‘உன் ஜாதி உனக்கு, என் ஜாதி எனக்கு’ – நல்லா ஒழியும் ஜாதி

கடந்த தலைமுறையில், கலப்பு திருமணங்கள் நிறைய நடந்தும் கூட இந்த தலைமுறையில் சாதி உணர்வற்ற வாரிசுகளை பார்ப்பதே அரிதாகஇருக்கிறதே?

-சு. தமிழ்மணி, விழுப்புரம்.

பழைய மாயாஜாலப் படங்களில், ஒரு கொடிய மிருகத்தை, கதாநாயகன் கத்தியால் வெட்டினால், அதன் உடலிருந்து சிந்திய ரத்தம் இன்னும் நான்கு கொடிய மிருகங்களாக விஸ்வரூபம் எடுக்கும். அதுபோல், ஜாதிமறுப்பு என்ற கத்தி கொண்டு, ஜாதி என்கிற கொடியமிருகத்தை வெட்டினால், அது இன்னும் இரண்டு ஜாதிகளாக விஸ்வருபமாக நிற்கிறது.

ஜாதி மறுப்பு திருமணங்கள், ஜாதிஒழிப்பு என்ற அரசியல் நிலையிலிருந்து நடந்தால்தான் ஜாதியை ஒழிக்க முடியும். ஜாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், ஜாதிகளுக்கு எதிரான மனோபாவம் கொண்ட வாழ்க்கை நடத்தினால்தான் அவர்களின் வாரிசுகள் ஜாதி உணர்வற்றவர்களாக இருப்பார்கள்.

மாறாக, ‘உன் ஜாதி உனக்கு, என் ஜாதி எனக்கு’ என்று வாழ்ந்தால், ஒரு ஜாதி என்பது போய் இரண்டு ஜாதி உணர்வாளர்களாக, பழைய மாயாஜாலப் படங்களில் வந்த கொடிய மிருகத்தைப்போல், விஸ்வரூபம் எடுப்பார்கள், வாரிசுகள்.

பிறகு, முற்போக்கான அம்சங்களை பின்னுக்குத் தள்ளி. இரண்டு ஜாதிக் குதிரைகளில் சவாரி செய்து பிரமுகராகவும் மாறிவிட்டால், தன்ஜாதி உணர்வை பிரமுகர்களின் வழியாக சொறிந்து கொள்கிற ஜாதிய உணர்வாளர்களும்,

‘அவுங்க அம்மா எங்க ஜாதிக்காரர்’,‘ அவுங்க அப்பா எங்க ஜாதிக்காரர்’ என்று உரிமை கொண்டாடுவார்கள்.

அப்புறம் என்ன.. நாடு நல்லா வௌங்கிடும்…?

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

காதல் ஜாதியை ஒழிக்காது….

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

12 Responses to ‘உன் ஜாதி உனக்கு, என் ஜாதி எனக்கு’ – நல்லா ஒழியும் ஜாதி

 1. Ram சொல்கிறார்:

  அண்ணா ! மொதல்ல இந்த ஜாதியை ஏன் உருவாக்கினார்கள். ஜாதியை வச்சு வேற வேற சாமி கும்புட்டாங்களா ! ஜாதியை வச்சு வேற வேற வேலைய பார்த்தாங்களா ! ஒரு ஜாதிக்குள்ள என்ன தான் அப்படி ஒற்றுமை இருந்துச்சுனு நீங்க நெனைக்கிறீங்க ! நான் இந்த காலத்து மனுஷன்! எதுக்கு இந்த ஜாதின்னு எனக்கு புரிய வில்லை. பிராமணன் என்றால் வேதம் படிச்சு வேதம் ஒதனுமாம் ! இன்னிக்கு எந்த பிராமணனுக்கு வேதம் தெரியும். இப்போ ஜாதி வெறும் பெயருக்காக மட்டும் தான் இருக்குதா ! ராகுல் காந்தி என்ன பிரதம மந்திரி ஜாதியா ! உதயநிதி என்ன முதலமைச்சர் ஜாதியா ! பிறப்பால தயாநிதி உயர்ந்த ஜாதிதான். ஏன்னா அவங்க அப்பா ஊருக்கே ராஜா ! ஏதோ பழைய ஞாபகமா எல்லோரும் ஜாதியை வச்சுக்கிட்டு இருக்காங்களே தவிர யாரும் ஜாதியை வேறு எதற்காகவும் பயன் படுத்தவில்லை.

 2. Ram சொல்கிறார்:

  மறந்துட்டேன் ! ஜாதி அவசியம் இருக்கணும் ! பழங்குடியினர், பாமரரும் இன்று பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், நீதிபதிகளாகவும் மாறுவதற்கு ஜாதி தான்னே உதவி செஞ்சுருக்கு ! எதுக்கு பின்னே ஜாதியை ஒழிக்கணும்.

 3. Ram சொல்கிறார்:

  மனிதருக்குள் உயர்வு, தாழ்வு என்பது அவரவர் செய்யும் செயல்களால் தான். பிறப்பு வாயக்கிறது, அது நம்ம விருப்ப படி அல்ல. நான் எந்த வயத்துல வந்து பிறக்கணும்னு நான் முடிவு பண்ண வில்லை. ஏதோ ஒரு ஜாதியில நான் பிறந்ததால எல்லாரும் என்னை ஏசுகிறான். நான் என்னடா தப்பு செஞ்சேன். எல்லாரும் கலைஞர் குடும்பத்தில் பிறந்து காலாட்டி சாப்பிட தான் ஆசை படுவாங்க.

 4. Ram சொல்கிறார்:

  எல்லா ஜாதியையும் ஒழிப்பதற்கு ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு. மத மாற்றம் தான் அந்த நல்ல தீர்வு. சில எடத்துல காசு பணம் தராங்களாம், நல்ல வேலை தராங்களாம், வெளி நாட்டுல பொய் கூட வேல செய்யலாமாம். இதை எல்லாம் பாத்தா பேசாம மதம் மாறிடலாம் போல தான் இருக்கு.

 5. Ram சொல்கிறார்:

  மதம் மாறினா பேரை மாத்திக்கணும். இருக்கிற பேரு கூட ஒரு இங்கிலீஷ் பேரு சேத்துக்கனும். இல்லன்னா ஒரு அரபு பெயருக்கு மாத்தனும். நம்ம பேரை கேட்டா நான் தமிழ்நாட்டுகாரன்னு ஒருத்தனுக்கும் தோணாது.

 6. Ram சொல்கிறார்:

  ஜாதியை ஒழிப்பதற்கு பதிலா அவன் அவன் எந்த ஜாதியில வேணும்னா இருந்துக்கோ ! ஆனா பிறப்பினால் ஒத்தனும் தாழ்ந்தவன் இல்லை அப்படின்னு புரிஞ்சு நடந்தா நல்லது தானே. ஜாதி என்பது ஒரு குடும்ப அடையாளமாக இருக்கலாம். அது எதுக்கு தேவை என்று கேட்க அவசியம் இல்லை. அப்படின்னா தமிழ்நாடு என்று இதுக்கு என்னாத்துக்கு பேரு தேவை. பழைய குப்பை எல்லாம் தூக்கி போடு

 7. Ram சொல்கிறார்:

  தனி மனித சுதந்தரதுக்குள்ள நீ யாரு மூக்கை நுழைக்கிறது. எவன் வேணும்னா எந்த ஜாதியை வேணும்னா வச்சுக்கட்டும். நமக்கு என்ன. ஜாதியை ஏனப்பா ஒழிக்கணும். ஒருத்தனுக்கு அது வச்சுக்கனும்னு ஆசை. ஒருத்தனுக்கு அது தடையா தோணுது. அவன் அவன் தனக்கு தேவையானத தேர்ந்தெடுக்கட்டும். நாம யாரு அதை கூடாதுன்னு சொல்றதுக்கு.

 8. Ram சொல்கிறார்:

  தனி மனிதனுக்கு முழு சுதந்திரம் வேண்டும். எந்த ஜாதி பிடிக்குமோ அதை வச்சுக்கட்டும், எந்த மதம் புடிக்குமோ அதை வச்சுக்கட்டும், எந்த மொழி வேண்டுமோ பேசட்டும். நாலு மொழி தெரியுமா, நீ பெரியவன்தான். நூறு பேருக்கு வேலை கொடுத்தியா நீ பெரியவன். தான தருமம் செஞ்சியா! நூறு பேருக்கு பசிப்பிணி போக்கினாயா, நீ பெரியவன். முதல்ல ஒழுக்கமா சம்பாதிசாயா ! அப்ப தான் நீ பெரியவன். ஊரை அடிச்சு உலையில போட்டா நீ தாழ்ந்தவன். காருல போறதால நடந்து போறவனை ஏளனம் செஞ்சா நீ தாழ்ந்தவன். பசியோட வருந்துகிறவனை பார்த்தும் பாக்காம போன நீ தாழ்ந்தவன். தீதும் நன்றும் பிறர் தர வாரா – என்ன சத்திய வாக்கு. இதுல ஜாதி என்ன ஜாதி. மனிதன் செயல்களால் உயர்கிறான், செயல்களால் தாழ்கிறான். மதிமாறரே ! முதல்ல கடைய மூடுங்க ! வேலைய பாருங்க

 9. Ram சொல்கிறார்:

  ஜாதியை அழிப்பதாக பொய் சொல்லி, உண்மையில் நீங்கள் அழிக்க நினைப்பது ஹிந்து மதத்தை தான். கொஞ்சம் உங்கள் திரையை விலக்கி உண்மையை சொல்லுங்கள். ஜாதி தவறாக இருந்தால் மதமும் தான் தவறு. தன்னை நம்பாதவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்று கூறும் அந்நிய மதங்களின் போதனைகள் உங்களுக்கு மிகவும் பிடித்தவையா. நீங்கள் உண்மையில் பெரியார் வாதியாக இருந்தால், எல்லா மதத்தையும் அழிக்க முற்படுங்கள். கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றார். உங்கள் பதிவுகளில் என்றாவது அந்த இறக்குமதி செய்யபபட்ட மதங்களை பற்றி ஒரு துணுக்கை காண்பியுங்கள்.

 10. Ram சொல்கிறார்:

  அப்படியே ஹிந்து மதம் தவறாக இருந்தால் மக்கள் தங்கள் ஜாதியத்தையும், மதத்தையும் விட்டு விடுவார்கள். உங்களை போன்ற “ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொன்றில் சுண்ணாம்பு” கொண்டோரால் மக்களை மாற்ற முடியாது. மக்களை தங்கள் சொந்த முடிவை எடுக்க விடுங்கள். நீங்கள் நினைத்தது தான் சரி என்று உங்கள் அறிவற்ற வாதங்களை மக்களின் பால் திணிக்காதீர்கள்.

 11. Ram சொல்கிறார்:

  ஏற்ற தாழ்வுகள் இழிவு என்று சொல்லுங்கள், அனைவரும் உங்களை ஆதறிப்பார்கள். பெயர் அளவு மட்டுமே உள்ள ஜாதியை ஒழிப்பதன் மூலம் ஏற்ற தாழ்வுகள் தீர்ந்து விடுமா. உலகு அனைத்திற்கும் நன்மையே நினைத்து, நல்லதையே செய்பவர்க்கு கடவுளும் வேண்டாம், ஜாதியும் வேண்டாம், மதமும் தேவை இல்லை. அறத்தின் பால் அனைவரையும் இழுக்க வேண்டும். அதுவே நம் நோக்கமாக இருக்க வேண்டும். லட்சம் கோடி சுருட்டினவன் நம்ம ஜாதிங்க்ரதால, அவன் செஞ்சதை தப்புன்னு சொல்லாதவன் அறத்தினின்று விலகியவன். நல்லதை யார் சொன்னாலும், ஏன் நாய் சொன்னாலும் தான் கேட்கலாம்.

 12. Ram சொல்கிறார்:

  அறத்தில் சிறந்தவன் பெரியவன், சான்றோன், அறம் பற்றாதவன் கேவலமானவன். அறம் தான் அளக்கும் கோல். அதை விடுத்து பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது தவறான வாதம். கால் வயத்து கஞ்சி ஆனாலும், சொந்தமாய் உழைத்து அதனால் வருவதை உண்பவன், கோடி கோடியாய் தவறான பணம் வைத்து கொண்டு மிதப்பவனை காட்டிலும் மிக உயர்ந்தவன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s