அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

மாட்டுக்கறி உண்ணும் தமிழர்களை மூட்டித் தள்ளி குத்திக் கிழித்த ‘அவன்-இவன்’

‘‘அவன்-இவன்’ படம் வந்தபோது நான் எழுதிய விமர்சனங்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிடச் சொல்லி நண்பர்கள் கேட்டார்கள். வெளியிட்டிருக்கிறேன்:

*

இந்தப் படத்துல வர்றா மாதிரியான போலிஸ் ஸ்டேசன்… அடடாடா.. என்ன ஒரு அன்பான, அழகான காவல்துறை?

உண்மையிலேயே போலிஸ்காரங்க நல்லவங்க மட்டுமில்ல, அப்பாவிங்க கூடதான். தேவையில்லாம நம்ம ஜனங்கதான் அவுங்கள பாத்து பீதி அடையது. இத்தனைக்கும் ‘அதிகமான கிரிமினல்கள் உள்ள போலிஸ் ஸ்டேசன்’ என்று அந்தப் படத்தல வரும் நீதிபதியே சொல்ற ஊர்லேயே இவ்வளவு அன்பான போலிஸ்!

சேது, பிதாமகன், நான் கடவுள், அவன்-இவன் வரைக்கும், எல்லாக் கதாபாத்திரங்களும் ஒரே தொணியிலதான் வசனம் பேசுது. வசனத்துலேயும் பாலாவோட பங்களிப்புத்தான் அதிகமாகத் தெரியுது.

அவருக்குக் கோர்வையா எழுத வராது போல, தான் சொல்றத பக்கத்துல இருந்து எழுதி, அதைக் காப்பி எடுத்து கொடுக்கிறதுக்கு ஒரு ஆளு வேணும்போல…

இந்தப் படத்துலேயும் வசனம் ராதாகிருஷ்ணனோ, ராமகிருஷ்ணனோ ஒருத்தரோட பேரு வருது..

ஜமீன் கிட்ட ரெண்டு திருட்டுபசங்க… வாடா… போடா…ன்னு கூப்பிடற அளவுக்கு நெருக்கமா இருக்கிறாங்க… அவுங்களுக்குள்ளே எப்படி அந்த உறவு ஏற்பட்டது?

அதிக அழுத்தம் கொடுத்துக் காண்பிக்கப்பட்ட இரும்பு பெட்டி திறக்கிற காட்சி, திரைக்கதையில் ஒரு லீடா இல்லாம, துண்டா வெளிய போயிடுச்சு,

ஜமீனா வர ஜி.எம். குமாரு ஏன் நடுத்தர வர்க்கத்துச் சென்னைத் தமிழ் பேசுராரு?

இந்தக் காட்சியல… அது இல்ல, அந்தக் கட்சியிலே இது இல்ல என்பது போன்ற கேள்வி எல்லாம் நான் கேட்க போறதில்ல…

மற்றவர்கள் கேட்க முடியாத அல்லது கேட்க விரும்பாத ஒரு விசயத்தைப் பற்றிதான் இந்த விமர்சனம்.

***

அடுத்தவன் வீட்டுக்குள்ள குதிச்சுத் திருடறது, கழுத்தறுத்துக் களவாடறது, பொம்பள தாலி அறுக்கிறது, கள்ளச் சாவி போட்டு பொட்டி தொறக்கிறது… இதுபோன்ற செயல்கள் செய்கிற திருட்டு பசங்களோடு நெருக்கமா, அன்பா இருக்கிற அய்நஸ் என்று அழைக்கப்படுகிற ஜமீனுக்கு,

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வது மாபெரும் சமூகக் குற்றமாகத் தெரிவது ஏன்?

‘மாடுகள்இறைச்சிக்காகவிற்பனைசெய்துதவறுஎன்றுகாட்டவில்லை, அதைமுறைப்படிலைசன்ஸ்வாங்கிசெய்யவேண்டும். இப்படிதிருட்டுத்தனமாகசெய்யக்கூடாதுஎன்பதுதான்காட்சியாக்கப்பட்டிருக்கிறது’ என்று பதில் வரலாம்.

கழுத்தறுத்துக் களவாடறது, பொம்பள தாலி அறுக்கிறது, அடுத்தவன் வீட்ல குதிச்சுத் திருடறது, கள்ளச் சாவி போட்டு பொட்டி தொறக்கிறது இதெல்லாம் முறைப்படி லைசன்ஸ் வாங்கித்தான் நடக்குது என்று நம்புகிற அப்பாவியா அய்நஸ்.

ஆட்டுக்கறி விற்பவர்களில் எத்தனை பேர் லைசன்ஸ் வாங்கி விற்பனை செய்கிறார்கள். இன்னும் நெருக்கிச் சொன்னால், ஆடுகளை வெட்டி தோலை உறித்துக் கறியாகப் பிரிப்பது வரை எல்லாம் சாலைகளிலேயே நடக்கிறது. குறிப்பாகத் தென் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழைமைகளில் வழியேற திறந்தவெளியில் புதுப் புது ஆட்டுக்கறி கடைகளைக் காணலாம்.

ஆனால், இதுபோல் பகிரங்கமாக, பார்ப்பவர்கள் அருவருப்பு அடைவதுபோல் மாடுகளைப் பொது இடங்களில் வெட்டி பிரித்து இறைச்சியாக விற்பதில்லை.

அப்படியிருக்க, பாலாவின் ஜமீன் அய்நசுக்கு, மாடுகள் மேல் ஏற்பட்ட இரக்கம், ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..’ என்ற வள்ளலார் பாணியிலான உயிர்கள் மீது கொண்ட அன்பினால் அல்ல,

ஒரு ஜாதி இந்துவுக்கு இருக்கிற மாடுகளின் மீதான புனித உணர்வும், மாடுகளை உண்கிற தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான்.

சைவம் சாப்பிடுகிறவர், அசைவ உணவை சாப்பிடுவதை எப்படி அருவருப்பாகப் பார்க்கிறாரோ, அதுபோலவே, ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிற ஜாதி இந்து மாட்டுக்கறி சாப்பிடுவதை அருவருப்பாகப் பார்க்கிறார்.

சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் மாமிச உணவு மீதான அவர்களின் அருவருப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவர்கள் மாட்டுக்கறியை அருவருப்பாகப் பார்க்கிற மோசடியை என்னவென்று சொல்வது?

ஆடு, கோழிகளைப் பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கிற உணவு பொருளாகவும், மாடுகளைப் புனிதமாகவும் பார்க்கிற ஜாதி இந்து மனோபாவத்தை, உலகின் எந்த நாட்டு மக்களிடத்திலும் பார்க்க முடியாது

இந்த மோசடிக்குள்தான் மறைந்திருக்கிறது தீண்டாமைக்கான மூலக்கூறு.

இதுபோன்ற ஜாதி இந்து உணர்வுதான் ஜமீன் உணர்வாகவும் வடிந்திருக்கிறது இந்தப் படத்தில்.

அநேகமாக எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் ஜாதிய அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. விசால், ஆர்யா கதாபாத்திரங்களின் தந்தை, ‘நம்பள மாதிரி களவானி குடும்பத்துல சம்பந்தம் வைச்சாலும் வைப்பேன்..’ என்று வருகிற வசனமும்,

படம் பார்க்கிறவர்கள், ஜமீன் அய்நஸை பாளையக்கார எட்டயபுர ஜமீனாக (தெலுஙகு நாயக்கர்) நினைத்துக் கொள்ளப் போகிறார்கள், என்பதினால், ‘மனுநீதிசோழன், எங்க முப்பாட்டன் கானாடுகாத்தான் சேதுபதியோட சொந்த மச்சினன்’ என்ற வசனம் ஜாதி பெருமையோடு நெருக்கமாக முக்குலத்தோர் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.

இப்படி நேரடியாக ஜாதி அடையாளம் காட்டப்படாமல், குறிப்பால் ஜாதி அடையாளத்தை உணர்த்தப்பட்ட ஒரே கதாப்பாத்திரம் மாடுகள் விற்பவர்.

‘மாடுகள் இறைச்சிக்காக விற்பனை, ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் மாட்டுக்கொட்டகையிலேயே வீடு’ இந்தக் குறியீடுகள் அவரைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பெயர்கூட வைக்கவில்லை.

பெயர் சொன்னால் ஒரு வேளை நேரடியாக ஜாதி அடையாளம் தெரிந்துவிடும் என்ற காரணமும் இருக்கலாம்.

ஜமீன் அய்நஸ், முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்த ஒரு ஜாதி இந்து என்பதால், கள்ளர் சமுதாயத்தை நெருக்கமாகவும், மாடுகளைப் புனிதமாகவும், மாட்டுக்கறி விற்பனையைச் சமூக விரோதமாகப் பார்க்கிறார்.

ஆனால், இயக்குநர் பாலா அவரும் ஏன் அவ்வண்ணமே பார்க்கிறார்? அய்நசுக்கும் பாலாவிற்கும் என்ன தொடர்பு?

*

இயக்குநர் பாலா vs ஜமீன் – ‘சும்மா…‘

தங்கம் இதழ் ஆசிரியர் :

பாலா தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திர இயக்குநர். இவர் எடுத்த ஐந்து படங்களும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவை.

இவரது ஐந்தாவது படமான அவன்-இவன் தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘தன் இனத்தைச் சேர்ந்தவர்களையும் சொரிமுத்து அய்யனார் சாமியையும் அவமானப்படுத்திவிட்டார்’ எனச் சிங்கம் பட்டி ஜமீன் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த வேளையில் வே. மதிமாறன் தன் இணயதளத்தில், ‘பாலாவை சாதி உணர்வற்றவர் என்று காட்டுவதற்காகவே அவர் இனத்தவர்கள் செய்யும் வேலை இது. அதுமட்டுமின்றித் தலித்துகளைப் பாலா அவமானப்படுத்துகிறார்’ என்று எழுதி வரும் அவரைத் தங்கம் இதழுக்காகச் சந்த்தித்தோம்:

‘தன் ஜாதிக்காரர்களுக்கு எதிராகவே பாலா படம் எடுத்துவிட்டார் என்பதெல்லாம் சும்மா.

மாட்டுக்கறித் தின்பவர்கள் மோசமானவர்கள், மாடுகள் புனிதமானது, என்கிற ஜாதி இந்து கண்ணோட்டம்தான் இந்தப்படத்தில் அழுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கறிக்காகக் காட்டப்படுகிற ஆயிரக்கணக்கான மாடுகளில் ஒரு மாடுகூட எருமை மாடு இல்லை.

இத்தனைக்கும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குக் கறிக்காகப் போகிற மாடுகளில் எருமை மாடுகள்தான் அதிகம்.

ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் மூலம் இவர்கள் அதிகமாக உறிஞ்சிக் குடிப்பது எருமை பாலைத்தான். ஆனால், பசுவைதான் புனிதமாகக் கருதுவார்கள். நன்றி கெட்டவர்கள்.

மாடுகளை (பசு) மனி்தர்களை விட மேன்மையாகவும், மனிதர்களை மாடுகளை விடக் கேவலமாகவும் (தீண்டாமை) நடத்துகிற நாடு இது.

மற்றப்படி, ஜமீன்களுக்கும் பாலாவிற்கும் நடக்கிற சண்டையை நடிகர் வடிவேலு பாணியில் உதட்டைக் குவித்துச் சொல்வதானால், ‘சும்மா..’

இந்தச் சண்டையில் பாலாவிற்குத்தான் லாபம். அவரை ஜாதி உணர்வற்றவராக அடையாளப்படுத்தும்.

ஆனால், அவன்- இவன் படம் அதையா சொல்கிறது?

*

‘அவன்-இவன்’ பாலாவை

‘அப்படி’ புரிந்துகொண்டால் நான்பொறுப்பால்ல..

அவன் இவன் படத்தில் பாலா மாடுகளைப் புனிதமாகச் சொல்லவில்லை, அவைகளைத் துன்புறுத்தக்கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறார். தலித்துகளை இழிவாகவும் அவர்காட்டவில்லை. தங்கம் இதழில் உங்கள் விமர்சனம் ஒரு சார்பாக உள்ளது.

-மருது, திண்டுக்கல்.

மாட்டுக்கறியை உண்பவர்கள் இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும்தான். படம் பார்ப்பவர்கள், மாட்டு வியாபாரியை இஸ்லாமியராகப் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், ‘ஒட்டகத்தை வெட்டி கொடுக்குறாங்களே… அது என்ன?’ என்று ’குர்பானி’யை தவறாக உச்சரிக்க வைத்திருக்கிறார். அதன் நோக்கம் மாட்டு வியாபாரி தாழ்த்தப்பட்டவர் என்பதை அழுத்தமாகச் சொல்வதற்காகத்தான்.

மாடுகளை இறைச்சிக்காகக் கொல்வதைப் பற்றிதான் அந்தப் படம் கண்டித்தது. துன்புறுத்துவது பற்றி ஒரு இடத்தில் கூடச் சொல்லப்படவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்குச் சாராயம் குடிக்க வைப்பது, கண்ணில் மிளாகய் பொடி தூவுவது, வாலை கத்தியால் குத்துவது போன்ற கொடுமைகளைதான் துன்புறுத்துவதாகக் காட்டியிருக்கவேண்டும்.

ஆனால், இந்தக் கொடுமைகளைப் பற்றிப் படம் குறிப்பால்கூட உணர்த்தவில்லை. ஜல்லிக்கட்டில், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாகக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பங்கு கொள்கிறார்கள். அதைக் காண்பித்தால் அவர்களின் எதிர்ப்பை எதிர் கொள்ளவேண்டிவரும்,. தென் மாவட்டங்களில் படத்தை வெளியிட முடியாது.

ஜல்லிக்கட்டு கொடுமையைக் காட்டாததற்கு அது மட்டும் காரணமல்ல, பாலாவின் ஜாதி உணர்வும்தான் என்று நீங்கள் புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

*

mathimaran.wordpress.com சூன் மற்றும் திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட், செப்டம்பர் மாத இதழ்கள்.

தொடர்புடையவை:

7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

7 ஆம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

12 Responses to அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

 1. க. முகமது பாருக் சொல்கிறார்:

  உண்மைதான் தோழர்… மேலும் குர்பானிக்காக ஒட்டகம் துபையிலிருந்து கொண்டுவருவதாக ஒரு வசனம் வேறு, இந்திய கூட்டமையில் வட மேற்கு பாலைவன் பகுதிகளில் ஒட்டகங்கள் கிடைக்கும் என்பது இயக்குனர் பாலாவுக்கும் இல்ல அத எழுதின ராமகிருட்டினருக்கும் உண்மையிலயே தெரியாதா என்ன?? ..

  இவர்களுக்கு நேர்மையிருந்தால் நேரடியாக பார்ப்பன மதத்திற்கு பிரச்சாரம் செய்யவேண்டியதுதானே.. அதுக்கு ஏன் பல முகமூடிகள்???

 2. ஆனந்த் சொல்கிறார்:

  நல்ல அலசல்.

 3. kapilkumar சொல்கிறார்:

  மாடுகளை (பசு) மனி்தர்களை விட மேன்மையாகவும், மனிதர்களை மாடுகளை விட கேவலமாகவும் (தீண்டாமை) நடத்துகிற நாடு இது

  yes ,

 4. ciniphotos சொல்கிறார்:

  உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

  http://www.tamil10.com/

  ஒட்டுப்பட்டை பெற

  நன்றி

 5. வலிபோக்கன் சொல்கிறார்:

  எந்த படத்தில்தான் உண்மையை உண்மையாக சொல்லியிருக்கிறார்(கள்)

 6. Pingback: கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்? « வே.மதிமாறன்

 7. Pingback: அம்மாவின் கைப்பேசி: ஆனந்த விகடன்-குமுதத்தின் அவதூறு « வே.மதிமாறன்

 8. Pingback: சென்னையில் ஒரு நாள் | வே.மதிமாறன்

 9. Pingback: மாடுகளுக்கு நீதி மனிதர்களுக்கு அநீதி; ‘மாடு’பிமான தேசம்! | வே.மதிமாறன்

 10. Pingback: ‘ஜல்லிக்கட்டு தடை’ வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்! | வே.மதிமாறன்

 11. Pingback: ஏழாம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும் | வே.மதிமாறன்

 12. Pingback: பாலா vs கங்கைஅமரன் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s