ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும்-இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும்

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமனாதன், இளையராஜா போன்ற இந்துமதத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர்களை பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இந்தியாவிற்கு ஆஸ்கார் விருது வாங்கித்தந்த ஏ.ஆர். ரகுமான் பற்றி இதுவரை ஒன்றுமோ சொல்லவில்லையே?

-கே. அப்துல்காதர், திருச்சி.

சொல்லிட்டா போச்சி.

கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை.

அப்படிதான் தியாகராஜ பாகவதர் பாடிய “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில அமைந்தப் பாடலை, அதற்கு பின் வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்தரராஜனை  பாட வைத்தார்.

“உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்” என்று ‘ஹரிகாம்போதியில்’ மெல்லிசை மன்னர் இசையமைத்தப் பாடலை, இசைஞானி இளையராஜா பழைய பாடலின் பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி, “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.

இது முன்னர் இருந்த மேதைகளுக்கு, அதே துறையைச் சார்ந்த மேதைகள் செய்த கவுரம். ஆனால் இப்போது நடப்பதோ களவானித்தனம்.

பழைய பாடல்களை மறைமுகமாக திருடி இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நேரடியாக பகிரங்கமாக ரீமிக்ஸ் என்ற பெயரில் வழிப்பறி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, நமது ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர். ரகுமான். ‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற புதுமையான  ஒலிகளை கொண்ட இசையை ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான். ‘பொன் மகள் வந்தாள்’  மெல்லிசை மன்னரால், மேற்கத்திய இசை கருவிகளை கொண்டு நுட்பமாக  இசையமைக்கப்பட்ட மிக நவீனமான, இனிமையான பாடல்.  அதை ரகுமான் எப்படி குதறி இருந்தார் என்பதையும் நாடே அறியும்.

ஆனால் ரகுமான் மீதான கோபம், இவைகளால் மட்டுமல்ல. கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’  என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை.  இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.

கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.

அந்த விசுவாசம் ரகுமானுக்கு இருந்ததால்தான், ‘ரோஜா’ ‘பம்பாய்’ போன்ற இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படங்களில் அவருடைய இசையும் இஸ்லாமிய எதிர்ப்புக் குறியீடுகளாகவும், `இஸ்லாமிய இசை` தீவிரவாத  அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

வழக்கமாக வில்லனுக்கான பின்னணி இசை அச்சமூட்டுகிற ஒலி, அல்லது திகிலூட்டுகிற இசை என்றுதான் இருக்கும். ஆனால் இந்தப் படம்தான் முதல் முறையாக இஸ்லாமிய இசையை, பாங்கு ஒலியை வில்லனுக்கான பின்னணியாக மாற்றியது. இஸ்லாமிய இறைவழிபாட்டு முறைகூட வில்லத்தனமான அடையாளமாக காட்டியது.

இதற்காகவே அந்த படத்தின் இசைக்காக தேசியவிருதும் வழங்கப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் வழியாக ஆஸ்கார் விருதுவரை ஏ.ஆர். ரகுமானை அழைத்தும் சென்றது.

இன்று கூட இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்க்கிற ஆதிக்க ஜாதிக்காரர்களும், ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாமின் ஆதரவாளர்கள்தான்.

இவர்களை ஆதரிப்பதின் மூலமாக, தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது இஸ்லாமிய ஆதரவாளர்களாக சித்தரித்துக் கொள்கிறார்கள்.

இந்த பாணியில் அப்துல்கலாம் நேரடியான அரசியல் குறயீடு என்றால், ரகுமான் கலைவடிவ குறீயிடு.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2011 ஆகஸ்ட் மாத இதழில், வாசகர் கேள்வி நான் எழுதிய பதில்

தொடர்புடையவை:

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

11 Responses to ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானும்-இஸ்லாமிய எதிர்ப்பாளர்களும்

 1. வேல்துரை ராஜ்குமார் சொல்கிறார்:

  அண்ணே உங்க ஏஆர்ரகுமான் குறித்த அரசியல் பார்வை மிகவும் சரி…ஆனால் அவரிடம் எந்த திற்மையும் இல்லை என்பது போல் கூறுவது ஏற்றுகொள்ள முடியவில்லை……இளையராசாவை ஆதரிப்பதது என்பது ரகுமானை எதிர்ப்பதாகது…மாறி வரும் உலக போக்கயும் நாம் அவதானிக்க வேண்டும்..அனுமதிக்கவேண்டும்…
  இசையும்..தொழில்நுட்பத்தயும் மிக அருமையான் முறையில் கையாளதெரிந்தவர்…….சனாதனவாதிகள் என்றுமே..”.திரு”உருக்களை உருவாக்க முயல்வார்கள்..அதிலிருந்து ரகுமானை விடிவித்து நமக்கான கலைஞனாக மாற்ற முயல்வதே புத்திசாலிதனமாக் இருக்கும்..நன்றி

 2. Steve Shnedier சொல்கிறார்:

  எ ஆர் ரகுமானை பற்றி ஒரு ஜிஹாதி முஸ்லிம் கூட இந்த மாதிரி பார்வை வைத்திருக்க மாட்டான். இளையராஜாவின் அடிமையாக இருப்பதில் தவறில்லை. அதற்காக உண்மையை வேறு கோணத்தில் அணுகுவது உங்களின் பேடித்தனத்தையே காட்டுகிறது. சின்ன சின்ன ஆசை என்கிற ஒரே பாடலின் மூலம் இருபது வருடங்கள் தனி ஆர்வத்தனம் செய்து கொண்டிருந்த இளையராஜாவை விலாசம் இழக்க செய்தவர் ரகுமான். இளையராஜா திறமையானவர்தான். ஆனால் ரகுமான் ஒன்றுமே இல்லாமல் திடீரென்று இப்படி புகழ் அடைந்து விட்டார் என்று நீங்கள் சொல்வது போலிருக்கிறது. இளையராஜாவின் இந்து மத வைராக்கியம் அவரை என்னதான் யோகி போல காட்டினாலும் அவரை பூணூல் பிராமணர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இளையராஜா ஆரம்பத்தில் ஒரு கிருஸ்துவனாக இருந்து பின்னர் இந்துவாக மதம் மாறியவர் என்பது உங்களுக்கு தெரியுமா? ராஜாவுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அதற்க்கும் மேலே கிடைத்து விட்டது. ஆனால் இன்னும் பெரிய அளவில் புகழ் அடையாமல் அங்கீகாரம் இல்லாமல் இருக்கும் ஒரு உண்மையான இசை மேதை எம் எஸ் விஸ்வநாதன் தான். அவரை போல இசை அமைக்க ராஜாவாலும் முடியாது என்பதை அவரே ஒத்துக்கொண்டு விட்டதே இதற்க்கு சாட்சி. வீணாக இளையராஜாவுக்கு மட்டும் விசிறிக்கொண்டிராமல் உண்மையான திறமையை கண்டு உணர்ந்து அதை பாராட்டுவதே உங்களை போன்றவர்களுக்கு அழகு.

 3. Rienzie Pieris சொல்கிறார்:

  சின்ன சின்ன ஆசை என்கிற ஒரே பாடலின் மூலம் இருபது வருடங்கள் தனி ஆர்வத்தனம் செய்து கொண்டிருந்த இளையராஜாவை விலாசம் இழக்க செய்தவர் ரகுமான்.

 4. D.R.Ashok சொல்கிறார்:

  ரகுமான உதாரணம் காட்ட அந்த இரண்டு பாட்டுதான் கிடைச்சுதா? ஒன்னும் சொல்லறதுக்கில்ல…

 5. Jawahar சொல்கிறார்:

  அண்ணா, உங்க கருத்து சரிதான், உதாரணங்கள்தான் சரியில்லை

 6. kalanithi சொல்கிறார்:

  இந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, நமது ‘ஆஸ்கர் நாயகன்’ ஏ.ஆர். ரகுமான். ‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற புதுமையான ஒலிகளை கொண்ட இசையை ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான். ‘//////////////////////////

  Ungal karthu thavaru….

  1st remix song KURUMBU tamil film la “Aasai Nooru Vagai” nu song music Yuvan Shankar Raja 2002 la vanthu…
  ithu ku apram dhan new film vanthadhu… 2003 la….

  1st unga isai yani ooda payan dhan remix ha pottathu…..

 7. vignaani சொல்கிறார்:

  //..ஆனால் ரகுமான் மீதான கோபம், இவைகளால் மட்டுமல்ல. கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’ என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை. இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.

  கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல் …//

  நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுவீர் என்று எதிர் பார்க்கவில்லை. அப்போது விளம்பர மெட்டுகளுக்கு
  இசை அமைத்துக்கொண்டிருந்த சின்ன பையன் ரஹ்மானிடம் ஒரு பெரிய படத்தை ஒப்படைத்து அவர் வெளிச்சத்திற்கு வரக் காரணமாக இருந்த இருவரை — அவர்கள் “பூணூல்” என்ற ஒரே காரணத்தால் இவ்வாறு சொல்வது எவ்வளவு அநியாயம் என்று உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்

 8. தமிழ் ராம் சொல்கிறார்:

  1995-ல் வெளி வந்த “சதிலீலாவதி” படம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில் இசைஞானி தான் முதலில் “மாருகோ .. மாருகோ மாருகயி” என்ற தன் பாடலயே REMIX செய்தார் என்பது உங்கள் பகுத்தறிவு கண்ணுக்கு ஏன் தெரியாமல் போனது …? கொடும உங்ககிட்டயெல்லாம் கேள்வி கேக்குறாங்க … நீங்களும் ஏதோ மேதாவி மாதிரி பதில் சொல்றீங்க … ஹ்ம்ம்ம்

 9. ravi சொல்கிறார்:

  குண்டக்க மண்டக்க என்று வலுக்கட்டாயமாக உட்கார்ந்து யோசிப்பீர்களோ?

 10. isai priyan சொல்கிறார்:

  1000 rahman vanthaalum,
  NAAN KADAVUL padathai pol isai amaikka ulagil RAJA vai thavira yarum illai.
  muthalil naan kadavul pondra padam rahmanukku kidaikkathu . . .
  rahmanum tallented person than.but avar rajavukku pottiyaga vara mudiyathu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s