வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரும் போது தங்களை பிற்படுத்தப்பட்டவர்களாக உணருகிறார்களா ஆதிக்கசாதியாக உணருகிறார்களா?

-மதியவன் இரும்பொறை

எல்லா ஜாதிக்காரர்களுமே தங்களுக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்களின் ஆதி்க்கத்தை எதிர்ப்பதைவிடவும் தங்களுக்கு கீழ் உள்ள ஜாதி்க்காரர்கள், மேல் நிலைக்கு வராமல் இருப்பதை தடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள், விரும்புகிறார்கள். இதுதான் ஜாதி உணர்வு செயல்படும் நிலை.

அநேகமாக, அருந்ததிய சமூகத்தை தவிர எல்லா ஜாதிய உணர்வாளர்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது.

‘ஜாதிய அமைப்பு, உயர்வு x தாழ்வு என்கிற இரண்டே நிலையில் இருந்து இருக்குமானால் அது எப்போதோ தூக்கியெறியப்பட்டிருக்கும். ஆனால், அது ஒருவருக்குமேல் ஒருவர் என்கிற படிநிலை அமைப்பில் இருப்பதால்தான் இத்தனை ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது’ என்று டாக்டர் அம்பேத்கர் சொல்வார்.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களுககுள்ளே உள்ள நாவிதர், மீனவர், குயவர், வண்ணார், வன்னியர், கள்ளர் போன்ற மிக பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களை;  பிள்ளை, செட்டி, முதலி இன்னும் இவைகளைப் போல் உள்ள ‘பிற்படுத்தப்பட்ட’ அல்லது பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்கள் இழிவானவர்களாக தங்களை விட மட்டமானவர்களாக கருதுகிறார்கள்.

ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களான அருந்ததியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த  நாவிதர், மீனவர், குயவர், வண்ணார், வன்னியர், கள்ளர்  போன்ற உழைக்கும் மக்களை இழிவானவர்களாகவோ, தங்களைவிட கீழானவர்களாகவோ நினைப்பதில்லை. அவர்களை மரியாதையாகத்தான் நினைக்கிறார்கள்.

ஆனால், தங்களை மட்டமானவர்களாக நினைக்கும் ஆதிக்க ஜாதி பிற்படுத்தப்பட்டவர்களிடம் சுமூகமாக நடந்துகொள்ளும் மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜாதிய உணர்வாளர்கள்; தங்களை மதிக்கும் தாழ்த்தப்பட்டவர்களைதான் இழிவானவர்களாக கருதுகிறார்கள். அவர்களின் வளர்ச்சியில் வெறுப்புறுகிறார்கள்.

தங்களை இழிவானவர்களாக கருதும் ஆதிக்க ஜாதியர்களோடு சேர்ந்து  தங்களை பிற்படுத்தப்பட்டவர்களாக அடையாளம் படுத்திக்கொள்ளும்  நாவிதர், மீனவர், குயவர், வண்ணார், வன்னியர், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஜாதிய உணர்வாளர்கள்; தங்களை மதிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைத்து அடையாளப்படுத்திக்கொள்வதில்லை.

இதுதான் ஜாதிய உணர்வுநிலை. இந்த நிலையின் காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்ட ஜாதிக்காரர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையும் நீக்க கோருகிறார்கள்.

தொடர்புடையவை:

‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’

அம்பேத்கர் என்னும் ஆபத்து

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்
This entry was posted in கேள்வி - பதில்கள். Bookmark the permalink.

16 Responses to வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

 1. அருண்முல்லை சொல்கிறார்:

  ஒருசிறு திருத்தம், கீழ்சாதிக்காரர்கள் மேலே வருவதை
  உயர்சதிக்காரர்கள் தடுக்கிறார்கள் என்பதில்லை, “உன்னை
  உயர்த்திக்கொண்டு என்னிடம் வா”என்கிறார்கள். இவர்கள்
  தங்களை உயர்த்திக் கொள்ள இவர்கள் இனமே தடையாக
  இருக்கிறார்கள்.என்பதே சரி.
  அம்பேத்கார் உயர்சாதிக்காரர்களால் மதிக்கப்பட்டது தன்
  சொந்தமுயற்சியால் தன்னை உயர்த்திக்கொண்டபின்பே!

 2. கவிஞர் இரா.இரவி சொல்கிறார்:

  nandru

  இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
  நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி
  http://www.eraeravi.com
  http://www.kavimalar.com
  eraeravi.wordpress.com
  eraeravi.blogspot.com

 3. saavanna.magendran சொல்கிறார்:

  சரியாய் சொல்லப்பட்ட விசயம்… ஆதிக்கசக்தியினர் அகதிலிருக்கும் அடக்குமுறை குணம், பிள்ளை வளர்ப்பு, பள்ளி பாடம், சமுக அமைப்பு, படிப்பு போன்றவற்றிலிருக்கும் குறைபாடுகள்தான் இதிகசகாலங்களிருந்து இன்னும் வளர்க்கிறது சமத்துவமின்மையை ….

  “அவரும் அவனும்” எனும் தலைப்பில் என் குலைப்பு இங்கே ..

  http://kasadathapara.blogspot.com/2010/10/blog-post.html

 4. மதியவன் சொல்கிறார்:

  தாழ்த்தப்பட்ட சாதிகளில் சிலர் தங்களை தனியாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர் …
  தாங்கள் மற்ற தாழ்த்தப்பட்ட சாதிகளை விட உயர்வானவர்கள் என்பதும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து விலகிவிட்டால் தங்கள் நிலை மாறிவிடும் என்பதும் இவர்களின் நினைப்பு….
  பிற்படுத்தப்பட்ட சாதிகளான நாவிதர்,வண்ணார், போன்ற சாதிகளை இழிவாக நடத்தும் போக்கு தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் உள்ளது… இது அவர்கள் பார்க்க மறந்த அல்லது மறுக்கும் மிகப்பெரிய ஓட்டை…

  சில இடங்களில்
  நாவிதர்,வண்ணார், சாதிகள் தங்கள் பங்கிற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் முடிதிருத்த மறுப்பது , துவைக்க மறுப்பது போன்ற செயல்களை செய்தவண்ணம்தான் இருக்கின்றனர்… இருந்தாலும் யாரும் இவர்களை ஏற்றுக்கொண்டபாடில்லை பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள்ளேயே தள்ளிவக்கப்பட்டுளனர் என்பதுதான் பரிதாபமான உண்மை…
  -தோழமையுடன் மதியவன்

 5. mrradha சொல்கிறார்:

  தோழர், பதிவுகளை ஃபேஸ்புக், மற்றும் ட்வீட்டர் தளங்களில் இணைப்பதற்கான பொத்தான்களை வேர்ட்பிரஸ்சின் மூலமாகவே உங்கள் பதிவுகளின் கீழ் கொண்டு வர முடியும். அவற்றை இணைத்தால் நீங்கள் மட்டுமல்லாது உங்கள் வாசகர்களும் பதிவுகளை அவர்களுடைய நண்பர்களுடன் பகிர முடியும்.

 6. Pingback: ‘புலிக்கு பயந்தவன் எம் மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி « வே.மதிமாறன்

 7. Pingback: தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா? « வே.மத

 8. Pingback: செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா? இதுதாண்டா ஜாதி « வே.மதிமாறன்

 9. Pingback: அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள் &laq

 10. Pingback: தேர்தல் கூட்டணி முடிவாகிவிட்டது! « வே.மதிமாறன்

 11. Pingback: இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா? | வே.மதிமாறன்

 12. Pingback: தேர்தல் கூட்டணி: மதவாதக் கட்சிக்கு எதிர்ப்பு ஜாதியக் கட்சிக்கு ஆதரவா? | வே.மதிமாறன்

 13. ச,கதிரவன் சொல்கிறார்:

  தோழர் வணக்கம்

  இடஒதுக்கீடு குறித்து பொதுவுடமை தோழர் ஒருவரிடம் விவாதித்தபோது, அவரின் கருத்து இவ்வாறகா இருந்தது, பொதுவாக இடஒதுக்கீடு என்றாலே அது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வெறுப்பு கொள்கிற நிலை உயிர்சாதியினரிடம் உள்ள பொதுபுத்தி அப்படி பட்ட நிலையில் இடஒதுக்கீடு பொதுவுடமை கருத்தியல் கொண்ட இவரிடம் இவ்வாறாக வெளிப்பட்டது,

  இடஒதுக்கீடு என்பது அம்பேத்காரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே கொண்டுவரப்ட்டது, பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் இடஒதுக்கீட்டின் மூலம் எதவும் செய்யவில்லை,

  மண்டல் கமிஷன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வந்தது என்கிறார்,

  இது எந்தளவிற்கு சரியா, இதுதான் தலித் மக்கள் இடஒதுக்கீட்டில் மேலே வந்தால் அவர்கள் திறன் அற்றவர்கள் என்று அவர்கள் மீது இடஒதுக்கீட்டின் மீது வெறுப்பை உமிழ்கின்ற காரணமா,

  அல்லது அம்பேத்கர் செய்தது சரியா, என்பதனை தெளிபடுத்த இயலுமா தோழர்

 14. muthu சொல்கிறார்:

  ஆதிக்க ஜாதி பறையர்கள், ஒருபோதும் தங்களுக்கு கீழ் உள்ள மக்களிடம் வன்கொடுமை எது செய்ததே இல்லையா?
  இதே ஆதிக்க ஜாதி வெறிகொண்ட பறையர்கள், தங்களுக்கு கீழ் உள்ள அருந்ததியர்களை, தாழ்த்திதானே தங்களை உயர்த்திக்கொண்டு வருகின்றனர். ஒன்றா / இரண்டா இந்த ஆதிக்க ஜாதி பறையர்களின் வன்கொடுமைகள், எண்ணிலடங்கா?
  இப்படிப்பட்ட சூழ்நிலையில் பறையர்களை ஜாதிவேரியனே அல்ல என்பது, மிக மோசமான விளைவுகளை தரும். வருணாசிரமத்தின் படியும், அயோக்கியதாச பறையரின் தீவிர இந்துத்துவாவின் கொள்கைப் படியும், “ஒருபோதும் சக்கிலியர்கள் தனக்கு (பறையர்களுக்கு) சமமாக வந்துவிட கூடாது” என்பதில் மிக தீவிரமாக இருக்கும் பறையர்கள், மற்றவர்களை தாழ்த்தி பார்ப்பதில்லையாம். என்னவொரு புது கதை?
  இந்த எழுத்துக்கள், பெரியாரியாயமல்ல………..பறையரினமாகவே கருதலாம். இதற்கு மதிமாறன் போன்றவர்கள் நேரடியாக கட்டப் பஞ்சாயத்து செய்யும் பறையர் கட்சியான வி.சி.க சேர்ந்து கொள்ளலாமே.
  ஏன் இப்படி, பெரியாரியத்தை மிக மோசமான பாதியில் கொண்டு செல்கிறார்? பார்ப்பன பறையர்களின் ருசி கண்டு விட்டாரோ.
  இப்படி பேசிய மார்க்ஸ் அவர்களுக்கு பெரிய பெரிய விருதுகள் கொடுக்கப்பட்டது (காரணம்: வி.சி.க பறையர்கள் செய்யும் அட்டூழியங்களை மறைக்க) அதுபோல் கூடிய சீக்கிரம் அண்ணன் மதிமாறன் அவர்களுக்கும் பெரிய விருது காத்திருக்கிறது.

 15. arun karthik சொல்கிறார்:

  dalits are not all good like you said i ve sen arunthathiyar people mistreating , naavithar, dhobhi nad prayar communities , i ‘ ve heard similar attitudes from pallar communitiy people also .( both the stories are from trinelveli and nagarkovil areas ) so i think this is a general communal mentality

 16. muthu சொல்கிறார்:

  அம்பேத்கர் பெரியார் கொள்கைகளை கடைபிடிப்பவன் என்று சொல்லிகொண்டு அலையும் தெருமாமாவலவனும் அதே வந்கொடுமைகளைதான் செய்கிறார். இதை நீ என்ன தட்டி கேட்டாயா? இல்லையே? கொலை செய்தானே, தன பறையர் ஜாதி கட்சியான் வி.சி.க வின் ரௌடி கும்பலுடன். அதுமட்டுமா கொள்ளை, கொலை, கற்பழிப்பு, வன்கொடுமைகள், ஜாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக கௌரவ கொலைகள், அராஜகங்கள் என்று எண்ணிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் கேட்டால் கண்டிக்கப்பட வேண்டியது என்று கூறி மறைக்கத்தான் செய்வனரே தவிர, ஒருபோதும் அருந்ததியருக்கான உரிமைகளை இந்த ஆதிக்க ஜாதி வி.சி.க பறையர்கள் நமக்காக போராட போவதில்லை. குள்ளநரிகளின் வேடத்தை தலித் என்ற போர்வையில் பல ஆண்டுகளாக பார்க்கிறோம். தலித் என்ற சகோதரன்தான் பல்வேறு அராஜகங்களை ஏற்படுத்துகிறான் அருந்ததியர்கள் மீது. இதனை எழுத்தாமல் இருந்தால் விருதுகள் பல—– பறையர்களை பற்றி புகழ்ந்து பேசினால் மாலைகள் பல. இப்படிதான் மார்க்சியம் பேசிய மார்க்ஸ் அந்தோணிசாமியும் பல விருதுகளை குதித்து தன் பறையரின போக்கை காட்டிகொண்டார். அதன் வரிசையில் மதிமாறன் போன்ற பறையரினவாதிகள் பெரியாரியவாதிகள் என்ற போர்வையில்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s