தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

vijayakanth

விஜயகாந்த் தொப்பிக்கு மேல் காவி. நல்ல குறியீடு. எதிர்காலத்தில் பா.ஜ.கவின் தமிழ்நாட்டு தலைமைக்கான  ‘காவித் தலை’ . சபாஷ் சரியான அறிகுறி.

***

டிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் – தமிழக மீனவர்களை, ஈழத் தமிழர்களை சுட்டுக்கொல்கிற, இலங்கை ராணுவத்தை கண்டித்து, அதன் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெல்லியில் ‘ஒரேஒரு வேளை’ உண்ணாவிரதம் இருந்தார்.

இந்த உண்ணாவிரதத்தின் போது, தமிழக மீனவர்கள் அணியும் தொப்பி என்று தலையில் நீண்ட குடுவையைப்போன்ற தொப்பியை அணிந்திருந்தார். எந்த ஊரில் மீனவத் தமிழன் இப்படி ஒரு தொப்பியை அணிந்திருக்கிறார்?  இது சினிமாவில் வருகிற மீனவர் அணிகிற காஸ்டியூம்.

தமிழ் சினிமாவில் மீனவர்கள், நீண்ட தொப்பியும், லங்கோட் போன்ற உடையும் அணிந்து முழங்கைக்கு மேல் தாயத்து கட்டி, இறுக்கமான சட்டையும் அணிந்திருப்பார்கள்.

இதுபோன்ற கோமாளித்தனமான காஸ்டியூம்களோடு, தமிழக மீனவர்களை வேடிக்கைப் பொருளாக, மீனவர்கள் அல்லாத தமிழர்களிடம் இருந்து வேறுபடுத்தி,  ‘தமிழ் மீனவர்கள் வேறு யாரோ’ என்பது போன்ற எண்ணத்தை சித்திரித்து பிரபலமாக்கியது,  கடற்கரையை மீனவர்கள் அசுத்தப்படுத்துகிறார்கள் என்பதாக குற்றம் சாட்டி, சென்னை மெரினா கடற்கரையில், மீனவர்களை தன் ஆட்சிகாலங்களில், இன்றைய இலங்கை ராணுவம் போல் சுட்டுக்கொன்ற,  மீனவ நண்பன் எம்.ஜி.ஆர்.

நீண்ட தொப்பியும், லங்கோட் போன்ற உடையும் அணிவது ஆந்திர மீனவர்கள் வழக்கம். ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில், இயக்குநர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள், ஆந்திராவை சேர்ந்தவர்களே. படகோட்டி படமும் கூட ஆந்திராவைச் சேர்ந்த, நாகிரெட்டியின் திரைப்படம்தான்.

அதனால், அவர்கள் ஆந்திர மீனவர்கள் அணிகிற உடையை, செயற்கையான சினிமா சேர்க்கைகளோடு கொச்சைப்படுத்தி, தமிழக மீனவர்களின் அடையாளமாக காட்டினார்கள்.

தமிழர்களுக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்து கட்சி நடத்துவதாக சொல்கிற விஜயகாந்த் போன்றவர்கள், தமிழக மக்களில் மிக பெரும்பான்மையான உழைக்கும் மக்களான மீனவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கைத் தரம், முறை எப்படி இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளாமல், ‘சாவு வீட்ல பொணமாகவும்-கல்யாண வீட்ல மாப்பிளையாகவும்’ இருக்க வேண்டும் என்கிற சினிமாக்காரர்களின் விளம்பர மனோபாவதில் இருந்து வெளிவராதவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் தமிழக மீனவர்கள் அணிகிற குல்லா என்று ஒன்றை தன் தலையில் வைத்திருக்கிறார்.

உண்மையில் தமிழ் மீனவர்கள் தலையில் அவர் வைக்கும் குல்லாஅது.

‘யார் வீ்ட்டு எழவோ… பாய் போட்டு அழவோ’ என்று ஒரு பழமொழி வட மாவட்டத் தமிழர்களிடம் இருக்கிறது. அதுபோல் கூலிக்கு மாரடிக்கிற இந்தச் சினிமாக்காரர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு தமிழக மீனவர் துயரமும், ஈழத்தமிழர் துயரமும், தான் தலைவர் ஆவதற்கும், ஓட்டு வாங்குவதற்கும் ஒரு கருவியாக, பிரச்சாரமுறையாக பயன்படுகிறது.

ஒரு வேளை, சிங்கள ராணுவம் ஒரு நெருக்கடியின் காரணத்தால்,  ஈழத் தமிழர்கள் மீதான,  தமிழக மீனவர்கள் மீதான கொலை வெறித் தாக்கதலை நிறுத்திவிட்டால், அதன் மூலம் பெரும் அதிர்ச்சிக்கும், நஷ்டத்திற்கும் உள்ளாகுபவர்கள் இந்த அரசியல்வாதிகளாகத்தான் இருப்பார்கள்.

வாய்க்கரிசியையும் புடுங்கி, கள்ள மார்க்கெட்ல வித்து காசு பாத்துடுவாங்க.

படம்; தினகரன்

செப்டம்பர்30, 2009 எழுதியது.

மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

19 Responses to தமிழர்களின் துயரமும் விஜயகாந்தின் குல்லாவும்

 1. barari சொல்கிறார்:

  nadika kooththaadiyidam komaalithanaththai thavira veru enna ethir paarkka mudiyum.

 2. கபிலன் சொல்கிறார்:

  ஹாஹா…அது எப்படி….தமிழ்நாட்டுல இருக்க திராவிட (அ)சிங்கங்கங்கள் எல்லாம் புளியங்கொட்டை வச்சு பல்லாங்குழி ஆடிட்டு இருக்கும் போது, இன்னொருத்தன் தில்லிக்கு போய் போராடுவதா? மீனவர் பிரச்சினையை மத்திய அரசுக்கு எடுத்துச் செல்வதா? எவ்வளவு பெரிய தவறு ?

  விஜய்காந்தின் போராட்ட உடை வேண்டுமானால் காமெடியாக இருக்கலாம், ஆனால் இதைப் பலரும் கவனித்திருக்கின்றனர் என்பதே உண்மை. உடனே நம்ம திராவிட (அ)சிங்கங்கள், ஒரு பதில் போராட்டம் ஒண்ணு அறிவிப்பாங்க….சோனியாவின் உத்தரவைப் பெற்ற பின்….

 3. செந்தழல் ரவி சொல்கிறார்:

  இவ்வளவு தூரம் சென்று குரல்கொடுப்பதை பாராட்டாமல் இருக்கலாம். ஆனால் அதிலும் அவரை சாடி சுகம்காணவேண்டுமா ? உதவிக்கு வரும் அத்தனை கரங்களையும் கோர்த்துக்கொண்டால்தானே வெற்றி ? வருத்தமாக இருக்கிறது.

 4. commie.basher சொல்கிறார்:

  விசயகாந்து ஒருவேளை சாப்பிடாமல் இருந்தார். நீ என்ன மயிரா புடுங்கிட்டு இருந்தெ ? ஈளத்தமிழர்கள் பிரச்சனை என்று பிரச்சனையைச் சொல்லியே முற்போக்குவாத முகமூடி அணிபவர்கள் உன்னைப்போன்றவர்கள். நீங்களெல்லாம் செத்தால் தான் தமிழனுக்கு நிம்மதி.

 5. முகமது பாருக் சொல்கிறார்:

  //செந்தழல் ரவி (10:49:46) :
  இவ்வளவு தூரம் சென்று குரல்கொடுப்பதை பாராட்டாமல் இருக்கலாம். ஆனால் அதிலும் அவரை சாடி சுகம்காணவேண்டுமா ? உதவிக்கு வரும் அத்தனை கரங்களையும் கோர்த்துக்கொண்டால்தானே வெற்றி ? வருத்தமாக இருக்கிறது.//

  தங்கத்தட்டில் மலத்தை கொடுத்தால் சாப்பிட முடியுமா செந்தழலாரே????..(உங்கள் மனதை புண் படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்)

  //யார் வீ்ட்டு எழவோ… பாய் போட்டு அழவோ’ என்று ஒரு பழமொழி வட மாவட்டத் தமிழர்களிடம் இருக்கிறது. அதுபோல் கூலிக்கு மாரடிக்கிற இந்தச் சினிமாக்கார்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு தமிழக மீனவர் துயரமும், ஈழத்தமிழர் துயரமும், தான் தலைவர் ஆவதற்கும், தான் ஓட்டு வாங்குவதற்கும் ஒரு கருவியாக, பிரச்சாரமுறையாக பயன்படுகிறது//

  சத்திய வார்த்தைகள்..

 6. nagarasan. சொல்கிறார்:

  எத்தன நாளைக்கு இப்படி வேசங்கட்டி ஆடுவ ,சினிமா வாய்ப்பு போனவனெல்லாம்..அரசியல்ல வேசங்கட்ட ஆரம்பிச்சிட்டீங்கலேடா…..

 7. mukilan சொல்கிறார்:

  விஜயகாந்த்தும் ஆந்திராதான்

 8. செந்தழல் ரவி சொல்கிறார்:

  அப்போ வெறும் கடிதம் மட்டில் எழுதினால் போதுமா பாரூக் அண்ணே ?

 9. முகமது பாருக் சொல்கிறார்:

  செந்தழலாரே நம்மால் முடிந்தால் நாம என்ன செஞ்சோம் (செய்றோம்) அதனால மத்தவங்களுக்கு (மனித சமுதாயத்திற்கு) ஏதாவது நன்மை நடந்தால் அதை மக்களிடம் சொல்லி அரசியல் இல்லை சமுக மாற்றத்திற்கு ஏதாவது செய்யலாம்..

  ஆனால் அதை விட்டுட்டு ஏமாந்த (ஏமாறும்) இனத்தை வாய்சவுடாலும், இழப்புகளை காட்டியும், பிணங்களின் மேலும் இவர்கள் தங்களின் இடத்தை நிலை நிறுத்துவதற்குத்தான் பயன்படுத்துகிறார்களே தவிர வேற ஒரு பயனும் இல்லனேனு உங்களுக்கும் தெரியுமுன்னு நினைக்கிறன்..

  மேக்கொண்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலதான் இவர்களின் செய்கை இருக்குதுங்க..

  அப்புறம் நான் எப்பங்க கடிதம் எழுதச் சொன்னேன்..

 10. kamaltb சொல்கிறார்:

  உன்மை ஏமாத்து வேலை தான் என்ன செய்யே தமிழன் இப்படி
  எல்லரையும் நம்புகிறன்.வி காந்த் தன் ஒருவன் தான் தமிழ்
  மக்கள் பாதுகாவலன் என்கிறார்!

 11. கபிலன் சொல்கிறார்:

  “முகமது பாருக் (11:20:57) :

  தங்கத்தட்டில் மலத்தை கொடுத்தால் சாப்பிட முடியுமா ”

  பாரூக் அண்ணனிற்கு காவி முண்டாசு போட்டிருப்பது தான் பிரச்சினை. கலரை மாற்றி இருந்தால் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது : )

 12. ssk சொல்கிறார்:

  //கபிலன்//
  ///பாரூக் அண்ணனிற்கு காவி முண்டாசு போட்டிருப்பது தான் பிரச்சினை. கலரை மாற்றி இருந்தால் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது///

  கபிலன், விஜயகாந்த் காவி கட்டி இருப்பதால்தான் பாரூக் விமர்சிக்கிறார் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அதனால் என்ன தவறு?
  பாரூக் இஸ்லாமியராக இருந்தோ அல்லது மதசார்பற்ற முற்போக்காளராக இருந்தோ அதை குறிப்பிட்டுச் சொல்வது ஒன்றும் தவறு இல்லையே?

  ஏன் விஜயகாந்த் அப்படி நடந்துகொள்கிறார்? இஸ்லாமியர்கள் யாரும் விஜயகாந்தையோ அல்லது மற்ற இந்து மதத்தில் பிறந்த தலைவர்களை இந்து என்று பார்ப்பதில்லை. அவர் ஒரு கட்சியின் தலைவர் என்றுதான் பார்க்கிறார்கள். அதனால்தான் அவர்களின் கட்சியிலும் சேருகிறார்கள்.
  ஆனால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் போன்ற இஸ்லாமியர் எதிர்ப்பு அமைப்போடு தொடர்போ,அதுபோல் இயங்கினாலோதான் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். இதில் அவர்களின் மத பார்வை இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
  அது நியாயமானதாகத்தான் இருக்கிறது.

 13. அனாமதேய சொல்கிறார்:

  //
  விஜயகாந்த் தொப்பிக்கு மேல் காவி. நல்ல குறியீடு. எதிர்காலத்தில் பா.ஜ.கவின் தமிழ்நாட்டு தலைமைக்கான ‘காவித் தலை’ . சபாஷ் சரியான அறிகுறி.
  //

  இந்திய தேசிய கொடியில் கூட காவி இருக்கிறது…

 14. முகமது பாருக் சொல்கிறார்:

  //கபிலன் (21:15:11) :
  “முகமது பாருக் (11:20:57) :

  தங்கத்தட்டில் மலத்தை கொடுத்தால் சாப்பிட முடியுமா ”

  பாரூக் அண்ணனிற்கு காவி முண்டாசு போட்டிருப்பது தான் பிரச்சினை. கலரை மாற்றி இருந்தால் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது : )//

  அய்யா கபிலரே இதுக்குதான் ஒவ்வொரு முறை பின்னூட்டம் இடும் போதும் பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று அடைப்புக்குறிக்குள் இடுவேன்..ஏனெனில் உங்களை போல சில அறிவிஜீவிகள் விவாதத்தை திட்டமிட்டு திசை திருப்பிவிடுவீர்கள்..

  அய்யா இந்த கோமாளி கூத்தாடி காவி அணியாவிட்டாலும் என்னுடைய கருத்து இதுவே… எல்லாத்துக்கும் மதச்சாயம் பூசிவிட்டு தப்பிக்க நினைக்க வேண்டாம்..

  மனிதநேயத்தோட சுயநலமில்லாமல் சுயபுத்தியோட ஒருவர் ஒரு செயலில் ஈடுபட்டால் அதை பாராட்டலாம் சரியா????

  எந்த மத்திய அரசு மீனவர்களை சுட்டுக்கொல்லும் போது கண்டும் காணாமல் இருந்ததோ அவங்ககிட்டயே போயி திரும்ப திரும்ப நியாயம் கேட்பதை நினைத்தால் என்ன செய்வது..எதுவும் நடக்காது என்று தெரிஞ்சே படம் போடுறது எதுக்காக கபிலரே…(ஏதாவது காசு பாக்கலாம் இல்லேனா எனக்கு எவ்வளவு கூட்டம் வருது பாத்திங்களான்னு சொல்லி கூட்டணி அமைக்கலாம்)

  ** அதவிட்டுபுட்டு மின்சாரம் அடிக்கடி போகாமல் இருக்க ஒரு திட்டம் வைச்சுருக்கேன் வெளில சொன்னால் மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் (Copy அடிச்சுருவாங்களாம்) என்று கருத்து வெளியிட்ட இந்த கோமாளியை நம்பும் உங்களை நினைத்தால் சிப்பு சிப்பா வருதுங்க..

  **ஈழத்தின் நடந்த இனப்படுகொலைகள் பற்றி வாயே திறக்காமல் காங்கிரஸ் கூட பேரம் பேசி நாடாளுமன்றத் தேர்தலில் நின்ற இந்த கூதடியை என்ன சொல்வது..

  அப்புறம் ஒன்னொரு விஷயம்ங்க நான் பொறந்து வளர்ந்தது இப்ப இருப்பதும் காரைக்குடில தானுங்க.. அங்க பேரு மட்டும்தான் வேற ஆனா பழக்க வழக்கம் வித்தியாசம் இருக்காதுங்க சரியா..

  ஏதாவது சினிமா இல்ல எதையாவது படிச்சுபுட்டு காவி இஸ்லாம்னு உங்களுக்கு எதோ மன குழப்பம் ஏற்பட்டு இருக்குது அத சரி பண்ணுங்கோ கபிலா..

  ***எனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கையோ ஈடுபாடோ கிடையாதப்பா அதனால விவாதத்தை தொடரலாம் சரியா

  இப்ப சொல்லுங்க தங்க தட்டில் மலத்தை கொடுத்தால் சாப்பிட தயாரா????…. இது எல்லாத்துக்கும் பொருந்தும் சரியா (எல்லா அடிப்படைவாததிற்க்கும்)

 15. கபிலன் சொல்கிறார்:

  “எந்த மத்திய அரசு மீனவர்களை சுட்டுக்கொல்லும் போது கண்டும் காணாமல் இருந்ததோ அவங்ககிட்டயே போயி திரும்ப திரும்ப நியாயம் கேட்பதை நினைத்தால் என்ன செய்வது..”

  போராடுவதைத் தவிர வேறு என்ன தான் வழி…நீங்க தான் சொல்லுங்களேன்…..திராவிட சிங்கங்கள் தான் பதவி வாங்கிட்டு பல்லாங்குழி ஆடிட்டு இருக்காங்களே…யாராவது போராடித் தான் ஆகனும். விஜய்காந்த் போராடுகிறார். அதுமட்டுமல்ல, ஏற்கனவே மீனவர் சம்பந்தமாக பல போராட்டங்களை நடத்திய பிறகே டில்லி சென்று போராடுகிறார். ராமேஸ்வரத்திற்கே சென்று போராடியதை மறந்துவிட்டீர்களா?

  ஒரு நல்ல விஷயம் நடக்கும் போது ஒரு சில டிராமாக்களைத் தாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்.

 16. lightink சொல்கிறார்:

  இலங்கை பிரச்னை தீர எல்லோரும் கடவுளிடம் வேண்டுங்கள் என்று சொன்னவர் ஏன் இப்போது உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு வேளை கடவுள் கைவிட்டு விட்டார?

 17. வேந்தன் சொல்கிறார்:

  இலங்கை பிரச்னை தீர எல்லோரும் கடவுளிடம் வேண்டுங்கள் என்று சொன்னவர் தான் இந்த ‘சொக்க தங்கம்’. தானும் அரசியலில் இருக்கிறோம் என்று காட்டுவதற்காகவே ஈழ பிரச்னையை பற்றி இப்போது பேச வந்துவிட்டார் இந்த ‘வாஞ்சிநாதன்’.

  //தமிழர்களுக்காக தன் வாழ்க்கையையே அர்பணித்து கட்சி நடத்துவதாக சொல்கிற விஜயகாந்த் போன்றவர்கள், தமிழக மக்களில் மிக பெரும்பான்மையான உழைக்கும் மக்களான மீனவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கைத் தரம், முறை எப்படி இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளாமல், ‘சாவு வீட்ல பொணமாகவும்-கல்யாண வீட்ல மாப்பிளையாகவும்’ இருக்க வேண்டும் என்கிற சினிமாக்காரர்களின் விளம்பர மனோபாவதில் இருந்து வெளிவராதவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் தமிழக மீனவர்கள் அணிகிற குல்லா என்று ஒன்றை தன் தலையில் வைத்திருக்கிறார்.//

  இதை படித்தாலாவது விஜயகாந்த் ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் சுரணை வரவேண்டும்.

  சினிமாக்காரனுக்கே உரிய காமெடியை விஜயகாந்த் அரசியல் மேடையிலும் குல்லாபோட்டு காட்டியதை இக்கட்டுரை நமக்கு காட்டுகிறது.

 18. TAMIL RAJENDIRAN சொல்கிறார்:

  EEZHA THAMILARKALUKKU PERUTHAVI PURINTHA MGR-AI INTHA SOOLALIL KOCHAIPADUTHTHAAMAL IRUNTHIRUKKALAAM…

 19. Pingback: ஆமோகமான ஆப்பு; யாருக்கும் வெட்கம் இல்லை | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s