முல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா? (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)

முல்லைப் பெரியாறில் மலையாளிகளோடும், காவிரி நதிநீரில் கன்னடர்களோடும் சண்டை. இந்த ஆறுகளால் பண்ணையார்களாய், நில உடமையாளர்களாய் இருக்கிற ஆதிக்க ஜாதிக்காரர்களுக்குத்தான் பாதிப்பு. நிலமற்ற தலித்துளுக்கு என்ன பாதிப்பு?

-நிலவன்

இரண்டு ஆறுகளிலும் தமிழகத்த்திற்கு தண்ணீர் வராமல் இருந்தால், மூப்பனார், வாண்டையார், நாயக்கர், தேவர் போன்ற நில உடமையாளர்களுக்கு பிரச்சினைதான். விவசாயம் பொய்த்துப் போகும். அதனால், பண்ணையார்கள் யாரும் பட்டினியால் சாகமாட்டார்கள். உக்காந்து சாப்பிடுவதற்கு தலைமுறைக்கும் சொத்து இருக்கிறது அவர்களுக்கு.

அதுவும் மீறினால், நிலத்தை விற்று விட்டு தொழில் அதிபர்களாக மாறிவிடுவார்கள்.

ஆனால், பட்டினிச் சாவுக்கு பலியாகும் உயிர்கள் கூலி விவசாயிகளாக இருக்கிற நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்கள்தான். அவர்களைத்தான் பட்டினியைப் போக்க, எலிக்கறி சாப்பிடச் சொல்லி அரசு ஆலோசனை வழங்கும்.

நதிநீர் பிரச்சினை நில உடமையாளர்களுக்கு வாழ்வாதார பிரச்சினை என்றால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயிர் ஆதார பிரச்சினை.

நிலமற்ற மக்கள்தான் விவசாயம் பொய்த்தபோது, பிற மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்கப் போவார்கள். அவர்களில் அதிக எண்ணிக்கை உடையவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களே.

அது மட்டுமல்ல, எப்போதுமே பிற மாநிலங்களில் இனரீதியான தாக்குதலுக்கு உள்ளாகிற மக்கள் மிகப் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களே. மும்பையில் கூட ‘இந்தி பேசும் மாநிலத்தவர்கள்’ என்ற அடையாளத்தோடு, மராட்டிய சமூக விரோதிகளிடம் அடிவாங்கியவர்கள் பிகார் மாநில தலித் மக்களே.

சமூக விரோதிகளுக்கு எளிய மக்களை தாக்குவதுதான் எளிது. பிரச்சினை அற்றது. மாறாக வேறு இனத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்களையோ, அதிகாரிகளையோ தாக்க முடியாது. பணக்காரர்கள், உயர் வருவாய் உள்ளவர்கள் அந்த மாநில காவல் துறையின் பாதுகாப்போடு பத்திரமாக இருப்பார்கள்.

உதராணத்திற்கு, காவிரி நீர் பிரச்சினை வந்தபோதெல்லாம், கன்னட சமூக விரோதிகளால், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, பெங்களூரில் கூலிகளாகவும், தொழிலாளர்களாகவும் இருந்த தமிழர்கள்தான் தாக்கப்பட்டார்கள்.

பெங்களூரில் உயர் அதிகாரியாக வேலை பார்த்த  எழுத்தாளர் சுஜாதா ஒரு முறைகூட தாக்கப்படாமலேயே ஓய்வு பெற்று விட்டார்.

தொர்புடையவை:

‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்

வாழ்க புரட்சித் தலைவி! வாழ்க அச்சுதானந்தன்! – What a trick?

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

18 Responses to முல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா? (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)

 1. Anbu Selvan சொல்கிறார்:

  கலைஞர் மகளும் மருமகனும் கூடத்தான் இன்னமும் பெங்களுருவில் வசிக்கிறார்கள்.. செத்துப் போனவரைத் தூக்கில் போடுவதும் ஒரு பிழைப்பா?

 2. R Nagaraj சொல்கிறார்:

  ஏன் சுஜாதா…???? பாவண்ணன் என்பவரும் அங்குதான் இருக்கிறார்.. நம்ம செல்வி ஆண்டி அங்கதான் செல்வம் அங்கதான்… அவங்க எல்லாரயும் ஏன் சொல்ல முடியல…. ஓ…. சுஜாதா சாதியச் சொன்னாத்தான் முற்போக்கு பட்டம் கிடைக்குமுல்ல…ஓகோ ஓகோ

 3. Dondu N. Raghavan சொல்கிறார்:

  ஏன் இந்த கே\வலமான கடைசி வரி?

  டோண்டு ராகவன்

 4. வலிபோக்கன் சொல்கிறார்:

  பெங்களூரில் உயர் அதிகாரியாக வேலை பார்த்த எழுத்தாளர் சுஜாதா ஒரு முறைகூட தாக்கப்படாமலேயே ஓய்வு பெற்று விட்டார்.—–அந்த ஆளு,தமிழனாஇல்ல,ரெண்கெட்டானா இருந்தினால் தக்கப்படவில்லை என நினைக்கிறேன்ன

 5. PA.SELVARASU (NEELANGARAI) சொல்கிறார்:

  Miga sariyaana pathil.Naakar chenai entra peyaril ethey karutthai sonnaargal,notice pottargal naan kanditthen.

 6. vignaani சொல்கிறார்:

  //பெங்களூரில் உயர் அதிகாரியாக வேலை பார்த்த எழுத்தாளர் சுஜாதா ஒரு முறைகூட தாக்கப்படாமலேயே ஓய்வு பெற்று விட்டார்.//

  ஏன் இந்தக் கொலைவெறி ?
  அவர் பெங்களூரில் அடிபட வில்லை என்று வருந்துகிறீர்களா?
  முல்லைப்பெரியார் அணை விவகாரத்தைப் பற்றி பேசும் போதும் பார்ப்பனர்களை இழுக்க வேண்டுமா? இந்த விஷயத்தில் அவர்களின் பங்கு என்ன? பார்ப்பன ஞானியும், சோவும் கூட தமிழர்க்கு எதிராக கருத்து ஒன்றையும் உதிர்க்கவில்லையே

 7. Asok சொல்கிறார்:

  மன்னிக்கவும் இது ஒரு கேவலமான பதிவு. நான் பார்ப்பனர் இல்லைதான். எத்தனை தாழ்த்தப் பட்ட உயர் அதிகாரிகள் அங்கங்கே தாக்கப் பட்டார்கள் என்பதையும் தெரிவித்திருக்கலாம் அல்லது தாழ்த்தப் பட்ட உயர் அதிகாரிகளே இந்திய நாட்டில் இல்லையா?

 8. வேந்தன் சொல்கிறார்:

  உங்களுடைய இந்த பதிலின் கடைசி வரி , உங்களுடைய தொடர் வாசகனான எனக்கும் ஏற்புடையதாக இல்லை. சுஜாதாவின் மீது இறந்த பின்பும் வன்மம் வார்த்தைகளில் குறிப்பிடவேண்டாம். இம்மாதிரியான வரிகள் தமிழர்கள் மட்டுமல்ல மற்ற எந்த சமுகத்திறகும் இது அடிப்படை நாகரிகமல்ல..

 9. Pingback: துரோகம் செய்யும் தேங்காய் தமிழர்கள்! « வே.மதிமாறன்

 10. ஆறுச்சாமி சொல்கிறார்:

  சுஜாதா என்கிற அற்பமான கழிசடை, தன்னுடைய கற்றதும் பெற்றதும் தொடரில் பழமலய், சு. சமுத்திரம் உள்ளிட்ட எழுத்தாளர்களை எல்லாம் எந்த அளவு தன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் அசிங்கப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கப் படுத்தி இருப்பார். திராவிட ஆரிய சர்ச்சையைப் பற்றி அவரிடம் யார் பேசினாலும் படு கீழ்த்தரமான வார்த்தைகளைத் தங்கமுலாம் பூசித் திட்டுவார். அந்த சுஜாதாவுக்கு எதுக்கு இத்தனை பேர் வக்காலத்து. டோண்டு ராகவன், இது உனக்கான இடம் இல்லை. போய் எங்கயாவது செவுத்துல சாஞ்சுண்டு பூணூல்ல முதுகு சொறியுற வேலை இருந்தா பாரு.

 11. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  வாழ்க- யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று வாழ்ந்து கெட்ட தமிழகம்”
  “1979 எம்.ஜி.ஆர் – அச்சுதமேனன் ஒப்பந்தத்துக்கு முன்பு வரை 48 அடி நீர் தமிழகம் வசம் இருந்தது. அது மூன்றில் ஒரு பங்காக்கப்பட்டது. அணைப் பாதுகாப்பு, நம் காவல் துறையிடமிருந்து கேரள காவல் துறைக்குப் பிடுங்கித் தரப்பட்டது. அணையில் படகு விடும் உரிமை பறி போனது. மீன் பிடிக்கும் உரிமையும் போயிற்று. அணை வரையிலான சாலையும் பிடுங்கப்பட்டது. அணை தமிழகத்துக்குச் சொந்தமென்றாலும் அணைக்குச் செல்ல, பொறியாளர்கள் உட்பட எல்லாரும் கேரள அரசின் அனுமதி பெற வேண்டும். இவையெதுவும் 1979க்கு முன்னர் இல்லாதவை. கடைசியாக இப்போது அணையையே பறிக்க விரும்புகிறது. அணையின் பாதுகாப்பு மட்டும்தான் அசல் கவலையென்றால் புது அணையை தமிழகமே கட்டட்டுமென்றல்லவா சொல்ல வேண்டும்? தான் கட்டித் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவதாக ஏன் சொல்ல
  வேண்டும்?”
  இது தான் நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மலையாளிகளுக்கு பெற்றுத் தந்த மண்ணின் பாச உணர்வு; அதன் பரிசாக மலையாள சகோதரர்கள் நமக்கு காட்டும் விசுவாசம்./. நம்பிக்கைத் துரோகம்..????
  தமிழா மண்ணின் மீதும் உனது மக்கள் மீதும் ஞாய உணர்வு கொள்!

 12. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  பதில்சொல்வார்களா மௌனி/ மிதவாதியாக உள்ள தலைவர்களும்/ பத்திரிகைகளும்???

  நாம் கட்டிய கோயில்களில்- ஆண்டவனை அர்ச்சனை செய்து, அணைத்து பிறப்புக்களும் ஆண்டவன் முன் சமம் என்னும் தன்னம்பிக்கையை தடுப்பது, யாரிடம் சிறைபட்டிருக்கும் சுதந்திரம்???

  பதில்சொல்வார்களா மௌனி/ மிதவாதியாக உள்ள தலைவர்களும்/ பத்திரிகைகளும்???- பிரசுரித்தால் கோடி நன்றி சொல்வோம் – நிமிர்ந்த நடை,நேர்கொண்ட பார்வை- நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் தரும் பத்திரிகை தர்மத்தை கடைபிடிப்பதில்- தினமணி முதல்வன்/தலைவன்/ மக்கள் வழிகாட்டி என்று – இன்றையத் தேவை ஒன்றுபட்ட தமிழர் இயக்கம் (United Tamil Front).

 13. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  இதுவல்ல சுதந்திரம்!

  தலையங்கம்:இதுவல்ல சுதந்திரம்!

  First Published : 11 Jan 2012 03:58:42 AM IST

  கடந்த நூற்றாண்டில் உலகில் எத்தனை எத்தனையோ நாடுகளில் சுதந்திரப் போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வெற்றியடைந்து சுதந்திரம் கிடைத்த நாடுகள் பல. ஆனால், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப்போல வித்தியாசமான போராட்டம் அமையவில்லை. இந்த அளவுக்குக் கனவுகளுடனும், லட்சியங்களாலும் அமைந்த ஒரு சுதந்திர தேசமும் கிடையாது……
  இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அந்த உரிமைகள் வழங்கப்பட்ட அதிசயத்தை உலகமே பார்த்து வியந்தது. பரிபூரண பேச்சுரிமையும், எழுத்துரிமையும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.
  ……………………………………………………………………………………….
  நல்ல தலையங்கம். பாராடுக்கள்- நன்றி.

  “மனுசனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே! இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலை? “- நீதி கேட்டு
  நிற்கும் பிராமணரல்லாத சாதி அர்ச்சகர்கள்…….

  ஹி… ஹி…ஹி…. நீதி மன்றத்தை எந்தச் சுதந்திரமின்மை மௌநியாக்கி உள்ளது. பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஒன்று இருக்கிறது. அது “இதுவல்ல சுதந்திரம்’ என்பதை! -பாருக்குள்ளே நல்ல நாடு –
  நம் பாரத நாடா???????????????????????

 14. வை. முத்துக்குமார் சொல்கிறார்:

  \\\\பெங்களூரில் உயர் அதிகாரியாக வேலை பார்த்த எழுத்தாளர் சுஜாதா ஒரு முறைகூட தாக்கப்படாமலேயே ஓய்வு பெற்று விட்டார்.//// கட்டுரையாளரின் நாகரிகமற்ற என்ன ஓட்டத்தை வெளிபடுத்திக் கொண்டார். எதிலும் சாதியத்தைப் புகுத்தாமல் அவருக்குத் தூக்கம் வராது போல! அவருக்கு நன்றி.

 15. Pingback: மலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும் « வே.மதிமாறன்

 16. vidya (@kalkirasikai) சொல்கிறார்:

  அது சரி, நீங்க எந்தந்தப் போராட்டத்தில எப்ப எப்ப அடி வாங்கியிருக்கீங்க? பெரியார் எத்தனை தடவை அடி வ்ாங்யிருக்கார்?

 17. Pingback: ஆனந்த விகடனும் – பெரியாரும் | வே.மதிமாறன்

 18. Pingback: கன்னடர் மீது தாக்குதல்; தமிழன விரோத தாக்குதலே | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s