விநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே


https://mathimaran.files.wordpress.com/2008/09/truth-31.jpg

விநாயகன், பிள்ளையார், கணபதி, கணேசன் இப்படி பல்வேறு புனைப் பெயர்களில் இருக்கிற கலவர நாயகன் தமிழகத்திற்கு எப்போது வந்தார், என்பது பெரும் விவாதமாகத்தான் இருக்கிறது.

மதவாதிகள், ஜாதிய அபிமானிகள் தங்கள் மதத்தை, ஜாதியை, கடவுளை மிகப் பழமையானவர், பழமையானவை என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் பெருமை கொள்வார்கள்.

அப்படித்தான் விநாயகனை வழிபடுகிற, வழிபட பரிந்துரைக்கிற இந்து கண்ணோட்ட ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், 5 நூற்றாண்டு என்றும் இல்லை அதற்கு முன்பே 2 நூற்றாண்டிலேய வந்து விட்டார் என்றும் பெருமை பட்டுக் கொள்கிறார்கள். (’கடவுள் கொண்டுவரப்பட்டவர்‘ என்பதை அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்)

சைவசமயத்தின் கட்டுக்கதையான பெரியபுராணத்தை சேக்கிழர் எழுதுவதற்கு காரணமாக இருந்தது, சுந்தரரின் பாடல்தான் என்று சொல்கிறார்கள். சுந்தரருக்கு அது எப்படி தெரியும் என்றால், அவருக்கு ஒரு கல்லு பிள்ளையார் அந்தக் கதையை சொன்னதாக விட்டலாச்சாரியார்பாணியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் பிள்ளையார் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

வட இந்தியாவில் ஏன் முதலில் விநாயகன் அவதரித்தார் என்பதை தெரிந்து கொண்டால் அவர் தமிழகத்திற்கு எதற்காக வந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

மகாவீரரின் சமணமும், அதன் பிறகு புத்தரின் எழுச்சியும் பார்ப்பன வேதங்களை, வேத மதத்தை அதன் ஜாதிய கண்ணோட்டத்தை பொத்தல் ஆக்கியது. பிறப்பால் எவனும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை என்று இந்து மத அல்லது வேத மத எதிர்ப்பாக வீறு கொண்டு நின்றது பவுத்தம். புத்தருக்கு பிறகும் அவரின் சீடர்களால் இந்தியா முழுக்க இந்த அலை ஓயாது பார்ப்பனியத்திற்கு எதிராக அடித்துக் கொண்டே இருந்தது.

அதன் தாக்கத்தால்தான் தமிழகத்து திருவள்ளுவரும்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

என்று வேத மதத்தின் மீது காறி உமிழ்ந்தார்.

பவுத்ததின் இந்த அலை, பார்ப்பனியத்தை நிலை குலைய வைத்தது. பார்ப்பனியத்தை காப்பதற்காகத்தான் பெருமாள் பத்து அவதாரங்களை எடுக்கிறார். சிவன் மனித உருவம் (பார்ப்பன) கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

ஆனாலும் பெருமாளும், சிவனும் வீதியில் இறங்கி பக்தர்களோடு நெருக்கமாக இருக்க ஆகம விதிகள் இடம் தரவில்லை. அப்படி இடம் தருவதாக மாற்றிக் கொண்டால், பிறகு அவர்களின் மீதுள்ள ஒரு பயம் கலந்த பக்தி அற்றுப் போகும்.

அல்லது பார்ப்பனர்களின் தலையீடு இல்லாமல் நேரடியாக கடவுளை வழிபட வேண்டிய முறை உண்டாகும் என்பதால், பவுத்தத்தை எதிர் கொள்ள அதுவரை இல்லாத முறையில் ஒரு புதிய ஜனரஞ்கமான கடவுள் தேவைப்படுகிறார்.

அதன் பொருட்டு பவுத்ததிடம் இருந்து இந்து மதத்தை மீட்க, தோழமையான, யார் வேண்டுமானாலும் தொட்டு உருவாக்க, வழிபட, எங்கு வேண்டுமானாலும் வைத்து புழங்க, நிறுவ ஒரு கடவுளாக உண்டாக்கப்பட்டவர்தான் விநாயகர்.

அதனால்தான் விநாயகர் அரசமரத்தடியிலும் அமர்ந்திருக்கிறார். அரசமரம் என்பது புத்தருக்கு உரியது. அரசமரத்தின் இன்னொரு பெயர்தான் போதி மரம்.

விநாயகர் என்ன காரணத்திற்காக உண்டாக்கப்பட்டாரோ அதை அவர் சிறப்பாக நடத்தி முடித்தார்.

(சைவர்களிடமும் வைணவர்களிடமும் பேதமிருந்தாலும் அவர்களிடம் விநாயகனை வழிபடுவதில் மட்டும் ஒரு ஒற்றுமையை பார்க்க முடியும்.)

அதன் பிறகு எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள், பின் தங்கிய மக்கள் ஜாதிய ஒடுக்குமுறையை கண்டித்து இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு குறிப்பாக இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார்களோ அப்பொதெல்லாம் விநாயகர் அவர்களை போய் தடுத்தாட் கொள்வார்.

அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலை வைக்க அவர்களுக்கு அதிக முன்னுரிமை தருகிறார்கள். அதை இஸ்லாமியர்கள் வீதிகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கலவரம் செய்வதற்கு அவர்களையே பயன்படுத்துகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட இந்துக்களின் குடியிருப்புகளின் வழியாக செல்ல மறுக்கிற இந்துக் கடவுள்களின் ஊர்வலம், இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் வழிபாட்டுத் தளங்களின் வழியாக விநாயகனின் ஊர்வலம் கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்று இந்துவெறியர்கள் அடம்பிடிப்பதின் உள்நோக்கம் கலவரத்தை மனதில் கொண்டே.

விநாயகன் தீண்டாமையையும், பார்ப்பனியத்தையும் பாதுகாப்பதற்காக ‘தோழமையோடு‘ எந்த கலவரத்தையும் செய்யத் தயாரானவன்.

விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன்.

***

2008 ஆம் ஆண்டு விநாயகன் விஜயத்தின்போது ’சிந்தனையாளன்’ இதழுக்காக எழுதியக் கட்டுரை. மீண்டும் பதிவிட்டிருக்கிறேன்.

***

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

10 Responses to விநாயகனே வினை செய்பவனே – வேழ முகத்தோனே வீண் வம்பனே

 1. மதியே,தமிழ் பதியே, நின் கதியே சரணம். இன்று தான் முதலில்,உங்கள் வலைத்தளம் வந்தது காலம் செய்த சதி.இனி நதி யாய் தொடர்வேன்.உங்கள் பதிவுகள் வெகு அருமை,உங்கள் செயல் “சமூக தொண்டு”,தினமும் பார்க்கும் வலைத்தளத்தில் உங்கள் தளமும் இனி உண்டு.தொடருங்கள் நண்பரே.

 2. திருவனந்தபுரத்தான் சொல்கிறார்:

  //(சைவர்களிடமும் வைணவர்களிடமும் பேதமிருந்தாலும் அவர்களிடம் விநாயகனை வழிபடுவதில் மட்டும் ஒரு ஒற்றுமையை பார்க்க முடியும்.)//

  எங்கே பார்த்தீர்கள்?

  தமிழகத்தில் வைணவர்களால் நடத்தப்படும் கோயில்களில் வினாயகர் கிடையாது. வினாயகரை, முருகனை, சிவனை, வணங்குவது கிடையாது.

  சைவரும் அவரோடு சேர்ந்து இந்து மதஒருமைப்பாட்டைவிரும்புவோரும் சேர்ந்து கட்டி நடத்தும் கோயில்களில் எல்லாம் உண்டு. (எடு – சிவா-விஸ்ணு கோயில் வடபழனி).

  இப்படி வழிபடுவோர் வைணவர் என்று அழைக்கப்படுவதில்லை. அவர்கள் பொதுவாக இந்துக்கள் என அழைக்கப்படுவர். தமிழகத்தில் இவர்கள்தான் அதிகம்.

  மாற்றார் நடத்தும் எந்த கோயிலையும் வைணவர்கள் ஏறெடுத்துப்பார்ப்பதில்லை.

  இது நிற்க.

  வினாயகரை பாமரத்தெய்வமாகக் காட்டவே உருவாக்கினர் என்பது எனக்கு தவறாகத் தெரியவில்லை.

  ஒரு மதம், தன் உள்ளோக்கு பண்ணும் போது, தன் தவறைக்களைய செய்த ஒரு வழியாகவே இதை நான் காண்கிறேன்.

  விஷ்ணுவையும் சிவனையும் பார்ப்பனர்கள் எடுத்துக்கொள்ள, சுடலைமாடன் மட்டும்தானா பாமரத்தமிழருக்கு?என்று கேட்டு செய்த சுயபரிசோதனை விளைவுதான் இப்பிள்ளையார்.

  காலப்பரிமாணங்களில் கொள்கை மாற்றங்களைச் செய்துவருவது இந்துமதத்தின் சிறப்பனெச் சொல்கின்றனர். இப்பிள்ளயார் ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.

  நாம் எவ்வளவுதான் நாத்திமாக இருப்பினும், மதம் மக்களின் தேவை எனப்பார்க்கும்போது, அது சரியாக செல்கிறதா எனப்பார்ப்பதும் நம் கடமையாகிறது. எனவேதான், தமிழுக்கு ஏற்றம் தேடப்பட்டு சிதம்பரம் பார்ப்பனரோடு புகழ்ச்சல் ஆகிறது.

  ஒரு இசுலாமிய போலீசுஅதிகாரி, இந்துக்கோவில் திருவிழாவை பந்தோப்ஸ்தை சரிவர செய்வது போல. அவர் அங்கே இந்துக்களை மக்கள் எனப்பார்க்கிறார். அதைப்போலவே நாமும் பார்க்கவேண்டும்.

  பார்ப்பனரின் பலர் அம்மக்களின் மதத்தேவையை நன்கு கவனிக்கவேண்டும் அன அவாக்கொண்டவரே. அவர்தம் முயற்சியின் விளைவே வினாயகர்.

  பார்ப்பனரின் மற்றும் பலர் நீஙகள் அவ்வப்போது சொல்லிவரும் கயமைத்தனங்கள் செய்யதவர். செய்யத்துடிப்பவர். அவர்களை அடையாளம் கண்டுகொண்டு எச்சரித்தல் நலமே.

 3. மகிழ்நன் சொல்கிறார்:

  தோழர் பதிவிட்டுருப்பதைப்போல, மும்பையிலும் தாழ்த்தப்பட்ட மக்களால் கையாளப்பட்டுவரும் நூறு ஆண்டுகளுக்கு பழமையான அமைப்பால் கிட்டத்தட்ட 97 ஆண்டுகளாக பிள்ளையார் சதுர்த்தி நடத்தப்பட்டு வருகிறது…

  எனது சிறுபிள்ளை பிராயத்திலிருந்து இந்த விழாவை கவனித்து வருகிறேன்.எனக்கும் 24 வயது ஆகிறது…

  செய்வதெல்லாம் அட்டூழியம்…

  ஊரிலிருந்து பெண்களை கரகாட்டம் என்ற பெயரில் அழைத்து வந்து விடலைகளுக்கு ஆபாச நடன விருந்து அளிப்பது…..

  கணவன் முன்பாகவே நடனமாடும் பெண்ணைச் சீண்டுவது…

  அம்பேத்கரை மதிப்பதாக கூறிக்கொண்டு, அம்பேத்கர் ஒதுக்கிய இந்து மதக்(கல்/மண்)கடவுளை பத்து நாட்கள் பிரச்சாரம் செய்வது மிகவும் கேவலம்.

  கடலில் போட தயாராகும் பதினொறாவது நாளில் (இங்குதான் அம்பேத்கர் வழியை பின்பற்றுகிறார்களோ என்னவோ) பகல் பன்னிரெண்டு மணி முதல் ஐந்தறிவு மாட்டின் மீது 100 கிலோ அளவிலான சிலையை ஏற்றி நாள் முழுவதும் துன்புறுத்தி மறுநாள் அதிகாலை 2 மணி அளவில் கடற்கரைக்கு கொண்டு செல்கின்றனர்… ஆறாவது அறிவு முழுமையாக வளர்ந்திடாத நம் தமிழ் அறிவாளிகள்.(மிருகவதை தடுப்பு அதிகாரிகள் எங்கு பேன் பார்த்து கொண்டிருப்பார்களோ தெரியாது…)

  சிலைகரைப்பு நாளில் நம் இளைஞர்கள் அடிக்கும் கூத்துக்களை பார்க்க வேண்டுமே, முழு அளவில் மாது, தன்னுடைய திறமைகளை ஏதாவது பெண் கவனித்து விடாதா என்ற ஆட்டம் அப்பப்பா, அக்கப்போர் தாங்காது…..

  அதோடு இஸ்லாமிய மசூதி வந்துவிட்டால் அங்குதான் ஆடவேண்டும் என்று அடம்பிடித்தல் வேறு.

  இதில் ஓராண்டு, அந்த பகுதியில் ஆட விடமாட்டோம், பன்னிரெண்டு மணியை கடந்துவிட்டது என்று காவல்துறை சொன்னதும், பிள்ளையாரை நடுத்தெருவில் விட்டுச் சென்றது தனிச்சிறப்பு….

  சுறுக்கமாக சொல்ல வேண்டும் கொண்டாட்டம் என்னும் பெயரால் மதுக்கடைகளின் கூட்டத்தை நிரப்பவும், தனிமனித உள்ளார்ந்த பாலியல் தேவைகளை கொஞ்சம் உரசிப்பார்ப்பதற்காகவே இந்த திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன….

  (மும்பையில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு, தசரா சமயத்தில் நடக்கும் இரவு தாண்டியா(கோலாட்ட) அதிகமாக திருமணத்திற்கு முன்பான உறவுகள் நிகழ்வதாக போன ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது….)

 4. Jawahar சொல்கிறார்:

  இது ஒரு புதுக்கோணம். சுவாரஸ்யமாக இருக்கிறது. ஊர்வலத்தில் கலவரங்கள் நடப்பது/நடத்தப்படுவது பல ஆத்திகர்களே கண்டிக்கிற விஷயம்.

  http://kgjawarlal.wordpress.com

 5. gopi சொல்கிறார்:

  janmana jaayathe sudraha karmana jaayathe dwijaha endra veda slogam thaan antha thirukural.unakku oru mayirum theriyavillai endral su..yum vaayayum mudikondu povathu.

 6. தோழர்வலிப்போக்கன் சொல்கிறார்:

  விநாயகன் வினை தீர்ப்பவன் அல்ல. வினை செய்பவன்.மறுப்பதற்கு எவருண்டோ………..

 7. appu சொல்கிறார்:

  அடடா விநாயகருக்கு இவ்ளோ விளக்கமா ?
  ஒரே வரி போதுமே…
  பார்வதியோட அழுக்குதான விநாயகர்…

 8. shanmuganantham.e சொல்கிறார்:

  mikavum sirantha katturai. nandri thozhar.

 9. amalorpavanathan சொல்கிறார்:

  Very good analysis

 10. Pingback: விநாயகனின் ‘மர்ம’ விளையாட்டுக்கள் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s