பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழ்த் தேசியவாதிகளும்

https://mathimaran.files.wordpress.com/2011/09/bradlaughwithperiyar.jpg?w=242

தமிழினவாதிகளுக்கும் பெரியாரிஸ்ட்டுகளுக்கும் என்ன வித்தியாசம்?

குமார்

‘kumarasamy mudaliyar High School’ என்று ஒரு பள்ளியின் முகப்பில் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிற பெயரை தமிழனவாதிகள் பார்த்தால், ‘பள்ளியின் பெயரை தமிழில் எழுதுக’ என்பார்கள்.

பெரியார் தொண்டர்கள் பார்த்தால், ‘முதல்ல அதுல இருக்கிற முதலியார் என்கிற பெயரை எடு. அப்புறமாகூட தமிழில்ல பெயரை வைச்சிக்க’ என்பார்கள். இதுதான் தமிழனவாதிகளுக்கும் பெரியார் தொண்டர்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். எதற்கு முன்னுரிமை தருவது என்பதில்.

தந்தை பெரியாருக்கு முன்பிருந்த சமூகம், தன் பெயருக்கு பின்னால், ஜாதி பெயரை போட்டுக் கொள்வதில் பெருமை உடைய சமூகமாக இருந்தது. ஜாதி, மதத்திற்கு எதிராக தந்தை பெரியார் ஓயாது போராடி,  தன் பெயருக்கு பின் ஜாதி பெயரை போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும்படியான ஒரு மனநிலையை தமிழர்களிடம் உருவாக்கினார். இது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத நிலை.  எந்தத் தலைவருக்கும் இல்லாத சிறப்பு.

சுதந்திர போராட்டத்திலும் சரி அதற்கு பின்னும் சரி, மேற்கு வங்காளம் பல புரட்சியாளர்களை தந்திருக்கிறது. ஆனால் அந்த மண்ணில், ஜாதிக்கு எதிரான மனோபாவம் முற்போக்காளர்கள் மத்தியிலேயே உருவாகவில்லை. அதன் சாட்சியாகத்தான் இன்றும் அந்த மாநில கம்யுனிஸ்ட்   கட்சி தலைவர்களே  சீதாரம் யெச்சூரி, புத்ததேவ் பட்டாச்சாரியா, சோம்நாத் சட்டர்ஜி,  இந்திரஜித் குப்தா என்று ஜாதி பட்டத்தோடுதான் அலைகிறார்கள்.

ஆனால், தமிழ் நாட்டில் பெரியார் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, ஜாதி உணர்வுள்ள சராசரி தமிழன், பார்ப்பனர்கள், ஜாதி சங்கத்திற்கு தலைவனாக இருப்பவர் கூட தன் பெயருக்கு பின் ஜாதி பெயரை போட்டுக்கொள்ள விரும்பாத அல்லது முடியாத ஒரு சூழலை தந்தை பெயரியார் உருவாக்கினார்.

தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே, சிங்கள ராஜபக்சே அரசால் படுகொலை செய்யப்பட்ட,  லட்சக்கணக்கான ஈழமக்களின் துயரங்களின்போது,   தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரன் ராஜபக்சேவை, இந்திய அரசை  நாம் கண்டித்து எழுதியபோது, ‘ஆக சபாஷ்’ என்று நம்மை பாராட்டிய தமிழனவாதிகள்,

இந்து மதத்திற்கு, பார்ப்பனியத்திற்கு எதிப்பு தெரிவிக்காமல், பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் தலித் வீரோத போக்கை, தலித் மக்களுககு எதிரான கொலைவெறி மனோபாவத்தை கண்டிக்காமல், ஈழப்பிரச்சினையை காரணம் காட்டி தமிழ்நாட்டிலும் ஈழம்போல்   பொதுவாக ‘தமிழன்’ என்று கும்மியடிக்கிறவர்களை, நாம் கேள்வி கேட்டால், பெரியாருக்கு எதிரான தமிழனவாதிகளும், பெரியார் பெயரை பெயரளவில் பயன்படுத்தி தீவிராமக தமிழ்தேசியம் பேசுகிறவர்களும் நம்மீது பாய்ந்து புடுங்குவதுபோல்,

பார்ப்பன எதிர்ப்பு, பார்ப்பனரல்லாதர் நலம் என்று பெரியார் பேசியபோது, ‘பெரியார் வாழ்க’  என்று முழுங்கிய நீதிக்கட்சிக்காரர்கள், உயர்ஜாதி இந்துக்கள் – பெரியார் இந்து மதத்திற்கு எதிராக,  தீண்டாமைக்கு எதிராக, ஜாதிக்கு எதிராக, ஜாதி அடையாளங்ளை, மத அடையாளங்கைளை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னபோது, பெரியார் மீது பாய்ந்து புடுங்கினார்கள்.

1929 ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 18-19 நாட்களிலில் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டு தீர்மானங்கள் வரலாற்று சிறப்பு மிக்கது.   தன்னை தீவிரமாக ஆதரித்து, மாநாட்டுச் செலவுககு பணம் கொடுத்த பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்கார்களை, பணக்காரர்களை மிக கடுப்பேற்றிய தந்தை பெரியாரின் தீர்மானங்களில் முக்கியமானவை,

ஜாதிபேதம்

() மக்கள் பிறவியினால் உயர்வு, தாழ்வு உண்டு என்ற கொள்கையை இம்மாகநாடு அடியோடு மறுப்பதுடன் அதை ஆதரிக்கிற மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களை யெல்லாம் பொது ஜனங்கள் பின்பற்றக்கூடாதென்றும்,

(பி) வருணாசிரமமென்ற கொடுமையான கட்டுப்பாட்டையும் சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாதென்றும்,

(சி) மனித நாகரீகத்திற்கும் தேச முன்னேற்றத்திற்குத் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லா பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள், கோவில்கள் முதலிய பொது ஸ்தாபனங்களை தட்டுத் தடங்கலின்றி அநுபவிக்கச் சகல ஜனங்களுக்கும் உரிமைகொடுக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது.

(டி) இவைகள் நிறைவேறச் செய்யப்படும் பிரசாரமும் முயற்சியும் ஒரு சில சுயநல வகுப்பாரின் மத சம்மந்தமான பிடிவாத்தினாலும் முட்டுக் கட்டையினாலும் போதிய அளவு சித்திபெறாமலிப்பதினாலும், இதற்காக அரசாங்கச் சட்டம் அவசியம் என்று கருதுகிறபடியால், சட்டசபைப் பிரதிநிதிகளும், சர்க்காரும் தக்க ஏற்பாடு செய்து பொதுஜன முயற்சிக்கு உதவிபுரிய வேண்டுமென்று இம் மாகநாடு தீர்மானிக்கிறது.

ஜாதிப்பட்டமும் மதக்குறியும்

() மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுதவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டு விட வேண்டுமென்று இம்மாகாநாடு பொது ஜனங்களை கேட்டுக்கொள்கிறது.

(பி) ஜாதி அல்லது சமயப் பிரிவுகளைக் காட்டும் குறிகளை யாரும் அணிந்து கொள்ளக் கூடாதென்றும் கேட்டுக் கொள்கிறது.

(குடியரசு 24-2-29)

இந்த தீர்மானங்களினால் நீதிக்கட்சியை சேர்ந்த தலைவர்களே பெரியார் மீது வெறுப்புக் கொண்டார்கள்.

மனித நாகரீகத்திற்கும் தேச முன்னேற்றத்திற்குத் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லா பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர் பந்தல்கள், கோவில்கள் முதலிய பொது ஸ்தாபனங்களை தட்டுத் தடங்கலின்றி அநுபவிக்கச் சகல ஜனங்களுக்கும் உரிமைகொடுக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது

என்கிற பெரியாரின் இந்தத் தீர்மானத்தால் கடுப்பான பிள்ளைமார்கள், அதே ஆண்டு ‘சைவசமய மாநாடு’ என்ற பெயரில் திருநெல்வேலியில், செங்கல்பட்டு மாநாட்டிற்கு போட்டி மாநாடு நடத்தி பெரியாரை தூற்றினார்கள். ஆனாலும், பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக கொண்டுவந்த மேற்கண்ட  தீர்மானத்தால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து தப்பிக்க தங்களையும் முற்போக்காளர்களாக காட்டிக் கொள்ள, அவர்களும்  ‘எல்லா மக்களும் கோயிலில் நுழைய வேண்டுமானல், அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இந்த தீர்மானத்தை காறி துப்புவதுபோல் பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த கோவை அய்யாமுத்து இப்படி எழுதினார், ‘அய்யா, சைவப் பெரியோரே, தாங்கள் கோரும் சுத்தம் அகச்சுத்தமா, புறச்சுத்தமா? அகச்சுத்தமாயின், அகச்சுத்தமுள்ளவனுக்கு கோயில் எதற்கு? புறச்சுத்தமாயின், நாளைய தினமிருந்து தங்களை ஒரு அழுக்குள்ள குடிசையில் குடியிருக்கச செய்து, திருநெல்வேலியிலுள்ள கக்கூசு  மலங்களையெல்லாம் வாரியெடுத்து அப்புறப்படுத்துவதைத் தங்களுக்குத் தொழிலாகக் கொடுத்து அதற்காக தங்களுக்கு மாதம் ஐந்து ரூபாய் சம்பளமும் கொடுத்து, கிணற்றிலும் அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டால் தாங்கள் சுத்தமாக இருக்க முடியுமா? (பெரியாரும் அவர் இயக்கத்தவரும், பார்ப்பனரல்லாத ஜாதியினரை  பிள்ளைமார், செட்டியார், முதலியார்,  தேவர்,வன்னியர் போன்ற ஜாதியினரின் தலித் விரோத போக்கின்போது, பெயர் சொல்லி திட்டி எழுதினார்கள். ஆனால் இன்றைய பெரியாரிஸ்ட்டுகள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதா ஜாதிவெறியர்களை பெயர் சொல்லி திட்டுவதில்லை.)

பெரியார் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்ட, இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த சண்முகம் செட்டியார் போன்றவர்களே, ஜாதிகளுக்கு எதிரான செங்கல்பட்டு மாநாட்டு தீர்மானங்களினால் பெரியார் மீது விரோதம் வளர்த்தார்கள்.

இதற்கெல்லாம் கலங்குகிறவரா பெரியார்? 1929 ஆம் ஆண்டு போட்ட இந்த தீர்மானங்களுககு 1973 ஆம் ஆண்டு தன் இறுதிநாள் வரை உண்மையாக நடந்து கொண்டார். தன்னுடைய இறுதி சொற்பொழிவிலும் (19-12-73) பார்ப்பனியத்திற்கு எதிராக இந்து மதத்திற்கு எதிராக ஜாதி இழிவுக்கு எதிராகத்தான் தீவிரமாக முழங்கினார்.

29ககு பின் பெரியாரின் அரசியலில், எதை எதிர்த்தாலும், எதை ஆதரிர்த்தாலும், யாரை எதிர்த்தாலும், யாரை ஆதரி்த்தாலும் அவருடைய செயல் இந்தத் தீரமானங்களையே சுற்றியே வந்தது.

1947 ஆகஸ்ட் 15 தேதியை நாடே கொண்டாடியபோது, துணிந்து ‘இது துக்கநாள்’ என்று அறிவித்தார். அதனால் அவருக்கு ‘தேச துரோகி’ பட்டம் கிடைத்தது. பெரியார் இயக்கத்தில் இருந்த அண்ணாதுரை போன்றவர்களே, பெரியாரை எதிர்த்து பேசினார்கள்.

வெள்ளைக்கார ஆட்சியில் எந்த பதவியும் ஏற்காத, தனிப்பட்ட முறையில் ஒரு பைசாகூட லாபம் அடையாத, எந்த சொகுசையும்  அனுபவிக்காத பெரியார், வெள்ளையர் இந்த நாட்டை விட்டு போவதை துக்கநாள் என்றதற்கு காரணம், அவன் பார்ப்பானிடம் ஒப்படைத்துவிட்டு போகிறான் என்பதினாலும் 29 ல் போட்ட தீர்மானத்தை சமூகத்தில் பார்ப்பன் அமல் படுத்த விடமாட்டன் என்பதினாலும்தான்.

பெரியார், தனித் தமிழ்நாடு கோரிக்கை பற்றி பேசினால் அதிலும் இதுதான் உள்ளடாக்கமாக இருக்கும். இந்தியா ஒழிஞ்சா பாப்பான் ஒழிவான். சூத்திரப்பட்டம், பஞ்சமன் என்கிற இழிவு ஒழியும் என்பார்.

இந்தியா-சீனா யுத்தத்தின் போது, சீனாவை ஆதரித்தார் பெரியார். அதற்கும் இதுவே உள்ளடக்கம். சீனாக்காரனுக்கு ஜாதிகிடையாது இல்ல… அவன் நம்பள பள்ளன் பறையன் சூத்திரன்னு நடத்தமாட்டான். ….. அவன் ஜெயிச்சு வந்து ஆளட்டும் என்றார்.

காங்கிரசை எதிர்த்ததற்கும் இதுவேதான் உள்ளடக்கம். பிறகு காமராஜருக்காக காங்கிரசை ஆதரித்தபோதும் இதுவேதான் உள்ளடக்கம்.

ஆனால், தமிழ் தேசியவாதிகளுக்கு இதுவல்ல உள்ளடக்கம். ‘ இத்தனை கோடி தமிழனுககு ஒரு நாடு இருக்கிறதா….. (இந்தியாவில எந்த மொழி பேசுறவன் தனியா நாடு வைச்சிருக்கான்?) முதலில் தமிழனுக்கு என்று ஒரு நாடு அமையட்டும். தமிழ்நாடு தனிநாடாக ஆகட்டும்… அதன்பிறகு இதைதப்பற்றி பேசுவோம்…   என்கிறார்கள்.

ஆனால் பெரியார், நீ எத பத்தி பேசுறதா இருந்தாலும் முதல்ல இதப் பத்திப் பேசு…என்றார். அதனால்தான் தமிழ்தேசியவாதிகள் பெரியார் மேல் கடுப்பாக இருக்கறார்கள். அதன் பொருட்டுத்தான் பெ. மணியரசன் பெரியாருக்கு மொழி குறித்து தெளிவில்லை என்று எழுதினார்.

அதனால்தான் பழ. நெடுமாறன்,    ஐந்தாண்டுகளுக்கு முன் பெங்களுரில் தமிழர் மாநாடு நடத்தியபோது, அதில் தமிழர் தலைவர்கள் என்று வரிசைபடுத்தி படம் திறந்ததில் பார்ப்பன ஜாதி உணர்வாளரான சுப்பிரமணிய பாரதி படம் திறந்தவர், தமிழர்களின் ஒப்பற்ற ஓரே தலைவர் தந்தை பெரியார் படத்தை திறந்து வைக்கவில்லை. மாநாட்டு பந்தலில் பெரியார் படத்துக்கு இடமும் ஒதுக்கவில்லை.

இது புரியாம நம்ம பெரியாரிஸ்டுங்க…தமிழ்தேசியவாதிகளுக்கு சப்போட்டா இருக்காங்க….தமிழ்தேசியவாதிகளும் வெட்கமில்லாமல், பெரியார் தொண்டர்கள் முதுகில் சவாரி செய்கிறார்கள்.

20-07-2009 ஆம் ஆண்டு எழுதியது. பெரியார் பிறந்தநாளுக்காக மீண்டும் பிரசுரிக்கிறேன்.)

தொடர்புடையவை:

பெரியாரின் ஊழல்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

பெரியார்; தலித் விரோதியா?

பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

தமிழ்த்தேசியம்:  ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்

‘பெரியாரையே விமர்சிக்கிறாங்க… அப்பா…. பயங்கரமான ஆளா இருப்பாய்ங்க போல’

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

காமராஜர், கக்கன், கம்யூனிஸ்டுகளின் எளிமையும்; பார்ப்பன, தேசிய, தமிழ்த்தேசியவாதிகளின் சதியும்

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

13 Responses to பெரியாரிஸ்ட்டுகளும் – தமிழ்த் தேசியவாதிகளும்

 1. SELVARAJ.P சொல்கிறார்:

  Mika sariyaanaa kattrurai,saathi olippu & varkka paarvai illatha tamildesiyam naalai anaitthu saathi Eazhai (paattaali )makkalukku ethiraaga mudiyum ethu 100% unmai.

 2. வலிபோக்கன் சொல்கிறார்:

  நம்ம பெரியாரிஸ்டுங்க…தமிழ்தேசியவாதிகளுக்கு சப்போட்டா இருப்பதும்….தமிழ்தேசியவாதிகளும் வெட்கமில்லாமல், பெரியார் தொண்டர்கள் முதுகில் சவாரி செய்வதும். வர்க்கம் கடந்த சாதிய உணவுர்கள் அவர்கள் செத்து சுடுகாட்டுக்கு போனாலும் சாம்பலும்கூட சாதிய உணர்வாகத்தான் வெளிப்படும்

 3. sathishn77 சொல்கிறார்:

  very good article. castists are in disguise as tamil nationalists. not eveyone sir but nearly a half of them. useless fellows.

 4. நந்தன் சொல்கிறார்:

  சரியாக அம்பலப்படுத்தி இருக்கிறீர்கள்.

 5. மூக்கன் சொல்கிறார்:

  மதிமாறன் அவர்களே,
  நல்ல பதிவு. குறைந்தபட்சம் பெரியார் பற்றி தெரிந்தவர்கள் தான் இது குறிதது புறிந்துகொள்ள முடியும். அனைவரும் அறியும்படி, ஆகஸ்ட் 15ஐ ஏன் கறுப்பு நாளாக அறிவித்தார் என்பது குறித்து எழுதவும் – நன்றி

 6. மூக்கன் சொல்கிறார்:

  அதை ஒரு புத்தகமாக கொண்டு வருவதை பற்றியும் நா பின்னர் பேசலாம் – நன்றி

 7. Nakkeeran சொல்கிறார்:

  “வெள்ளையர் இந்த நாட்டை விட்டு போவதை துக்கநாள் என்றதற்கு காரணம், அவன் பார்ப்பானிடம் ஒப்படைத்துவிட்டு போகிறான் என்பதினாலும் 29 ல் போட்ட தீர்மானத்தை சமூகத்தில் பார்ப்பன் அமல் படுத்த விடமாட்டன் என்பதினாலும்தான்” என்ற பெரியாரின் காரணம் சொத்தையானது. வெள்ளைக்காரன் நாட்டை இந்திய மக்களிடம்தான் விட்டுப்போனான். 29 இல் போட்ட தீர்மானத்தை நடைமுறைப் படுத்த எந்த தடையும் இல்லை. பெரியார் சொன்னவற்றை விமர்ச்சிக்கக் கூடாது என்பது மூடத்தனம். அதனை பெரியாரே விரும்பவில்லை. பாரதி பிராமணனாகப் பிறந்தாலும் அவன் தமிழ் உணர்வோடுதான் வாழ்ந்து மடிந்தான். சாதியை பெரியார் சாடியதற்கு ஒப்ப அல்லது அதற்கு மேலாகச் சாடினான்.

 8. Pingback: பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்! &la

 9. Pingback: பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்! &la

 10. mohamed yasir சொல்கிறார்:

  good article, great to known in deep about periyar.

 11. inian சொல்கிறார்:

  பெரியாரைப்பற்றிய சரியான புரிதலை உரவாக்கும் கட்டுரை…வாழ்த்துகள்….
  இந்தியா என்பதே பார்ப்பன தரகு முதலாளிய மேலாதிக்க அரசுதானே….? அது எப்படி இந்த பெரியாரின் தமிழரின் அனைவரும்சமம் என்ற பிறப்போக்கும் எல்லாஉயிர்க்கும் என்ற தத்துவத்தை கொள்ளும் இந்தியா இந்து இந்தி இதுதானே அடிப்படை..இது புரிந்தும் புரியாததுபோல் பதிவிடுகிறார்கள் சிலர் அதன் உள்ளடக்கங்களை நாமறிவோம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s