Monthly Archives: ஜூன் 2011

சினிமாக்காரர்களுக்கு விருது, பார்வையாளர்களுக்கு தண்டணை

இந்த முறை தமிழ் சினிமாக்கள் நிறைய தேசிய விருதை பெற்று வந்திருக்கிறதே? -சிரா, சென்னை. ஒரு விவாதத்திற்காக, விருதுகள் பெற்ற படங்கள் சிறந்த படங்கள் என்றே ஒத்துக் கொள்வோம். அப்படியானால், மோசமான படங்களை எடுத்தவர்களுக்கு யார் தண்டனை தருவது? * திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’

இந்த படத்துல வர்றா மாதிரியான போலிஸ் ஸ்டேசன்… அடடாடா.. என்ன ஒரு அன்பான, அழகான காவல்துறை? உண்மையிலேயே போலிஸ்காரங்க நல்லவங்க மட்டுமில்ல, அப்பாவிங்க கூடதான். தேவையில்லாம நம்ம ஜனங்கதான் அவுங்கள பாத்து பீதி அடையது. இத்தனைக்கும் ‘அதிகமான கிரிமினல்கள் உள்ள போலிஸ் ஸ்டேசன்’ என்று அந்தப் படத்தல வரும் நீதிபதியே சொல்ற ஊர்லேயே இவ்வளவு அன்பான … Continue reading

Posted in கட்டுரைகள் | 22 பின்னூட்டங்கள்

சிவாஜிக்கு பிறகு வசனம் பேசுவதில் கில்லாடி..

நல்ல ஏற்ற இறக்கத்தோடு, அழுத்தம் கொடுத்து வசனம் பேசுவதில் சிவாஜிக்கு நிகர் அவர்தான். அவருக்குப் பிறகு இன்றைக்கு அப்படி வசனம் பேசுவதில் கில்லாடி என்று யாரை சொல்லுவீர்கள்? -மீனாட்சி இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியனை.

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

எந்தக் காலத்திலும் பெண்களின் மனதை புரிந்த கொள்ளவே முடிவதில்லையே ஏன்? -எஸ்.எம். சிவராமன், சென்னை. பெண்களை வெளிப்படையாக பேசுவதற்கு அனுமதிக்காத ஆணாதிக்க சூழல்தான் அதற்குக் காரணம். காதல், திருமணம், செக்ஸ், நட்பு, ஆண்கள், அரசியல், இலக்கியம், சினிமா, குடும்ப உறவுகள் இவைகள் குறித்து பெண்கள் தங்களின் சொந்தக் கருத்துக்களை, விருப்பு, வெறுப்புகளை சொல்வதைவிட அந்தச் சூழலுக்கு … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 22 பின்னூட்டங்கள்

‘உன் ஜாதி உனக்கு, என் ஜாதி எனக்கு’ – நல்லா ஒழியும் ஜாதி

கடந்த தலைமுறையில், கலப்பு திருமணங்கள் நிறைய நடந்தும் கூட இந்த தலைமுறையில் சாதி உணர்வற்ற வாரிசுகளை பார்ப்பதே அரிதாகஇருக்கிறதே? -சு. தமிழ்மணி, விழுப்புரம். பழைய மாயாஜாலப் படங்களில், ஒரு கொடிய மிருகத்தை, கதாநாயகன் கத்தியால் வெட்டினால், அதன் உடலிருந்து சிந்திய ரத்தம் இன்னும் நான்கு கொடிய மிருகங்களாக விஸ்வரூபம் எடுக்கும். அதுபோல், ஜாதிமறுப்பு என்ற கத்தி கொண்டு, ஜாதி என்கிற கொடியமிருகத்தை … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 12 பின்னூட்டங்கள்

ஆனாலும், அப்பவே.. எனக்கொருடவுட்டு, ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..

‘தமிழினப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி’ என்ற புரட்சித் தலைவி அம்மாவின் வரலாறு காணாத சட்டசபை தீர்மானத்தை பெருமையோடு நினைச்சிக்கிட்டே அப்படியே கண்ணயர்ந்து, ராஜபக்சேவின் கை, கால்களில் விலங்கிட்டு வீதிகளில் இழுத்துவருதுபோல கனவு கண்டுகொண்டிருந்தேன். தெளிந்து பார்க்கிறேன்… ராஜபக்சே அப்படியேதான் இருக்கிறார்; மாறாக, ராஜாஜிதான் அம்மா உருவில் வந்து, ‘ஏன்டா, என்னுடைய குலக்கல்வித் … Continue reading

Posted in கட்டுரைகள் | 13 பின்னூட்டங்கள்

வைரமுத்துவிற்கு வாழ்த்துகள் சொல்லலாமா?

ஆறாவது முறையாக கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது, வாழ்த்துக்கள் சொல்லுங்களேன். -எஸ். பிரேமா, சென்னை. வைரமுத்துவின் சினிமா பாடல்களில் உள்ள சிறப்பான வரிகளை பாராட்டினால், ‘அதற்கு முழு பொறுப்பும் தனக்கே’என்று பெருமையுடன் ஒத்துக்கொண்டு, அந்தப் பாடல்களைப் பற்றி சிலாகித்து பெருமை பொங்க பேசுகிற வைரமுத்து, தான் எழுதிய ஆபாசப் பாடல்களுக்கும், ஆங்கிலம் கலந்து எழுதிய … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 6 பின்னூட்டங்கள்