மட பைய மவனே அருள் என்பவரை பற்றி உனக்கு என்னடா தெரியும்? இட ஒதுக்கீடு போராட்டம் என்பது எங்களுடைய உரிமை…அதற்காக போராடுகிறோம்….அய்யா, சின்ன அய்யா ன்னு சொல்றதால உனக்கு எங்கயாவது எரியிதா?//

  என்ன மரியாதை… என்ன மரியாதை…
  இதை பாமக விலே மட்டும்தான் கத்துக்கலாம் போல

 46. புதியகோணங்கி சொல்கிறார்:

  @முரளிதீர தொண்டைமான் (16:34:29) :

  //சூப்பர் ஸ்டார், தல், தளபதி சுப்ரீம்ஸ்டார் இதெல்லாம் எந்த பல்கலைக்கழகத்தில் படித்து பெற்றது?!! இவர்கள் நாட்டிற்க்கு ஆற்றிய கடமைகள்தான் என்ன? அவர்கள் உங்களைபோன்ற ரசிகர்களை முட்டாள்களாக்கியதல்லாமல்!?//

  //ஒரு பெரும் சமுதாய தலைவரை அவர் என்ன சொன்னாலும் செய்ய பின்னால் இருக்கும் மக்களை இழிவாக பேசவும் வேண்டாம் எழுதவும் வேண்டாம்!//

  அண்ணே முரளிதீர தொண்டைமான் மேலே உள்ள இரண்டு பாராவுமே நீங்க சொன்னது தான். இதில் என்ன வித்தியாசம் கண்டுவிட்டீர் ?அவர்கள் செய்யும் தொழில்களை விடுத்து.

  ஆக மொத்தம் அவனவனுக்கு ஒரு வழி காட்டி.
  அவன் நடிகனோ இல்லை, சந்தர்ப்பவாத தலைவனோ அவன் பின்னே மூளையை அடகு வைத்து எதையும் செய்யும் கூட்டம்.
  இதிலே ஒரு கூட்டத்தை இன்னொரு கூட்டம் கேலி செய்கிறது
  நல்ல காமடி தான் போங்க

 47. அருள் சொல்கிறார்:

  @chandru Paris France

  நீங்க இருக்கிற இடத்துல ஏதாவது மனநோய் மருத்துவமனை இருந்தா அங்க போய் சேர்ந்துடுங்க.

  உங்களைப்போன்ற வந்தேறி ஆதிக்கச்சாதி திராவிடக் கூட்டம் தமிழ் நாட்டில் கோலோச்சுவதால்தான், தமிழர்களை – மண்ணின் மைந்தர்களை நகைச்சுவையாகப் பேச முடிகிறது. அதுவும் பயந்தாகொள்ளிகள் போல முகமோ, முகவரியோ இல்லாமல் மறைவாக இருந்து பேசமுடிகிறது!

  மருத்துவர் இராமதாசு அவர்களை கிண்டல் செய்ய உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

  ஒரு மிகப்பெரிய மக்கள் கூட்டத்திற்கு இடஒதுக்கீட்டை அவர் பெற்று தந்துள்ளார். அதைப்பார்த்து வயிற்றேரிச்சலில் நீங்கள் வந்ததை வாந்தி எடுக்கின்றீர். எங்கே வன்னியர்கள் எல்லோரும் ஒன்றுபட்டுவிட்டால் ஆதிக்கக் கூட்டம் ஓட்டம்பிடிக்க நேருமோ, என்கிற பயத்தை காமெடியாகப் பேசிப்பார்க்கிறீர்கள்.

  உம்முடைய கொட்டத்தை அடக்கும் நாள் வரும்.

 48. அருள் சொல்கிறார்:

  புதியகோணங்கி….
  // //மூளையை அடகு வைத்து எதையும் செய்யும் கூட்டம்// //

  மூளை என்ற ஒன்று இருப்பதால்தான், சிந்திக்கும் திறன் இருப்பதால்தான் நாங்கள் மருத்துவர் என்கிற தலைவன் பின்னால் போகிறோம்.

  ஒரு லட்சியத்துக்காக ஒன்றிணைந்து அதற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதுதான் வீரம்.

  மாறாக, கூத்தாடி நடிகர்கள் பின்னால் போவது போதை.

  இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல் புலம்ப வேண்டாம் ‘கோண’ங்கி.

 49. அருள் சொல்கிறார்:

  @@chandru Paris France
  @ravi

  “முதலில் அவர்கள் உன்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.
  பின் உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
  பின் உன்னுடன் சண்டையிட வருவார்கள்.
  பின்… நீ வெற்றி பெற்றிருப்பாய்.”

  — என்றார் மகாத்மா காந்தி.

  முன்பு மருத்துவர் அய்யாவை கண்டுகொள்ளாமல் இருந்தது ஆதிக்கக் கூட்டம். இப்போது அவரைப் பார்த்து சிரிக்கிறது. இனி சண்டையும் போடும். ஆனால், வெற்றி பெறப்போவது என்னவோ அவரது உறுதியான உன்னத லட்சியம்தான்.

  திராவிடக் கூட்டத்தை மருத்துவர் அய்யா விரட்டிக்காட்டுவார்.

 50. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  “முதலில் அவர்கள் உன்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.
  பின் உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
  பின் உன்னுடன் சண்டையிட வருவார்கள்.
  பின்… நீ வெற்றி பெற்றிருப்பாய்.” — என்றார் மகாத்மா காந்தி.

  முன்பு மருத்துவர் அய்யாவை கண்டுகொள்ளாமல் இருந்தது ஆதிக்கக் கூட்டம். இப்போது அவரைப் பார்த்து சிரிக்கிறது. இனி சண்டையும் போடும். ஆனால், வெற்றி பெறப்போவது என்னவோ அவரது உறுதியான உன்னத லட்சியம்தான். திராவிடக் கூட்டத்தை மருத்துவர் அய்யா விரட்டிக்காட்டுவார்.”

  நன்றாகச் சொல்லி உள்ளீர்கள் அருள் அவர்களே!!!

  ஆனால் பழத் தோட்டம் என்பது ஒரு மரமும் அதன் கனிகளும் தான்- என நினைத்தல் கூடாது. ஒத்த கருத்துள்ளவர்களின் துணையையும் ஒன்று படுத்துவதே புத்திசாலித்தனம்.

 51. அருள் சொல்கிறார்:

  கடலூர் சித்தன்.ஆர்
  //ஒத்த கருத்துள்ளவர்களின் துணையையும் ஒன்று படுத்துவதே புத்திசாலித்தனம்.//

  நன்றி.

  ஒத்தக்கருத்துள்ளவர்களின் ஆதரவை பா.ம.க நாடும்.

  “தமிழ்ப் பெரும்பான்மையினருக்கு அரசியல் அதிகாரம்.
  மொழிச் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு.
  அனைத்துப் பிரிவினருக்கும் விகிதாச்சார அரசியல் பிரதிநிதித்துவம்”

  –என்கிற முழக்கம் நிச்சயம் எழும்.

 52. அருள் சொல்கிறார்:

  தமிழ்நாட்டில்:

  “தமிழ்ப் பெரும்பான்மையினருக்கு அரசியல் அதிகாரம்.
  மொழிச் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு.
  அனைத்துப் பிரிவினருக்கும் விகிதாச்சார அரசியல் பிரதிநிதித்துவம்”

  –என்கிற முழக்கம் நிச்சயம் எழும்.

  திராவிட அரசியல் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

 53. திருவண்ணாமலை சிலம்பரசன் சொல்கிறார்:

  தமிழ்நாட்டை ஆள தமிழனுக்கு உரிமை இல்லையா…

  இந்தியாவை இந்தியர்கள் மட்டும் ஆள இந்திய சுதந்திர போர்.
  தமிழ்நாட்டை தமிழர் மட்டும் ஏன் ஆள முடியவில்லை.

  தமிழன் இராமதாஸ் மட்டுமே இந்த கருத்தை கூறுகிறார்.

 54. வே.மதிமாறன் சொல்கிறார்:

  chandru Paris France
  என்பவரின் பின்னூட்டங்கள் சிலதை நீக்கியிருக்கிறேன்.

  அருளை தனிப்பட்ட முறையில் வாடா , போடா, என்று சொல்லியிருக்கிறார்.
  ஆனாலும் பதிலுக்கு அருள் அவரை மரியாதையாக அவர் இவர் என்றே விளித்திருக்கிறார்.

  அதனால் chandru Paris France மீண்டும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விவாதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்

  ரவி, jp, புதிய கோணங்கி இவர்களின் சில பின்னூட்டங்களையும் அதன் காரணமாகவே நீக்கியிருக்கிறேன்

 55. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  “பாராட்டுக்கள் வே.மதிமாறன் அவர்களே!!! நன்றி.

  தமிழ் மக்களை ஒருமை படுத்தும் பணியில் தாங்கள் ஈடுபட்டால், தமிழின வளர்ச்சிக்கு/ஒற்றுமைக்கு நன்மை பயக்கும் என்பது எனது அன்பான கோரிக்கை.

  இம்முறையில் ஒவ்வொரு அரசியல் தலைவனும்
  செயல் பட்டிருந்தால், உலகிற்கே வள்ளுவம் தந்தவர்
  பரம்பரைகளும், ஆண்ட பரம்பரைகளும், குறிக்கோளில்லாத பிற நம் மக்களினமும் – டாஸ்மாக் கடைகளில் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருப்பார்களா???”

  வாடிய பயிரைக் கண்டபோது மனம் வாடிய வள்ளலார் பிறந்த மண்ணில், நாம் சிறு இன்பங்களை மனதில் கொண்டு, பேரின்பங்களை இழந்து வருகிறோம் என்பது வருத்தத்திற்குரியது. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் தானே???”

 56. @..கடலூர் சித்தன்.ஆர் //

  நீஙக்ள் சொல்வது முற்றிலும் அசைக்கமுடியாத உண்மை!

 57. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  Pl c link which is self expalatory:

  http://planningcommission.nic.in/reports/genrep/resedu/rpresedu_a10.pdf

  Pl see page nos..348 to 362. In 1969, the DMK Govt. under Mr. M Karunanidhi appointed the first Tamilnadu State Backward Classes Commission with Mr. A N Sattanathan as the chairman. The Commission found that the Most Backward Classes (MBC) in Tamilnadu had a very small presence in State services and professional colleges as they were clubbed together with other castes. Mr. Sattanathan Commission recommended a separate educational and employment reservation of 16% for the Most Backward Classes and 17% for the Backward Classes…..

  In 1982,The Ambasankar Commission started reviewing the existing list of Backward Classes in the reservation bracket. The Commission found that, of the total number of BC students admitted to professional courses more than 75% were from 34 of the 222 backward classes…….

  In 1989, the DMK Government for the first time introduced 20% for MBC and 30% for BC. As per the directive of Madras High Court in 1990, DMK Government introduced a new G.O for reservation of Scheduled Tribes. The ratio then became BC 30%, MBC 20%, SC 18% and ST 1%.

  முன்னமே படுவளர்ச்சி அடைந்தும்- பிற்பட்டோர்
  (BC )பட்டியலில் இருந்த நாயடு/ ரெட்டி இன்னும் பல சாதி மார்களுடன் , அதே BC பிற்பட்டோர் தகுதியுடன் வன்னாரும், இசை வேளாளரும், குயவரும், குரவர்களும்,மீனவரும், வன்னியரும், இன்னும் பல மிகவும் பிற்பட்டோர்களும் வஞ்சிக்கப்பட்டனர்.
  இதற்கு முடிவு கட்டியது வன்னியர் போராட்டம்/ அதன் தொடர்ச்சியாக கலைஞரின் அரசியல் ஆணை. இதன் மூலமாக ஓரளவுக்கு வெளிச்சத்திற்கு வந்தது ஒவ்வொரு சாதிகளும் எவ்வாறு பயனடைகின்றனர் என்று.

  எல்லாம் நன்மைக்கே!!!

 58. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  வாழ்க- யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்து கெட்ட தமிழகம்”

  “1979 எம்.ஜி.ஆர் – அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, நம் காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. அணையில் படகு விடும் உரிமை பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல
  வேண்டும்?”

  இது தான் நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மலையாளிகளுக்கு பெற்றுத் தந்த மண்ணின் பாச உணர்வு; அதன் பரிசாக மலையாள சகோதரர்கள் நமக்கு காட்டும் விசுவாசம்./. நம்பிக்கைத் துரோகம்..????

  தமிழா மண்ணின் மீதும் உனது மக்கள் மீதும் ஞாய உணர்வு கொள்!

 59. அருள் சொல்கிறார்:

  மிக நன்றாகச் சொன்னீர்கள் திரு. கடலூர் சித்தன்.ஆர்

  மலையாள பாசம் மிக்க இராமச்சந்திர மேனன் (MGR) முல்லைப்பெரியாற்று உரிமையை விட்டுக்கொடுத்த பின்னரும் அவர் தமிழகத்தின் தலைமகன், தமிழர் தலைவர் என்று தமிழ்நாட்டில் மிகப்பெரும் கூட்டம் நம்பிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கும் அவரது பெயரைச் சொல்லி ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.

  இந்த திராவிட மாயையிலிருது விடுபடும் நாளே, தமிழனுக்கு விடுதலை நாள்.

 60. தமிழ் சொல்கிறார்:

  திராவிட மாயை யை உடைத்து எறிவோம்

 61. கோ.நாகராசன். சொல்கிறார்:

  சாதிவெறி[பின்னூட்டம்]இவ்வளவு நீ…ளமா…. வாழ்க வன்னியர் வளர்க‌
  அவர்கள் சாதி வெறி

 62. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  “அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கினால் தீக்குளிப்பேன்: கருணாநிதி சூளுரை”

  “தமிழர்களே தமிழர்களே- நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன். அதில் நீங்கள் பயணம் செய்யலாம்” ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும்… 40,000 தமிழர் உயிரின் மதிப்பு less than (<) அண்ணா நூலகமா??????. நூலகம் செய்த புண்ணியம் கூட நாங்கள் செய்ய வில்லையா- தமிழ்க் கட்டுமரமே???

 63. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  “அம்மா தாயே, நீயாவது இந்த நாட்டுக்கு ஒரு நல்ல காரியம் செய்யக்கூடாதா?? ……..- By kakkoo ” 3/16/2012 8:01:00 AM. Dinamani.
  .
  “ஊசி மூஞ்சு மூடா!!! எனக்கு கூடு கட்டத் தெரியாது- கூட்டை பிரிக்கத் தான் தெரியும். சிறுவர்களுக்கான இந்த நீதிக் கதையை பெரியவர்கள் படிக்காததாலும்/ அறியாததாலும் வந்த வினை??? ” அந்தோ தமிழகம்!!!

  pl c link: http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=567503&SectionID=129&MainSectionID=129

 64. Kingsly சொல்கிறார்:

  மருத்துவர் ஐயாவிடம் பிடித்த கொள்கை….

  1 .மது தடை

  2 .சினிமாவை சீர் படுத்துவது

  பிடிக்காத கொள்கை…….

  மீட்டருக்கு மேல இரண்டு ரூபா போட்டு கொடுத்தா பன்னிய கூட உறவு முறை கொண்டாடிடுவாரு……அவ்ளோதான்!

 65. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  “மீட்டருக்கு மேல இரண்டு ரூபா போட்டு கொடுத்தா பன்னிய கூட உறவு முறை கொண்டாடிடுவாரு……அவ்ளோதான்!”

  எந்த பன்னியை சொல்லுறீங்க?
  தமிழனை/இந்தியனை ஆண்ட பண்ணியா?
  ஆளுகிற பண்ணியா? எதிர்க்கட்சி பண்ணியா?
  மத்தியிலா/ மாநிலத்திலா???

  ஒண்ணுமே புரியலியே
  சிகப்பு புடவை கட்டியவை அவன்
  பொண்டாட்டியின்னு அடையாளம் சொல்லுறீக!!!

  ஹி..ஹி..ஹி

  முதலில் அவர்கள் உன்னைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.
  பின் உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
  பின் உன்னுடன் சண்டையிட வருவார்கள்.
  பின்… நீ வெற்றி பெற்றிருப்பாய்.” — என்றார் மகாத்மா காந்தி.

 66. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  //தமிழ் உணர்வுகளை அரசு மதிக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

  மறைமலை அடிகளார் தலைமையில் தமிழ்ப் புலவர்கள் 500 பேர்
  கூடி தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என முடிவெடுத்தனர். இந்த முடிவின்படி 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தை முதல் நாள் தமிழர் புத்தாண்டு என்று சட்டம் கொண்டு வரப்பட்டது……….தமிழ்நாட்டு மக்கள் செய்த தவறின் காரணமாக எப்படியெல்லாம் தமிழுக்கும், தமிழகத்துக்கும் கேடுகள் நேர்ந்து வருகின்றன என்பதைக் காணும்போது நெஞ்சம் விம்முகிறது……//

  ஹி..ஹி.ஹி. இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை???
  நாங்க கப்பு சிப்புன்னு சும்மா இல்லை? – திருவாளர்கள் வைகோ/ கேப்டன் /(EVKS)…

 67. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  ஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.

  ஏய் எல்லாரும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு போங்க.

  நீ யாருடா கோமாளி?
  நானும் ரவுடி தான்.
  நீ ரவுடின்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?
  ஈக்குவலா பேசறேன் இல்லே?
  எங்கம்மா சத்தியமா நானும் ரவுடி தாங்க.
  உன்னை இந்த ஏரியாவிலே பார்த்ததில்லையே?
  நான் இந்த ஏரியாவிலே ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்ல. சரி ஏறித் தொல.

  நான் ஜெயிலுக்கு போறேன்.நான் ஜெயிலுக்கு போறேன்.
  நல்லா பாத்துகுங்க நான் ஜெயிலுக்கு போறேன்.”//”நல்ல வடிவேலு காமெடி”.

  வீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ???

  தமிழா, இனவுணர்வு கொள்! தமிழா, தமிழனாக இரு!!

  ஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.

 68. Pingback: பூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம் « வே.மதிமாறன்

 69. Pingback: பெரியார்தான் தமிழை வளர்த்தார்; தமிழறிஞர்கள் தமிழனுக்கு எதிரான ஜாதி, சமயத்தை வளர்த்தார்கள் «

 70. Pingback: பெரியார் சிலைக்கு மாலை போடலாமா? « வே.மதிமாறன்

 71. Pingback: பாரதமாதா தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க.. « வே.மதிமாறன்

 72. Pingback: இலவசம் : ‘சின்ன அய்யா’ விற்கு ஒரு கேள்வி | வே.மதிமாறன்

 73. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  “ வாழ்க தினேஷ்குண்டுராவ் அவர்களே ! “
  // கர்நாடகத்தில் வாழும் கன்னடர்-தமிழர் இடையே நல்லிணக்கம் மேம்படும்வகையில் தமிழர்கள் இனி தங்களை தமிழ்கன்னடர் என்று கூறிக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வு மேலோங்க வேண்டும். – கர்நாடக உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ்.”// மிகவும் நன்றி .வாழ்க தினேஷ்குண்டுராவ் அவர்களே!!! தாங்கள் இது போல மகாகணம் பொருந்திய ராஜபக்சே அவர்களுக்கு ஒரு அன்புச் செய்தி அனுப்பி தமிழர்களையும் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளச் செய்தால் கோடி நன்றி சொல்வோம். – இப்படிக்கு திராவிடத் தமிழன் மன்னிக்கவும் .தமிழ்த் தமிழன்.
  http://dinamani.com/latest_news/2013/07/27/

 74. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  “உலகமெங்கும் கல்விமொழிக் கொள்கையை அரசியலாக்கவில்லை. தமிழகத்தில் மட்டுமே கல்விமொழிக் கொள்கை அனைத்தும் அரசியலாக்கப்பட்டன.???” – தமிழண்ணல்.

  //நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்”
  கேள்வி: – இப்பாடலின் பொருள் என்ன?
  பதில்: நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை //

  ஹிஹும்..ஹிஹும்..ஹிஹும்.. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா……..
  http://dinamani.com/editorial_articles/2013/07/20/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-

 75. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  ’’உலகம் சமநிலை பெற வேண்டும்”

  //”கடவுள் செய்த பாவம்;இங்கு காணும் துன்பம் யாவும்;
  என்ன மனமோ என்ன குணமோ – இந்த; மனிதன் கொண்ட கோலம்;மனிதன் கொண்ட கோலம்” – நாடற்ற தமிழன்.//

  //”கொடுத்ததெல்லாம் கொடுத்தான்;அவன் யாருக்காகக் கொடுத்தான்;ஒருத்தருக்கா கொடுத்தான்; இல்லை ஊருக்காகக் கொடுத்தான்” – ஈழத் தமிழன்.//

  //’’உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும். இமயமும் குமரியும் இணைந்திடவே எங்கும் இன்பம் விளைந்திடவே
  சமயம் யாவும் தழைத்திடவே”- இந்தியத் தமிழன்.//

  //ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்; சாராய கங்கை காயாதடா…. சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா; சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா ” – டாஸ்மாக் தமிழன்//

  //”நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்; நல்லவர் கெட்டவர் யாரென்றும்; பழகும் போதும் தெரிவதில்லை;பாழாய்ப் போன இந்த பூமியிலே.” – பாமரத் தமிழன்.//

  //சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’; – வாடிய பயிரை கண்ட போதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் தமிழன்.//

 76. Sithan R சொல்கிறார்:

  மதிப்பிற்குரிய அண்ணன் தங்கர் பச்சான் அவர்களே !!!

  தமிழ் மக்களை ஒருமை படுத்தும் பணியில் தாங்கள் ஈடுபடுவது தமிழின வளர்ச்சிக்கு/ஒற்றுமைக்கு நன்மை பயக்கும் என்பதை எந்த ஒரு நல்ல பகுத்தறிவுள்ள தமிழனாலும் மறுக்க முடியாது .

  சில ஆண்ட கட்சிகளில் உள்ள, தமிழ்ச் சமுதாயத்திற்கு சாதனைகள் புரிந்த/ புரியும் ,அனுபவம் மிக்க, நல்ல அரசியல்வாதிகளையும் ஒட்டு மொத்தமாக விமர்ச்சிக்க வேண்டியது தேவையில்லை.

  இம்முறையில் ஒவ்வொரு அரசியல் தலைவனும் செயல் பட்டிருந்தால், உலகிற்கே வள்ளுவம் தந்தவர் பரம்பரைகளும், ஆண்ட பரம்பரைகளும், குறிக்கோளில்லாத பிற நம் மக்களினமும் – டாஸ்மாக் கடைகளில் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருப்பார்களா???”

  வாடிய பயிரைக் கண்டபோது மனம் வாடிய வள்ளலார் பிறந்த மண்ணில், நாம் சிறு இன்பங்களை மனதில் கொண்டு, பேரின்பங்களை இழந்து வருகிறோம் என்பது வருத்தத்திற்குரியது.

  ஒரு மரமும் அதன் கனிகளும் தோப்பாகாது என்பதை உணர மறந்த ஆண்ட கட்சிகளும்,ஊசி மூஞ்சு மூடா!!! எனக்கு கூடு கட்டத் தெரியாது- கூட்டை பிரிக்கத் தான் தெரியும்,சிறுவர்களுக்கான இந்த நீதிக் கதையை தமிழ்ப் பெரியவர்கள் படிக்காததாலும்/ அறியாததாலும் வந்த வினை??? ”

  ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் தானே???”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s