Monthly Archives: நவம்பர் 2011

தங்கர்பச்சான், கமல், வைரமுத்து: 7ஆம் அறிவு தமிழரின் பெருமை

தங்கர்பச்சான், கமலஹாசன், வைரமுத்து போன்ற திரைப்படத் துறையினர் அனைவரும் ‘7ஆம் அறிவு தமிழரின் பெருமையை சொல்லும் படம்’ என பாராட்டி தள்ளுகிறார்களே? –நா. இரவிச்சந்திரன், வெண்ணிப்பறந்தலை. பொதுவாக சினிமாக்காரர்கள் இன்னொரு சினிமாவை பாராட்டி பேசுவது புதிதல்ல. அவர்களின் பாராட்டுக்கு பின்னணியில் நட்பு. சொந்தம், வியாபாரம், வாய்ப்பு, அரசியல் தொடர்பு இதுபோன்ற சுயலாபங்கள் மறைந்திருக்கும். அவர்கள் ஒரு … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 1 பின்னூட்டம்

இடஒதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது

தகுதியானவர்களுக்கு வாய்ப்பில்லாமல், இடஓதுக்கீடு நாட்டை கெடுத்துவிட்டது? –கமலக்கண்ணன், தஞ்சாவூர். உண்மைதான். பல நூற்றாண்டுகளாக நாட்டை இடஓதுக்கீடுதான் கெடுத்துவிட்டது. தலையில் பிறந்தவன் பிராமணன். அவனுக்கு அரசின் அதிக சலுகைகளும் சமூகத்தில் உயரிய மரியாதையும், அவன் கொலையே செய்தாலும் தண்டனை கிடையாது, தோளில் பிறந்தவன் சத்திரியன். அவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அவனும் அவன் பரம்பரையும்தான் மன்னராக வரவேண்டும். … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 13 பின்னூட்டங்கள்

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

‘‘அவன்-இவன்’ படம் வந்தபோது நான் எழுதிய விமர்சனங்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிடச் சொல்லி நண்பர்கள் கேட்டார்கள். வெளியிட்டிருக்கிறேன்: * இந்தப் படத்துல வர்றா மாதிரியான போலிஸ் ஸ்டேசன்… அடடாடா.. என்ன ஒரு அன்பான, அழகான காவல்துறை? உண்மையிலேயே போலிஸ்காரங்க நல்லவங்க மட்டுமில்ல, அப்பாவிங்க கூடதான். தேவையில்லாம நம்ம ஜனங்கதான் அவுங்கள பாத்து பீதி அடையது. இத்தனைக்கும் … Continue reading

Posted in பதிவுகள் | 12 பின்னூட்டங்கள்

பாரதிராஜா: கலைஞன் தேவராகிய கதைச் சுருக்கம்

பாரதிராஜாவை திறமையான இயக்குநர் இல்லை என்பது போல் போன தங்கம் இதழில் நீங்கள் குறிப்பிட்டது ரொம்ப அதிகம். –என். மலைச்சாமி, திருப்பூர். ‘திறமையான இயக்குநர் இல்லை’ என்று நான் குறிப்பிடவில்லை. தமிழின் மிக அழகியலான, நேர்த்தியான முதல் திரைப்படம் 16 வயதினிலே. இந்தப் படத்தின் நாயகன் எளிய சப்பானி. படத்தில் யாருக்கும் ஜாதிய அடையாளம் இல்லை. … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 19 பின்னூட்டங்கள்

கம்யுனிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகளை விட அதிமுகவே மேல்!

கவுண்டமணியை வில்லனோ, நாயகனோ மிக மோசமாக திட்டினால், கோபத்தில் கவுண்டமணி தன் பக்கத்தில் இருக்கும் செந்திலை ஓங்கி அறைவார். “அவுரு திட்டுனதுக்கு, என்னை எதுக்குண்ணே அடிக்கிறீங்க?” என்று பரிதாபமாக புலம்புவார் செந்தில். அதுபோல், பிரதமர் மன்மோகன்சிங் நிதி உதவி இல்லை என்று சொல்லிவிட்டாராம், அந்தக் கோபத்தில் முதல்வர் ஜெயலலிதா தனக்கு ஓட்டுப் போட்ட மக்களை வெளுத்து … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

சமையல்; ஆண்களும் பெண்களும்

ஓட்டல்களில், திருமணங்களில் இப்படி பொது நிகழ்ச்சிகளில் சமைக்கும் ஆண்கள், வீட்டில் சமைப்பதில்லை. ஆனால் சமையல் என்றாலே பெண்கள்தான் என்று சொல்வது என்ன நியாயம்? –பிரேமா, சென்னை. ஓட்டல்களில், திருமணங்களில், பொதுநிகழ்ச்சிகளில் சமைத்தால் வருமானம் வரும். வீட்டில் சமைத்தால்? அதனால்தான் ஆண்கள் வீட்டில் சமைப்பதில்லை. செய்யும் வேலைக்கு வெறும் சோறு மட்டும் போட்டால், கொத்தடிமைத்தனம்தான் மிஞ்சும். அதுதான் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 5 பின்னூட்டங்கள்

சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

கடாபி படுகொலை செய்யப்பட்டிருக்கிறாரே? –ஜான்சன், நெல்லை. மவ்மார் அல் கடாபி கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால். பாலைவனப் பகுதியில் புதைக்கப்பட்டதோ அமெரிக்க எதிர்ப்பு. ‘முஸ்லிம் எல்லாம் ஒத்துமையா இருப்பாங்க தெரியுமா?’ என்பது பச்சைப் பொய் என்று ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய நாடுகள் நிரூபித்து வருகிறன்றன. இஸ்லாமிய மதக் கருத்துக்களுக்கு எதிராக ஒரு இஸ்லாமியர் கருத்துக் கூறினால், அவரை … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 5 பின்னூட்டங்கள்