உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

கவிஞர் அ.ப.சிவா

தோழர்.வே.மதிமாறன் அவர்களின் காந்தி நண்பரா? துரோகியா? என்ற நூலின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.

  மனித குல இருப்பின் மிக முக்கியமான 3 காரணிகள்  உணவு உடை இருப்பிடம், இவற்றின் வழி இந்திய சமுகத்தின் 3 தலைவர்கள் அதிலும் நேர்கோட்டில் பயனித்த இருவரும் எதிர் திசையில் பயனித்த ஒருவருமாக மூவர் வழியே இம்முன்று காரணிகளை இவர்கள் கையாண்ட விதம் அதற்காண எதிர் வினை இவைகளை ஆராய்வோம்.

     உணவு பழக்க வழக்கம் என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றை பொறுத்தே அமையும்.

கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் உணவுகளை தம் உடல்நிலைக்கேற்ப உண்பதே எளிமை.இவ்விடயத்தில் காந்தி இங்கிலாந்து சென்றாலும் ஆட்டுப்பால் தான் குடிப்பாராம்.விமான பயணத்தில் இவருடன் ஆடும் பயணிக்கும். ‘பாய்‘ விட்டு திருமணத்திற்கு போனாலும் தயிர் சாதம் கேட்பாராம்.

    உடை விசயத்தை இங்கு குறிப்பிடவே வேண்டியதில்லை புத்தகத்தின் பின் அட்டையில் இந்திய அரசியலையே சொல்லிவிடுகிறார் மதி.

     பெரும் பணக்காரான தந்தை பெரியார் மிக எளிமையாக உடை அணிந்து வந்தார், ஒடுக்கபட்ட மக்களின் பிரதிநியாக இருந்த டாக்டர்.அம்பேத்கர் தன் உடையை எப்போதும் ஆதிக்க எதிர்ப்பு குறியீடாகவே காட்டியிருந்தார். ஆனால் இந்தியாவின் தந்தை என பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காந்தி ஆள் பாதி ஆடை பாதி என மாறிய நிகழ்வு அனைவரும் அறிந்ததே..

    தன் நாட்டு மக்களின் ஒருவர் மேல் சட்டை இல்லாமல் இருப்பதை பார்த்தாராம் அன்று முதல் இவர் மேல் சட்டை அணியவே இல்லையாம், காந்தி மேல் சட்டை இல்லாமல் பார்த்தவர் ஒரு விவசாயி என குறிப்பிடுகிறார். வயலில் வேலை செய்யும் விவசாயி என்ன ரேமண்ட் சூட் போட்டுக்கொண்டா வேலை செய்வார். அதே காந்தி மதுரை தொடர் வண்டி நிலையத்தில் மலம் அள்ளி கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட தோழனை பார்க்கவில்லை போலும்.

     தன் நாட்டு மக்களுக்கு மேல் சட்டை இல்லை என்றால் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அவர்களுக்கு சட்டை பெற்றுக்கொடுப்பவனே தலைவன், அதை விட்டு தன் சட்டையை கழற்றி போட்டு விட்டு திரிபவனா தலைவன் சிந்தியுங்கள்.

  அடுத்து இருப்பிடம், நள்ளிரவில் சுதந்திரம் என்ற புத்தகத்தில் கவிக்குயில் சரோஜினி அவர்கள் சொல்வதாக ஒரு குறிப்பு இருக்கும் ,காந்தியின் எளிமைக்காக காங்கிரசு நிறைய செலவு செய்வதாக சொல்லியிருப்பார்.

  சேரியில் சென்று காந்தி தங்கியிருப்பாராம் அப்போது அவர் தங்கியிருக்கும் வீட்டை சுற்றி பல வீடுகளில் காங்கிரசு தொண்டர்கள் தங்கியிருப்பார்களாம் காந்தியின் பாதுகாப்பிற்காய்.. சிந்தித்துப்பாருங்கள் காந்தியால் அச்சேரி மக்களுக்கு எவ்வளவு சிரமம். குடும்பம் நடத்தும் வீட்டில் வெளியாட்கள் வந்து தங்கியிருந்தால்(பெரும்பாலும் ஒரு அறையே வீடாக இருக்கும்) அவர்கள் நிலமை எவ்வளவு கடினம்.

  பொதுவாகவே நம் நாட்டில் இந்த எளிமை என்ற விசயத்தை பெரிதுபடுத்தியதற்கு காரணம் காந்தியே…

   ஆக உணவு உடை இருப்பிடம் இம்முன்று காரணிகளில் காந்தியின் எளிமை என்பது மக்களுக்கு துளியும் நன்மை பெயர்க்கவில்லை.

 காந்தி நண்பரா?துரோகியா? என்ற நூலில் தோழர்.வே.மதிமாறன் அவர்கள் காந்தியின் எழுத்துக்களிலிருந்தே அவரை தோலுரித்து காட்டியிருக்கிறார்.

  இந்திய வரலாற்றில் மக்களால் தவறாக புரிந்து கொண்டிருக்கிற அல்லது ஏற்றுக்கொண்டிருக்கிற சிலரை தோலுரிக்கிற வேலையை மிகச்சரியாக செய்து கொண்டிருக்கிறார் தோழர்.மதி.

   ஒரு சந்திப்பின் போது தோழர்.மதியிடம் நான் சொல்லியிருக்கிறேன். பாரதிய ஜனதா பார்ட்டி புத்தகம் வெளிவந்த போது எனக்கு சில மாற்று கருத்துக்கள் இருந்தது எனென்றால் பாரதி போன்றோரை எதிரியாக்குவதால் நமக்கென்ன நன்மை நம் அறிவின் விரிவை வெளிகாட்டத்தான் அது உதவும் என்ற எண்ணம் எனக்கிருந்தது, பின் காலப்போக்கில் அதன் நோக்கம் எனக்கு புரிந்தது.

  அப்புரிதலின் அடிப்படையில் காந்தியின் விசயத்துக்கு வருவோம், காந்தி ஒரு இந்து சனாதனவாதியால் கொல்லப்பட்டார்,  பார்ப்பானர்கள் அவர்களுக்கு எதிரானவர்களையே எப்போதும் அகற்றுவார்கள், ஆக அச்சமயத்தில் காந்தி பார்ப்பானர்களுக்கு எதிராக இருந்திருக்கிறார், தன் நிலையை காந்தி மாற்றியிருக்கிறார்.

  காந்தியின் அந்நிலை எப்படிப்பட்டது மதியின் மொழியிலேயே

பாருங்கள்:

  “இஸ்லாமியர்களை விரோதிகளாக சித்தரிக்கிற பார்ப்பனிய இந்து பயங்கரவாதிகளை எதிர்த்து செயல்படுவதல்ல காந்தியின் நோக்கம். அவரின் தன்முனைப்பு அரசியலின் விளைவாவக அவரை அறியாமல் முளைத்த முற்போக்குக் கிளை அது’

ஆக அந்த முற்போக்கு கிளை காந்தி என்ற மரத்தை சாய்ப்பதற்கு காரணியாக அமைந்து விட்டது.

  ஒருவரின் பெருமையை நாம் பேசுவதற்கு எது அடிப்படையோ அதே அடிப்படையில் அவர்களின் குறைகளை அடையாளம் காண்பதற்க்கும், இப்புத்தகம் வெளி வந்தபோது எப்படி காந்தியை சிறுமைப்படுத்தியிருக்கிறார்கள் என பலர் வருத்தப்பட்டர்களாம்

அவர்களுக்கு என் பதில் இதுதான்…

 காந்தியை சிறுமைப்படுத்துவதல்ல இப்புத்தகத்தின் நோக்கம்.

அப்படி அவரை சிறுமைப்படுத்தியிருந்தாலும் எப்போதோ இறந்த ஒருவரை சிறுமைப்படுத்தி எந்த லாபமும் இல்லை.

  வரலாற்றை மக்களுக்கு விளக்குவதே அதன் நோக்கம்.

அப்படி விளக்குவதும் மக்களை எல்லாம் தெரிந்த அறிவாளியாக்க அல்ல, தவறானவர்களை பின்பற்றுவதால் ஏற்படும் இழப்புகளை புரியவைக்கவே, புரிய வைப்பதும் இன்னும் நீடிக்கும் இழப்புகளை மாற்ற முனையும் செயலாளியாக ஆக்கவே.

  இறுதியாக….

கார்ப்பரேட்களுக்கும்- காம்ரேட்களுக்கும் என்ன வித்தியாசம் ?

தன் வலியை ஊர் வலியாக மாற்ற நினைப்பவன் – கார்ப்பரேட்

ஊர் வலியை தன் வலியாக பார்ப்பவன் – காம்ரேட்

 படுக்கை வசதி டிக்கெட் எடுக்காமல் 5 க்ஷ்ல்லிங்கை மிச்சப்படுத்தலாம்( சிக்கனம் கூட இல்லை அலட்சியம் என்ற இந்திய குணம் அது தென் ஆப்பிரிக்காவில் நடக்கவில்லை)என்ற எண்ணத்தில் தன் தவறால் எற்பட்ட தன் வலியை (இரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட) ஊர் வலியாய்(கருப்பர் இனப்பிரச்சனை) மாற்றிய காந்தி- கார்ப்பரேட்

 அவர் வழி வந்த யாராக இருந்தாலும் அவர்களும் கார்ப்பரேட்கள் தான் அதற்க்கு 2011-ல் நடந்த உண்ணாவிரதங்களே சாட்சி…

 தோழர். மதிமாறனின் காந்தி நண்பரா? துரோகியா? என்ற நூலை படியுங்கள் விவாதியுங்கள் தெளிவு பெறுவேம்…..

***

அ.ப.சிவா

கட்டட பொறியாளர்(B.E)

கவிஞர், எழுத்தாளர், குறும்பட இயக்குநர், பெரியார் திராவிடர் கழகத் தோழர். டாக்டர் அம்பேத்கர் கருத்துக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சமீபத்தில் இவர் இயக்கிய ‘துக்கம்’ என்கிற குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

**

புத்தக வெளியீடு

‘அங்குசம்’

ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையது:

சாதி இந்து எதைச் செய்தாலும் அது புனிதமானதுதானா?;காந்தியம்: மலத்தில் பொறுக்கிய அரிசி

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

11 Responses to உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

 1. கனல் சொல்கிறார்:

  //தன் நாட்டு மக்களுக்கு மேல் சட்டை இல்லை என்றால் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அவர்களுக்கு சட்டை பெற்றுக்கொடுப்பவனே தலைவன், அதை விட்டு தன் சட்டையை கழற்றி போட்டு விட்டு திரிபவனா தலைவன் சிந்தியுங்கள்.//

  சிறப்பான வரிகள்.

 2. shanmuganantham.e. சொல்கிறார்:

  மிகவும் அருமையான உளவாங்குதலோடு எழுதப்பட்ட மதிப்புரை. ஒரு தவறான தலைவனை பின்பற்றுவதால் சமூக எவ்வளவு பின்னோக்கி செல்லும் என்பதற்கு சாட்சியாய் இந்திய சமூகமே இருக்கிறது. நமக்கான சக்திகளை கண்டறிவோம். மிக சிறந்த மதிப்புரை எழுதிய கவிஞரும், தோழருமான சிவாவிற்கு வாழத்துக்கள்.

 3. வலிபோக்கன் சொல்கிறார்:

  தன் வலியை ஊர் வலியாக மாற்ற நினைப்பவன் – கார்ப்பரேட்

  ஊர் வலியை தன் வலியாக பார்ப்பவன் – காம்ரேட்.-

 4. வைசூரி அய்யர் சொல்கிறார்:

  நமக்கு வக்கணையா பேசத்தான் தெரியும்…

 5. கதிரவன் சொல்கிறார்:

  அருமையான பதிவு தோழர்

 6. கனல் சொல்கிறார்:

  யோவ் வைசூரி அய்யர் என்ன நீ என்ன பேசுறே? தெளிவா பேசுயா…

 7. சோத்து பானை சொல்கிறார்:

  மா.வெங்கடேசன் புத்தகத்திற்கும் இந்த புத்தகத்திற்கும் எந்த வேறுபாடுமில்லை.

  //காந்தியை சிறுமைப்படுத்துவதல்ல இப்புத்தகத்தின் நோக்கம்.

  அப்படி அவரை சிறுமைப்படுத்தியிருந்தாலும் எப்போதோ இறந்த ஒருவரை சிறுமைப்படுத்தி எந்த லாபமும் இல்லை.

  வரலாற்றை மக்களுக்கு விளக்குவதே அதன் நோக்கம்//

  வரலாற்றை விளக்குவதல்ல நோக்கம் revisionist history எழுத முற்படுவதுதான் இதன் நோக்கம்.

 8. தமிழன் சொல்கிறார்:

  சோத்து பானை
  மா.வெங்கடேசன் யாரு அது?

 9. கனல் சொல்கிறார்:

  மா.வெங்கடேசன் என்பவன் சோத்து பானை போல ஒரு சோத்து பானை.

 10. அசுரன் சொல்கிறார்:

  சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள் அ.ப.சிவா

 11. kavimathy சொல்கிறார்:

  காந்தியின் பாசிச முகத்தினை தெரிந்துக்கொள்ள மேலும் இந்த புத்தகம் உதவும்.

  தோழர்.மதிமாறன் எப்போதும்போல் அதை இந்த புத்தகத்திலும் நிறைவு செய்திருப்பார் என்பது உறுதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s