‘இவர்களை வைத்து சம்பாதிக்கிறார்களே!’ தினத்தந்தியின் ஆதங்கம்

தமிழ்நாடு உட்பட்ட தென் மாநிலங்களில் வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், குழந்தைகளும் குறைந்த கூலிக்கு சுரண்டப்பட்டு துன்புறுத்தப் படுவதை மிகுந்த அக்கறையோடு அனுகியிருக்கிறது தினத்தந்தியின் இந்த தலையங்கம். ஒரு வெகுஜன பத்திரிகையில் இப்படி பொறுப்போடு தலையங்கம் வருவது அரிது. தினத்தந்தி தலையங்கத்தை கவுரவிக்கும் வகையில் அதை இங்கு பிரசுரிக்கிறேன்.

***

டகிழுக்கு மாநிலங்களைச் சேர்ந்த் ஏராளமான இளைஞர்களும், பெண்களும், தென் மாநிலங்களுக்கு அலை அலையாக வந்து, கட்டிட வேலை, ரோடு போடும் வேலை போன்ற கூலி வேலை செய்வதை இப்போது பெருமளவில் பார்க்க முடிகிறது. அந்தப் பகுதிகளில் நிலவும் ஏழ்மையையும், வேலை இல்லாத் திண்டாடத்தையும் பயன்படுத்தி, தரகர்கள் மூலம் குறைந்தக் கூலிக்கு இங்கே வேலைக்கு வருகிறார்கள்.

இதுவே மிகுந்த கவலை அளிப்பதாக இருந்தாலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கிறித்துவ போதகர்கள், பாஸ்டர்கள் மற்றும் அமைப்புகள் நடத்தும் ஆதரவற்றோர் விடுதிகள், ஏழை குழந்தைகளுக்கான விடுதிகளிலும் மணிப்பூர், அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சின்ன சிறு குழந்தைகள் தங்கியிருப்பதை பார்க்கும்போது, ரத்தக்கண்ணீர் வடிக்கத்தான் தோன்றுகிறது.

இதைப் பற்றி உச்சநீதி மன்றத்தில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு, தேசிய கமிஷன் ஒரு திடுக்கிடும் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள கிறித்துவ கோவில்களுக்கு ஏழை குழந்தைகளை பராமரிக்கிறோம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு கருணை காட்டுகிறோம் என்று படம் பிடித்து அனுப்பினால், அங்குள்ளவர்கள் மனம் நெகிழ்ந்து ஏராளமான டாலர்களை நன்கொடையாக அளிக்கிறார்கள். இவ்வாறு வெளிநாட்டுக் கிறிஸ்தவ கோவில்களில் இருந்து, பணம் பெறுவதற்காக இங்குள்ள கிறிஸ்த்துவ அமைப்புகள் சில,  ஏமாற்றி இத்தகைய இழிவான செயல்களில் இறங்குவதை பார்க்கும்போது, நெஞ்சம் பதறுகிறது.

எல்லா அமைப்புகளையும் குறை சொல்ல முடியாது. சில சபைகள் நடத்தும் விடுதிகள் சிறப்பாக செயல்படுகின்றன. தனிப்பட்ட பாஸ்டர்கள், தனிப்பட்ட அமைப்புகள், தனிப்பட்ட நபர்கள் நடத்தும் விடுதிகள்தான் புகாருக்கு இடம் அளிக்கின்றன.

உண்மையிலேயே இவர்களுக்கு ஏழை குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்ற அக்கறை இருக்குமானால், தமிழ்நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளை பராமரிக்கலாம் அல்லது வடகிழக்கு மாநிலங்களிலேயே இத்தகைய விடுதிகளை அமைக்கலாம். ஏழ்மை, பசி, பட்டினி, நல்லக் கல்வி வசதியில்லாமை, பள்ளிகளுக்கு செல்ல சாலை வசதி இல்லாமை போன்ற காரணங்களால், அங்குள்ள பெற்றறோர், நாம்தான் கஷ்டப்படுகிறோம், நாம்தான் படிக்கவில்லை, நம் குழந்தைகளாவது நன்றாக படிக்கட்டுமே, நன்றாக சாப்பிடட்டுமே என்ற பாசத்தால், ஏங்கி தங்கள் குழந்தைகளை இத்தகைய விடுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அவர்கள் எண்ணம் ஒன்று, இங்கு நடப்பது வேறு. தங்கள் சின்ன சிறிய வயதில், தங்கள் தாய் மொழியில் படிக்க முடியாமல், இந்த மாநில மொழிகளில் படித்து, இங்கே எடுபுடி வேலை செய்து, அரை வயிற்கு கஞ்சி குடித்து வாழும், நிலமை மிக, மிக பரிதாபம். இந்த் விடுதிகளில் நடக்கும் சில சொல்லமுடியாத, அக்கிரமங்கள் அந்த சின்ன சிறு மலர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது.

இங்கே படித்து, இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கி இங்கே உள்ள மாநில மொழிகளில் படித்து, அவர்கள் எப்போது தங்கள் சொந்த மாநிலத்தில் போய் வேலை தேடி, தங்கள் பெற்றோரை பாதுகாப்பது? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

சமுதாயத்தில் நிலவும் பரிதாபமான சூழ்நிலைகளை பயன்படுத்தி வெளிநாட்டு கிறிஸ்த்தவர்களின் கருணையை தங்களுக்கு சாதகமான பாத்திரமாக கையில் எடுத்துக் கொண்டு, பணம் பறிக்கும் கருவிகளாக ஏழை குழந்தைகளை பயன்படுத்தும் படுபாதக செயல்களை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு விடுதியையும் நீ இதை நடத்துவதன் நோக்கம என்ன? உனக்கு எங்கே இருந்து பணம் வருகிறது? என்ன கணக்கு வைத்துள்ளாய்? வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை ஒழுங்காக செலவிடுகிறாயா? என்பதை எல்லாம் கண்காணித்து இரும்பு கரம் கொண்டு, அடக்க வேண்டும்.

தினத்தந்தி தலையங்கம் (9-8-2010)

தொடர்புடையவை:

ஆனந்த விகடனும் – பெரியாரும்

இதுதான் ஆனந்த விகடன்-குமுதம் பத்திரிகைகளின் யோக்கியதை

தமிழனின் ஊடகங்களும் தமிழர்ளை கொலை செய்கிறது

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு

ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம்

குமுதத்தின் கயமை

காலச்சுவடு-மநுவின் இலக்கியச் சுவடு

அதிகமில்லை Gentleman, வெறும் 50 ரூபாதான்!

கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’

முற்போக்கு பார்ப்பனீயம்

`இந்து’ நாளிதழுக்கு தீ` -எரிகிறது பத்திரிகையாளர்களின் சுயமரியாதை

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

15 Responses to ‘இவர்களை வைத்து சம்பாதிக்கிறார்களே!’ தினத்தந்தியின் ஆதங்கம்

 1. Mohamed Ismail சொல்கிறார்:

  தோழர்,

  நாம் சந்தித்த போது கூட இதை பற்றி நீங்கள் உரையாடியது எனது நினைவுக்கு வருகிறது.

 2. செந்தழல் ரவி சொல்கிறார்:

  தோழர் நீங்கள் எதை வைத்து சம்பாதிக்க முயன்றீர்கள் என்பது எனக்கு தெரியும். அடங்கவும்.

 3. saravananblog சொல்கிறார்:

  நண்பரே, அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி உழைப்பை உறிஞ்சும் இந்த செயல்கள் உலகெங்கிலும் உள்ள நடைமுறைதான். துபையில் கஷ்டப்படும் தமிழன் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? வடகிழக்கு மாநிலங்களில் கூட (பிகார், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம்…) இதுபோல் குடும்பத்தைத் துறந்து வருடக்கணக்கில் அங்கேயே வேலை பார்க்கும் நண்பர்களை எனக்குத் தெரியும். காரணம் ரொம்ப சிம்பிள்! உள்ளூரில் இருப்பவனுக்கு பல அயல் வேலைகள் இருக்கும். வெளியூரில் இருந்து ஆள் கூட்டி வந்தால்… அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது..வீடு விட்டால் வேலை, வேலை முடிந்தால் வீடு என்று இருப்பார்கள். இது முதலாளிகளின் தந்திரம். ஆனால் ஏதோ தென் மாநிலங்களில் மட்டும் இப்படி நடப்பதாக சித்தரிப்பது சரியானதாக எனக்குப் படவில்லை.

 4. P.Selvaraj சொல்கிறார்:

  miga arumaiyaana katturai , intha kodumaiyai naan pala idankalil neradiyaaga paartthu irukkiren.surandalukku ethiraga avarkalodu inainthu naamum poraaduvethey sariyanathu.anaitthu inankalilum ulla muthalazhikal surndal pervazhikalthan.

  mikka nantri thozhar

 5. mugamudi சொல்கிறார்:

  தினத்தந்தி முதலில் ஊருக்கு உபதேசம் செய்வதை விட்டு, தென் மாவட்டங்களில் இருந்து வறுமையில் உழலும் இளைஞர்களை சென்னை அழைத்து வந்து அடிமை போல நடத்துவதை நிறுத்தட்டும். பிறகு மற்றவர்களைப் பற்றி உருகட்டும். ராஜபக்சே மனித உரிமை மீறலுக்காக வேறொரு நாட்டை குறை சொல்வதற்கு ஒப்பானது இவர்களது முதலைக்கண்ணீர்.

 6. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  அண்டைய மாநிலங்களில் தமிழர்களின் குழந்தைகளும், தமிழர்களும் கூலி வேலைதான் செய்கின்றார்கள்.

  வசனம் பேசுவதால் மாறிப்போவதில்லை.

  களம் இறங்காலாமே!

 7. Matt சொல்கிறார்:

  எந்த இனமாக இருந்தால் என்ன.. எல்லோரும் மனிதர்கள் தானே.தின தந்தியின் கட்டுரை பாராட்டுக்குரியது. மார்க்சிய புரிதலோடு எந்த ஒரு பிரச்சனையையும் அணுகினால் குழப்பம் இருக்காது.

 8. shanmuganantham.e சொல்கிறார்:

  mikavum arumaiyana thalaiyangam.

 9. tsekar சொல்கிறார்:

  // செந்தழல் ரவி (06:07:16) :

  தோழர் நீங்கள் எதை வைத்து சம்பாதிக்க முயன்றீர்கள் என்பது எனக்கு தெரியும். அடங்கவும்.//

  இந்த கட்டுரையில் -தோழர் கூறிய கருத்தில் தவறு இருந்தால்,சொல்லவும் !!!

  அடங்கு என்று சொல்வது -தவறு

  த சேகர்

 10. கனல் சொல்கிறார்:

  சிறப்பான தலையங்கம்

 11. Alamelu சொல்கிறார்:

  எந்த வழியானலும், குழந்தைகளையும் சிறுவர்களையும்
  வைத்து பணம் பண்ணுவது கண்டிக்கதக்கது.

 12. ramasamy duraipandi சொல்கிறார்:

  அன்பின் மதிமாறனுக்கு
  இந்தக் கட்டுரை இந்துத்துவப் பார்வையின் ஜனரஞ்சக வெளிப்பாடாகத்தான் எனக்குத் தோன்றுகிறது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது கேட்கப் பட வேண்டிய கேள்விகளை
  //ஒவ்வொரு விடுதியையும் நீ இதை நடத்துவதன் நோக்கம என்ன? உனக்கு எங்கே இருந்து பணம் வருகிறது? என்ன கணக்கு வைத்துள்ளாய்? வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை ஒழுங்காக செலவிடுகிறாயா? என்பதை எல்லாம் கண்காணித்து இரும்பு கரம் கொண்டு, அடக்க வேண்டும்.//
  தனி அமைப்புகளின் மீது கேட்பது உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல்வேறு பெயரிலான உள்ளமைப்புகள் உதாரணமாக வனவாசி ஜாக்கிரண், சம்ஸ்கிரத பாரதி போன்ற பல்வேறு அமைப்புகள் இவற்றைத்தான் செய்து வருகின்றன.
  அடிப்படையில் நான் அனைத்து மதங்களையும் மறுக்கிறேன். பௌத்தம் உட்பட. ஆனால் அம்பேத்கார் சொன்னதைப்போல தனிமனித அறவியலுக்காக மதங்களின் தேவை உள்ளது என்பதையும் புரிந்து கொள்கிறேன்.
  // mugamudi (15:17:03) :
  தினத்தந்தி முதலில் ஊருக்கு உபதேசம் செய்வதை விட்டு, தென் மாவட்டங்களில் இருந்து வறுமையில் உழலும் இளைஞர்களை சென்னை அழைத்து வந்து அடிமை போல நடத்துவதை நிறுத்தட்டும். பிறகு மற்றவர்களைப் பற்றி உருகட்டும். ராஜபக்சே மனித உரிமை மீறலுக்காக வேறொரு நாட்டை குறை சொல்வதற்கு ஒப்பானது இவர்களது முதலைக்கண்ணீர்.//

  இப்படியான தனியமைப்புத் தாக்குதல் இன்றி யோசித்துப் பார்த்தால் இந்தத் தலையங்கத்திற்குள் இருக்கும் அடிநாதம் மென்மை இந்துத்துவமே என்பது உங்களுக்கும் புரியும்

  எதையும் ஊடறுத்துப் பார்ப்பது ஒடுக்கப் பட்டோரின் மீட்டுருவாக்கத்திற்கு மிக மிகத் தேவையானது

  பாரதிய ஜனதா பார்ட்டி மதிமாறனுக்குமா இந்த மதிமயக்கம்

  அன்பின்
  துரை

 13. mugamudi சொல்கிறார்:

  ராஜபக் ஷே மீதான தனிமனித தாக்குதல்களை தவிர்த்து விட்டு பார்த்தால் அவர் இலங்கையை பிரச்சினையற்ற நாடாக முயல்கிறார் என்பது புரியும. ஜெயேந்திரர் மீதான தனிமனித தாக்குதல்களை நிறுத்தி விட்டால் அவர் இந்து மத புனிதத்தைக் காப்பாற்ற முயல்வது புரியும். இப்படித்தான் உள்ளது நண்பர்களின் மறுமொழிகள். பாவப்பட்ட பல இளைஞர்களை அடிமைப்போல் நடத்தும் தினத்தந்திக்கு இதுபோன்ற தலையங்கங்கள் எழுத என்ன தகுதி என்பது எனது கேள்வி. ஆனால் இதற்கு மார்க்ஸியம், தனிமனித தாக்குதல்கள் போன்ற அறிவு ஜூவி குழப்பங்கள் எதற்கு.? கணினி முன்னால் அர்ர்ந்து உலகை அறிய முயலும் கருத்து கண்ணாயிரங்கள் தன் கைப்புண்ணுக்கு கூட சிந்தாந்த கைக்கண்ணாடியைக் கொண்டுதான் பார்ப்பார்களோ?

 14. mrradha சொல்கிறார்:

  ///தோழர் நீங்கள் எதை வைத்து சம்பாதிக்க முயன்றீர்கள் என்பது எனக்கு தெரியும். அடங்கவும்.///

  அப்படி என்னத்தடா கண்டே

 15. Pingback: தாது மணல்: தினத்தந்தியின் ‘துணிவு’ம் தமிழர்களின் துயரமும்; ‘ஆண்டவரே.. கடவுளே..!’ | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s