‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’; தமிழக அரசின் கல்வித் திட்டம்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போன்ற போராட்டங்களை ‘தமிழன்’ என்ற அடையாளாத்தோடு தமிழர்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கும்போது, ஜாதி ரீதியான பிரிவினையோடு, தமிழக அரசால் பார்ப்பனரல்லாத குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மிக குறிப்பாக தாழ்த்தப்பட்ட தமிழர்ளுக்கு எதிராக ‘கல்வியில் சீர்திருத்தம்’ என்ற பெயரில் பார்ப்பன ஆப்பு சொருகப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை:

மாணவர்கள் ஓராண்டு முழுவதற்கும் தேவையான புத்தகங்களைப் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். புதிய பாடத் திட்டங்கள் காரணமாக புத்தகங்களின் அளவும் அதிகரித்துள்ளது. எனவே, புத்தகச் சுமையின் காரணமாக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தகச் சுமையிலிருந்து மாணவர்களை விடுவிப்பதற்காக முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு புத்தகங்கள் மூன்றாகப் பிரிக்கப்படும். சிறிய புத்தகங்களின் மூலம் பாடத் திட்டத்தை மேலும் செழுமையானதாக மாற்றலாம்.

 இந்த முறையின் மூலம் ஒவ்வொரு பாட வேளையும் கலந்துரையாடலுடன் கூடிய சிறந்த கற்கும் அனுபவத்தை வழங்கும். மாணவர்களின் இடைநிற்றலும் குறையும்.

ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் மேற்கொள்ளப்படும் தொடர் மதிப்பீடு மாணவ, மாணவியர் தங்களை மதிப்பீடு செய்துகொள்ள உதவும். அதேபோல், அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும்; என்கிறது அந்த அரசாணை.

ஓப்பனிங் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனால், பினிசிங்குலதான் ஆப்பு, சார்ப்பா இருக்கு.

‘முப்பருவ முறையும், தொடர் மதிப்பீட்டு முறையும் கல்வியில் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தும்.’ என்கிறது அந்த அறிக்கை.

உண்மைதான். ஆனால், அந்த மாறுதல் யாருக்கு லாபமானதாக யாருக்கு இழப்பாக இருக்கும் என்பதுதான் கேள்வி. ஏனென்றால் கடந்த செப்டம்பர் மாதம், இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்:

பருவ இறுதியில் நடைபெறும் தேர்வில் 55 முதல் 60 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ஏ1 கிரேடு அளிக்கப்பட்டு 10 புள்ளிகள் வழங்கப்படும். இதுபோல் 49-54 (ஏ2), 43-48 (பி1), 37-42 (பி2), 31-36 (சி1), 25-30 (சி2) என்ற வரிசையில் கிரேடு அளிக்கப்பட்டு, புள்ளிகள் வழங்கப்படும். இதில், 12 மதிப்பெண்களுக்கு கீழே எடுத்திருந்தால் இ2 கிரேடு மட்டும் வழங்கப்படும். புள்ளிகள் அளிக்கப்படாது. இதே முறை, பருவம் முழுவதும் நடைபெறும் வகுப்பறை தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும்.

இதில், ஏ கிரேடு எடுத்தால் மிக மிக சிறந்த மாணவன், (பி) கிரேடு மிக சிறந்த மாணவன், (சி) கிரேடு சிறந்த மாணவன், (டி) கிரேடு திருப்திகரம், (இ) கிரேடு திருப்தி இல்லை; என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபோன்ற சி.பி.எஸ்.இ., தேர்வு முறையின் அடிப்படையில் அமைந்தால், கிராமப்புற மாணவர்களுக்கும். இடஒதுக்கிட்டிற்கும் எதிர்ப்பாகத்தான் அமையும். இந்த முறை இன்னும் இரண்டு ஆண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பிற்கும் அமல் செய்ப்பட்டால், 4 அல்லது 5 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் இடஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கிற கட் ஆப் மார்க் ஒழிக்கப்பட்டு கிரேடுகள் வழங்கப்படும்.

இது இடஒதுக்கிடு எதிர்ப்பின் நவீன வடிவம். மருத்துவம், பொறியியல் கல்விக்கு எளிய மக்களின் குழந்தைகள், இடஒதுக்கிட்டின் மூலம் போவது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும். மாறாக இடஒதுக்கீடு இல்லாத ஆதிக்க ஜாதிகள் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு இது மிக மிக நன்மையாக, அவர்களுக்கான இடஒதுக்கிடு போலவே இது மாறிவிடும்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள், ஒட்டுமொத்தமாக, கும்பலில் கோவிந்தா… கோவிந்தா… போட வேண்டியதுதான்.

**

‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’ என்று வடிவேலு வின்னர் படத்தில் பேசியது போல், தமிழர்கள் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு என்று தங்கள் வாழ்வாதரங்களுக்காக போராடிக் கொண்டிருக்கும்போது, பார்ப்பனிய கிளுகிளுப்போடு அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கயிருக்கிறது தமிழ அரசின் இந்தக் கல்வித் திட்டம்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினையை ஒட்டி தமிழகத் தமிழர்களின் எதிர்காலத்தை புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் சமர்பித்தவர்களும், அருந்ததிய மக்களின் உள் ஒதுக்கீடை எதிர்த்து தீவிரமாக இயங்குகிற புரட்சித் தலைவியின் ஆதரவு பெற்ற ‘தலித்’ தலைவர்களும், சுத்தியலையும், அருவாளையும் தமிழர்களை ஒடுக்குவதற்கான ஆயுதமாக புரட்சித் தலைவியிடம் கொடுத்த கம்யுனிஸ்டுகளும் என்ன சொல்லப் போகிறார்கள்?

என்னத்த சொல்றது?

தொடர்புடையவை:

இடஒதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது

2ஆயிரம் ஆண்டுகளாக பல்லக்கு சுமந்தவர்கள்

தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ

சமச்சீர் கல்வியா? சர்ச் பார்க் கல்வியா?

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

ஆனாலும், அப்பவே.. எனக்கொருடவுட்டு, ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..

மழலையர் கல்வியை தடை செய்ய வேண்டும்!

நன்றியும் வணக்கமும்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

15 Responses to ‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’; தமிழக அரசின் கல்வித் திட்டம்

 1. Pingback: Indli.com

 2. வீணாப் போனவன் சொல்கிறார்:

  கல்வியில் இடஒதுக்கீடு என்பது முட்டாள்தனமானது. 90மதிப்பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய இடம் 70மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு கிடைப்பதில் என்ன நியாயம்?

 3. baskar சொல்கிறார்:

  //இந்த முறை இன்னும் இரண்டு ஆண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பிற்கும் அமல் செய்ப்பட்டால், 4 அல்லது 5 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் இடஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கிற கட் ஆப் மார்க் ஒழிக்கப்பட்டு கிரேடுகள் வழங்கப்படும்//
  புரிய வில்லையே தோழர் சற்று விளக்கமாக கொடுங்களேன் இந்த முக்கிய தகவலை

 4. venkatesan சொல்கிறார்:

  +12 பொது தேர்வு முறையில் மாணவர்களை வரிசைப் படுத்தி மருத்துவ, பொறியியல் தேர்வு செய்வது எளிது. கிரேடு முறையில் மிகப் பல மாணவர்கள் அனைத்து பாடத்திலும் A கிரேடு பெற்று விடுவர். இவர்களை வரிசைப்படுத்த இயலாது. அதற்கு மீண்டும் நுழைவுத் தேர்வு கொண்ட வர வேண்டி இருக்கும். இதனால் தான் நீங்கள் எதிர்க்கிறீர்கள் என நினைக்கிறேன். இதில் உள்ள உண்மை எனக்குப் புரிகிறது.

  ஆனால், நுழைவுத் தேர்வு இட ஒதுக்கீட்டிற்கோ, பிற்படுத்தப் பட்டவருக்கோ எதிரானது என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. மாணவர்களின் அறிவுத் திறனை பரிசோதிக்க பொதுத் தேர்வை விட நுழைவுத் தேர்வே சரியான முறை என நான் நினைக்கிறேன். தற்போது இருக்கும் பொதுத் தேர்வு முறை மாணவர்களின் நினைவுத் திறனை மட்டுமே சோதிக்கிறது. நுழைவுத் தேர்வு முறை பாடங்களை உள் வாங்கியிருக்கிறார்களா என சோதிக்கிறது. (இப்படி ஒரு கருத்தை கூறவே பயமாக இருக்கிறது. என் சாதி என்ன என்ற ஆராய்ச்சியில் இறங்கி விடுவார்கள்).

 5. ஆனந்த் சொல்கிறார்:

  //மாணவர்களின் அறிவுத் திறனை பரிசோதிக்க பொதுத் தேர்வை விட நுழைவுத் தேர்வே சரியான முறை என நான் நினைக்கிறேன்.

  முறையாக பயிற்சி எடுத்தவர் நுழைவு தேர்வில் நல்ல மதிப்பு எடுத்து விடுவார், ஆனால் அவர் புத்திசாலியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 6. ராஜன் சொல்கிறார்:

  மற்ற மதங்களை விமர்சிக்க உங்களுக்கு துநிவுண்டா?ஓங்க தலிவருக்கே அந்த துணிவில்ல!உண்மை நாத்திகம் இப்படி இருக்க வேண்டும்!தில் இருக்கா?
  http://dharumi.blogspot.com/2009/11/why-i-am-not-muslim-1.html

 7. வலிபோக்கன் சொல்கிறார்:

  சீறீரங்கத்தின் ஆடசியல் உனக்கு கல்வி கேட்குதா? ரங்கநாயகின்
  அருள்வாக்கு.வச்சுட்டாளே! ஆத்தா!!

 8. அனானி சொல்கிறார்:

  அலுப்பாக இருக்கிறது. எப்படிய்யா இப்படி எல்லாம் யோசிக்கிறிங்க? கிரேடு, சி.சி.இ. மதிப்பீட்டுமுறை ஆகியவையே இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் படுகின்றன. இவை மனப்பாட முறைப் படிப்பில் பின் தங்கிய மானவர்களுக்கு மிக நட்பானவை.

 9. velu சொல்கிறார்:

  எவ்வளவு நாளைக்கு தான் இடஒதுக்கீட்டில் மஞ்சள் குளிபீர்கள் ?

 10. PA.SELVARASU (NEELANGARAI) சொல்கிறார்:

  MARUNGAL OEIVAI VIRUMPINAALUM KAATRU VIDUVATHILLAI-MAO

  NAAM SUMMA IRUNTHAALUM PAARPPAAN VIDUVATHILLAI.

  POORAATTAME VAAZHVIN VITHI ,
  ERUTHIVARAI THODARNTHU POORAADUVAOM.

  VAARUNGAL MAKKALEY.

 11. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  வீணாப் போனவர்களின் அன்பான கவனத்திற்கு:

  தமிழகத்தில் பல ஆண்டுகளாக ரிசர்வேஷன் முறை கடைபிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்னேற்றத்தை கீழ் வரும் தகவல் மூலமாக அறியவும்:

  Monday, June 30, 2008
  What is the Community wise Composition of Top 500 Rankers in Tamil Nadu
  Counseling for Admission to MBBS / BDS in Tamil Nadu starts from 04.07.2008 and Director of Medical Education, 162, Periyar Road, Chennai has releasted the counselling schedule The Community of the Top 500 Rankers can be seen from that Of the Top 500 Rankers in Tamil Nadu.

  Forward Community – FC – 55 Students – 11 %
  Backward Community – BC – 293 Students – 58.6 %
  Christians – BCC – 29 Students – 5.8 %
  Muslims – BCM – 20 Students – 4 %
  Most Backward Community – MBC – 70 Students – 14 %
  Scheduled Castes – SC – 32 Students – 6.4 %
  Scheduled Tribes – ST – 1 Student – 0.2 %

  இதே போல IIT களில் வரும் முன்னேற்றத்தை பார்க்க சில வருடங்கள் பிடிக்கத்தானே செய்யும். இப்போது தானே மண்டல் கமிஷன் மூலமாக உள்ளே அனுமதித்து உள்ளீர்கள் துரியோதனன்/வி.பி.சிங் தயவில் – கர்ணனுக்கு/ ஒ.பி.சி மக்களுக்கு வாய்பு கிடைத்தது போல).

  திராவிடக் கட்சிகள் இல்லாமல் இதைச் சாதித்து இருக்க முடியாது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

  வாழ்க!!!வாடிய பயிரை கண்டு மனம் வாடிய-வள்ளலார் பிறந்த/ வாழ்ந்த ” தமிழ் நாடு”

 12. கடலூர் சித்தன்.ஆர் சொல்கிறார்:

  நரிக்குறவர் இனத்தவர்:

  வன்னியரும் MBC- சோழிய செட்டியும் -MBC; இவர்களுடன் போட்டிபோட வேண்டும் அதே MBC தகுதியுடன் நரிக்குறவர் இனத்தவர். என்ன ஞாயம்/ நீதி இது?.

  மேலும் தாமதிக்காமல் அவர்களுக்கு ST status கிடைக்க முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவனிபாரற்று இனமே அழிந்து வருகிறது. – காரணம் அவர்களுக்கு ஒட்டு சீட்டு இல்லை. என்னடா உலகம் இது???

  கோயில்களில் கிடக்கும் லட்சக்கன்னக்கான கோடி ரூபாய் பெரும் நகைகளை காசாக்கி Bank வைப்பு நிதியாக்கி- இந்தியா தரும் வட்டி பணத்தை சேமித்து எத்தனை நல்ல காரியங்கள் செய்யலாம்- கங்கையையும் காவிரியையும் கூட இணைக்கலாம்???

  இறைவனே வந்து உத்தரவு கொடுக்க வேண்டுமா என்ன???-

  பாருக்குள்ளே நல்ல நாடு. எங்கள் பாரத நாடு.

 13. வேந்தன் சொல்கிறார்:

  திரு வீணாப்போனவன்,வேலு ஆகியோர்களுக்கு நீங்கள் முற்பட்டசாதியை சார்ந்தவர்கள் என்றால் உங்கள் எதிர்ப்பு தார்மீக ரீதியில் உங்கள் அளவில் சரியான கருத்து. (மிக)பிற்பட்டவர்கள் என்றால் … உங்களுக்கு நீங்களே வைத்துகொண்ட ஆப்பு என்று அர்த்தமாகும்.

 14. shanmuganantham.e சொல்கிறார்:

  sariyana nerathil sattaiyadi thozhar…

 15. Pingback: ‘மெக்காலே’ வின் கல்வியும் ‘தினமணி’ யின் தகுதி, திறமையும் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s