கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

 

கதையல்ல நிஜம் முதற்பகுதி ஒளிபரப்பானபோது எழுதியது. மீண்டும் இரண்டாம் பகுதி  ஒளிபரப்பாகிறது. முதற்பகுதியின்போது நாம் கேட்ட கேள்விகள் அப்படியே இருப்பதால், இதை அதன் நினைவாக மீண்டும் வெளியிடுகிறேன்.

தாயும் மகளும் ஒரே ஆணுடன் உறவு. (அவள் ஒரு தொடர்கதை)

தந்தையும் மகனும் பார்வையற்ற ஒரு பெண்ணுடன் உறவு (எங்க ஊர் கண்ணகி)

தன் மகனின் காதல், கல்யாணத்தில் முடியாமல் தடுப்பதற்காக, மகன் காதலித்த பெண்ணின் அம்மாவை தான் மணம் முடித்து, மகனின் காதலியையே அவனுக்குச் சகோதரியாக மாற்றிய தந்தை. (வானமே எல்லை)

அவுங்க அம்மாவை, இவரு பையன் காதலிப்பான்; இவனோட அப்பாவை அந்த அம்மாவோட பொண்ணு காதலிக்கும் (அபூர்வ ராகங்கள்)

இப்படிப் புரட்சிகர குணாம்சங்களோடு கதாபாத்திரங்களை உருவாக்கி, திரைப்படம் எடுத்த அந்த  பின் நவீனத்துவ ‘பிதாமகன்’ யார் தெரியுமா?

‘பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை,  வக்கிரங்களைக் கண்டித்து, தன் பணத்தை எல்லாம் செலவு செய்யும் ‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பாளருடைய அப்பாவான, இயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் போற்றப்படும் இயக்குநர் வக்கிரம் கே.பாலச்சந்தர்தான்.

இவர் தனது படங்களில் பெண்களுக்கான குரலை மிக சத்தமாகக் கொடுப்பவர். ஆனால், தகாத கணவனை தள்ளி வைத்து விட்டு மறுமணம் செய்து கொள்ளத் தயாராகிற பெண்ணை,   தன் முதல் கணவன் கதாபாத்திரமாக வந்து, எப்படியாவது அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவார். (அவர்கள், மனதில் உறுதி வேண்டும்)

*தனது ‘அரங்கேற்றம்’ படத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுகிற பெண்ணுக்குத் திருமண ஆசை காட்டி, திருமணம் நடப்பதற்கு முன் அந்தப் பெண்ணை பைத்தியமாக்கி அலைய விடுவார். இது மட்டுமல்ல, திரைப்பட வரலாற்றிலேயே பல புதுமைகளை செய்தவரும் இவரே.

‘ஏக்துஜே கேலியே’ படத்தில் உலகிலேயே முதல் முறையாக கதாநாயகியின் வயிற்றில் பம்பரம் விட்டுக் கட்டியதோடு, அந்தப் பெண்ணின் தொப்புளில் மண்ணையும் கொட்டி மூடியவரும் இவரே.

‘மரோசரித்திரா’ தெலுங்குப் படத்தில் உலக சினிமா வரலாற்றிலேயே யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு புதுமையைக் கையாண்டிருப்பார்.

கமலும் – சரிதாவும், காதல் தோல்வியால் கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டு பிணமாகக் கரை ஒதுங்குவார்கள். கமல் குப்புறப்படுத்து செத்துக் கிடப்பார். சரிதா மல்லாக்கப் படுத்து செத்துக் கிடப்பார்.

ஆம், பெண்ணின் பிணத்தைக் கூட கவர்ச்சியாகக் காட்டிய ஒரே உலக மகா இயக்குநர் கே. பாலசந்தர்தான்.

. . .

கதையல்ல நிஜம்’  இந்த நிகழ்ச்சியால் ஒன்று சேர்ந்த குடும்பங்கள் என்று இரண்டு குடும்பங்களை, தொடர்ந்து தன் விளம்பரங்களில் காட்டிக் கொண்டு வருகிறார்கள். உண்மைதான்.

இந்த இரண்டு குடும்பங்களைத் தவிர, இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த மீதி குடும்பங்கள்,  இனி ஜென்மத்துக்கும் ஒன்று சேர முடியாத அளவிற்கு ‘கதையல்ல நிஜம்’ குழுவினர் வேலை பார்த்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

11 வயது சிறுவன் சொல்கிறான், ‘‘நான் வீட்டை விட்டு ஓடிப் போய் பிச்சை எடுத்தேன், திருடினேன், பொம்பளைங்கள கூட்டிக் கொடுத்தேன்’’ என்று.

‘‘அய்யோ’’ என்று பரிதாபத்துடன் ஆச்சரியப்பட்டு துக்கம் தாங்காமல் ‘‘ஒரு விளம்பர இடைவெளிக்குப் பிறகு..’’ என்று அறிவிக்கிறார் நடிகை லட்சுமி.

இனி அந்தச் சிறுவனின் அக்கம்பக்கம் அவனை எப்படி எதிர்கொள்ளும்? அவனைக் குறித்த இந்தக் காட்சிப் பதிவு அவன் எதிர்காலத்தை எந்த நிலையில் வரவேற்கும், என்கிற எந்த சமூகப் பொறுப்பும் அற்று ‘அவலம் தோய்ந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி’ என்கிற தொனியில் அவன் துயரத்தை பணம் பண்னும் இவர்களுக்கும், அந்தச் சிறுவனை திருடனாக்கி விபச்சாரத் தரகனாக்கி,   பணம் சம்பாதித்த அவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

கண்ணீரும், கம்பலையுமாக ஒரு பெண் அழுது கொண்டிருக்கிறார். அதே கண்ணீரோடு குறுக்கிட்டு, ‘ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, நாம் மீண்டும் அழலாம்’ என்பது மாதிரி அறிவித்து விட்டு, குதூகலமான விளம்பரங்களைப் போட்டு, மிகச் சாதுர்யமாக அடுத்தவர் கண்ணீரில் காசு சம்பாதித்துக் கொடுக்கும் பாரதி கண்ட புதுமைப் பெண் நடிகை லட்சுமிக்கு ஒரு வேண்டுகோள்:

பொதுவாக இந்தியப் பெண்கள் ஆணுக்கான நுகர்பொருளாகவும், அது போக மீதி நேரங்களில், கலாச்சாரக் காப்பாளர்களாகவும் இருக்க வேண்டும். (மதம் உட்பட கலாச்சாரம் என்று சொல்கிற எல்லாவற்றையும் பெண்தான் காப்பாற்ற வேண்டும்)

இந்த இந்தியச் சூழலில் சினிமா, தமிழ் சினிமா  ஆணாதிக்க பொறுக்கித் தனத்தின் உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம்.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என்று ஆண்களால் சுற்றி வளைக்கப்பட்டு இருக்கும் தமிழ் சினிமா, நடிகையாக வரும் பெண்ணை எப்படி வரவேற்கிறது என்றும், அந்தப் பெண்கள் சந்தித்த துயரங்கள் என்ன என்றும், அவர்களை நேரில் வரவழைத்து அவர்களின் துயரங்களை பகிர்ந்து கொள்வீர்களா?

குறிப்பாக, பாலச்சந்தர் படங்களின் வக்கிரங்களைக் கண்டிப்பதோடு, அவர் தன் படங்களில் நடித்த பெண்களை எந்த அளவுக்கு கண்ணியமாக நடத்தினார்? இல்லை, அடித்து உதைத்து, திட்டினாரா? என்பதையும் அந்தப் பெண்களிடம் பேட்டி கண்டு ஒளிபரப்புங்கள். அதை முதலில் உங்களில் இருந்தே தொடங்குங்கள்.

https://mathimaran.files.wordpress.com/2007/11/balac.jpg

நீங்கள் அவர் இயக்கத்தில் நடித்திருக்கிறீர்கள். அவர் தயாரிப்பில் இயக்குநராகவும் இருந்திருக்கிறீர்கள். (மழலைப் பட்டாளம்)

இதற்கு உங்களைவிட சரியான, துணிவான நபர் வேறு யார்?

சொல்லுங்கள் உங்கள் துயரங்களை.

அடுத்தவர் துயர்களுக்காகக் கண்ணீர் சிந்திய உங்களுக்கு பிரதி உபகாரமாக, கண்ணீர் சிந்தக் காத்திருக்கிறோம்,   அதே விளம்பர இடைவெளியோடு.

வாய்ப்புத் தருவீர்களா?

பெட்டிச் செய்தி

ஒரு பெண் சொல்கிறார்; என் மேலே சந்தேகப்பட்டு என்னைத் துன்புறுத்துறாரு, வீட்டுக்குள்ளே பூட்டி வெச்சிட்டு வெளியே போயிடறாரு’’

நடிகை லட்சுமி; ‘‘ஏன் இந்த மாதிரி பண்றீங்க? உங்க மனைவிதானே, சரி நடந்தது நடந்துப் போச்சு, ரெண்டு பேரும் குழந்தை மாதிரிதான் இருக்கீங்க, ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு அதிகமா இருக்கிறதுனாலே..’’

வீட்டுக்குள்ள பொண்டாட்டிய பூட்டி வெச்சிட்டுப் போறவன் குழந்தையாம்?! அவனுக்கு அன்பு வேறு அதிகமாம்!

உடனே ‘சரி கைய புடிங்க, கட்டிப் புடிங்க’ என்று கவுன்சிலிங் வேற.

தங்கள் நிகழ்ச்சியின் மூலமாக ஒன்று சேர்ந்தவங்க எண்ணிக்கையை உயர்த்திட்டோம் அப்படிங்கற ‘விளம்பர’ பெருமைக்காக ரொம்பவே அல்லாடுகிறார் லட்சுமி, அசிங்கமாக.

இதை அவராகவே செய்கிறாரா? இல்லை, மகா ஞாநி களின் ஆலோசனையும் ஆசியும் பெற்று செய்கிறாரா?

***

மொட்டைத் தலையில் மயிர் முளைப்பது எப்படின்னு?’ ஒரு தீவிரமான ஆலோசனையை நடிகர் ‘சோ’ சொன்னார்னா, எவ்வளவு அபத்தமாக இருக்குமோ,  அது மாதிரிதான் இருக்கு, ‘கணவன் – மனைவி ஒற்றுமையா இருக்கணும்; என்ன பிரச்சினை வந்தாலும் பிரியக்கூடாதுன்னு நடிகை லட்சுமி சொல்கிற அறிவுரையும்.

***

2003 ல் தலித் முரசில் எழுதியது. இது நடிகை லட்சுமியையும் கதையல்ல நிஜம் குழுவினரையும் நிரம்ப கடுப்பேற்றியதாக கேள்வி.  இந்த மோசடிகளின் ஆலோசனைக் குழுவில் ஞாநியும் இருந்தார்.

குறிப்பு:

தலித் முரசில் எழுதும்போது *தனது அரங்கேற்றம் படத்தில் பாலியல் தொழிலாளியாக இருக்கிற’ என்று குறிப்பிட்டு இருந்தேன். அதை இப்போது மாற்றி, *‘தனது அரங்கேற்றம் படத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுகிற பெண்ணுக்கு’ என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

26 Responses to கண்ணீர் காசாகிறது-இது கதையல்ல.. நிஜம்

 1. அஹமது இர்ஷாத் சொல்கிறார்:

  நியாயமான அலசல்.வாழ்த்துக்கள்

 2. Matt சொல்கிறார்:

  ஒழுக்கம் கெட்ட இவளுடைய கதையை சொல்வதற்கே பல எபிசோடுகள் வேணும் . இதுல இவ ஊரு கதைய பேசுரா..
  நியாயப்படி பார்த்தா இவ கதையை தான் முதலில் போடணும். இவ கதையில் ஜெயேந்திரன் கதா பாத்திரம் இருந்தாலும் இருக்கும். பாலசந்தர் போன்ற கேடுகெட்ட படங்களை எடுத்தவன் எவனும் இல்லை. இந்த பொறுக்கிக்கு பெயர் இயக்குனர் சிகரமாம். பார்பானா இருந்தா போதும் வேறு எந்த தகுதியும் தேவை இல்லை புகழின் உச்சிக்கு போவதற்கு இந்தியாவில் …

 3. dr சொல்கிறார்:

  we should ban this type of shows…

 4. ராம் சொல்கிறார்:

  பாவம் மக்கள்.

 5. Anand சொல்கிறார்:

  கட்டுரை மிக அருமை

 6. மகிழ்நன் சொல்கிறார்:

  ////கமலும் – சரிதாவும், காதல் தோல்வியால் கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டு பிணமாகக் கரை ஒதுங்குவார்கள். கமல் குப்புறப்படுத்து செத்துக் கிடப்பார். சரிதா மல்லாக்கப் படுத்து செத்துக் கிடப்பார்.////

  மதிமாறன் டச்…………செம பஞ்ச்

 7. கவிமதி சொல்கிறார்:

  இதுமட்டுமல்ல….

  கதையல்ல நிஜம்
  அரட்டை அரங்கம்
  நீயா நானா
  மக்கள் அரங்கம்…..
  என்று காசு கொடுத்து தேர்வாகி அங்கு போய் அழுது தன் குடும்ப ரகசியங்களை கொட்டி கொட்டி நிகழ்ச்சி நடத்துபவனுக்கு சம்பாதித்து தரும் நம்ம பாமர தமிழன் மட்டுமல்ல படித்த தமிழனும் தான்.

  பணம் சம்பாதிக தொலைக்காட்சி காரனுக்கு நிறைய வழி அதில் இது அடுத்தவன் குடும்ப ரகசியத்தை காசாக்குவது.
  முதலில் இந்த நிகழ்வுகளில் கலந்துக்கொள்பவர்கள் செருப்பாலடித்து புத்தி சொல்லவும்

 8. mugilan சொல்கிறார்:

  ஐஸ்வர்யாங்கிர ஒரு சினிமா நடிகை விகடன்ல கூப்பாடு போட்டுச்சே, ஊரிள் உள்ள குடும்பத்தை எல்லாம் சேத்து வைகிரியேம்மா உன் பொண்ணு தனியா தவிக்கிரேனே என் மேல் பாசம் இல்லையா, எனக்கு ஒரு குழந்தை இருக்குது அதைவிட்டுவிட்டு நீ ஒரு குழ்ந்தையை தத்தெடுத்து வழர்க்கிராயே நியாயமானு அந்தப்பொண்ணுக்கு நியாயம் கிடைத்ததானு இந்தக்குழு (கதையல்ல நிஜம்) கொஞ்சம் விசாரித்தால் நல்லது

 9. P.Selvaraj சொல்கிறார்:

  Dear Thozhar,

  This artical very good and nice ,this kind of people new modern technicals ,media and sceince used wronly against poor people,it is very very dangerous,we should fight against this intellectual criminals otherwise cannot save poor people.

  Thanking you

  Best wishes

  truly love
  P.Selvaraj,Neelangari,Chennai-600 041.

 10. சதிஸ் சொல்கிறார்:

  ///இதை அவராகவே செய்கிறாரா? இல்லை, மகா ‘ஞாநி’ களின் ஆலோசனையும் ஆசியும் பெற்று செய்கிறாரா?

  இந்த மோசடிகளின் ஆலோசனைக் குழுவில் ஞாநியும் இருந்தார்.///

  ஞாநி போன்ற முற்போக்கு நடிகர்களை தொடர்ந்து அம்பலப்படுத்துங்கள்.

 11. செவத்தப்பா சொல்கிறார்:

  /”இதுமட்டுமல்ல…

  கதையல்ல நிஜம்
  அரட்டை அரங்கம்
  நீயா நானா
  மக்கள் அரங்கம்…
  என்று காசு கொடுத்து தேர்வாகி அங்கு போய் அழுது தன் குடும்ப ரகசியங்களை கொட்டி கொட்டி நிகழ்ச்சி நடத்துபவனுக்கு சம்பாதித்து தரும் நம்ம பாமர தமிழன் மட்டுமல்ல படித்த தமிழனும் தான்.

  பணம் சம்பாதிக தொலைக்காட்சி காரனுக்கு நிறைய வழி அதில் இது அடுத்தவன் குடும்ப ரகசியத்தை காசாக்குவது.
  முதலில் இந்த நிகழ்வுகளில் கலந்துக்கொள்பவர்கள் செருப்பாலடித்து புத்தி சொல்லவும்…”/

  கவிமதியின் கருத்துக்களை நானும் ஆமோதிக்கின்றேன். நன்றி மதிமாறன்.

 12. மு.இரா சொல்கிறார்:

  எல்லாம் பணம்தான் தலைவா? இவங்க என்ன? சமூக சீர்திருத்தமா பண்றாங்க… எல்லாம் பணத்துக்காகதானே.. இதுவும் ஒரு பிஸ்னஸ் அவ்ளோதான்.. இத பத்தி பேசி ஒன்னும் ஆக போவது இல்லை.

 13. vpmaravan சொல்கிறார்:

  மதி சார், சிரிக்கத்தான் தோன்றுகிறது.. அருமையான பதிவு!

 14. ssk சொல்கிறார்:

  இன்றைய கால சுழலில் எல்லோருக்கும் மரத்து பொய் விட்டதோ என்று தோன்றுகிறது. வாழ்வின் சுமைகளே பெரிதாக இருக்கும் போது இதை போன்ற அவலங்களை பற்றி நினைக்க நேரமில்லாமல் பணத்தை துரத்த மனிதன் ஓடுகிறான். எதற்கும் ஒரு அர்த்தம் இல்லாமல் போகிறது இன்றைய வாழ்வில். எல்லா இடங்களிலும் ஒவ்வொரு குழுவுக்கும் மற்றவரை பற்றி கவலைபடாத தனிப்பட்ட நோக்கங்கள். இயலாதவர் இந்த நோக்கங்களினால் மிதி படுவதை தவிர வேறு வழியில்லை. கடவுள் என்ற தோற்றமே குறுக்கு வழியாக தெரிகிறது. இல்லா ஒன்றை சொல்லி மிதிப்பதும், மிதி படுவதும் நின்றால் மனிதன் பிழைக்க முடியும் என்று தோன்றுகிறது. உங்களை போன்ற சிலர் இருந்து இதை எல்லாம் சுட்டி காட்டி இருப்பதும் ஆச்சர்யமாக உள்ளது. தன்னலமற்ற உங்கள் பணியை போற்றுகிறேன்.

 15. jeswanthy சொல்கிறார்:

  அருமையான பதிவு. சொன்னவை எல்லாமே சரியென்று தான் தோன்றுகிறது.

 16. kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் மணிமாறன் அவர்களே,

  வணக்கம்.

  பாலசந்தரின் வக்கிரபுத்தியையும் அதை அவர் காசாக்கும்
  பாணியையும் யாரும் புரிந்து கொள்ளாமல்
  பாராட்டிக் கொண்டே போகின்றார்களே என்று
  எண்ணி இருந்தேன்.
  சரியாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

  பாலசந்தர் செய்யும் இன்னும் ஒரு தகிடுதத்தம்
  அநேகருக்குத் தெரியாது.

  அவர் எடுத்த மிகச்சில நல்ல படங்களின்
  கதைகள் (புன்னகை போன்றவை ) உண்மையில்
  அவர் கற்பனையில்
  உதித்தவை அல்ல ! மற்றவருக்குச்
  சொந்தமானவை !

  அநேகமாக அவை எல்லாமே இந்தியில்
  ரிஷிகேஷ் முகர்ஜி எடுத்த படங்களின்
  தழுவல்.
  பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வரவில்லை.
  அந்தப் படங்களை எல்லாம் நான் இந்தி மொழியிலேயே
  பார்த்திருக்கிறேன்.

  இன்னாரின் கதையை அல்லது படத்தைத்
  தழுவியது என்றோ, மூலம் இன்னார் என்றோ அவர்
  என்றும் போட மாட்டார். இவர் காசு கொடுத்து
  தமிழில் செய்யும் உரிமையை வாங்கி விட்டாலும்
  முதலில் உருவாக்கிய மூளை வேறோருவருடையது
  அல்லவா ?

  தழுவல் படங்கள் பரிசு பெறும் தகுதி அற்றவை
  என்கிற உண்மையை மனதில் கொண்டு ,
  தழுவல் என்கிற உண்மையை மறைத்து,
  எல்லாரையும் ஏமாற்றி
  “புன்னகை”படத்திற்கு பரிசு வாங்கினார் அவர் .
  ( அதன் அப்பட்டமான மூலப் படம் தர்மேந்திரா
  நடித்த “சத்யகாம் ” என்கிற இந்தி மொழிப்படம்)

  அப்போது வடநாட்டில் பணி புரிந்துகொண்டிருந்தேன்
  நான். அப்போதே இதை வெளிப்படுத்த நினைத்தாலும்
  வழியொன்றும் கிடைக்கவில்லை.

  இன்றிருக்கும் இணைய தளம் போன்ற
  வசதிகள் அப்போது இல்லாததால் என்னால்
  ஒன்றும் செய்ய இயலாமல் இருந்தேன்.

  நீண்ட நாட்களாக என்னை உறுத்திக்கொண்டிருந்த
  ஒரு செய்தியை இன்று இதன் மூலம் வெளியிடுகிறேன்.

  நடிகை லட்சுமி இன்னுமொரு போலி வேடதாரி.
  இப்போது அவர் போடுவது சமூக சேவகி வேடம் !

  பார்ப்போம் ! ” எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்
  இந்த நாட்டிலே ? ”

  அன்புடன்
  காவிரிமைந்தன்
  http://www.vimarisanam.wordpress.com

 17. ரதி சொல்கிறார்:

  அறியாத வயதில் நான் கூட சில பேர் பாலசந்தரின் திரைப்படங்களை தரமான சினிமாவாகவும், அவரை ஓர் சிறந்த இயக்குனராகவும் சொன்னதை கேட்டபோது இவர் எதோ பெண்களை பெருமைப்படுத்துகிறார் என்றுதான் நினைத்தேன். பிறகு இவரின் சில திரைப்படங்களை பார்த்த பின் தான் புரிந்தது இவர் பெண்களை தரம் தாழ்த்தியது. என்னை மிகவும் எரிச்சலூட்டிய திரைப்படம் “கல்கி”.

  //பொதுவாக இந்தியப் பெண்கள் ஆணுக்கான நுகர்பொருளாகவும், அது போக மீதி நேரங்களில், கலாச்சாரக் காப்பாளர்களாகவும் இருக்க வேண்டும். (மதம் உட்பட கலாச்சாரம் என்று சொல்கிற எல்லாவற்றையும் பெண்தான் காப்பாற்ற வேண்டும்)
  இந்த இந்தியச் சூழலில் சினிமா, தமிழ் சினிமா ஆணாதிக்க பொறுக்கித் தனத்தின் உச்சக்கட்டம் என்று கூட சொல்லலாம்.// சிங்கள ராணுவம் ஈழத்தில் தமிழ்ப்பெண்களை கொடுமைப்படுத்துவது போல், சீரழிப்பதைப்போல் தான் தமிழ்சினிமாவும் பெண்களை
  தரம்தாழ்த்துகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

 18. padmahari சொல்கிறார்:

  சபாஷ், சரியான சாட்டையடி! வாழ்த்துக்கள் மதிமாறன். உங்க சாட்டையடி பதிவுகளை மேலும் மேலும் தந்து மக்களுக்கு தமிழ் சினிமாவின் போலி “சிகரங்கள்?!” பலவற்றின் முகத்திரைகளை தயவு தாட்சணியமின்றி கிழியுங்கள் நண்பரே!

  //‘ஏக்துஜே கேலியே’ படத்தில் உலகிலேயே முதல் முறையாக கதாநாயகியின் வயிற்றில் பம்பரம் விட்டுக் கட்டியதோடு, அந்தப் பெண்ணின் தொப்புளில் மண்ணையும் கொட்டி மூடியவரும் இவரே.//

  ஓஹோ…..இது சிகரத்தோட சில்ற வேலைதானா? நான்கூட சின்ன கவுண்டரை சில்மிஷம் செய்யவிட்ட உதயகுமார்தான் இதுக்கெல்லாம் புள்ளையார் சுழி போட்டதோன்னு நினைத்தேன்! கஷ்டகாலம், இதுங்கள எல்லாம் நாம (?!) சிகரங்கள்னு சொல்லி உண்மையான சிகரங்களை கண்டுகொள்வதே இல்லை!

  நீங்க கலக்குங்க…..வாழ்க மதிமாறன்! பகிர்வுக்கு நன்றி.
  http://padmahari.wordpress.com

 19. கவிமதி சொல்கிறார்:

  இயக்குனர் சுருட்டல் சிரகத்தின் “டூயட்” மட்டும் என்னவாம்
  நம்ம சல்மான்கான், சஞ்சைதத் நடித்த “சாஜன்” படம்தானுங்கோ

 20. Nithichellam சொல்கிறார்:

  சபாஷ், சரியான சாட்டையடி! வாழ்த்துக்கள் மதிமாறன். உங்க சாட்டையடி பதிவுகளை மேலும் மேலும் தந்து மக்களுக்கு தமிழ் சினிமாவின் போலி “சிகரங்கள்?!” பலவற்றின் முகத்திரைகளை தயவு தாட்சணியமின்றி கிழியுங்கள் நண்பரே!!!!!!

  Ada ada K.B pathy chumma kelichuteenga…..

 21. murugansamy சொல்கிறார்:

  real social service not like this .because you help secreat, dont telecast to channel . so this is a business.

 22. shyamala சொல்கிறார்:

  இவர்களின் பண ஆசைக்கு இரையாக்கப்படுபவர்கள் பெரும்பாலும் கீழ் தட்டு மக்களே ……

 23. Pingback: இயக்குநர் K. பாலசந்தர் மரணமும் ‘முற்போக்கு’ ஒப்பாரிகளும் | வே.மதிமாறன்

 24. Pingback: இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல | வே.மதிமாறன்

 25. Pingback: கே. பாலசந்தர் ‘மகளிர் தினம்’: நல்லா வௌங்கும் நாடு | வே.மதிமாறன்

 26. Pingback: ரஜினி பாடல் – அண்ணா பெரியார் – பாலசந்தர் சிலை | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s