இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’

பாலா தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திர இயக்குநர். இவர் எடுத்த ஐந்து படங்களும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவை.

இவரது ஐந்தாவது படமான அவன்-இவன் தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘தன் இனத்தைச் சேர்ந்தவர்களையும் சொரிமுத்து அய்யனார் சாமியையும் அவமானப்படுத்திவிட்டார்’ என சிங்கம் பட்டி ஜமீன் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த வேளையில் வே. மதிமாறன் தன் இணயதளத்தில், ‘பாலாவை சாதி உணர்வற்றவர் என்று காட்டுவதற்காகவே அவர் இனத்தவர்கள் செய்யும் வேலை இது. அதுமட்டுமின்றி தலித்துகளை பாலா அவமானப்படுத்துகிறார்’ என்று எழுதி வரும் அவரை சந்த்தித்தோம்:

‘தன் ஜாதிக்காரர்களுக்கு எதிராகவே பாலா படம் எடுத்துவிட்டார் என்பதெல்லாம் சும்மா.

மாட்டுக்கறி தின்பவர்கள் மோசமானவர்கள், மாடுகள் புனிதமானது, என்கிற ஜாதி இந்து கண்ணோட்டம்தான் இந்தப்படத்தில் அழுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கறிக்காக காட்டப்படுகிற ஆயிரக்கணக்கான மாடுகளில் ஒரு மாடுகூட எருமை மாடு இல்லை.

இத்தனைக்கும் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கறிக்காக போகிற மாடுகளில் எருமை மாடுகள்தான் அதிகம்.

ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் மூலம் இவர்கள் அதிகமாக உறிஞ்சிக் குடிப்பது எருமை பாலைத்தான். ஆனால், பசுவைதான் புனிதமாக கருதுவார்கள். நன்றி கெட்டவர்கள்.

மாடுகளை (பசு) மனி்தர்களை விட மேன்மையாகவும், மனிதர்களை மாடுகளை விட கேவலமாகவும் (தீண்டாமை) நடத்துகிற நாடு இது.

மற்றப்படி, ஜமீன்களுக்கும் பாலாவிற்கு நடக்கிற சண்டையை நடிகர் வடிவேலு பாணியில் உதட்டைக் குவித்து சொல்வதானால், ‘சும்மா..’

இந்த சண்டையில் பாலாவிற்குத்தான் லாபம். அவரை ஜாதி உணர்வற்றவராக அடையாளப்படுத்தும்.

ஆனால், அவன்- இவன் படம் அதையா சொல்கிறது?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூலை மாத இதழ்

தொடர்புடையவை:

பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

3 Responses to இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’

 1. மு.க.கலைமணி சொல்கிறார்:

  மிகவும் அருமையான கட்டுரை, உண்மையாக போர்கொடு தூக்க வேண்டியவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களே ஆனால் அவர்களிடம் எந்த வித எதிர்ப்பும் இல்லை. மற்றபடி இந்த படம் அய்யா மதிமாறன் சொல்வதுபோல்
  //மாட்டுக்கறி தின்பவர்கள் மோசமானவர்கள், மாடுகள் புனிதமானது, என்கிற ஜாதி இந்து கண்ணோட்டம்தான் இந்தப்படத்தில் அழுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் கறிக்காக காட்டப்படுகிற ஆயிரக்கணக்கான மாடுகளில் ஒரு மாடுகூட எருமை மாடு இல்லை. மாடுகளை (பசு) மனி்தர்களை விட மேன்மையாகவும், மனிதர்களை மாடுகளை விட கேவலமாகவும் (தீண்டாமை) நடத்துகிற நாடு இது//

  அன்புடன்
  மு.க.கலைமணி

 2. Pingback: யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல.. « வே.மதிமாறன்

 3. Pingback: ‘தெய்வத்திருமகள்’-ரொம்ப ஓட்டாதீங்க.. சத்தியமா தலைப்பு எங்க சொந்த சரக்குதான் « வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s