டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி

எந்த அமைப்பும் வெளியிட முயற்சிகூட செய்யாத, அம்பேத்கர் திரைப்படத்தை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வெளியிடுகிறதே?

-ந. செந்தில்

ஆமாம் செந்தில், கொஞ்ச நாளா வானம் மேக மூட்டமா இருக்கு. சில நேரத்துல நல்லா மழையும் பெய்யுது.

பாரதியின் பிடியில் இருந்து மெல்ல விலகி, பெரியாருக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் தமுஎச முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வெளிவராமல் இருக்க நடந்த சதிகளை  நண்பர்களோடு இணைந்து அம்பலப்படுத்தினோம். தமுசஎசவின் இந்த முயற்சிக்கு ஏதோ ஒருவகையில் நாங்களும் காரணமாக இருப்போம் என்று நம்புகிறோம்.

டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளிகொண்டுவர வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் சத்தியசந்திரனுக்கும், தமிழகம் முழுவதும் 100 தியேட்டர்களில் வெளியிடுவதாக அறிவித்திருக்கிற தமுஎசவிற்கும், அதை வெளியிடுவதற்காக ஆகும் செலவு தொகையில் ரூ. 6 லட்சத்தை தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்ட மரியாதைக்குரிய எடிட்டர் லெனினுக்கும் – அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிடுவதற்காக முயற்சி செய்த எங்கள் குழு சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் சினிமாவில்  இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் இருக்கிற பல ‘முற்போக்காளர்கள்’ அம்பேத்கர் திரைப்படத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தங்களை ஜாதி இந்துக்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எடிட்டர் லெனின் அம்பேத்கர் பட வெளியீட்டில் தன் பங்களிப்பின் மூலமாக அவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார்.

எடிட்டர் லெனின்

அதுபோலவே அண்ணல் அம்பேத்கருக்கு முக்கியத்துவம் தரும் இந்த மாற்றத்திற்காக தமுஎசவிற்கும் அதன் பொதுச் செயலாளர் தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுபோலவே, ‘டாக்டர் அம்பேத்கரை ஜாதிகளுக்கு எதிரான குறியீடாக அடையாளப்படுத்தவேண்டும். குறிப்பாக அவரை தலித் அல்லதாவர்கள் தங்கள் தலைவராக கருதவேண்டும்’ என்று யாருமே அணியாத அம்பேத்கர் டி சர்ட்டை நாங்கள் கொண்டு வந்தோம். அதை ஓரளவிற்கு தலித் அல்லாத இளைஞர்களை அணியவும் வைத்தோம்.

தமுஎச போன்ற அமைப்புகள் முயற்சி செய்தால் அம்பேத்கர் டி சர்ட் அணிவதை இன்னும் பரவலாக்க முடியும். அம்பேத்கர் டி சர்ட்டை தமுஎச சார்பாகவே கொண்டு வந்து, தனது சங்கத் தோழர்கள் அதை அணிவதை கட்டயாப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மற்றப்படி, அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.

தொடர்புடையவை:

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி
*
ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?
*
60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…
*
டாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்?
*
‘அம்பேத்கர் திரைப்படத்தை உடனடியாக வெளியிடு’-பெரியார் தொண்டர்களின் போராட்டம்
*
‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’
This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

21 Responses to டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி

 1. ந.செந்தில் சொல்கிறார்:

  ‘அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?’

  என்ற தலைப்பில் உண்மைத்தமிழன் சிறப்பான கட்டுரையை எழுதியிருக்கிறார். அவசியம் அனைவரும் அதை படிக்கவும்

  http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_29.html

 2. yaathirigan சொல்கிறார்:

  >வெளிகொண்டுவர வழக்குத்< is there any more details on this ?

 3. கார்மேகம் சொல்கிறார்:

  எல்லோருக்கும் நன்றி

 4. மணிவண்ணன் சொல்கிறார்:

  அம்பேத்கர் படத்தை வெற்றிபடமாக்கவேண்டும்

 5. anu சொல்கிறார்:

  Very nice flow.Good article

 6. roshaniee சொல்கிறார்:

  பகிர்வுக்கு நன்றி

 7. rajan சொல்கிறார்:

  அன்பும் மகிழ்ச்சியும் என் அருமை தோழர்களுக்கு.
  வெல்க தமிழம் .

 8. Nithichellam சொல்கிறார்:

  Nalla visayam nandri தமுஎசவி kku. Pala tadaikal kadanthu varum intha mega talaivar thiraipadam veri pera nam anaivarum muyachi yedhuka vendam….

 9. s.karuna சொல்கிறார்:

  அம்பேத்கர் டீ சர்ட் மாதிரிகள் அனுப்பமுடியுமா..என்ன விலை..

  எஸ்.கருணா, தமுஎகச,திருவண்ணாமலை

 10. Nellai srithar சொல்கிறார்:

  எல்லோருக்கும் நன்றி…
  அம்பேத்கர் படத்தை வெற்றிபடமாக்கவேண்டும்.
  தமிழ் சினிமாவில் இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் இருக்கிற பல ‘முற்போக்காளர்கள்’ அம்பேத்கர் திரைப்படத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தங்களை ஜாதி இந்துக்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எடிட்டர் லெனின் அம்பேத்கர் பட வெளியீட்டில் தன் பங்களிப்பின் மூலமாக அவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார்.
  srithar(Vizhithezhu iyakkam)
  Mumbai

 11. காசிமேடு மன்னாரு சொல்கிறார்:

  தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்!
  அறிவர் அம்பேத்கர் அவர்களின் திரைப்படத்தை வெளிக்கொணர பாடுகள் பல அனுபவித்த எம் சகோதரர் அனைவருக்கும் பாராட்டுதலுடன் நன்றியையும் வணக்கத்தையும் கூறிக்கொள்கிறேன். அண்ணல் அம்பேத்கர் திரைப்படத்தை இதுவரைக் என் போன்றவர்களால் காணக் கிடைக்காதலால் அதுபற்றி மேலோட்டமாகவே சில கருத்துக்களை எம் சகோதரர்களூடன் பகிர்கிறேன். முதலில், அத்திரைப்படம் ஒரு வரலாற்று ஆவணம் என்ற நிலையிலிருந்து மாறி, பரந்து பட்ட மக்கள் விரும்பிக் காணக்கூடிய அளவுக்கு அமைய வெண்டும். ஆனால், அதனின் மூலம் சிதையாமலும், பார்வையாளர்களைத் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் அமரவைக்கக் கூடிய அளவில் இருக்கும் போதுதான் அத்திரைப்படம் வெற்றியடைய முடியும், அதன்மூலம் அண்ணலின் கருத்துக்களூம் மக்களைச் சென்றடைய முடியும். அப்போதுதான் அத்திரைப்படத்தின் நோக்கமே நிறைவேறும். மாறாக, ஒரு ஆவணப் படம் போல அதுவும் அமையும் போதுதான் நமது நோக்கமும் அண்ணலின் கருத்துக்களும் மக்களைச் சென்றடையாமல் போய்விடக்கூடிய பிழையும் ஏற்பட்டு விடும்.
  தந்தை பெரியார் அவர்களை பிற்பட்ட மக்களின் தலைவர் என்றும், அண்ணல் அம்பேத்கர் அவர்களை தாழ்த்தப் பட்ட மக்களின் தலைவர் என்கின்ற குறுகிய வட்டத்துக்குள் அடைத்து அவர்களின் புரட்சிகரக் கருத்துக்களை பூசையறையில் பூட்ட நடக்கும் சதிக்கு பெரியாரிய அம்பேத்கரியவாதிகளே சிலவேளையில் பலியாகி துரோகம் செய்கிறார்கள். என்னுடைய தலைவர் என்று பகிரங்கமாக தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப் பட்டவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்..! அய்யாவும், அண்ணலும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதை நினைவில் இருத்தினாலே, இதுபோன்ற தவறுகளுக்கும், துரோகங்களூக்கும் தப்பிக்கலாம்.
  காசிமேடு மன்னாரு.
  கடவுள்கள் கந்தலாகிறார்கள் : kasimedumannaru789wordpress.com

 12. மா. தமிழ்ப்பரிதி சொல்கிறார்:

  அண்ணல் அம்பேத்கர் திரைப்படத்தை வெளியிட உழைத்த நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி. சாதி வெறி ஒழிப்போம்! சமத்துவம் ஓங்கட்டும்!

  மா. தமிழ்ப்பரிதி
  http://www.thamizhagam.net/

 13. mugavaikaran சொல்கிறார்:

  மனம் மாற்றம், மதம் மாற்றம், அம்பேத்கர் சொன்னாரம் அடிமை இல்லாமல் இருக்க விரும்பினால் உன் மதத்தை மாற்றிக்கொள் என்று.. எத்தனை சகோதரர்கள் இதனை ஏற்று பின்பற்றுகின்றனர்? அடிமை இல்லாத மதம் எது என்று தேடுங்கள் ..விடை கிடைக்கும்..

 14. வெங்கடேஷ் சொல்கிறார்:

  ஆமாம் பிராமணர்களிடம் உள்ள சாதி வெறியை ஒழிப்போம்.ஆனால் அந்த சாதி வெறியை தலீத் மற்று பிற்படுத்தபட்ட தாழ்த்தபட்ட மக்களிடம் வளர்ப்போம்,இது தான் சமத்துவமா?

 15. வெங்கடேஷ் சொல்கிறார்:

  மதம் மாறுவதால் சாதி பிரசசனை தீர்ந்துவிடாது,அப்படி மதம் மாறியதால் இன்று தமிழன் கிறிஸ்த்வனாக,இஸ்லாமியனாக மாறியதால் அவன் தமிழ் உணர்வையும்,தாய் நாட்டு பற்றையும் இழந்து நிற்கிறான்,இஸ்லாமியனாக மாறியதால்,உருது தான் தெய்வ மொழி என்று உருதுவில் ஓதுகிறான்,கிறிஸ்துவன் ரோமுக்கு தலை வணங்கி கொண்டிருக்கிறான்,

  தமிழ் இனம் அழிவதற்கு நல்ல வழி மத மாற்றத்தை வளர்ப்பது,
  சாதி பிரச்சனைக்கு தீர்வு மதம் மாற்றம் அல்ல,

 16. வெங்கடேஷ் சொல்கிறார்:

  சாதி சார்ந்து சிந்திப்பது முற்போக்கு சிந்தனையாகாது,மனிதனாக எந்த சார்பும் இல்லாமல் சிந்திப்பதே முற்போக்கு சிந்தனை,தங்களது கட்டுரைகள் பிற்போக்கு சிந்தனையின் வெளிப்பாடுகள் தான்.

 17. வெங்கடேஷ் சொல்கிறார்:

  அம்பெத்கர் டீ சர்ட் அணிவோம்,அம்மானிதரின் டீ சர்ட் அணிவது பெர்ருமை,உண்மையில் உலகில் உள்ள அனைத்து உன்னதமான தலைவர்களின் படம் பொறித்த டீ சர்ட் அணியலாம்,
  சேவின் டீ சர்ட்,மார்ட்டின் லூதர் கிங் டீ சர்ட்,அப்ரகாம் லிங்கனின் டீ சர்ட்,காந்தியின் டீ சர்ட்,மண்டேலாவின் டீ சர்ட் இவற்றையும் தமிழன் அணியலாம்,
  தமிழன் மொழி,இனம்,சாதி,மதம் கடந்து நல்லவர்களை மதிக்க கூடியவன்,
  ஆனால் தமிழன் தான் தமிழன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்பட கூட தலைவர்கள் இருக்கிறார்கள்,ஆங்கிலேயனை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி,சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய மகாகவி பாரதி,புரட்சி தமிழன் வாஞ்சிநாதன்,வீரபாண்டிய கட்டபொம்மன்,ஏழைகளும் படிக்க வேண்டும் பசியால் அவர்கள் படிப்பு தடைப்பட கூடாது என்று எண்ணிய கர்ம வீரர் காமராஜர்,சாதி மற்று மூட நம்பிக்கையை எதிர்த்து தள்ளாத வயதிலும் இறுதி வரை பிரச்சாரம் செய்த தந்தை பெரியார்,கொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சம்ஹாரம் நிசம் என்று சங்கே முழங்கு என்று முழங்கிய பாரதிதாசன்,காடு விளைந்திருக்கு மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம் என்று சோசலிசம் பாடிய திரு.வி.க,இப்ப தமிழன் பெருமைப்பட்ட கூடிய தலைவர்கள் இருக்கிறார்கள்.இவர்களின் டீ சர்ட் அணியும் போது தான் தமிழன் உண்மையில் பெருமைப்பட வேண்டும்,
  இன்று நம் சம காலத்தில் வாழ்ந்த ,தமிழரின் உரிமைக்காக போராடிய நம் தேசிய தலைவர் திரு பிரபாகரன் பட டீ சர்ட் அணிவதே மேன்மையானது,உயர்வானது.
  தமிழன் சாதி பார்க்காமல்,மதம் பார்க்காமல் நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வுடன் தமிழனின்பெருமை உலகம் அறியும் வண்ணம் நம் தேசிய தலைவரின் டீ சர்ட் அணிவோம்,தமிழ் உணர்வு காப்போம்,தமிழர் உரிமைக்கு போராடுவோம்.

 18. m.selvarangan சொல்கிறார்:

  very thanks for your work

 19. kathir nilavan சொல்கிறார்:

  dvd kidaikkuma. nanga vasikkira paguthikkellam thiraippadam varuvatharkkana vaippe illai.

 20. நா.முத்துநிலவன் சொல்கிறார்:

  வணக்கம்
  “அம்பேத்கர் டீசர்ட்” நல்ல யோசனையாகப் படுகிறது. இதை இளைஞர்களிடம் கொண்டுசெல்லத் திட்டமிடுவோம். தோழர் – திருவண்ணாமலை- கருணாவின் கேள்விக்கு நீங்கள் தரும் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
  தங்கள் வலைப்பூவை எனக்கு அறிமுகப்படுத்திய கவிஞர் புதியமாதவிக்கு நன்றி.
  தோழமையுடன்,
  நா.முத்துநிலவன்
  புதுக்கோட்டை-622 004

 21. V. NARENDRA KUMAR சொல்கிறார்:

  Ambedkar avargal Islam patri sonna karuthukkal padathil idam peramal ponatharkku kaaranam thevaillai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s