கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..

கண்ணதாசன் பாடல் வரிகளை விட இசைதான் சிறப்பு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவரின் பாடல் வரிகளால்தான் பாடல் சிறப்படைகிறதே தவிர, மெட்டுக்களால் மட்டும் அல்ல. குறைந்தபட்ச அறிவை பயன்படுத்தினாலே இது தெரியும்.

-சு. கருமுத்து, சென்னை.

திருமணங்களில் நடக்கிற கச்சேரிகளில் இன்னும் பல இசை நிகழ்ச்சிகளில், திரைப்படப் பாடல்களை வயலின், வீணை, கிதார், மாண்டலின் என வாத்தியக் கருவிகள் மூலம் வார்த்தைகள் இல்லாமல், மெட்டுக்கள் மட்டுமே வாசிக்கப்படுகிறது. இதுபோன்ற முறையிலேயே மெட்டுக்கள் மட்டும் சிடி களாக விற்னையிலும் இருக்கிறது.

அவைகள் மிக பெரிய அளவில் ரசிக்கப்படுகிறது.

ஒரு மாற்றாக, நீங்கள் திருமண நிகழ்ச்சிகளில், மெட்டுக்களை தவிர்த்துவிட்டு கண்ணதாசனின் பாடல் வரிகளை மட்டும் ஏற்ற இறக்கத்தோடு படித்து காட்டுங்கள்.

பாராட்டு கிடைத்தால், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். பதிலுக்கு யாராவது கல் எடுத்து அடிச்சாங்கன்னா அதுக்கு நான் பொறுப்பல்ல.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் செப்டம்பர் மாத இதழில், வாசகர் கேள்வி நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று

இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

வைரமுத்துவிற்கு வாழ்த்துகள் சொல்லலாமா?

கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காத ஒரு பாட்டு; காரணம் வாலி

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

9 Responses to கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..

 1. Nakkeeran சொல்கிறார்:

  உங்களுக்கு தலைக்கனம் இருக்கும் அளவுக்கு கண்ணதாசன் கவிதையில் உள்ள இலக்கிய வாசனையை செரிக்கும் திறமை அல்லது பெருந்தன்மை இல்லை. உங்களது பதில்கள் மூலம் உங்களை பிளட்டோ, அரிஸ்தோட்டல் அளவுக்கு உயர்த்தப் பார்க்கிறீர்கள். இது தோகை மயிலைப் பார்த்து வான்கோழி ஆடியது போல இன்னும் சொல்லப்போனால் குயிலைப் பார்த்து கோட்டான் பாடியது போல இருக்கிறது. ஒரு பாட்டு வெற்றி பெறுவதற்கு அதன் வரிகள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்ணதாசன் ஒரு தமிழ்க் குயில். ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி திரைப்பாடல்கள் இலக்கியத்தரம் படைத்தவை என்பதை எண்பித்தவர்.

 2. என். நடராஜன் சொல்கிறார்:

  Nakkeeran அப்ப நீங்க கல்யாணத்தில் கண்ணதாசன் பாடல்களை வாசிக்கப் போறிங்களா? வாழ்த்துக்கள்.

 3. shanmuganantham.e சொல்கிறார்:

  nall veemarsanam. vazhthukkal.

 4. mohankumaar சொல்கிறார்:

  kelvikku bathil sariyanathe!

 5. Pingback: கண்ணதாசனும் கடவுள் ஆகலாம் பச்சை தண்ணியும் போதையாக்கலாம் « வே.மதிமாறன்

 6. Pingback: இசைக்கு மொழியில்லை ஜாதி இருக்கிறது அதுதான் சுருதி சேர்க்கிறது லயமாகவும் பின் தொடர்கிறது | வே.

 7. Pingback: புன்னகை மன்னன் வைரமுத்து | வே.மதிமாறன்

 8. Pingback: கண்ணதாசனுக்காக தமிழர்கள் செய்த ‘தியாகம்’ | வே.மதிமாறன்

 9. Pingback: வர்க்க ரசம் சொட்டும் காதல் உணர்வு;மருதகாசி | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s