தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

https://i2.wp.com/piccat.com/pictures/1/sleeping_kitty.jpg

மோசமான நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிற தமிழர்களின் மேல் அக்கறை கொண்டு, அவர்களை மேன்மையுறச் செய்ய, தமிழர்களை எழுச்சி பெறச் செய்ய, தமிழ் அறிஞர்கள் அல்லது தமிழ் இலக்கிய வழி வரலாற்று அறிஞர்கள், கால எந்திரத்தில் தமிழர்களை ஏற்றி – ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கும் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றனர்.

‘இப்போது நீங்கள் மன்னராட்சிக் காலத்திற்கு வந்திருக்கிறீர்கள். அதோ தெரிகிறதே பிரம்மாண்டமான மாளிகை, அது நீங்கள் கட்டியதுதான். அதோ அந்த மாளிகைக்குள் ஒருவர் கம்பீரமாகச் செல்கிறாரே, அவர் யார் தெரிகிறதா? அவர்தான் மன்னர். அந்த மன்னர் யார் என்று அடையாளம் தெரிகிறதா? நன்றாக உற்றுப் பாருங்கள். நீங்கள்தான் அது. இப்படி நாட்டையே கட்டி ஆண்ட நீங்கள்தான், இந்த நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறீர்கள்’ என்று கால எந்திரத்தை இயக்கும் அறிஞர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.

இந்த கால எந்திர வண்டி, ஒரு தமிழ் வண்டியாக மட்டும் இல்லாமல், ஜாதி மாநாட்டிற்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் லாரி போலும் செயல்படுகிறது.

இன்று, ஜாதி சங்கத் தலைவர்களிலிருந்து, ‘ஜாதிக்கு அப்பாற்பட்டது எங்கள் கட்சி’ என்று சொல்கிறவர்கள் வரை, ‘நாங்கள்தான் இந்த நாட்டை ஆண்ட மன்னர்கள்’ என்று சொல்கிறார்கள்.

வெறுமனே சுயஜாதி, உணர்வாளர்கள் நிலையில் இருந்து மட்டுமே பிரச்சனைகளை அணுகுகிற, ‘நாங்கள் தான் மூவேந்தர்கள்’ என்று பெருமை பேசுகிற ஜாதிக்காரர்கள் மாதிரியே, வரலாற்று ஆய்வாளர்களாக அவதரிக்கிற அறிஞர்களும் கடைசியில் சுயஜாதிப் பிரியகளாகச் சுருங்கிப் போகிறார்கள்.

ஜாதி உணர்வாளராக இருக்கிற எந்த ஜாதிக்காரரும், தன் நெருங்கிய நண்பராக இருக்க அல்லது திருமண சம்பந்தம் செய்து கொள்ள தன் ஜாதிக்காரராக மட்டும் இருந்தால் போதாது, தன்னைப் போல் வசதியுள்ளவராக, படித்தவராக அல்லது நடுத்தர வர்க்கத்தினராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பது போலவே, உழைக்கும் மக்களாக இருந்தோம் என்று சொல்வதை விட, மன்னராக இருந்தோம், மேட்டுக்குடியாக இருந்தோம் என்று சொல்வதிலும் ஜாதிய உணர்வோடு வர்க்க உணர்வும் சேர்ந்தே இருக்கிறது.

இந்து மத ஜாதிய எதிர்ப்பாளராக அம்பேத்கரிய, பெரியாரிய தத்துவப் பின்னணியில் செயல்படுகிற / விரும்புகிற இளைஞர்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை, இந்த மன்னர் சிந்தனை ஏற்படுத்துகிறது. அவர்களை சிந்தனை ரீதியாகப் பின்னோக்கி இழுக்கிறது. ஏன் இந்த மன்னர் மோகம் அல்லது மேட்டுக்குடி மோகம்? இதனால் இந்த மக்களுக்குச் சாதகமாக என்ன நிகழப் போகிறது? இப்படியாக இந்த மக்களின் எதிரிகள் என்று யாரைக் காட்டப் போகிறார்கள்?

‘‘சேரன், சோழன், பாண்டியன் என்று வாழ்ந்த தமிழன்வீரப்பரம்பரைக்குச் சொந்தக்காரன்’’

இது, ஜாதிக்குள்ளும், ஜாதியைக் கடந்தும், எல்லோர் வாயிலும் வரும் வசனம்.

பல்லவன் முதல் வெள்ளையன் வரை பலபேர் ஆண்டிருக்கிறான் தமிழனை. அப்புறம் எங்கிருந்து வீரப் பரம்பரை?

ஒரு மார்கழி மாதக் குளிர் இரவில், கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களை, குழந்தைகளோடு கொளுத்திக் குளிர் காய்ந்தார்கள் தமிழர்கள்.

குளப்பாடி பொதுக்குளத்தில் குளித்த தாழ்த்தப்பட்ட தமிழ் குழந்தைகளை மின்சாரம் பாய்ச்சிக் கொன்றார்கள் தமிழர்கள்.

மேலளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட, ஏழு தாழ்த்தப் பட்டத் தமிழர்களின் கழுத்தை அறுத்துக் கொன்றார்கள் தமிழர்கள்.

திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களை பீ தின்ன வைத்தார்கள் பச்சைத் தமிழர்கள்.

ஆம், சேர, சோழ, பாண்டியன் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக தமிழர்களின் வீரம், இப்படித்தான் அறியப்பட்டிருக்கிறது.

இதுதான் வீரப்பரம்பரையா?

‘‘நம் முன்னோர்களான மூவேந்தர்கள் காலம் தொட்டு தமிழர்களுக்கென்று தனி கலாச்சாரம் இருக்கிறது’’

இந்த வசனமும் ஜாதி மதத்திற்குள் புகுந்தும் தாண்டியும் கேட்கிறது.

கல்யாணம் முதல் கருமாதி வரை பார்ப்பன மயமாகிக் கிடக்கிறது.

ஜாதிக்கொரு பழக்கம், ஜாதிக்கொரு கடவுள். அதற்குப் பெயர் சிறு தெய்வம்.

தமிழர்களின் பெரும்பகுதியை ஒதுக்கி-பள்ளர், பறையர், சக்கிலியராக்கி, ‘தொட்டால் பார்த்தால் தீட்டு’ என்று அவமானப்படுத்துவது.

ஊருக்கு வெளியே சேரி என்று ஒதுக்கி வைப்பது.

சைவம் தழைத்தோங்கிய மூவேந்தர் காலம் முதல் இன்று வரை இந்த ‘ஆச்சாரமே’ கலாச்சாரமாக அறியப்பட்டிருக்கிறது.

இப்படி மன்னர் பெருமை பேசுவது, தமிழ்ப் பெருமை என்பதாக ஆரம்பித்து, பிறகு அது அவர்கள் திட்டமிட்டபடியே சரியாக ஜாதிப் பெருமையில் வந்து முடிகிறது.

ஆம், தமிழ் மக்களின் தொன்மப் பெருமை என்று ஆரம்பித்து, அதற்கு சரியான ஆதாரம் கிடைக்காததால், யூகித்து, யூகித்து கடைசியில் மக்களின் பெருமை எல்லாம் மதப் பெருமை அல்லது சைவப் பெருமை என்று வந்து, ‘சிவனும், முருகனும், திருமாலும் தமிழ் கடவுளே’ என்று உரிமை கொண்டாடி கடைசியில், ‘மன்னன் பெருமையே மக்கள் பெருமை’. ‘மன்னனின் சீரும் சிறப்புமே மக்களின் சீரும் சிறப்பும். அந்த மன்னனே மக்கள்’ என்று முடிவு செய்து, ‘மன்னனாக இருந்த மக்கள் எந்த மக்கள் தெரியுமா?’ அது எங்கள் ஜாதி மக்கள் என்று, ஆய்வு செய்தவர் என்ன ஜாதியோ, அந்த ஜாதியை சொல்லித் தீர்ப்பளிப்பது.

பார்ப்பனர், செட்டியார், ரெட்டியார், உடையார், பிள்ளைமார், முதலியார் இவர்கள் பெரும்பாலும் தங்களை மன்னர் பரம்பரை (ஆண்ட பரம்பரை) என்று சொல்லிக் கொள்வதில்லை.

ஏனென்றால், இவர்களுக்குக் கீழ், ஜாதிப்படி நிலையில் பல ஜாதிகள் இருப்பதே அவர்களுக்கும மரியாதைக்குரிய விஷயமாகப் படுகிறது.

பிற்படுத்தப்பட்ட ஜாதிக்குள் மன்னர் பெருமையைப் பேசுபவர்கள் பெரும்பாலும் – வன்னியர், நாடார், தேவர் சமூகத்தவரே.

பார்ப்பனர், பார்ப்பனரல்லாத ‘உயர்’ஜாதி இந்துக்களுக்கு முன்பு தன்னை மன்னர் பரம்பரை என்பதும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னால் தன் ஜாதிப் பெருமை பேசுவதும்தான் இவர்கள் வழக்கம்.

அதே போல் தாழ்த்தப்பட்ட மக்களிலும், மன்னர் பெருமை பேசுகிற மனோபாவம் எழுந்திருக்கிறது.

இந்த மனோபாவம், வெறுமனே ஜாதி உணர்வாளர்கள் மத்தியில் மட்டுமில்லை, ‘ஜாதி வேறுபாடுகளைக் களைய வேண்டும்’ என்று சொல்பவர்கள் மத்தியிலும் இருப்பதுதான் வேதனைக்குரியது.

இந்தத் தீவிரமான சுயஜாதி அப்பிராயம் என்பது பார்ப்பனீயமே. பார்ப்பனீய ஆதரவே.

எந்த ஜாதிக்காரராக இருந்தாலும், சுயஜாதி அபிமானியாக ஒருவர் இருந்தால், அவர் தனக்குக் கீழ் உள்ள ஜாதிக்காரர்களை கீழானவர்களாகவும், தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்களை மேலானவர்களாகவும் நிச்சயம் நினைப்பார். இதுதான் ஜாதி நிலையின் உளவியலும் செயல்பாடும்.

‘ஜாதி பிறப்பால் உள்ளது. அதன் இழிவும் பிறப்பாலே தீர்மானமானது ’ என்பதே பார்ப்பனீயம்.

‘ஜாதிகள் ஒழிய வேண்டும்’ என்று நினைப்பவர்களுக்கும், எப்படி இதுவே கொள்கையாக இருக்க முடியும்?

சமூக நீதி என்பது மநுநீதிக்கு எதிரானது அல்லது மநுநீதியை தலை கீழாக மாற்றுவது, இதற்குள் சுயஜாதி உணர்வுக்கு இடம் ஏது?

(பார்ப்பனரல்லாதவர்கள் கட்சி, புதிதாக ஒன்றையும் செய்து விடவில்லை. மநு ஸ்மிருதியைத் தலைகீழாக மாற்றினர். அதைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள். மநு, சூத்திரர்களுக்கு எந்த இடத்தைக் கொடுத்தாரோ அந்த இடத்தைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்தார்கள். ஒருவர் பார்ப்பனன்  என்பதற்காகவே மநு அவனுக்குச் சலுக்கைகள் அளிக்கவில்லையா? சூத்திரர்கள் உரிமைகள் பெறத் தகுதி பெற்றிருந்தும் மநு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது சூத்திரர்கள் என்பதற்காகவே சில சலுகைகள் அளித்தால், அதைப் பற்றி குறை கூற முடியுமா? அது அபத்தமாகத் தோன்றலாம். ஆனால், இந்த விதிக்கு உதாரணம் இல்லாமல் இல்லை.

மது ஸ்மிருத்திதான் அந்த உதாரணம். பார்ப்பனரல்லாத கட்சியின் மீது யார் கல்லெறிய முடியும்? பார்ப்பனர்கள் பாவம் செய்யாமலிருந்தால் அவர்களால் முடியும். ஆனால் மநு ஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கும், வணங்கிப் போற்றும் அவர்கள் பாவிகள் இல்லை என்று சொல்ல முடியுமா? மானவ தர்மத்தின் ஏற்றத் தாழ்வுக் கொள்கைக்கு ஒரு சிறந்த சவுக்கடிதான் டாக்டர் பரஞ்சிபேயின் இந்தக் கட்டுரை)

டாக்டர் அம்பேத்கர்

‘ஜாதி பொய்’ என்று நிச்சயமாக உணர வேண்டும். அப்படி உணர்ந்தவர்களால் தான் ஜாதி ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க முடியும். ஜாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்களாக தள்ளப்பட்டிருக்கிற மக்களின் சார்பாக நின்று போராட முடியும்.

அந்த நிலையில் இருந்து போராடியவர்கள்தான் – தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும்.

ஜாதிப்படி நிலையில் முழுக்க அவமானமும், நஷ்டமும் அடைகிற பார்ப்பனரல்லாதவர்கள், சுயஜாதி உணர்வோடு இருந்து கொண்டு, ஜாதிரீதியாக முழுக்க முழுக்க லாபமும், சமூக அந்தஸ்தும் பெறுகிற பார்ப்பனர்களை ஜாதி உணர்வற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் சுயஜாதி அபிப்பிராயத்திற்குக் கொஞ்சமும் இடம் கொடுக்காதவர் டாக்டர் அம்பேத்கர். அதேபோல் தந்தை பெரியாரும். ‘பிறப்பால் ஜாதி எனக்கும் இல்லை; யாருக்கும் இல்லை’ என்பதைத் தெளிவாக உணர்ந்தவர்கள்.

(பெரியாரிஸ்ட்டுகள் என்று சொல்லிக்கொள்கிறவர்களில் சிலர், ஜாதி உணர்வோடு, அதாவது முதலியார் ‘பொரியாரிஸ்டுகள்’ முதலியார் பெரியாரிஸ்ட்டையும், வன்னிய ‘பெரியாரிஸ்டுகள்’ வன்னிய ‘பெரியாரிஸ்ட்டை’யும் தேடி பழகுகிற, அரசியல் ரீதியாக சேர்ந்து செயல்படுகிற மோசடியை  பெரியாரோடு  முடிச்சுப்போட்டு பார்க்கக் கூடாது. அவர்களுக்கும் பெரியாருக்கும் சம்பந்தமில்லை.)

‘எந்த வகையிலும் என்னைவிட உயர்ந்தவன் எவனுமில்லை. நான் யாரை விடவும் உயர்ந்தவனுமில்லை’ என்கிற தொனியில் அவர்கள் வாழ்ந்தால்தான் இந்து மதமும், அதன் உடன்பிறப்பான ஜாதியும் அவர்களைக் கண்டு அஞ்சியது.

https://i1.wp.com/www.arnenixoncenter.org/exhibits/exhibit_images/cats/write_cat.jpg

‘‘எங்கள் ஜாதிக்காரர்கள்தான் மன்னராக இருந்தார்கள்’’ என்பது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம், தமிழர் அடையாளம் தேடி மன்னராட்சியில் அடைக்கலம் புகுவது.

தமிழ்க் கலாச்சாரம், உடை, உணவு, கலை, இலக்கியம் என்று தேடிப்போய், ‘இதோ கண்டு கொண்டோம்’ என்று அவர்களும் மன்னர் பெருமையில் சிலாகித்துப் போவது.

வேற்று நாட்டு அரசர்கள் தமிழ் நாட்டின் மிது படையெடுத்து வந்ததை, ‘ஆதிக்க வெறியர்கள்’ என்று கண்டிப்பது.

தமிழ் மன்னன் குறிப்பாக ராஜராஜ சோழன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் அந்நிய நாட்டைச் சூறையாடினால், ‘தமிழர்களின் வீரம்’ என்று மார்தட்டுவது.

வேற்று நாட்டு அரசன் செய்தால் ஆதிக்க வெறி. தமிழ் மன்னன் செய்தால் வீரமா?

இரண்டும் ஆதிக்க வெறிதானே? இந்த முரண் சிந்தனையின் தொடர்ச்சியாய், தமிழ்நாட்டில் மார்வாடி வட்டிக் கடை வைத்தால் தமிழனைச் சுரண்டுதல்.

தமிழ்நாட்டில் வட்டிக்கடை வைத்து தமிழனைச் சுரண்டி, பர்மாவுக்குச் சென்று வறுமையில் வாடும் அந்த நாட்டு மக்களிடம் வட்டிக்கடை வைத்துச் சுரண்டி – அந்த ஊர் தேக்கு மரங்களைச் சூறையாடி, இங்கு வந்து பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டிக் கொண்டால், அது திரை கடல் ஓடி திரவியம் தேடியதா?

எவன் செய்தால் என்ன? அது சுரண்டல்தானே.

***

‘நீங்கள் நினைப்பது போல், இந்த மன்னர்கள் ஆட்சியை நாங்கள் சொல்ல வில்லை. தமிழன் அடையாளம் அதற்கு முந்திய காலம்’ என்று சொல்லலாம்.

ஒருவேளை ஆரியக் கலப்பில்லாத தமிழர் ஆட்சியை சில ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் சென்று கண்டுபிடித்து, தமிழர் கலாச்சாரம் இதுதான். இதுதான் தமிழர் உடை, உணவு, கலை, பழக்க வழக்கம், கடவுள் என்று சொல்வார்களேயானால், அதில் எந்தத் தமிழனின் உடை, பழக்க வழக்கங்களை நாம் கடைப் பிடிப்பது?

மன்னர் தமிழனின் உடை, பழக்க வழக்கங்களைக் கடைப் பிடிப்பது என்றால், பொன் ஆபரணம், பட்டு பீதாம்பரம், அந்தப்புரம் இவையெல்லாம் நமக்கு யார் தருவது?

இல்லை. அதற்கு அடுத்த நிலையில் இருந்த மந்திரிகள், நிலப்பிரபுக்கள் பழக்க வழக்கங்களையா?

இல்லை. மன்னருக்கும், நிலப்பிரபுவுக்கும் கொத்தடிமைகளாக இருந்த மக்களின் பழக்க வழக்கங்களையா?

ஏனென்றால், சொத்துடைமைச் சமூகமாக மாறிய போதே, மனிதன் பெண்ணை அடிமைப்படுத்தினான். பிறகு நிலமற்றவர்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டான். தமிழ்ச்சமூகம் மட்டுமல்ல, உலகின் எந்தச் சமூகத்திற்கும் இதுதான் நிலை.

இன்னும் சிலர், ஆதித் தமிழனின் அடையாளங்களில் முக்கியமானவை. அவனின் ‘கடவுள்கள்’ என்கின்றனர். சிவன், திருமால், முருகன் தமிழ்க்கடவுள்கள். இந்தக் கடவுள்களை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்து, தமிழர்களின் அடையாளமாக மாற்ற வேண்டுமென்றால், இஸ்லாமியத் தமிழர்களையும், கிறித்துவ தமிழர்களையும், நாத்திகர்களையும், அம்பேத்கர் வழி வந்த பவுத்தத் தமிழர்களையும் எந்த நாட்டுக்கு நாடு கடத்துவது?

இவை எல்லாவற்றையும் விட, இந்து மதவெறி தலைவிரித்தாடுகின்ற இன்றைய நிலையில், குறிப்பாக இஸ்லாமிய, தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துகிற இந்து மதமும், ஜாதியும் அகலக்கால் பரப்பி நின்று ஆணவமாக சிரித்துக் கொண்டிருக்கிற இந்தக் கொடூர நாட்களில், இவைகளுக்கு எதிராக இந்தப் பழம்பெருமை பேச்சை வைத்துக் கொண்டு என்ன செய்வது?

இப்படிக் கேட்டால், ‘மநுநீதிக் காலத்தில் இருந்த ஜாதிய வேறுபாடுகள் மாதிரியா இப்போது இருக்கிறது. எவ்வளவோ மாற்றம் அடைந்திருக்கிறதே, நீங்கள் மட்டும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனுவை உதாரணம் காட்டி அழுகிறீர்களே? என்கின்றனர் தர்க்க அறிவாளிகள்.

இவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் செவிட்டில் அறைவதுபோல் பதில் சொல்கிறார், ‘மநுநீதி என்பது ஒரு கடந்தகால நடைமுறை அல்ல. தற்காலத்தின் இறந்த காலத்தைவிட அது அதிக மெய்யானது. அது, ‘வாழ்ந்து வரும் கடந்த காலம்’. எனவே, எந்த நிகழ்காலத்தையும் போலவும் அது ஓர் உண்மையான நிகழ்கால விஷயம்தான்.’’

***

சமூக சுழற்சிக்குத் தன் உழைப்பையும், உயிரையும் கொடுத்த மக்களை, அவர்களின் பாரம்பரியத்தை, ‘மன்னர்களாக இருந்தவர்கள்’ என்று சொல்வது அவர்களைக் கேவலப்படுத்துவதாகும்.

ஆம், மன்னர்கள், ஜனநாயகம் என்றால் என்னதென்றே அறியாதவர்கள். ஊதாரிகள். தன் சுக போகத்திற்காக, பெருமைக்காக மக்களை மிகக் கடுமையாக ஒடுக்கியவர்கள். அவர்களின் உழைப்பைச் சுரண்டியவர்கள்.

தஞ்சை ‘பெரிய கோயில்‘. தமிழர்களின் அவமானச் சின்னம்

‘கற்களே இல்லாத சோழ மண்டலத்தில் கிரேன் வசதிகளற்ற அந்தக் காலத்தில், கோயிலின் நிழல் கீழே விழாத அளவிற்கு ராஜராஜசோழன் எப்படித்தான் இந்தக் கோயிலைக் கட்டினானோ?’ என்கிற இந்தத் தமிழ்ப் பெருமை எந்த வைகையில் இன்றைக்கு உதவும்?

உண்மையில், அந்தக் கோயிலைக் கட்டுவதற்காக கையளவு கல்லையாவது புரட்டி இருப்பானா ராஜராஜன்?

உழைக்கும் மக்களைச் சுரண்டி அவர்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் கட்டப்பட்ட எந்தக் கோயிலின் கோபுரத்தையும், பிரம்மாண்டமான மதிற்சுவரையும் ஆழ்ந்து உற்று நோக்குங்கள். அதில் கலை அழகு பொங்கு வழியாது. ஆயிரமாயிரம் உழைக்கும் மக்களின் ரத்தமே பொங்கி வழியும்.

நிற்கதியான நிகழ்கால மக்களின் அபயக்குரல்களைக் கேட்பதற்கு உங்கள் காதுகளுக்கு சக்தி இருந்தால், அந்தக் கோயில்களின் ஆயிரம் கால் மண்டபங்களில் இன்னும் அழுது கொண்டிருக்கும் – இறந்த கால மக்களின் அழுகுரலும் கேட்கும்.

கோயில்களின் தீர்த்தமாகத் தருவது, புனித தண்ணீரல்ல. ஆயிரம் ஆண்டுகளாக அழுது கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் கண்ணீர்.

தலித் முரசு 2002 செப்டம்பர் இதழுக்காக எழுதியது

தமிழ்மணத்தில் வாக்களிக்க

தமிலிஷில் வாக்களிக்க

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

46 Responses to தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

 1. Pons சொல்கிறார்:

  It’s really tgoo one anf ofcourse true, But the thing is when it’s going to be changed

 2. madhesh சொல்கிறார்:

  // உண்மையில், அந்தக் கோயிலைக் கட்டுவதற்காக கையளவு கல்லையாவது புரட்டி இருப்பானா ராஜராஜன்?

  உழைக்கும் மக்களைச் சுரண்டி அவர்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் கட்டப்பட்ட எந்தக் கோயிலின் கோபுரத்தையும், பிரம்மாண்டமான மதிற்சுவரையும் ஆழ்ந்து உற்று நோக்குங்கள். அதில் கலை அழகு பொங்கு வழியாது. ஆயிரமாயிரம் உழைக்கும் மக்களின் ரத்தமே பொங்கி வழியும்.

  நிற்கதியான நிகழ்கால மக்களின் அபயக்குரல்களைக் கேட்பதற்கு உங்கள் காதுகளுக்கு சக்தி இருந்தால், அந்தக் கோயில்களின் ஆயிரம் கால் மண்டபங்களில் இன்னும் அழுது கொண்டிருக்கும் – இறந்த கால மக்களின் அழுகுரலும் கேட்கும்.

  கோயில்களின் தீர்த்தமாகத் தருவது, புனித தண்ணீரல்ல. ஆயிரம் ஆண்டுகளாக அழுது கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் கண்ணீர்.

  -தலித் முரசு 2002 செப்டம்பர் இதழுக்காக எழுதியது //

  அப்போ தாஜ் மஹால் .. உலக நினைவுச் சிம்ன்னமா….? இல்லை… பல ஆயிரம் இந்தியர்கள் உயிரை குடித்த கொலை வெறி மாளிகை….!!

  எப்பொழுதும் ஒருதலை பட்சமாக செயல் படாதீர்கள்… அது அழகல்ல…..!!!

 3. வேந்தன் சொல்கிறார்:

  மன்னர் பறம்பரை என்று பெருமை பேசும் பேச்சாளர்களின் செவட்டில் செருப்பால் அடிப்பது மாதிரியான கட்டுரை.

  வருத்தம்: தலித்துகளும், தானும் ஏதோ ஒரு மன்னனின் வாரிசுகளே என்று அவர்களை தேடி அடைக்கலம் அடைதல்.

  நாங்கள் ஆண்டாண்டு காலமாய் உழைத்து உழைத்து ஓடாய் போன கூட்டம் என்று பேசுவதில் பெருமை இல்லை. ”மன்னர் குலம் எனும் அடையாளம் தான் பெருமை” எனும் பார்பனிய புத்தி இவர்களின் எண்ணங்களிலும் ஊடுருவியிருக்கிறது.

  மன்னர்களின்(தமிழரின்) வரலாறு, தமிழரின் வீரமோ, மானமோ உள்ள வரலாறு அல்ல. மாறாக நிலகிழார்களாகவும், சமீந்தாராகவும் ஒடுக்க பட்ட மக்களை ஒடுக்கிய பாவிகளின் கிழிந்த கந்தையான குப்பை வரலாறு என்பதை எளிதில்புரிய வைக்க உதவும் கட்டுரை.

  வர்க்கபார்வையை கொண்டு எழுதும் வரலாறுதான் மக்களின் உன்மையான வரலாறு. தமிழரின் மன்னர் வரலாறு என்பது சாதீயகட்டுமானதின் மீது எழுதப்பட்ட வரலாறு என்பதை புரியவைக்கும் கட்டுரை..

  உங்கள் தோழன்,
  வேந்தன்..

 4. எம். முருகன் சொல்கிறார்:

  மிக சிறந்த கட்டுரை. டாக்டர் பாண்டியன் போன்ற வாய் சவடால் பேர்வழிகளுக்கு சிறந்த அடி.

 5. குழலி சொல்கிறார்:

  தமிழகத்தை ஆண்ட சாதிகளின் கதை(யல்ல நிஜம்)

  தமிழகத்திலே ஆண்ட சாதிகளின் கணக்கையெடுப்பதை விட ஆளாத சாதிகளின் கணக்கை எடுப்பதுவே சுலபம், ஒவ்வொரு சாதிக்காரர்களிடமும் கேளுங்கள் அவர்களின் குலப்பெருமைகளையும் ஆண்ட கதைகளையும் சொல்வார்கள், மீனவர்களை செம்படவர்கள் என்று அழைப்பது உண்டு, அவர்களை போய் செம்படவன் என்று அழைத்து பாருங்கள் செருப்பால் அடிப்பார்கள், தாங்கள் பரதவ குலமென்றும் பரதவ குல ராசாக்கள் ஆண்ட கதைகள் உங்களுக்கு சென்னையிலிருந்து குமரிவரை நீண்டிருக்கும் கிழக்கு கடற்கரை ஊர்கள் முழுவதிலும் கிடைக்கும், மதுரைக்கு சென்றால் அறிவாணந்த “பாண்டிய” நாடார் சுவர்களில் சிரித்துக்கொண்டிருப்பார்.

  மேலும் படிக்க http://kuzhali.blogspot.com/2007/07/blog-post_16.html

 6. Nithi சொல்கிறார்:

  குழலி, மதிமாறன் என்ன சொல்லி இருக்கிறாரோ அதைதான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.
  இப்போது இதை வைத்துக் கொண்டு என்ன செய்யமுடியும்?

  சிங்கள ராணுவம்மீனவர்களை சுட்டு தள்ளுகிறான். இதற்கு மன்னர் கதை எப்படி உதவ முடியும்?

  தாழ்த்தப்பட்டமக்கள் மீது வன்முறை நடத்துகிற வன்னியர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  அதைதடுப்பதற்கு நீங்கள் குறிப்பிடுகிற முறையில் எதாவது வழியிருக்கிறதா? ஜாதி வெறியர்களை திருத்துவதற்கு வழி சொல்லுங்கள். அதை பின்பற்ற தயாராக இருக்கிறோம்.

 7. Dr. V. Pandian சொல்கிறார்:

  முருகன் அவர்களே!
  என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள். தமிழன் என்ற அடையளத்தைவிட எனக்கு எந்த ஒரு சாதி அடையாளமும் இல்லை ஐயா. நேர்மையான விவாதங்களை ஏற்பவன் தான் நான். “சவடால்” என்பதற்கு பொருள் என்ன ஐயா? அதை சற்று விளக்குங்களேன். நான் மதிமாறனை விவாதத்திற்கு அழைத்தேன். நான் எப்போதுமே தயார் தான். இதில் எங்கு சவடால் வந்தது? நிற்க.

  ஜாதி பெருமை பேசும் எவரையும் நான் சாடுகிறேன். அதே நேரம் தமிழனின் பெருமைகளைப் பேசுவது, நமது தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் தான். பாரப்பனர்கள் நம்முடைய அனைத்தையும் அபகரித்துக்கொண்டு, கீழ்மைப்படுத்தி, நமது தன்னம்பிக்கையையும் தளர்த்தினான். எனவே தான், தமிழனை உசுப்பேத்த தமிழனின் பெருமையைப் பேசுகின்றோம். இது தற்காலத் தேவை. தமிழனை ஒன்றுபட வைக்க, இதுவும் ஒரு உத்தி. ஜாதிப் பார்வை இல்லை என்றால் இந்த உத்தி வெற்றி பெரும்.

  அடுத்து பொதுவாகக் கேட்கிறேன். நமது புராதனக் கோயில்களுக்கு செல்லும்போது, நீங்கள் புகழ்வது ராஜ ராஜனையா அல்லது சித்திரங்களை வடித்த சிற்பிகளையா? மன்னனையும் பேசுவார்கள் தான். ஆனால், மிகையாகப் பேசுவது சிற்பிகளின் கலைத்திறத்தையும், கட்டிய உழைக்கும் மக்களின் உழைப்பையும் தான். இதை நீங்கள் மறுதலித்தால் பொய்சொல்கிறீர்கள் என்று தான் பொருள். கலை நுனுக்கத்தோடு நமது வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கும் நான், அதன் பின்னாலுள்ள சிற்பிகளைக் காண்கிறேன். ஆக, அந்தப் பெருமையில் பெரும்பங்கு அதை உருவாக்கிய பெயர் தெரியாத பெருமக்களைத் தான் சேரும். ஆகவே, இந்த வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டாடுவதில் தவறேதுமில்லை.

  இப்படிப்பட்ட நமது உண்மையான பெருமிதங்களை எல்லாம் இது போன்ற வரட்டு வார்த்தைகளால் சாடிக்கொண்டு, விலங்குகளைப் போல வாழ வேண்டுமா? அறிவுள்ள மனித விலங்குகள் தங்களின் அறிவுத்திறனைப் பயன்படுத்த வேண்டும். அதில் மற்றவரைப் புண்படுத்தாத பெருமிதம், வாழ்க்கையின் அங்கம். தவறல்ல. இந்தக் கட்டுரை ஒரு வரட்டுத்தனமானது.

  எந்திரங்களைப் போல எந்த உணர்வுமற்று வாழ்பவன் மனிதனல்லை. மனிதன் தெய்வமல்ல. குறைகளுமிருக்கும், நிறைகளுமிருக்கும். குறைகளைக் குறைத்து, நிறைகளை மிகுப்பது தான் அறிவின் வௌிப்பாடு, செயல்பாடு.

  பழைய தெய்வ நம்பிக்கைகளை மீட்டெடுக்கலாம் என்றால், கிருத்துவனை, இஸ்லாமியனை என்ன செய்வதென்று கேட்டு…. இதென்ன அபத்தம்? அவர்கள் அந்த நம்பிக்கைகளில் அவர்கள் தொடர்ந்தால் என்ன? நாம் இந்து மதத்திற்குத் தான் மாற்று தேடுகிறோம். மற்றவற்றைப் பற்றி அவ்வம்மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

  தலித்துகளுக்கும் பெருமைகள் உண்டு. பேராசிரியர் குணா அவர்களின் நூல்களைப் படியுங்கள். (மதிமாறனுக்கு குணாவைப் பிடிக்காது. குணாவின் அனைத்துக் கருத்துகளோடும் நானும் உடன் படுவதில்லை.) தலித்துகள் பழங்காலத்தில் பேரறிஞர்களாகவே இருந்தனர் என்பதற்கு உண்மையான சான்றுகள் உள்ளன. அதில் முழுவதும் நான் உடன்படுகிறேன். அதை விளக்க இந்தப் பத்திகள் போதாது.

  எனவே, கட்டுரையாளர் சற்று அதிகம் கற்று, சிறுபிள்ளைத்தனமாக இப்படி எழுதுவதைத் தவிர்க்கவேண்டும். தலித்துகள் மேண்மை பொருந்திய மக்களே! அவர்கள் (நிரத்தால்) ஒடுக்கப்பட்டவர்களே தவிர, ஒன்றுமற்றவர்கள் அல்ல, அல்ல, அல்ல!!!!

 8. mannai muthukumar சொல்கிறார்:

  மன்னர் பறம்பரை என்று பெருமை பேசும் பேச்சாளர்களின் செவட்டில் செருப்பால் அடிப்பது மாதிரியான கட்டுரை.

  வருத்தம்: தலித்துகளும், தானும் ஏதோ ஒரு மன்னனின் வாரிசுகளே என்று அவர்களை தேடி அடைக்கலம் அடைதல்.

  நாங்கள் ஆண்டாண்டு காலமாய் உழைத்து உழைத்து ஓடாய் போன கூட்டம் என்று பேசுவதில் பெருமை இல்லை. ”மன்னர் குலம் எனும் அடையாளம் தான் பெருமை” எனும் பார்பனிய புத்தி இவர்களின் எண்ணங்களிலும் ஊடுருவியிருக்கிறது.

  மன்னர்களின்(தமிழரின்) வரலாறு, தமிழரின் வீரமோ, மானமோ உள்ள வரலாறு அல்ல. மாறாக நிலகிழார்களாகவும், சமீந்தாராகவும் ஒடுக்க பட்ட மக்களை ஒடுக்கிய பாவிகளின் கிழிந்த கந்தையான குப்பை வரலாறு என்பதை எளிதில்புரிய வைக்க உதவும் கட்டுரை.

  வர்க்கபார்வையை கொண்டு எழுதும் வரலாறுதான் மக்களின் உன்மையான வரலாறு. தமிழரின் மன்னர் வரலாறு என்பது சாதீயகட்டுமானதின் மீது எழுதப்பட்ட வரலாறு என்பதை புரியவைக்கும் கட்டுரை..

 9. Dr. V. Pandian சொல்கிறார்:

  கணிசமான தமிழக கோயில்கள் World Heritage Sites என்று அழைக்கப்படுகின்றன. அழைத்தவர்கள் ஜாதி வெறியர்கள் அல்லர். உலகப் பெருமக்கள். இவற்றை பராமரிக்க பெரும் தொகையும் செலவிடப் படுகிறது, உலக நிருவனத்தால்.

  John Keats என்ற கவிஞன் தனது உடலைக் கெடுத்துக் கவிபாடினான். இளம் வயதிலேயே இறந்தாலும் பெருங்கவி என்று போற்றப் படுகிறான். அந்த விதத்தில் கண்ணதாசனும் தன்னைக் கெடுத்துக்கொண்டு கவிபாடியவன் தான். (கெட்ட பழக்க வழக்கங்களால் தன்னைக் கெடுத்துக் கொண்டு, பிற்காலத்தில் உடல் நலம் பேண பணமில்லாததால், அதனாலேயே வணிக எழுத்தாளராக மாறியவரும் இவர் என்பதையும் வைத்துத்தான் எழுதுகிறேன்.)

  ஆக, கலை என்று வரும்மோது இழப்புகளும் உண்டுதான். அதனாலேயே அந்த கலைகளை ஒதுக்கி விடுவதில்லை. தாஜ்மஹலைக் வடிவமைத்தவன் கைகளை வெட்டியதாக கேள்வி. இருந்தும் அது ஒரு உலக அதிசயமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், ராஜராஜன், முக்கியமாக உழைத்த பெருமக்களுக்கு “ராஜராஜ” என்று பட்டம் வழங்கியதாகக் கேள்வி.

  ஆக, பகுத்தறிவு என்பது ஒரு விடயம் கலையா இல்லையா என்று முடிவுசெய்வதும், அதன்பின் அதற்குக் காரணமான உண்மையான பங்கீட்டாளரைப் பெருமை படுத்துவதும் தானே ஒழிய, அந்தக் கலையோடு ஒரு அரக்கன் பங்கு பெற்றான் என்பதாலேயே, அந்தக் கலைகளைத் தூற்றுவதில்லை.

  மதிமாறனுக்கு பகுத்தறிவுப்ற்றி இவ்வளவு பாடம் எடுக்கவேண்டியுள்ளது ஒரு கெடு வாய்ப்புதான்.

  மதிமாறனின் இக்கட்டுரை 2002ல் எழுதப்பட்டது. 7 வருடங்கள் கழித்து, மறு வௌியீடு!

  கருத்தில் மாற்றமில்லையா மதிமாறன்?

 10. Dr. V. Pandian சொல்கிறார்:

  தமிழ் நிலம் உலகிலேயே பழமைவாய்ந்த மண். இங்கு ஐந்து திணைகள் இருந்தன. ஒவ்வொரு திணைக்குறிய மக்களுக்கும் தனித்தனி பண்பாடுகளும் இருந்தன. மலைவாழ் மக்களின் பண்பாடுகள், மருதநில மக்களின் பண்பாடுகள், காட்டுவாழ் மக்களின் பண்பாடுகள், நெய்தல், பாலை என்று பலப்பல பண்பாடுகள் தமிழகத்தில் ஆதியிலேயே உண்டு. பொருளாதாரம், பண்பாடு ரீதியான ஏற்றத் தாழ்வுகளும் உண்டு. எனவே, தமிழ் நிலத்திற்கு ஜாதி என்பது இயல்பானது தான்.

  ஆனால், இப்போது நெய்தல் மக்கள் தவிர்த்து எந்த ஒரு திணை மக்களும் அவ்வவர் திணைகளில் வாழவில்லை. எல்லாம் கலந்து தான் வாழ்கின்றனர். பண்பாடுகளும் பெருமளவில் கலந்துள்ளது. ஆக, இனி ஜாதிக்கு வேலை இல்லை. இது ஒழியவேண்டியது தான் தற்கால இயல்பு.

  பார்ப்பனீயம் தீண்டாமையை உருவாக்கியது. ஜாதி பார்வையைக் கூர்மைப் படுத்தி, அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியது. அதன் எச்சங்கள் தான் இன்றும் தொடர்கின்றன. மதிமாறனே கூட, குமுதம் எப்படி ஜாதி வளர்க்கிறதென்று, கட்டுரை வரைந்தார். தமிழக மக்களின் பிரிவினையை பார்ப்பனீயம் இன்றும் விரும்புகிறது.

  ஆக, நம்மைப் பற்றிய வரலாற்று ரீதியான புரிதல் இருந்தால், ஜாதியை உண்மையாகவே ஒழிக்கலாம்.

  மீண்டும் சொல்கிறேன் தமிழ் நிலம் ஒரு பழம்பெரும் நிலம். இதன் சிக்கல்கள் ஆழமானவை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பலவேறு இன மக்கள் இங்கு நுழைந்துள்ளனர். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் ஏறாளம். இதை எல்லாம் முறையாகப் புரிந்து கொள்ளாமல், ஜாதி பார்ப்பவனும், அதை விமர்சிப்பவனும் அரை வேக்காடுகள் தான்.

 11. Pingback: Seidhivalaiyam » Blog Archive » தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

 12. சீ.பிரபாகரன் சொல்கிறார்:

  “மன்னர்கள், ஜனநாயகம் என்றால் என்னதென்றே அறியாதவர்கள். ஊதாரிகள். தன் சுக போகத்திற்காக, பெருமைக்காக மக்களை மிகக் கடுமையாக ஒடுக்கியவர்கள். அவர்களின் உழைப்பைச் சுரண்டியவர்கள்”

  இன்றைய சனநாயக நாட்டில் மட்டும் என்ன வாழுகிறது…

  சனநாயகம் பேசி இன்றைக்கு புதிய மன்னர் பரம்பரைகள் உருவாகிக்கொண்டிருக்கிறது. நேரு குடும்பம், கருணாநிதி குடும்பம், சிந்தியா குடும்பம், அப்துல்லா குடும்பம் என்று ஒரு சில குடும்பங்கள் தான் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. மாவட்ட செயலாளர்கள், மந்திரிமார்கள் குறுநில மன்னர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை மிஞ்சி ஒரு சாதாரண குடிமகன் ஒரு மசுரைக்கூட புடுங்க முடியாத நிலைதான் இன்றைய சனநாயக நாட்டில் நிலவுகிறது.

  சனநாயகத் தலைவர்கள் தன்னுடைய சுகபோகத்திற்காக மக்களை சுரண்டியதைவிட மன்னர்கள் அதிகம் சுரண்டவில்லை என்பது என் கருத்து

 13. பாரதி தம்பி சொல்கிறார்:

  நல்ல கட்டுரை. பழம்பெருமை பேசுவதன் ஊடாக தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ளவே ஆதிக்கசாதியினர் மன்னர் கதைகளை பேசுகின்றனர். அவர்களை எதிர்கொள்ள தங்களூக்கும் ஒரு மன்னர் பிளாஷ்பேக் இருந்ததாக ஒடுக்கப்பட்ட மக்களும் பேசுவது போலிப் பெருமைகளில் திளைக்க வைத்து ஆதிக்கத்தையும், அடிமைத்தனத்தையும் தொடரச் செய்கிறது.

  அன்புடன்
  பாரதி தம்பி

 14. வேந்தன் சொல்கிறார்:

  //அப்போ தாஜ் மஹால் .. உலக நினைவுச் சிம்ன்னமா….? இல்லை… பல ஆயிரம் இந்தியர்கள் உயிரை குடித்த கொலை வெறி மாளிகை….!!
  எப்பொழுதும் ஒருதலை பட்சமாக செயல் படாதீர்கள்… அது அழகல்ல…..!!!//
  அவர் எங்கேயாவது தாஜ்மகால் அழகு..
  சீன பெருஞ்சுவர் அழகுன்னு சொன்னாரா???
  முஸ்லீம்களின் மீதுள்ள உங்கள் நாசுக்கான கோபம் அருமை..

  எல்லா மன்னர்களின் பிரமாண்டமான நினைவு சின்ன்ங்களும் மக்களின் உழைப்பை சுரண்டியதற்க்கான சின்ன்ங்கள் தான்.

 15. வேந்தன் சொல்கிறார்:

  தமிழனை உசுப்பேத்த தமிழனின் பெருமையைப் பேசுகின்றோம். இது தற்காலத் தேவை. தமிழனை ஒன்றுபட வைக்க, இதுவும் ஒரு உத்தி. ஜாதிப் பார்வை இல்லை என்றால் இந்த உத்தி வெற்றி பெரும்.//

  இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகள படுத்தினது போதுங்க..

  உங்க பெருமை பேசும் உசுப்பெல்லாம் தன் சமூகத்திலே வாழும் மக்களிடையே தான் ஆண்ட பறம்பரையினர் காட்டுறானுங்க…
  உங்க தமிழின பெருமையின் இலக்கணம், தன்குல பெருமையின் பின்புலத்தில் வைத்து எழுதியதுதானே…

 16. வேந்தன் சொல்கிறார்:

  //ஆக, நம்மைப் பற்றிய வரலாற்று ரீதியான புரிதல் இருந்தால், ஜாதியை உண்மையாகவே ஒழிக்கலாம்.
  மீண்டும் சொல்கிறேன் தமிழ் நிலம் ஒரு பழம்பெரும் நிலம். இதன் சிக்கல்கள் ஆழமானவை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பலவேறு இன மக்கள் இங்கு நுழைந்துள்ளனர். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் ஏறாளம். இதை எல்லாம் முறையாகப் புரிந்து கொள்ளாமல், ஜாதி பார்ப்பவனும், அதை விமர்சிப்பவனும் அரை வேக்காடுகள் தான்.//

  தமிழின வரலாற்றை புரிந்து கொண்டு, வரலாற்று பொருள்முதல்வாத படியோ, வரலாற்று கருத்து முதல்வாத படியோ, உங்கள் தமிழின பெருமையை வைத்துகொண்டு நம் மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு மாற்றபோகிறீர்???

  நாம் தமிழர்.மன்னர் குல பெருமை நமக்கு இருக்கின்றது என்று மன்னர்களாய் இந்நாட்டை மறுபடியும் ஆள மன்னர் குல சமூகத்தையும், பெரும் நிலகிழார்கள் உள்ள சமூகத்தையும், ஆண்டான் அடிமை சமூகத்தையும் கொண்டுவரபோகிறீர்களா??

  மன்னர் குல சமூகமே பிற்போக்குகள் நிறைந்த சமூகம் என்றும், மக்களை ஒடுக்கிய சமூகம் என்றும், சுரண்டிய சமூகம் என்றும் உணர்ந்து அதன் பெருமை பேசுவது வீண் என்று உங்களை போன்ற அரைவேக்காடுகள் என்று உணரபோகின்றனரோ??

 17. seidhi valaiyam சொல்கிறார்:

  Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

 18. Dr. V. Pandian சொல்கிறார்:

  வேந்தன்!
  நான் மன்னர்களின் பெருமைகளைப் பேசவில்லை. மன்னராட்சி என்பது மனித சமூக பரிமாண வளர்ச்சியில், பல கடந்து சென்ற படிகளில் ஒரு படி. அதன் படிப்பினைகளை ஏற்று, புதிய சமூக கொருளாதாரத்தை, மக்கள் நலம் சார்ந்த அரசை அமைக்க வேண்டும். ஆனால், முறையான படிப்பினைகளை நாம் அடையமுடியாது அலைகிறோம். ஏனென்றால், நமது பார்வைகள் முற்றும் நடுநிலையில்லாமல், ஆராயும் நபரின் குலம் சார்ந்த கண்ணோட்டமாகவே இருக்கின்றன. தலித்தாக இருந்தால் கோபம் குறுக்கிடுகிறது. முஸ்லீமாக இருந்தால் மதம் குறுக்கிடுகிறது. சிறுபாண்மையினராக இருந்தால் அவர்களது அச்சம் குறுக்கிடுகிறது. மேல் சாதி என்றால் அவர்களின் டம்பம் குருக்கிடுகிறது. இதனால், பார்வைகள் மாறுகின்றன. அதனால், ஒருமித்த கருத்து யாரிடமும் உருவாகாமல், பிளவு பட்டு, மீண்டும் நவீன “குடும்ப மன்னராட்சி” கொடிகட்டி பறக்கிறது.

  எனவே ஆய்வு செய்யும் நபர் கட்டறற்ற கண்ணோடு ஆய்வு செய்ய வேண்டும். Objective Reasoning! இல்லை என்றால் வரட்டு வாதங்கள் மட்டுமே மிஞ்சும். மதிமாறனின் ஆய்வுகளில் ஏதோ ஒன்று அவரைப் பிடித்து இழுக்கிறது. அதனால், அவரது கட்டுரைகளில் வரட்டுத்தனம் மிகுகிறது. சமீப காலமாக அவரது முடிவுகள் சர்ச்சைக்குள்ளாகின்றன.

  நான் வரலாற்றைப் பார்க்கச் சொன்னது நோயின் மூலத்தை அறிய மட்டுமே! நோயின் மூலம் தெரிந்தால், மருத்துவம் எளிது, மற்றும் குணமடைவது உறுதி. வியர்ப்பதற்குக் காரணம் அச்சமா, இதயக் கோளாரா அல்லது சுற்றுப்புற வெப்பமா என்று அறிந்தால், இடரிலிருந்து காக்கும் மருத்துவத்தை உடன் கைகொள்ளலாம்.

  வேந்தன், நீங்கள் கேட்டதால் சொல்கிறேன், என்னைப் பொருத்தவரை மார்க்ஸியத்தை விட, நமக்கான கொள்கைக் கையேடு, வள்ளுவம் தான். அதில் மார்க்ஸியம் சொல்லாத, “தனி நபர் அறம்” வலியுறுத்தப் படுகிறது. எதிர்கால உலகம் உய்ய அது தான் உண்மையானத் தேவை. எண்ணிப் பாருங்கள்!

  அது ஒன்று இருந்தால் நாம் யாரையும் அடிமைப்படுத்தவோ, சுரண்டவோ, ஏய்க்கவோ செய்ய மாட்டோம். அது உன்னத உலகைக் கட்டும். அது பொது உடைமை சார்ந்ததாக இருக்கும்.

  ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க,
  சான்றோர் பழிக்கும் வினை.

  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்,
  தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

 19. murugan சொல்கிறார்:

  தமிழ் நிலம் உலகிலேயே பழமைவாய்ந்த மண். இங்கு ஐந்து திணைகள் இருந்தன. ஒவ்வொரு திணைக்குறிய மக்களுக்கும் தனித்தனி பண்பாடுகளும் இருந்தன. மலைவாழ் மக்களின் பண்பாடுகள், மருதநில மக்களின் பண்பாடுகள், காட்டுவாழ் மக்களின் பண்பாடுகள், நெய்தல், பாலை என்று பலப்பல பண்பாடுகள் தமிழகத்தில் ஆதியிலேயே உண்டு. பொருளாதாரம், பண்பாடு ரீதியான ஏற்றத் தாழ்வுகளும் உண்டு. எனவே, தமிழ் நிலத்திற்கு ஜாதி என்பது இயல்பானது தான்……said by Dr.Pandian

  சனநாயகம் பேசி இன்றைக்கு புதிய மன்னர் பரம்பரைகள் உருவாகிக்கொண்டிருக்கிறது. நேரு குடும்பம், கருணாநிதி குடும்பம், சிந்தியா குடும்பம், அப்துல்லா குடும்பம் என்று ஒரு சில குடும்பங்கள் தான் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. மாவட்ட செயலாளர்கள், மந்திரிமார்கள் குறுநில மன்னர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை மிஞ்சி ஒரு சாதாரண குடிமகன் ஒரு மசுரைக்கூட புடுங்க முடியாத நிலைதான் இன்றைய சனநாயக நாட்டில் நிலவுகிறது…………..said by

  சீ.பிரபாகரன்………………………………………………………………………………………………………………..

  I agree these guys points and most of others and some of yours too………;The point here is that one canot make a standard definition for culture, for any race: The culture keep on changing depends on the evironment and depends on many factors. Then we cannot argue that why our kings were developed only temples instead of educational institutes, but we will have to consider people from all over the world what they did ? at that time everywhere the same situation, there is a saying like, ROME IS NOT BULID IN A DAY ! so we have to imagine those things,,;
  Then we had a wonderful university called NALANTHA! where rest of the world not developed in anything i beleive that it was representing the DRAVIDIAN culture……….so there are several things like that………we can still wonder about THANJAUR TEMPLE which is beautiful than ROME , which bulid 1000 years back i guess……i also thought many times that what is the culture for tamilian ? later on i read several books realised that there wont be any standard culture for any race it would change ….now we will have to think how we can eradicate this CAST disease from people …………,?????

 20. எம். முருகன் சொல்கிறார்:

  டாக்டர் பாண்டியன்,
  //ஆராயும் நபரின் குலம் சார்ந்த கண்ணோட்டமாகவே இருக்கின்றன. தலித்தாக இருந்தால் கோபம் குறுக்கிடுகிறது. ///

  டாக்டர் பாண்டியன், தலித்துகள்மீது தாக்குதல் நடத்தும் வன்னியர் தேவர் சாதி பற்றி கண்டித்து நீங்கள் எதுவும் எழுதவில்லையே என்று கேட்டால், மிக மோசடியாக
  ///தலித்தாக இருந்தால் கோபம் குறுக்கிடுகிறது. /// என்று எழுதிகிறீர்கள்?

  நேரடியாக பதில் சொல்லுஙகள்….
  உங்களை ஆதிக்க சாதி பார்ப்பனர்கள் அல்லது மற்றவர்கள் உங்கள் வாயில் மலம் தினித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

  இந்தக் கேள்வியே உங்களை கோபபபடுத்தும். அப்படியனால் நிஜமாக மலம் தினிக்கப்பட்ட தலித் மக்களின் நிலையை உணர்ந்து பாருஙகள்….

  மலையாள வெறியன் கன்னட வெறியன் என்று பேர் சொல்லி திட்டுகிற நீங்கள், தலித்தை கொலை செய்யும் சாதிக்கரரனி பேரைச் சொல்லி வன்னியர் வெறியன் தேவர் வெறியன் என்று ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?

  இதுதான் உங்களின்சாதி உணர்வு.

 21. Dr. V. Pandian சொல்கிறார்:

  முருகன் அவர்களே!
  நான் தலித்துகளின் கோபத்தை தவறு என்று சொல்லவேயில்லை!

  ஆனால், ஆய்வு என்று வரும்போது, இவற்றைத் தவிர்த்து, சீரான மனநிலையோடு, அனுகினால்தான் பயன் உண்டு. நாம் விரைந்து மாற்றம் கண்டு செழுமையுற வேண்டும். எனவே, அறிவுஜீவிகள் ஆய்வு செய்வோர் என்போர் பக்க சார்பற்ற கண்ணோட்டம் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

  அடுத்து, நான் திட்டவேண்டியவர்களைத் திட்டவில்லை என்கின்றீர்கள். சட்டக்கல்லூரியில் நடந்த அடிதடியில், அதிசயமாக, தேவரை தலித் அடித்ததை, நான் வரவேற்றுத் தான் எழுதினேன். எந்த அடிப்படையில்? “அடுத்தவனுக்கு நம்மீது உள்ள அச்சம் தான் நமது பாதுகாப்பு” என்ற அடிப்படையில். கீற்று இணையதள பக்கங்களைப் பாருங்கள்.

  ஆக, என்னிடம் வேடங்கள் இல்லை!

  பார்ப்பான் கூட, தொடர்ந்து நமக்கு துரோகம் செய்வதால் தான், அவர்களைச் சாடவேண்டியுள்ளது. இல்லையென்றால் வீணே திட்டுவதால் பயனென்ன? ஈழத்தைக் காலி செய்தது பார்ப்பனீயம் தானே?

  ஆந்திரனையோ, கன்னடனையோ, மலையாளியையோ கூட நமது உறவுகளாகப் பார்க்கவேண்டும் என்பது தான் நல்லது. ஆனால், தமிழ்த்தேசம் அமைக்க வேண்டி, அவர்களது அடாவடிகளை நமக்கு சாதகமாக்கி, சாமான்ய தமிழனை உசுப்பேத்துகிறேன். அவ்வளவே! சாமான்ய தமிழனுக்கு, தமிழ்த்தேசம் பற்றிய என்னளவு புரிதல் இல்லை என்பதால் தான் இந்த உத்தி. அண்டை மாநிலத்தார் பெருந்தவறு செய்கிறார்கள் என்பது உண்மைதானே!

 22. Dr. V. Pandian சொல்கிறார்:

  இன்னொன்றையும் ஆய்வு செய்யுங்கள்.

  ஒரு சிக்கலைப்பற்றி நம்மால் ஒரே கருத்தையோ, முடிவையோ எட்ட முடியவில்லையே, அது ஏன்?

  நமது கல்வி, அறிவு, புரிதல் ஒரே மாதிரியாக இல்லை.

  நமது தன்னலம், ஆசை போன்ற காரணிகள்.

  நமது பின்புலம் சார்ந்த கண்ணோட்டங்கள்.

  இந்த காரணிகளை ஒவ்வொருவரும் அவதானித்துப் பார்த்தால் பயனுண்டு. ஜனநாயகத்திற்கு இந்த காரணிகளைச் சரிசெய்தால் தான் வழியுண்டு, அனைத்து (பெரும்பண்மை) மக்களுக்கும்.

  இல்லையேல், சர்வாதிகாரமோ அல்லது “குடும்ப மன்னராட்சியோ” தான் வழி.

 23. வேந்தன் சொல்கிறார்:

  நான் மன்னர்களின் பெருமைகளைப் பேசவில்லை. மன்னராட்சி என்பது மனித சமூக பரிமாண வளர்ச்சியில், பல கடந்து சென்ற படிகளில் ஒரு படி. அதன் படிப்பினைகளை ஏற்று, புதிய சமூக கொருளாதாரத்தை, மக்கள் நலம் சார்ந்த அரசை அமைக்க வேண்டும். ஆனால், முறையான படிப்பினைகளை நாம் அடையமுடியாது அலைகிறோம்.//

  நீங்கள் சமுதாயத்தின் பிரச்சனைகளை பாராமல் கண்ணை கட்டி கொண்டு தேடினால் கற்பனாவாதமுள்ள சமூகம் தான் கிடைக்கும்.
  மக்கள் நலம் சார்ந்த அரசு அமைய, மக்களுக்கு நலமில்லாத saசமூக காரணிகளைa தேடுக.அக்காரணிகளை ஒழிப்பதன் மூலமே மக்கள் நலன் சார்ந்த சமூகம் அமையும் என்பதை உணருவீர்.

  //தலித்தாக இருந்தால் கோபம் குறுக்கிடுகிறது//

  ஆமா அடி வாங்குறவனுக்குதான் கோபம் இருக்கும். நின்னு வேடிக்கை பார்த்துட்டு உங்க வலி என்னால புரிஞ்சுக்க முடியுதுன்னு உச் கொட்டி உணர்வுகளை காட்டும் உங்களை போன்றோருக்கு எவ்வாறு தெரியும்???
  தலித் மக்கள் பிரச்சனை ஒரு பிரச்சனைஅல்ல என்று கருதி தமிழ்தேசியம் பேசுவீர்களேயானால் அது ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்துவது போல்.

 24. வேந்தன் சொல்கிறார்:

  திருவள்ளுவர் மீது உயர்மதிப்பும், மரியாதையும் உண்டு.

  மார்க்ஸியம் என்றால் என்ன என்பதை முதலில் படியுங்கள்.
  பிறகு ஒப்பிட்டு பாருங்கள்.மார்க்ஸியத்தை வள்ளுவத்துடன் ஒப்பிட்டு பார்க்க உங்களை போன்ற அரைமேதாவிகளால் தான் முடியும்.
  வள்ளுவம் முழுக்க முழுக்க தனி நபர் ஒழுக்கம் சார்ந்தது. அன்றைய மன்னராட்சி சமூகதின் தத்துவம்.
  மன்னராட்சி பெருமையை பேசவில்லை என்று சொல்லும் நீங்கள் மன்னராட்சி முறையை பற்றியே ”அரசாட்சி” பிரிவில் ”இறைமாட்சி” அதிகாரம் முழுதும், மன்னன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையே விளக்கும் வள்ளுவத்தை, சமூகத்தின் அரசியல் தளத்தில் மாற்ற ஏற்படுத்தும் கையேடு என்று எந்த விதத்தில் சொல்கிறீர் என்று விளங்கவில்லை.
  நம் முன்னே இருக்கும் அனைத்து பிரச்சனைகளுமே சமூக பிரச்சனைகள். தனி நபர் பிரச்சனை என்பதல்ல என்பதை சமூகத்தை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து தெரிந்து கொள்க.
  நமக்கு தேவை சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் கொள்கையே அன்றி சமூகத்தை தனி ஒழுக்கம் ஒழுக்கம் மூலம் தீர்க்கலாம் எனும் தனிநபர் அறம் போற்றும் கொள்கையல்ல.
  இன்றைய சமூகம் பிற்போக்கு சமூகமான மன்னர் சமூகத்தின் அடுத்த சமூகத்தின் அடுத்த சமூகம்.
  ஒரு தேசியத்துகான தத்துவம் என்பது சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற எல்லா தளத்திலும் மனிதம் மாண்புற்று சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற சமூகம் அமைய விஞ்ஞான ரீதியில் தீர்வு அளிப்பதே. வள்ளுவம் அன்றைய மன்னர் சமூக கட்டமைப்பிற்கு சிறந்த அரசியல் தத்துவம். இன்றைய சமூகத்திற்கானதல்ல.
  ஏனெனில் இன்றைய சமூகத்தில்
  ஆட்சியை நடத்துவது தனிநபர் அறநெறியல்ல!!!!
  ஆளும் வர்க்கம்..

  உதாரணம்: வள்ளுவருக்கு சிலை வைத்து அழகு பார்த்த வாழும் வள்ளுவமே என்று பீற்றிக்கொண்டு, உங்களை விட அறத்து பாலை நன்றாய் காய்ச்சி குடித்த முதல்வர் தான் ”தமிழ் நாட்டை” ஆள்கிறார்.
  வள்ளுவ தத்துவத்தின் படிதான் மன்னராட்சி முறைபோல் வாரிசு அரசியலை நடத்தி கொண்டிருக்கிறார்.அவரை போய் ”குடும்ப மன்னராட்சி கொடிகட்டி பறக்கிறது” என்று சாடினால் எப்படி??

  இன்றைய ஈழபிரச்சனையில் வள்ளுவத்தை வைத்து கொண்டு என்ன தீர்வு சொல்ல போகிறீர்?
  ராஜ பக்சேவை வள்ளுவம் பயிற்றுவித்து அறம் சொல்லி கொடுத்து ஆட்சி நடத்த வேண்டும் என்றா??

  காஷ்மீர் பிரச்சனைக்கு என்ன தீர்வு சொல்லபோகிறீர்?
  வெள்ளை ஏகாத்திபத்தியம் விட்டு சென்ற 600 குறுநில மன்னர்களின் ஆட்சியதிகாரத்தில் பெரும்பான்மை முஸ்லீம்கள் வாழும் காஷ்மீரை ஆண்ட இந்து அரசன் அரிசிங்கின் வாரிசையே மறுபடியும் அமரவைத்து, வள்ளுவ தத்துவபடி அம்மன்னன் அறநெறியில் ஆட்சி செலுத்த வேண்டும் என்பதா??

  தமிழ் தேசியம் பேசும் நீங்கள்,
  முதலில் தேசியம் என்றால் என்ன?
  தேசியம் எனும் கட்டமைப்பு யாரால் கட்டமைக்கப்பட்டது?
  தேசியம் எனும் கட்டமைப்பின் காரணம் என்ன?
  தேசிய சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?
  என்பதை தெரிந்து கொள்க.

  தெரியவில்லை எனில் மார்க்சியத்திடம் வாருங்கள்.. மார்க்சியம் உங்களுக்கு விஞ்ஞான முறையில் சொல்லிதரும்.

 25. வேந்தன் சொல்கிறார்:

  நான் தலித்துகளின் கோபத்தை தவறு என்று சொல்லவேயில்லை!

  ஆனால், ஆய்வு என்று வரும்போது, இவற்றைத் தவிர்த்து, சீரான மனநிலையோடு, அனுகினால்தான் பயன் உண்டு. நாம் விரைந்து மாற்றம் கண்டு செழுமையுற வேண்டும். எனவே, அறிவுஜீவிகள் ஆய்வு செய்வோர் என்போர் பக்க சார்பற்ற கண்ணோட்டம் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.//

  நாட்டின் முன்னேற்றம் என்று ஆய்வு என்று வரும் போது ஏன் தமிழன்,தெலுங்கன்,மலையாளின்னு பார்க்கிறீர்ங்க..நாட்டை முன்னேற்றும் மக்களின் உழைப்பில் மொழி இல்லை,இனம் இல்லை.
  இவற்றைத் தவிர்த்து, சீரான மனநிலையோடு, அனுகினால்தான் பயன் உண்டு.

  உங்களை போன்ற அறிவுஜீவிகள் என்போர் ஆய்வு செய்வோர் என்போர் இன சார்பற்ற கண்ணோட்டம் கொள்ள வேண்டும் என்று இனவெறியை தூண்டவேண்டாம், சாதி பாராட்ட வேண்டாம், உழைக்கும் மக்கள் அனைவரையும் எதிரியாக சித்தரிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.

 26. வேந்தன் சொல்கிறார்:

  //கணிசமான தமிழக கோயில்கள் World Heritage Sites என்று அழைக்கப்படுகின்றன. அழைத்தவர்கள் ஜாதி வெறியர்கள் அல்லர். உலகப் பெருமக்கள். இவற்றை பராமரிக்க பெரும் தொகையும் செலவிடப் படுகிறது, உலக நிருவனத்தால்.//

  உலக பெருமக்களுக்கு நம் சாதியமைப்பை பற்றி என்ன தெரியும் பாவம்!!
  நம்மை ஆண்ட வெள்ளைகாரனுக்கே வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் பேசிய பிறகு தான் சாதியின் கொடுமை பற்றியும், தீண்டாமை பற்றியும் கொடுமை பற்றியும் தெரியும்.

 27. வேந்தன் சொல்கிறார்:

  பார்ப்பான் கூட, தொடர்ந்து நமக்கு துரோகம் செய்வதால் தான், அவர்களைச் சாடவேண்டியுள்ளது. இல்லையென்றால் வீணே திட்டுவதால் பயனென்ன? ஈழத்தைக் காலி செய்தது பார்ப்பனீயம் தானே?//

  ஈழத்தை காலிசெய்த இந்தியா தவிர,சிங்களவன், சீனாகாரன், பாகிஸ்தான்காரன் எல்லோரும் கடை பிடிப்பது பார்ப்பனியமா?
  இல்லையேல் ஈழத்தை காலி செய்தது என்ன?

 28. எம். முருகன் சொல்கிறார்:

  ////தமிழ் தேசியம் – ஒழிக பெரியார் – வாழ்க பார்ப்பனியம்////

  என்று நீங்கள் வைத்த தலைப்பு எவ்வளவு பொருத்தமானது. உண்மையானது என்பதை டாக்டர் பாண்டியன் என்கிற தமிழ் தேசியவாதி நிரூபித்திருக்கிறார்.

  பாண்டியன் ஒருவரது உணர்வு மட்டுமல்ல. இப்படித்தான் இருக்கிறார்கள் பெரும்பாலும் தமிழ் தேசியவாதிகள். வெளிபடையாக விவாதித்தால், இப்படித்தான் அம்மணமாக நிற்பார்கள்.

  பெரியாரை விமர்சிக்கிற இவர்கள், தீவிர சாதி உணர்வாளர்களான, தலித் விரோதம் கொண்ட முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்களை விமர்சிக்க மாட்டார்கள். அவர் பெரியாரையே மிககேவலமாக பேசியவர்தான்.

  பெரியார் தொண்டர்கள் இந்த தமிழ் தேசியவாதிகளின் சதிக்கு பலியாகாமல், பெரியார் கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்.

 29. Tenral சொல்கிறார்:

  யாழ் வெள்ளாளர்கள் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு என்று கூறிக்கொண்டு 30 ஆண்டு காலம் தமிழீழ போராட்டம் நடத்தி முடித்திருக்கிறார்கள். ஈழ ஆண்ட பரம்பரையை மட்டும் நீங்கள் ஆதரிக்கும் நோக்கம் புரியவில்லை.

 30. ஏகன் சொல்கிறார்:

  சில வன்னியர்களும் முதலியார்களும் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் செய்கிற தமிழ் தேசிய தமாசுகளை பற்றி நீங்கள் எழுத வேண்டும்.

  பாபாசாகேப் அம்பேத்கரை ஒரு அறிஞராக கூட மதிக்காத முதலியார் பெரியாரிஸ்ட் ஒருவர், உங்கள் மீது கொண்ட காழ்புணர்ச்சியில் தன்னுடைய அல்லகைகளை வைத்துக் கொண்டு இணையத்தில் உங்களுக்கு எதிரான அவதூறுகள் பரப்பி வருகிறார்கள்.

  இப்போது பார்ப்பனர்களை விடவும் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற சாதி வெறியர்களும், தலித் விரோதிகளும்தான் உங்கள் மீது கடும் வெறுப்பில் இருக்கிறார்கள்.

  இன்னும் தமிழ் தேசியத்தின் பேரில் உங்கள் மீது படை எடுத்துவருவார்கள் பல சாதி வெறியார்கள்.

 31. எம். முருகன் சொல்கிறார்:

  உங்கள் மீது இய்க்குனர் சீமான் மிகுந்த மரியாதையாக இருக்கிறார். நான் அவரிடம் பேசும்போது கூட உங்களைப் பற்றி மரியாதையாக குறிப்பிட்டார்.

  மும்பையில் உங்கள் புத்தக விழாவில் அவர் கலந்து கொள்ளக் கூடாது என்கிற நோக்கில் உங்களுககு அவருக்கும் சிண்டு முடியும் நோக்கில் பல அவதூறுகளை பரப்புகிறார்கள் பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் இருக்கிற ஜாதி வெறியார்கள்.

  நீங்கள் தமிழ் தேசியவாதிகளை விமர்சனம் பண்ணி எழுதியதே சீமானை குறிவைத்துதான் என்று அவதூறு பரப்புகிறார்கள்.

  அப்படியானால் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள் என்று பெரியார் சொன்னார். அதை பெரியாரிஸ்டுகள் தீவிரமாக நம்புகிறார்கள. பிரச்சாரம் செய்கிறார்கள்.

  அப்படியானல் விடுதலைப் புலிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான், அதற்காக அவர்களையும் அதன் தலைவரையும் பெரியாரிஸ்டுகள்- முட்டாள்கள், காட்டுமிரண்டிகள் என்று சொல்கிறார்கள் என்று அர்த்தமாகுமா?

  இதுபோன்ற அவதூறுகளை பரப்பும் முட்டாள்கள் இருக்கும் வரை, பார்ப்பனர்களுக்கு பிரச்சினை இல்லை.

  இதுபோல் முட்டாள் தனமாக பேசி பேசிதான் ஈழ மக்களையும், விடுதலைப் புலிகளையும், அதன் தலைவரையும் இவர்கள் ஏமாற்றினார்கள்.

  இந்த பெரியாரிஸ்ட் என்கிற பெயரில் மறைந்து இருக்கிற இந்த முட்டாள் ஜாதி வெறியர்களை, காழ்ப்புணர்ச்சிகாரர்களை அம்பலப்படுத்தி நீங்கள் எழுத வேண்டும்.
  அப்போதுதான் பெரியார் பெயருக்கு இவர்கள் ஏற்படுத்துகிற இழுக்கை துடைக்க முடியும்.

 32. M.G.Bala சொல்கிறார்:

  தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறார் அருளிய சத்தி
  காயந்திரி மந்தரத்திற்கு முதன் முதலாக இசை அமைக்கப்பட்டுள்ளது
  சித்தர் அடியார்கள் சோழ தேச வரலாற்று அன்பர்கள் வாங்கி பயனடையவும்
  தொடர்புக்கு: M G பாலா 9345342424

 33. Pingback: பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல்…. « வே.மதிமாறன்

 34. tamizhpithan சொல்கிறார்:

  தங்களின் பேச்சில் உண்மை சரியாக புலப்படவில்லை. ஜாதி என்ற ஒன்று பழங்கலத்தில் இருந்தது என்பதற்கு தங்கிளிடம் ஆதாரம் இருந்தால் கமயுங்கள்

 35. Pingback: வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா? | வே.மதிமாறன்

 36. ponusamy சொல்கிறார்:

  பறை புத்தி பாதிபுத்தி என்றது இதுதனோ

 37. Pingback: ‘மனு’ விற்கு மறுபெயர் | வே.மதிமாறன்

 38. Pingback: ஆர்.எஸ்.எஸ் சின் தமிழ் உணர்வும் மணியரசனின் தலித் உணர்வும் | வே.மதிமாறன்

 39. சியாமளா சொல்கிறார்:

  //உழைக்கும் மக்களைச் சுரண்டி அவர்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் கட்டப்பட்ட எந்தக் கோயிலின் கோபுரத்தையும், பிரம்மாண்டமான மதிற்சுவரையும் ஆழ்ந்து உற்று நோக்குங்கள். அதில் கலை அழகு பொங்கு வழியாது. ஆயிரமாயிரம் உழைக்கும் மக்களின் ரத்தமே பொங்கி வழியும்.//…அருமை

 40. Pingback: மனுநீதி சோழன்; ராமனின் வாரிசு, பிரகலாதனின் நண்பன் | வே.மதிமாறன்

 41. Pingback: ‘முப்பாட்டிகள்’? | வே.மதிமாறன்

 42. GERSHOM CHELLIAH சொல்கிறார்:

  பாண்டியர், சோழர், சேரர் என்ற பெயரிலும் தமிழன் ஆண்டான்; பல ஊர்களை இணைத்து குறு நிலப்பகுதிகளாக்கியும் தமிழன் ஆண்டான். தமிழ் இலக்கியமும் வரலாறும், கல்வெட்டும் இதற்குச் சான்று கூறுகின்றன.ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளாக, தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் தமிழகம் வந்து, தமிழ் நாட்டை ஆண்டு வருவது வரலாற்று உண்மை. வாய்மொழியாக அவர்கள் தமிழ் பேசுவதை வரவேற்பது போன்று, தாய்மொழியாகத் தமிழைக் கொண்டவர்கள் தங்கள் தாழ்ந்த நிலையிலிருந்து உயரவேண்டும் என்றும் வரவேற்போம். பெரியார் உழைத்தது இதற்குத்தானே; சிலர் இல்லை என்பதால் உண்மையை மறைக்க இயலுமா? இன்று சாதிக் கட்சிகள் வீண் பெருமைக்கு ஆண்ட பரம்பரை என்று கூறுவதை எதிர்ப்பதற்காக, தமிழ் நாட்டைத் தமிழ் மன்னர்களே ஆளவில்லை என்று கூறலாமா? இன்று மக்களாட்சி; இதை வரவேற்கிறோம். ஆனால் அந்த நாள் ஆட்சி, மன்னராட்சி. அந்த மன்னராட்சியில் குறைகள் உண்டு; இன்றைய அளவுகோலைப் பிடித்துப் பார்த்தால், குற்றங்கள் உண்டு. அதற்காக, மன்னர்கள் இல்லை என்றுகூற முடியுமா? அந்த மன்னர்கள் தோல்வியுற்றபோது, துரத்தப்பட்டபோது வாழ்ந்த இழி நிலையை வைத்து, இவர்கள் ஆண்டவர்களே இல்லையென்று கூற இயலுமா? ‘வென்றவன் உரைத்ததுதான் வேதம்’ என்றான நம் நாட்டில், வீழ்ந்தவர்கள், முன்னிலையை நினைந்து எழும்புதல் தவறா? வள்ளுவரைப் போன்று அவர் இனத்துத் தமிழ் மக்கள் வாழ்வில் -எழுத்தில்-அறிவில் வளரவேண்டும். ஔவையார் எத்தனை பேரோ, அறியோம். அத்தனை பேரின் அறிவுடன் அவர் இனத்துத் தமிழ் மக்கள் உயரவேண்டும். நக்கீரர் போன்று குற்றம் குற்றமே என்றுகூறும் துணிவுகொண்ட இனமாய்த் தமிழினம் எழும்ப வேண்டும். இப்படி எண்ணுவதும் தவறா? வரலாற்றை வாசித்தவர்களுக்குத் தெரியும், கல்வியிலும், வர்த்தகத்திலும் தமிழகம் வளர்ந்திருந்ததென்று. வாழ்ந்து கெட்டோர், வீழ்ந்து கிடந்த நாளில், இவர்களை எழுப்ப பலர் முயன்றார்கள்.. ஆங்கில அருட்பணியாளர்கள் தொடங்கி, பெரியார் வரை இப்பணி செய்தார்கள். இதை மறுப்பதும் தவறு; மறைப்பதும் தவறு. ஆங்கில அருட்பணியாளர்கள் கல்வி கொடுத்து உயர்த்தியதால் பொறுக்க இயலாமல் அவர்களைக் குறை கூறுவாரும் உண்டு; பகுத்தறிவு பேசி எண்ணும் திறமையை வளர்த்தியதால் பெரியாரை வெறுப்பாரும் உண்டு. இதனால், ஆங்கிலேயன் வருமுன் இந்தியனின் அறிவு வளரவில்லை என்று கூறலாமா? பெரியார் வருமுன் தமிழன் எண்ணுந்திறன் பெற்றிருக்கவில்லை என எண்ணலாமா?
  ஒரே பாதையில் பயணம் செய்யுங்கள்;
  ஆனால் ஒரு கோணத்தில் மட்டுமே பார்ப்பதை விட்டுவிடுங்கள்.
  நன்றி, நல்வாழ்த்துகள்.
  கெர்சோம் செல்லையா.

 43. Chiyan Vasanth Padyachi சொல்கிறார்:

  All kings of India are vanniyars.Vanniyars ruled Punjab,Gujarath and Bangladesh also.This is not known to others.But truth is Vanniyars ruled china and America

 44. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  தமிழ்த்தேசியம் ஒரு வடிகட்டின தேவ்டியாத்தனம்:

  சீமான்: “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு தனி நாடில்லை. சங்கே முழங்கு சங்கே முழங்கு. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”…. அய்யா வணக்கம்.

  ஜின்னா: அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.

  சீமான்: அய்யா, நான் தமிழில் வணக்கம்னு அழகா சொல்றேன். நீங்க சலாமலைக்கும்னு அரபில சொல்றீங்க. வணக்கம்னு சொல்ல மாட்டீங்களா?.

  ஜின்னா: முடியாதுங்க.. அது எங்க மத நம்பிக்கைக்கு எதிரானது. “ஏக இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்க மாட்டோம்” என அல்லாஹ்வுக்கு நாங்கள் ஷஹாதா எனும் உறுதி மொழி தந்துள்ளோம். ஆகையால் அவனுடைய படைப்புக்களை வணங்க மாட்டோம். தந்தை பெரியாரும் தனது வாழ்நாளில் யாரையும் கையெடுத்து கும்பிட்டதுமில்லை, வணக்கம் சொன்னதுமில்லை.

  சீமான்: ஓ… அப்படீங்களா… இது எங்க தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது.

  ஜின்னா: அப்படின்னா, தமிழர் பண்பாட்டை முழுமையாக பின்பற்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழரா?.

  சீமான்: அப்படியில்லை.. எனது பாட்டன் ராஜ ராஜ சோழன், முப்பாட்டன் முருகப்பெருந்தகை, கரிகால் வளவன், அய்யா வ.உ.சி, அய்யா புலித்தேவன் ஆகியோரின் வம்சாவழியில் வந்தவரெல்லாம் தமிழரே… தமிழகத்தில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழனுக்கே…

  ஜின்னா: ஒரிஜினல் தமிழன் யாருனு எப்படி கண்டுபிடிப்பீங்க?.

  சீமான்: தமிழ் ஜாதிய வச்சுத்தாங்க கண்டுபிடிக்கனும்…

  ஜின்னா: எது தமிழ்ச்சாதினு எப்படி உங்களுக்கு தெரியும்?.

  சீமான்: ஜாதிப்பெயர் தமிழ் பெயரா இருக்கனுங்க.. இல்லாவிட்டால், அது தமிழ்ச்சாதி கிடையாதுங்க… அவர்களுக்கு வாழும் உரிமையுண்டு, ஆளும் உரிமை கிடையாது.

  ஜின்னா: அது சரி… முஸ்லிம்களிடம் ஜாதியே இல்லீங்களே… இஸ்லாத்தை தழுவியதும் ஜாதியை உதறித்தள்ளி விட்டோம்.. அப்ப எங்களுக்கு ஆளும் உரிமை கிடையாதா?

  சீமான்: ஜாதிய உட்டது ஒங்க தப்புங்க .. கிருத்துவர் மாதிரி, மதம் மாறினாலும் ஜாதிய உடாம பத்திரமா காப்பாத்தியிருக்கனும் .. என்ன மாதிரி… நான் செபாஸ்டியன் சீமான். கிருத்துவ நாடார்… உங்களுடைய மத நம்பிக்கையால் ஆளும் உரிமையை இழந்துவிட்டீர்…

  ஜின்னா: பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டெல்லாம் ஜாதியை எதிர்க்கின்றனர். ஜாதி ஒழிகனு சொல்றாங்க … இவர்களுக்கு ஆளும் உரிமையுண்டா?.

  சீமான்: அதெல்லாம் சுத்த புருடாங்க… எந்த பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டாவது முஸ்லிம்க மாதிரி ஜாதிய உட்டாங்களா?… தலித்துக்கு பொன்னு கொடுத்தாங்களா?… அவுங்க ஜாதி மேல கைய வச்சா அருவாள்தான் பேசும்… தமிழ்ச்சாதி இருக்கும் அனைவருக்கும் ஆளும் உரிமையுண்டு.

  ஜின்னா: அப்படியானால், முஸ்லிம்களுக்கும் தமிழ்ச்சாதியில்லாத வெளிமாநிலத்தவருக்கும் ஓட்டுரிமை இருக்குங்களா?.

  சீமான்: அது இருக்குங்க… தங்களை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்குண்டு…

  ஜின்னா: அப்ப ஜாதி அடிப்படையில் தேர்தல் நடத்தினால், முஸ்லிமும் தலித்தும் ஒன்று சேர்வர். முஸ்லிம் ஓட்டெல்லாம் தலித்துக்குத்தான் போகும். தலித் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும். ஆகையால் தலித்துக்குத்தான் சி.எம், நிதியமைச்சர் போன்ற பெரிய பதவிகளனைத்தும் கிடைக்கும். தேவர், வன்னியர், நாடார், முதலியாருக்கெல்லாம் பெரிய பதவி கிடைக்காதுங்க… ஒரு பத்து வருடத்தில், நீங்க கீழ்ச்சாதி ஆயிடுவீங்க…. அவுக மேல்சாதி ஆயிடுவாங்க… இது 15 சதவீத மேல்ஜாதிக்கு ஆபத்தில்லையா?

  சீமான்: அது எந்த ஜென்மத்திலும் நடக்காதுங்க…

  ஜின்னா: எப்படி சொல்றீங்க?

  சீமான்: அவுக வாய்ல பீய திணிப்போம்… தண்டவாளத்துல வெட்டி எறிவோம்.. வீட்ட கொளுத்துவோம்… ஆயிரக்கணக்கான வருஷமா அப்படித்தாங்க அடக்கி வச்சிருக்கோம்….

  ஜின்னா: அவுக ஒட்டுமொத்தமா இஸ்லாத்த தழுவுனா என்ன செய்வீங்க?.

  சீமான்: அது வந்து…. ம்ம்ம்…பே…பே…ஹிஹி….

  ஜின்னா: எங்கள வாழவிடாம செஞ்சா, எங்களுக்கு ஆதரவா பாக்கிஸ்தான், தாலிபான் ஜிஹாதியெல்லாம் வருவாங்க.. இஸ்லாமிய ஏவுகணை அணுகுண்டு எல்லாம் எங்களிடம் இருக்கு. இந்திய ராணுவம் விடுதலைப்புலிகள அட்ரஸ் இல்லாம் செஞ்ச மாதிரி, இந்திய ராணுவமும் பாக்கிஸ்தான் ராணுவமும் ஒன்னா சேந்து ஒங்க தமிழ்த்தேசியவாதிகளையும் 24 மணி நேரத்துலே அட்ரஸ் இல்லாம செஞ்சுடுவோம். அப்புறம் ஈழத்துல ஒங்க தொப்புள்கொடி உறவுகள் ஒரு வேளை கஞ்சிக்கு அலுமினிய லோட்டாவ தூக்கிட்டு க்யூல நிக்கற மாதிரி நீங்க நிக்க வேண்டியதுதான்… ஒங்களால என்ன புடுங்கமுடியும்?

  சீமான்: அடடா… என்னா பாய்… புரியாம பேசறீங்க… அம்மா அய்யாக்கிட்டயிருந்து பெட்டி வந்ததும், தமிழ்த்தேசியத்தெல்லாம் அடுத்த தேர்தல் வரை மூட்ட கட்டி வச்சிடுவோமுங்க.. எங்களுக்கும் கல்லா கட்ட எதாச்சும் ஒரு அரசியல் வேணாங்களா… அத்தேன்.. ஹி.. ஹி.. வரட்டுங்களா… ரொம்ப நன்றிங்க…

 45. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  800 வருடங்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ அடிமைப்படுத்தி ஆண்ட பரம்பரை முசல்மான் அமைதியாக இருக்கிறான் !!. எங்களிடம் கைகட்டி வாய்பொத்தி ஜஸியா வரி செலுத்தி பேண்ட பரம்பரை சண்டபிரசண்டம் செய்கிறான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s