Monthly Archives: பிப்ரவரி 2011

காதலர் தின வர்த்தகம்-விஜயகாந்த்-கமல்ஹாசன்-கிரிக்கெட்-தமிழ்சினிமாவின் ஆதிக்கஜாதி உணர்வு

 தங்கம் பிப்ரவரி மாத இதழில் வாசகர்கள் கேள்விகளுக்கு நான் எழுதிய பதில்களின் முழு தொகுப்பு விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பார்? –நா. விசு,  சென்னை. யாரு அவர ‘வெயிட்டா’ கவனிக்குறாங்களோ, அவுங்ககூடதான் கூட்டணி வைப்பாரு. ‘வெயிட்டா’ இருக்கிறவங்கதானே வெயிட்டா கவனிப்பாங்க. திருவிளையாடல் படத்துல  சோமநாத பாகவதரோட தொல்லை தாங்காம, ‘இது என்ன மதுரைக்கு வந்த சோதனை…’ … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

உலகத் தமிழ் மக்கள் அரங்கம் நடத்தும் கருத்தரங்கம்

ஆர்குட்டில் உலகதமிழ் மக்கள் அரங்கம் என்ற பெயரில் நண்பர்கள் இணைந்து நடத்தும் கருத்தரங்கத்திற்கு அதன் தலைவர் சசிகுமார் அழைப்பு விடுத்துள்ளார். ஆர்குட்டில் அவர் வெளிட்டதை இங்கு வெளியீடுகிறேன். * உலகத் தமிழ் மக்கள் அரங்க தோழர்களுக்கு வணக்கம்! நம் அரங்கம் வெறும் வெற்று பேச்சுக்களிலும் வெற்று விவாதங்களிலும் பங்கேற்கும் அரங்கமாக இல்லாமல், நடைமுறையில் சமூக அநீதிகளுக்கெதிராக … Continue reading

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?

தேவர் மகன், சின்னக் கவுண்டர் போன்று சாதி பெயர்களிலும் ஆதிக்க சாதிகளை ஆதரித்தும் படம் வந்திருக்கிறதே? –கு. அர்சுனன், விழுப்புரம். அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிக்கிற அவமானப்படுத்துகிற சினிமாக்களாகவும் அவைகள் இருக்கின்றன. இதுபோன்ற மோசடிகளை அந்த குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, முற்போக்காளர்களாக அறியப்படுகிற இயக்குநர்களும் செய்திருக்கிறார்கள். பகுத்தறிவு மற்றும் இஸ்லாமியர்களை முன்னிலைப்படுத்திய … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 16 பின்னூட்டங்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

உலகக்கோப்பை கிரிக்கெட்டின் துவக்க விழா மிக பிரம்மாண்டமாக பங்களாதேசில் நடைபெற்றது. ‘பாதிநாள் பட்டினி, மீதி நாள் ஒருவேளை’ என்று வாழுகிற பரிதாபத்திற்குரிய நாடு பங்களாதேஷ். இந்தியாவையே பணக்கார நாடாக பார்க்கும் பங்களாதேசுக்கு இது தேவையா? இந்த வெட்டி வேலைக்காக தலைநகர் டாக்காவை சுத்தப்படுத்த 100 மில்லியன் டாலர் பணத்தைச் செலவிட்டிருக்கிறது பங்களாதேஷ் அரசு. சுத்தப்படுத்துவது என்பது … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

‘எம்.எஸ்.வி., இளையராஜாப்போல் தேவிஸ்ரீ பிரசாத்’; கமல் பெருமிதம் – இது சும்மா தமாசு

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடத்தை தேவிஸ்ரீ பிரசாத் நிரப்புவார் என்று கமல்ஹாசன் பேசியுள்ளாரே? –டி. பிட்டர், பொன்னேரி. அது கமல்ஹாசனின் விரும்பமாக இருக்கலாம். ஆனால் அதை தேவிஸ்ரீ பிரசாத்தே நம்ப மாட்டார். எல்லோரும்  கமலை ‘உலக நாயகன்’னு சொல்றதுபோல ‘இது சும்மா தமாசு’ என்று என்று நினைத்திருப்பார் தேவிஸ்ரீ. சமீபத்தில் வெளியான கமலுடைய  ‘மன்மதன் அம்பு’ படத்துல … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

புரட்சிக்கலைஞர் – ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை’

விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பார்? –நா. விசு, சென்னை. யாரு அவர ‘வெயிட்டா’ கவனிக்குறாங்களோ, அவுங்ககூடதான் கூட்டணி வைப்பாரு. ‘வெயிட்டா’ இருக்கிறவங்கதானே வெயிட்டா கவனிப்பாங்க. திருவிளையாடல் படத்துல  சோமநாத பாகவதரோட தொல்லை தாங்காம, ‘இது என்ன மதுரைக்கு வந்த சோதனை…’ என்று டி.ஆர். மகாலிங்கம் புலம்புவாரு. அதுபோல்,  விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சி, ‘இது என்ன தமிழ்நாட்டுக்கு … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

இளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்

காதலர் தினம் பற்றி? –கல்பனா, பாளையங்கோட்டை. காதலர்களுக்கு என்று ஒரே ஒரு நாளுதானா? உண்மையான காதலர்களுக்கு ஒவ்வொருநாளும் காதலர் தினம்தான். இது வர்த்தக தினம். வர்த்தகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, பல பன்னாட்டுக் கம்பெனிகள், தங்கள் பொருட்களை விற்பதற்கு, வருடத்தில் பலநாட்களுக்கு, ‘அம்மா தினம், அப்பா தினம், நண்பர்கள் தினம்’  என்று பெயர் வைத்து, அந்த … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 6 பின்னூட்டங்கள்