‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி

பாமக ராமதாஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததும், மூன்றாவது அணி முயற்சிப்பதும் ‘நல்ல விசயம்தான்’ என்று பல ‘நண்பர்கள்’ பேசிவருவது அறிந்ததே.

`நண்பர்கள்’ என்ன காரணத்திற்காக அடுத்தவர்களை விமர்சிக்கிறார்களோ அதே காரணத்திற்காகவே ‘நம்மாளுங்களை’ ஆதரிக்கவும் செய்கிறார்கள்.

‘நண்பர்களின்’ இந்த செயலுக்கான காரணம், ‘நண்பர்கள்’ எப்போதும் ‘நம்மாளுங்க’ளாக நடந்து கொள்வதுதான் என்பதை நான் விளக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது நண்பர்களோட நண்பர்களுக்கே தெரியும்.

ஏனென்றால் நண்பர்களோட நண்பர்களும் அடுத்தவனை கடுமைய திட்டிட்டு, அதவிட மோசமான ஆளை ஆதரிக்கிறவங்கதான். ‘என்ன பண்றது அவரு ‘நம்மாளாச்சே’

‘இன உணர்வு, இன உணர்வு’ என்று அடிக்கடி சொல்றாங்களே அது இதுதான் போல.

மூன்றாவது அணி முயற்சியில் எப்போதும்போல், பாமகவின் ‘பார்ப்பன’ தந்திரம், நிறைந்தே இருக்கிறது, அதாவது வழக்கம்போல் காங்கிரசை பகைத்துக் கொள்ளாத தந்திரம்.

‘திமுக-அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ என்று சொன்னவர்கள் ‘காங்கிரசுடன் கூட்டணி இல்லை’ என்று சொல்லவில்லை.

அதனால்தான், ‘காங்கிரசுடன் கூட்டணி வைத்த திமுகவை..’ என்ற ஒரு வாக்கியத்தை ஒப்புக்குக் கூட ராமதாஸ் பயன்படுத்தவில்லை.

மற்றபடி, திராவிட இயக்கங்களை புறக்கணிப்பதும் மூன்றாவது அணி முயற்சியும் இன்னும் ஒரு மூணு மாசத்திற்குதான்.

காரணம், நிலமோசடி வழக்கில் திமுகவின் முக்கியப் புள்ளிகளை சுற்றி வளைக்கிறது அதிமுக அரசு. அதன் தொடர்ச்சியாக பாமக பிரமுகர் ஒருவர் கூட கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆக, திமுக கூட்டணியில் இருந்தால், இதுபோன்ற நடவடிக்கைள் தங்கள் மீதும் தொடரும் என்பதால், குறைந்தபட்ச பாதுகாப்பிற்காகதான் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கிறது பாமக.

இப்போ உடனே போய் அம்மாகூட எப்படி சேர முடியும்?

போயஸ்தோட்டத்திற்கு, ராதகிருஷ்ணன் சாலை வழியா நேராவும் போலாம், இல்ல கே. கே நகர் போய் அங்க ஒருத்தர பிக்கப் பண்ணிக்கிட்டு, ‘வன்னிய’ தேனாம்பேட்டை வழியா அறிவாலயத்திற்கு பின் பக்கமா சுத்திக்கிட்டும் போலாம்.ஆக,மூணாவது அணி தேனாம்பேட்டை  ரூட்டு.

பமாகவின் இந்த மூன்றாவது அணி முயற்சி, ‘புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேல வந்து படுத்துக்க’ என்பது போன்ற முயற்சிதான்.

நிலமோசடி வழக்குகளில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிற கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உருவாக்க இருப்பதுதான் மூன்றாவது அணி.

பிறகு, அம்மா கைது நடவடிக்கை எதுவும் இல்லாமல் மன்னிச்சு விட்டுட்டாங்கன்னா.. அப்புறம் என்ன.. அடுத்து அதிமுக கூட்டணி.

தொடர்புடையவை:

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’; இதுக்குப்பேர்தான் திராவிட எதிர்ப்பு

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

6 Responses to ‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி

 1. Pingback: Indli.com

 2. kalanithi சொல்கிறார்:

  ஆக, திமுக கூட்டணியில் இருந்தால், இதுபோன்ற நடவடிக்கைள் தங்கள் மீதும் தொடரும் என்பதால், குறைந்தபட்ச பாதுகாப்பிற்காகதான் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கிறது பாமக.////

  பாமக vai neenga mattum dhan vimarsanam pannuringa valthikal

  matha yaarum vimarsanam panna thayakam இன உணர்வு dhan karanam…. avang saathi இன உணர்வு karanam..

 3. பாலு சொல்கிறார்:

  பாமக எந்த காலத்திலும் யாருக்காகவும் கொள்கைகள் மாறியதுஅல்ல அவர்கள் திமுகவுடன் கூட்டணி சேர்ந்த காலத்திலும், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த காலத்திலும் சீட்டுக்காக த்தானே தவிர மக்களை வாட்டுகின்ற மதுவை ஒழிக்கின்ற போராட்டம், லாட்டரி சீட்டு, திரைபடங்களின் வரும் பெண்கள் ஆபாசம் போன்றவற்றை இன்றளவும் எதிர்த்து வரும் ஒரே கட்சிதான் பாமக. http://www.thepmk.net போய் பாருங்கள்!

 4. Pingback: பாரதமாதா தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க.. « வே.மதிமாறன்

 5. Pingback: இலவசம் : ‘சின்ன அய்யா’ விற்கு ஒரு கேள்வி | வே.மதிமாறன்

 6. Pingback: ‘அரசியல் நாகரீகம்’-அரியர்ஸ் இல்லாமல் ‘பாஸ்’ | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s