ஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்

80களில் வந்த சிவாஜி கணேசன் நடித்த சினிமாக்களைப் பற்றி..?

-சி. ராதாகிருஷ்ணன், விருதுநகர்.

70 வதுகளின் இறுதியிலும் 80 களிலும் வந்த தமிழ் சினிமாவில் மிக மோசமான சினிமாக்களை கொடுத்ததில் சிவாஜி கணேசனின் பங்கும் அதிகம். தில்லான மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று பல படங்களில் மிக சிறப்பாக நடித்து ‘நடிகர் திலகம்’ என்று பெயர் பெற்ற அவருக்கு எதிராக, அவரே வைத்துக் கொண்ட சூனியங்களுக்கு பலபெயர்கள் உண்டு. அதில் குறிப்பாக ஒன்றுக்கு பெயர் ‘லாரி டிரைவர் ராஜாகண்ணு.’

அந்தப் படத்தின தயாரிப்பாளர், நடிகர் ஏ.வி.எம். ராஜன்.  தீவிர இந்து மத உணர்வாளராக இருந்த,  முருகன் அடிமை ஏ.வி.எம். ராஜனையே, இயேசுவின் அடிமை ஏ.வி.எம். ராஜனாக மதம் மாற வைத்துவிட்டார் சிவாஜி கணேசன் என்றால்  பார்த்துக் கொள்ளுங்களேன்.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், அவர் அடைந்த நஷ்டத்தால், ‘இனி சிவாஜி கணேசன் இருக்கிற இந்து மதத்தில் நான் இருக்க மாட்டேன்’ என்பதுபோல் மதம் மாறி கிறிஸ்டியனா போயிட்டாரு ஏ.வி.எம்.ராஜன்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மார்ச் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

தேர்தலில்… எம்.ஜி.ஆர், பாணியில் திமுக

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

ஈழத்தமிழர்களும் சினிமாவின் அட்டைக்கத்தி வீரர்களும்

ஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

‘பேராண்மை’ அசலும் நகலும்

பராசக்தி படமும் பிச்சைக்காரர்களும்

கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்

கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

19 Responses to ஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்

 1. ப்ரசன்னா சொல்கிறார்:

  மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதற்கு மிகச் சிறந்த உதாரணம் மேலே நீங்கள் கூறியிருக்கும் பதில். ‘சிவாஜியை ஹீரோவாக போட்டால் போதும், கதை கிடக்கிறது’ என்ற நினைப்பில் ஏ.வி.எம்.ராஜன் படம் எடுத்தால் அதற்கு சிவாஜி என்ன செய்வார். அது மட்டுமில்லாமல் ‘சிவாஜி கணேசன் இருக்கும் மதத்திலேயே நான் இருக்கமாட்டேன்’ என்று ஏ.வி.எம்.ராஜன் உயிர்த்தெழுந்து உங்களிடம் வந்து சொன்னது போலல்லவா பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

 2. Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொல்கிறார்:

  நல்லா இருக்குங்க. !

 3. சேட்டைக்காரன் சொல்கிறார்:

  ஹிஹி! நல்ல வேளை, சிவாஜி இருக்கிற இந்தியாவில் நான் இருக்க மாட்டேன் என்று பாகிஸ்தானுக்கு ஓடாமல் இருந்தாரே ராஜன்! செம காமெடி பண்ணறீங்க! :-))

 4. v.s.v சொல்கிறார்:

  ///ஏ.வி.எம்.ராஜன் உயிர்த்தெழுந்து உங்களிடம் வந்து சொன்னது போலல்லவா பதில் சொல்லியிருக்கிறீர்கள்.///

  ப்ரசன்னா ….ஏ.வி.எம்.ராஜன் உயிரோடுதாங்க இருக்காரு.

 5. k.pathi சொல்கிறார்:

  father!
  pl.forgive these children

 6. arulkumar சொல்கிறார்:

  கிராம மக்கள் ஒன்னும் நீங்கள் விடையளித்த அளவுக்கு முட்டாள் இல்லை. அவர்களுக்கும் 2G ஊழல், விலைவாசி உயர்வு இப்படி எல்லாவற்றையும் பற்றி மிகுந்த விளிபுனர்வுடனே இருக்கிறார்கள்

 7. suvanappiriyan சொல்கிறார்:

  மதம் மாறுவதற்கு இது கூட காரணமாகுமா? 🙂

 8. e.parthiban சொல்கிறார்:

  sometimes you attract attention but you are not worth for it….

 9. பிரதாப் சொல்கிறார்:

  ///arulkumar (15:44:52) :
  கிராம மக்கள் ஒன்னும் நீங்கள் விடையளித்த அளவுக்கு முட்டாள் இல்லை. அவர்களுக்கும் 2G ஊழல், விலைவாசி உயர்வு இப்படி எல்லாவற்றையும் பற்றி மிகுந்த விளிபுனர்வுடனே இருக்கிறார்கள்///

  என்ன சொல்ல வருகிறீர்கள் /arulkumar ?

 10. rameshyam சொல்கிறார்:

  யாருய்யா இவரு. நோபெல் பரிசுக்கு பரிந்துரை செய்வோமா.. ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ…

 11. nilavu சொல்கிறார்:

  http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி – சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரிய‌வில்லையே

 12. Jawahar சொல்கிறார்:

  முக்கால்வாசி சரி. நஷ்டம் வந்ததெல்லாம் சரிதான். அந்த நஷ்டத்தைச் சந்திக்கக் காசு வேண்டுமில்லையா? அது கிடைத்தது! அவர் மட்டுமில்லை, ஜூனியர் பாலைய்யாவின் கதையும் இதேதான்!

  http://kgjawarlal.wordpress.com

 13. nilavu சொல்கிறார்:

  புலிகளை ஆதரித்து பேசலாம் சரி – என்ன பேசுவது தமிழ்தேசிய வாதிகளே ! http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_15.html

 14. vijaygopalswami சொல்கிறார்:

  //மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதற்கு மிகச் சிறந்த உதாரணம் மேலே நீங்கள் கூறியிருக்கும் பதில். ‘சிவாஜியை ஹீரோவாக போட்டால் போதும், கதை கிடக்கிறது’ என்ற நினைப்பில் ஏ.வி.எம்.ராஜன் படம் எடுத்தால் அதற்கு சிவாஜி என்ன செய்வார். அது மட்டுமில்லாமல் ‘சிவாஜி கணேசன் இருக்கும் மதத்திலேயே நான் இருக்கமாட்டேன்’ என்று ஏ.வி.எம்.ராஜன் உயிர்த்தெழுந்து உங்களிடம் வந்து சொன்னது போலல்லவா பதில் சொல்லியிருக்கிறீர்கள்.//

  யோவ், அவரு செத்துட்டாருன்னு உனக்கு யாருய்யா சொன்னாங்க? போன கிறிஸ்மசுக்குக் கூட ஜெயா டிவில “கிறிஸ்துவுக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே”ன்னு பிரசங்கம் பண்ணாருய்யா. உயிரோட இருக்கற மனுஷன அநியாயமா சாவடிச்சிட்டியே!

 15. ப்ரசன்னா சொல்கிறார்:

  //
  யோவ், அவரு செத்துட்டாருன்னு உனக்கு யாருய்யா சொன்னாங்க? போன கிறிஸ்மசுக்குக் கூட ஜெயா டிவில “கிறிஸ்துவுக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே”ன்னு பிரசங்கம் பண்ணாருய்யா. உயிரோட இருக்கற மனுஷன அநியாயமா சாவடிச்சிட்டியே!
  //

  உயிரோட இருக்குற ஆளை சாகடிக்கறதும், ஏற்கனவே செத்த ஆளை திரும்பவும் சாகடிக்கறதும், தமிழ்நாட்ல சகஜம் தானே…

 16. tamilseithi சொல்கிறார்:

  அது என்ன இடதுசாரித்துவத்தையும் கொம்யூனிசியத்தையும் கைக்கொள்பவர்கள் ஏன் தனிய இந்து மதத்தை மட்டும் தாக்குகிறார்கள். இவர்களுக்குத் தெரியும் மதத்தின் படி தமக்கு ஆபத்து இல்லை என்பதுதான். மற்றய பெளத்த கிறீஸ்தவ இஸ்லாம் மதங்களை விமர்சிப்பதில்லை. இடங்கண்ட இடத்தில் மடம் கட்ட முயல்கிறார்கள். எல்லாம் இசங்கள் தான் கின்யூசியம் கிறிஸ்ரியானிசம் புத்திசத் இஸ்லாமிசம் போல் மாக்சிசமும் ஒரு இசம்தான் மதம்தான். இந்த மாக்கிசத்தால் கொலையுண்ட கோடானுகோடி மக்களைக் கணகெடுக்காது இந்துமத்தைத் தாக்க வந்துவிட்டார்கள். எழுதுவதற்கு வேறு எதுவும் இல்லை என்றால் வசதியானது இந்துமதம் என்று தாழிக்கிறீர்களா? எவிஎம் ராஜன் மதம்மாறியதற்கும் சிவாஜிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. உங்கள் கற்பனையை கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்

  Keeran

 17. vijaygopalswami சொல்கிறார்:

  tamilseithi: ஒரு ப்ளாக் வைச்சிருந்தா ஒடனே, அடக்கி வாசி, அவுத்து வுட்டு வாசின்னு அட்வைஸ் குடுத்துடுறதா? மொதல்ல நீங்க அடக்கி வாசிக்கப் பழகிக்கிட்டு வந்து அடுத்தவங்களுக்குக் கத்துக் குடுங்க.

 18. Pingback: மலர்ந்தும் மலராத ‘பாசமலர்’ நாளை முதல்… | வே.மதிமாறன்

 19. sankar சொல்கிறார்:

  ஏ.வி.எம் ராஜன் தன் கஷ்ட நிலையில் தற்கொலை செய்ய முயன்ற போது ஏசுவைப் பற்றி அறிந்து கொண்டார். அது மதமாற்ற மல்ல. அவருக்கு யாரும் பணம் கொடுத்து மதம் மாற்றவில்லை. அப்படி யாரேனும் பணம் கொடுத்திருந்தால் அவர் கிறிஸ்தவ மதத்தில் நிலைத்திருந்திருக்கமாட்டார். சங்கர் சேலம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s