எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

தமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிக்காரர்களுக்கு ராஜமரியாதை-திருட்டு குற்றம் சாட்டப்பட்ட இந்திய இளைஞர்களுக்கு மரணதண்டனை

சென்னையில் 5 இளைஞர்களை காவல் துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், வங்கித் திருடர்கள் என்றும் காவல்துறை அறிவித்திருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களை, குற்றவாளிகளை விசாரிப்பதுதான் காவல்துறையின் நடிவடிக்கை. ஆனால், விசாரனையற்ற தீர்ப்பாக இந்த மரணதண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள்தான் திருடர்கள் என்றே இருக்கட்டும். அதற்கு துப்பாக்கி சூடா தண்டனை?

ஆனால், ‘எங்களை அவர்கள் சுட்டார்கள், பதிலுக்கு நாங்கள் சுட்டோம்’ என்கிறது காவல் துறை.

சுற்றி வளைக்கப்பட்டு, ஒரு வீட்டுக்குள் இருப்பவர்கள், எப்படி தப்பி ஓட முடியும்? சுற்றி வளைக்கப்பட்ட அவர்களின் நிலை கைதிகளின் நிலைதானே. கூடுதல் காவலர்களை வர வைத்து, காத்திருந்தால் நிச்சயம் அவர்களை கைது செய்திருக்கிலாம்.

இப்படி சுட்டுக் கொல்வதினால், மற்ற கொள்ளையர்களுக்கு பாடமாக இருக்கும் என்று நினைத்து அதை செய்தார்களோ?

ஆனால், இது போன்ற என்கவுன்டர்கள் பலமுறை நடத்தியிருக்கிறார்கள். அப்படி இருந்தும் மீண்டும் இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டிருக்கிறது என்பதே, இது தீர்வல்ல என்பதற்கு சாட்சி.

அவர்கள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டதினால், பதில்கள் அற்ற பல கேள்விகள் இருக்கின்றன.

அவர்கள்தான் சம்பந்தப்பட்ட வங்கி கொள்ளையர்களா?

ஒருவரின் படத்தை வைத்து மற்ற நால்வரையும் குற்றவாளிகளாக முடிவு செய்தது எப்படி?

5 பேருமே குற்றவாளிகள் என்பதற்கு என்ன ஆதாரம்? யாரோ ஒருவர் சொன்ன தகவலின் அடிப்படையில் எப்படி முடிவுக்கு வரமுடியும்?

அவர்களில் தம்பி, உறவினர், நண்பர்கள் யாராவது உடன் தங்கியிருக்கலாம் அல்லவா?

அவர்கள் வங்கி கொள்ளயைர்கள் அல்லாமல், காவல்துறையே அடிக்கடி சொல்வதுபோல், நாட்டுக்கே ஆபத்து விளைவிக்கிற பயங்கரமான தீவிராவதிகளாக இருந்தால், அவர்களின் பின்னணியை யார் அறிவது?

சுட்டுக் கொன்றதற்கு பிறகு ‘அவர்கள்தான் வங்கி கொள்ளையர்கள்’ என்ற முன் முடிவோடு விசாரனையை தொடங்குவது என்ன நியாயம்?

அங்கிருக்கும் பணம் அந்த வங்கியில் இருந்த பணம்தான் என்பதற்கு என்ன ஆதாரம்?

ஏனென்றால், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் எண்களை வங்கியில் குறித்து வைக்கவில்லை என்று காவல் துறையே சொல்லியிருக்கிறது.

**

பணத்தை விட உயிரின் மதிப்பு மலிவாகி போய்விட்டது. 15 லட்ச ரூபாயை மீட்பதற்கு விலை 5 உயிர்கள்.

பெண்கள் அணிந்திருக்கிற நகைகளுககு ஆசைப்பட்டு, அவர்களை கொல்கிறவர்களின் செயல்போலவே காவல்துறையின் நடிவடிக்கை இருப்பது என்ன நியாயம்?

இந்திய எல்லைக்குள் தமிழக, கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி நாட்டவர்களை விருந்தினர் மாளிகையில் வைத்து உபசரிக்கும் நாட்டில், அநியாயமாக இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.

‘வட இந்திய இளைஞர்கள்’ என்று அடிக்கடி காவல் துறையினர் சொல்கிறார்கள். இதையே தமிழ்த் தேசியவாதிகள் சொன்னால் பிரிவினை வாதிகள் என்று முத்திரை குத்துவார்கள்.

வட இந்தியா என்பது இந்தியாவின் தனி பகுதியா? தனி நாடா?

காவல் துறையில் வட இந்தியர்கள் உயர் அதிகாரியாக இருக்கலாம். குற்றவாளிகளில் வட இந்தியர்கள் இருக்கக் கூடாதா?

வட இந்தியாவிலிருந்து குறைந்த கூலிக்கு ஆட்களை அழைத்துவந்து, பிறகு வேலை முடிந்ததும் அவர்களை அநாதையாக விட்டு விட்டு போகிற நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை?

வட இந்தியாவோ, தென்னிந்தியாவோ யாராக இருந்தாலும், திடீர் என்று வேலை இல்லை என்றால் அவர்கள் பிழைப்புக்கு இதுபோன்ற சமூக விரோத நடவடிக்கைகளில்தான் ஈடுபடுவார்கள்.

தங்கள் வீடு, நிலத்தை விற்று இங்கு வந்து பொறியியல் கல்வி படித்த இளைஞர்கள், உரிய வேலை கிடைக்காதபோது அவர்கள் திரும்ப ஊருக்கும் செல்லமுடியாது. சமூக விரோத நடவடிக்கைகளில்தான் ஈடுபடுவார்கள். அவர்களிடம் அதிக கட்டணம் வாங்கி அவர்களை நடுத் தெருவில் நிறுத்திய கல்வி நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை?

வேலைக்கு ஆட்களை குறைந்த கூலிக்கு அழைத்து வந்து, பிறகு அவர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு செல்கிற நிறுவனங்கள், தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற குற்றங்களை குறைக்க முடியும். தடுக்க முடியும்.

இல்லையென்றால், துப்பாக்கி முனையில் கொள்ளைகளும், கொள்ளைகளுக்கு எதிராக கொலைகளும்தான் தமிழகத்தின் தொடர் கதையாக இருக்கும்.

அதெல்லாம் சரி, எது பெரிய குற்றம்?

கொள்ளையா? கொலையா?

2012/02/24/அன்று எழுதியது.

தொடர்புடையவை:

வாளுக்கும் தங்கத்திற்குமானப் போர்..

சிறுமி பிரணதியின் மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

12 Responses to எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

 1. ஆனந்த் சொல்கிறார்:

  மக்களை பல பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவேண்டும் அல்லவா.

 2. Karthikeyan சொல்கிறார்:

  Hai Mathimaran

  Alsomost every of your article i have different opinin.But this one was really a true one which was close to my thoughts.Your poitns esp) on tamil nationlist and north indian people was one exactly right..

 3. Dr.S.Devadoss சொல்கிறார்:

  Nalla dharkka reethiyana kelvihal in the present context.

 4. gowtham சொல்கிறார்:

  சுட்டது மிக பெரிய தவறு …போலீஸ் என்றுமே நீங்கள் குடிக்கமா வண்டி ஓட்டிகிட்டு போனாலும் ,,உங்க கிட்ட வந்து குடிச்சிட்டு வண்டி ஓட்றிய என்று பொய் கேஸ் போட்ட போலீஸ் அதிகம் ,,எந்த என் கவுன்ட்டர் என்றாலும் ஒரு போலிசும் சாகாமல் இருபதுதான் ,,ஆசரியம் ,,,ஒருவன் போட்டோ மட்டும் தான் காவலர்கள் வைத்திருந்தனர் ,,மீதி நான்கும் பேரும் குற்றவாளிய என்பது கூட யாருக்கும் தெரியாது ,,போலீஸ் உடம்பில் பாய்ந்த குண்டு என்றுமே கிடைபதில்லை ,,,மேல் அதிகாரி நான்கு பேர் இருந்தால் அதில் ,,உதவி ஆய்வாளர்ருகுதான் குண்டு பாயும் ,,,இது போலதான் பல என் கவுன்ட்டர் நடத்த பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் ஒரு கதவு ஒரு ஜன்னல் இருக்கும் போது ,,,அந்த 5 பேரும் சாவது என்பது போலீஸ் நடத்திய நாடகம் என்று தெரிகிறது ,,,அது போன்ற இடத்தில ,,உள்ள இருபவ்ர்களுக்குதான் பலம் அதிகம் வெளியே இருக்கும் போலீஸ் ,,,அவர்களை சுடுவது கடினம் ,,,,,அப்படியே சுட சென்றாலும் ,,,அந்த ஜன்னல் அந்த கதவு வழிய சுடுவது கடினம் ,,,,,,லைட் அணைத்திருக்கும் போது ,,உள்ளிருந்து வெளியே நன்றாக பார்க்கலாம் ஆனால் வெளியே இருந்து இருண்ட அறையை பார்க்க முடியாது ,,,
  என் மனதில் இருக்கும் சந்தேகம் ,,,,அந்த வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டை கண்காணித்து தகவல் சொல்ல சொல்லி ,,,,அந்த உரிமையாளரை வைத்தே ,,வீட்டின் முன்பணத்தை திருப்பி கொடுக்க அவர்கள் கதவை தட்டி ,,கொள்ளையர்கள் ,,வீட்டின் உரிமையாளர் அட்வான்ஸ் பணம் கொடுக்க வந்திருகிறார்கள் என்பதால் கதவை திறந்திருக்கலாம் ,,,அப்போது போலீஸ் உள்ளே சென்று ,,அவர்களை சுட்டுருகலாம் என்று நினைக்கிறேன்

 5. வலிபோக்கன் சொல்கிறார்:

  சட்டபுார்வமாக கொள்ளையடிக்கமால்.போலிசிடம் அங்கிகாரம் பெறாமல் கொள்ளையடித்ததே பெரிய குற்றமாக போலீசக்கு தெரிந்து இருக்கிறது

 6. சரவணன் சொல்கிறார்:

  ஆக்ஸிஸ் வங்கி மினிமம் பேலன்ஸ் இல்லை (ரூ. 5000) என்று சொல்லி 3 மாதத்துக்கு ஒரு முறை என்னிடமே சொல்லாமல் என் கணக்கிலிருந்து ரூ 750 பல முறை எடுத்திருக்கிறது. நம் பணத்தை வைத்திருப்பதற்கு அவர்கள் தானே வட்டி தர வேண்டும்? நாமே பணம் தர வேண்டுமா? அதுவும் ஆரம்பிக்கையில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். இப்போது என் அலுவலகம் அதில் சம்பளத்தை கிரெடிட் செய்வதில்லையாம். அவர்கள் வங்கியை மாற்றினால் நான் என்ன செய்வது?

  இப்படி இந்த வங்கிகள் நம்மிடம் அடிப்பதற்குப் பெயர் என்னவாம்?

 7. Pingback: Vizhi | Online News » எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

 8. dhana சொல்கிறார்:

  மனித உரிமை கழகம் பாரபட்சம் பார்கிரதோ தியாகி இம்மானுவேல் செகரன் நிகழ்வில் அப்பாவிகல் கொல்ல பட்ட போது என்ன செயிதது. என்பதை விலக்கவும்

 9. Pingback: டாடா கன்சல்டன்சி ஊழியர் கொலை; சிக்கியது சிவப்பு சட்டை | வே.மதிமாறன்

 10. Pingback: வந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகம்! | வே.மதிமாறன்

 11. Pingback: ‘ஜாதி உணர்வற்ற’ தமிழ் முதலாளிகள் | வே.மதிமாறன்

 12. Pingback: செம்மரப் படுகொலை | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s