ராகுல்காந்தியின் எளிமையும்; கையேந்திபவன் ஓனரின் வறுமையும்

கையேந்தி பவன் ஓனர்

ராகுல்காந்தி திடீர் என்று இறங்கி ரோட்டு கடைகளில், கையேந்தி பவனில் எல்லாம் சாப்பிட்டு விட்டு செல்கிறாரே?

-சுலைமான்

ஆமாம், பார்சல் வேற வாங்கிட்டுப்போறாராம்.

அதெல்லாம் நல்லாதான் இருக்கு. சாப்பாட்டதுக்கு காசு குடுக்குறாரா? இல்லை அலாட் ஆறுமுகம் மாதிரி எஸ்கேப் ஆயிடுறாரான்னு தெரியலையே.

ஏன்னா, நமக்கெல்லாம் ஒரு கணக்கு இருக்கு. காங்கிரஸ்காரர்களுக்கு வேற கணக்கு, அதாங்க காந்தி கணக்கு.

ஒருத்தரோட எளிமை, அடுத்தவரோட வறுமைக்கு காரணமாயிடக்கூடாது.

அப்படிஆயிட்டா, ‘அய்யையோ… ராகுல்காந்தி வறாராம் கடைய காலிபண்ணுங்கடா…’ என்று கையேந்திபவன்காரர்கள் அலறி ஓட ஆரம்பிச்சிடுவாங்க.

தொடர்புடையவை:

வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

6 Responses to ராகுல்காந்தியின் எளிமையும்; கையேந்திபவன் ஓனரின் வறுமையும்

 1. நா.முத்துநிலவன் சொல்கிறார்:

  “ஒருத்தரோட எளிமைஇ அடுத்தவரோட வறுமைக்கு காரணமாயிடக்கூடாது”

  ஆமாம்.. ஆமாம்.. அதிலென்ன சந்தேகம்?
  உண்மையில் காந்தியாரை ‘எளிமை’யாக வைத்திருக்க நிறைய ‘செலவு’செய்ய வேண்டியிருந்ததாக சரோஜினி நாயுடு சொன்னதாக எனக்குப் படித்த நினைவு.

  ‘ஆட்டுப் பாலுடன் கடலையினை
  அவரும் உண்டே அன்பாக
  நாட்டு விடுதலை எண்ணமொடு
  நல்ல தொண்டு பலசெய்தார்’ – என (அறுசீர் விருத்தத்தில்) ஆரோ பாடிவைத்ததை ஆறாம் வகுப்பில் படித்த ஞாபகம்.

  அதாவது… ‘கிடைக்கிற இடத்தில் கிடைக்கிறதைச் சாப்பிடுவது எளிமை’ என்பது போக,
  ஆங்காங்கே கிடைக்கும் ஆட்டுப் பாலை அவர் குடிக்க மாட்டாராமே! அவர் வரும் தொடர் வண்டிப் பெட்டியிலேயே ஆடும் வரவழைக்கப் பட்டதாக சரோஜினி கூறியதாக நினைவு!

  அப்படியாயின் அந்த ‘எளிமை’, ரொம்ப ‘காஸ்ட்லி’ யாகத்தானே இருந்திருக்கும்?
  அந்த வகையில் பார்த்தால் ராகுல் காந்தி, காந்தியின் வாரிசாக வரத் தகுதியானவர்தான்.
  அன்புடன்,
  நா.முத்துநிலவன்

 2. உயிர்த்தோழி. சொல்கிறார்:

  Puthu thagavalaa irukke?!

 3. வெங்கடேஷ் சொல்கிறார்:

  காங்கிரஸ்காரர்கள் என்றுமே தமிழர்களுக்கு எதிரானவர்கள்,அவர்கள்,வட இந்திய ஆதிக்கம்,தமிழ் நாட்டில் வரவேண்டும் என்று விரும்புபவர்கள்,தமிழனது கலாச்சாரம்,பண்பாடு,மொழி இவற்றை சிதைத்து வட இந்திய மயமாக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம்,
  இன்று உள்ள காங்கிரஸ் சுதந்திர காலத்து காங்கிரஸ் அல்ல,இது இந்திராவால் உருவாக்க பட்ட காங்கிரஸ்,காங்கிரஸ் இயக்கமே தமிழ் விரோத போக்குடையது தான்,அப்படி இருக்க ராகுல் காந்தி மட்டும் எப்படி இருப்பார்,அவர் தந்தை ராஜிவ்காந்தி ஈழத்தமிழனுக்கு செய்த துரோகம் உலகம் அறிந்தது,ராகுல் காந்தி தெருகடையில் டீ சாப்பிட்டார்,இட்லி சாப்பிட்டார் என்று ஏன் ஆச்சரியப்படனும்,சாமானிய இந்தியனும்,தமிழனும் அப்படி தானே தினமும் சாப்பிட்டு கொண்டு இருக்கிறான்,அவர்களை ஏன் ஆச்சரியமாக் பார்க்கவில்லை,ராகுல் ராஜா வீட்டு கன்னுகுட்டி தெருக்கடையில் சாப்பிட்டால் ஆச்சரியம் ,எளிமை.ஆமாம் அவர் மூன்று வேளையும்,தினமும் தெருக்கடைய்லேயே சாப்பிடுகிறார்,என்றாவது ஒரு நாள் அப்படி சாப்பிடுகிறார்,காரணம் அவரிடம் பணம் இல்லையா?காரணம் ஆது வல்ல,மக்களை ஏமாற்ற.பதவிக்கு ஆசைப்படும் தமிழனும்,தில்லியில் ஒசியில் தங்குவதற்கு அரசு பங்களா,இலவச விமான டிக்கட்டுக்கு மயங்கி தமிழனது உரிமையை அடகு வைத்துவிட்ட பல அரசியல் வாதிகளை பயன்படுத்தி தமிழனையும்,தமிழ்நாட்டையும் அடிமைப்படுத்த தான்,தமிழனும் எப்போது வெள்ளைதோலுக்கு மயங்காமலும்,சினிமா மோகத்தில் மூழ்காமல்,தமிழ் என்ற இன உணர்வோடு ஒன்று படுகிறானோ அப்போது இவர்கள் கொட்டம் ஒழியும்,ஆனால்,காங்கிரஸின் கொட்டத்தை ஒழிக்க வந்த இயக்கங்கள் இன்று காங்கிரஸிடமும்,அந்நிய மங்கை சோனியாகாந்தியிடம் மண்டியிட்டு பதவி பிச்சை கேட்டு கொண்டு இருக்கின்றன என்பது தான் வேதனை,ஈழத்தமிழனுக்கு இருக்கிற இன உணர்வு,போராடும் குணம்,ஏன் இந்திய தமிழனுக்கு இல்லாமல் போனது,
  வரும் தேர்தலில்,தி.மு,க தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள்,நீங்கள் தயவு செய்து தலைமை காங்கிரஸுடம் கூட்டு சேர்ந்து விட்டது என்பதற்காக காங்கிரஸுக்கு ஓட்டு போடாதீர்கள்,மிரட்டி வாங்கிய காங்கிரஸ் நிற்கும் அறுபத்தி மூன்று தொகுதிகளிலும் தோல்வியுற செய்யுங்கள்,தமிழன் மானத்தை காப்பற்றுங்கள்,தலைமைக்கு வேண்டுமானால்,பதவி என்ற துண்டு முக்கியமாக இருக்கலாம்,மானம் என்கிற வேட்டியைவிட.,ஆனால் சாதாரண் தி,மு,க தொண்டனும்,தமிழனும் வேட்டி தான் முக்கியம் என்பதை நிருபியுங்கள்,

 4. வெங்கடேஷ் சொல்கிறார்:

  எப்படி நான் பிராமணன் என்று தன்னை நினைத்து கொள்வது தவறோ,எப்படி நான் முதலியார்,நான் செட்டியார்,நான் தேவன் என்ற எண்ணுவது தவ்றோ அதே போல் தான் நான் தலீத என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு மற்றவர்களுடன் முரண்பட்டு,மற்ற சமூகத்தினரின் சில தவறான செயல்களை தனக்கு சாதகமாக பயன்ப்டுத்திக் கொண்டு தலீத அடையாளத்துடன் வாழ்வது,அம்பெத்கரை தவிர மற்ற அனைத்து தலைவர்களையும் குறைச் சொல்லி பேசுவது,இது நல்ல முதிர்ச்சியான பார்வை அல்ல,
  ஒரு நல்ல மனிதன்,சமூகத்திற்கு யாரெல்லாம் நல்லது செய்தார்களோ அவர்களை மதம் ,சாதி கடந்து பாராட்டுவான்,அவன் தான் பகுத்தறிவுள்ள மனிதன்,

 5. Manimegalai சொல்கிறார்:

  ராகுல் காந்தியை ஏளனம் செய்வது போல போற்றி புகழ் பாடும் சர்ச் தோன்றலே ! சிறு மதி மாரனே ! ரொம்ப எழுதாதீர் உங்கள் வேஷம் வெளியே தெரிகிறது ! மிஷனரி குள்ளநரி சிறுமதி மாறன்

 6. Manimegalai சொல்கிறார்:

  “சிங் டு தி கிங்” – அதை கிண்டல் செய்து ஒரு கட்டுரை எழுதலாமே ! செஞ்சோற்று கடன் தடுக்கும் ! நீர் எதிர்க்கும் ஒரே மதம் இந்த நாட்டின் தோன்றிய மதம். பெரியாரும் ஒரு மிஷனரி கைப்பாவை தான் ! நீரும் அவர்தம் வழிதோன்றல்தான் ! சோனியா காந்தியை விமர்சித்து ஒரு கட்டுரை வராதா !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s