‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு

lotusskull1தாமரை, இந்த அழகிய மலர் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து மதவாதத்திற்கான குறியீடு மட்டுமல்ல. அது ஆபாசத்திற்கும்தான்சொப்பன ஸ்கலிதமா? விந்து விரைதலா? இரவில் வீடு செல்ல தயக்கமா? கை, கால் நடுக்கமா?’ என்கிற பாணியில் ஆண்களின் பலான உணர்வுகளுக்காக மட்டும் பத்தரிகை நடத்துக்கிற, தமிழர்களின்ஹார்ட் அட்டாக்கானகுமுதம் வார இதழ் மனிதர்களை வெறும் ஆண்&பெண் உறுப்புகளாக சித்தரித்து வருவது, அனைவரும் அறிந்ததே.


மனிதர்களின் அந்தரங்க உறுப்புக்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட, நடிகைகளின் இடுக்குகளின் மீதும், சதைகளின் மீதும் பேரார்வம் கொண்ட, நடிகைகளின் உருவங்களை கொண்டுபிழைப்புநடத்துகிற அது, திடீர் என்று நான் தமிழன் என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு வருகிறது.


நடிகர், நடிகைகளின் விபச்சாரங்களைதுப்பறிந்துகிசுகிசுக்களாக எழுதி, அதை தனது வாசகர்களுக்கு செய்திகளாக வெளியிடடுமாமாவேலை பார்த்துக் கொண்டிருந்த குமுதத்திற்கு, ‘பாலுணர்வையும் தாண்டி இப்படி தமிழ் உணர்வு பீறிட்டிக் கிளம்பிவிட்டதே, பரவாயில்லையே என்று நினைத்துவிடாதீர்கள். அதன் தமிழ் உணர்வு, அதன் வர்த்தக நோக்கம் கொண்ட பாலுணர்வை விட கேவலமாக இருக்கிறது.


ஆம், தமிழர்களை ஜாதிரீதியாக அடையாளப்படுத்துகிறது.

ஜாதி வெறியை தூண்டுகிற குமுதத்தின் அந்த கட்டுரைகளை விட அதன் பாலுணர்வு கட்டுரைகள் எவ்வளவோ முற்போக்கானவை என்று சொல்லுக்கிற அளவிற்கு, மிக மோசமானதாக இருக்கிறது, அதன்தமிழன் உணர்வு‘.


அதனால் குமுதம் இப்படிதமிழ் உணர்வுகட்டுரைகளை வெளியிட்டு ஜாதி வெறியை தூண்டாமல், வழக்கம் போல்பலானசெய்திகளை வெளியிடுவதே, அதன் சிட்டுக்குருவி லேகிய வாசகர்களுககு அது செய்கிற பெரிய உதவியாக இருக்கும்.


குமுதத்தின்நான் தமிழன்என்ற ஜாதி வெறி கட்டுரையை கண்டித்து, நிறுத்தச் சொல்லி, மன்னிப்புக் கேட்கச் சொல்லி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசந்தர் என்றகிற பாலா அவர்களின் முயற்சியில், சமூக அக்கறை கொண்ட 14 வழக்கிறஞர்கள் ஒன்று சேர்ந்து, பத்து நாட்களுக்குமுன் குமுத்திற்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

அதன் பிரதியை நமக்கும் அனுப்பி இருக்கிறார்கள். அதன் விவரம் நாளை மறுநாள்.


தொடரும்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

12 Responses to ‘ஜாதித் தொடரை விலக்கு’ குமுதம் மீது வழக்கு

 1. Sivasubramanian சொல்கிறார்:

  பலமுறை கடிதம் எழுதியும், மின் மடல் அனுப்பியும் பதில் வராததால் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். துணை ஆசிரியரைக் கூட தொடர்பு கொள்ள இயலவில்லை. எவரோ ஒருவர் தொலைபேசியை எடுத்து, ஆசிரியர் குழுவை தொடர்பு கொள்ள முடியாது என்றார். அவரிடம் ஏன் இந்த தொடர் வருகிறது என்று கேட்டால், சரியான பதில் இல்லை.

 2. tamizhanban சொல்கிறார்:

  குமுதம் இந்த வாரம் அருந்ததியர்கள் பத்தி எழுதி வெளியிட்டு இருக்கு.

  இதுவரை தேவர் நாடார் முதலியார் என்று எழுதுனவனுங்க இப்ப அருந்ததியர் பத்தி எழுதி இருக்கானுங்க. என்னமா யோசிக்கிரானுங்க பாருங்க.

  நாம வழக்கு போட்டா ‘தலித்’ மக்கள் பத்திய அருமை பெருமைகள் வருவதை தடுத்து விட்டோம்னு கதைவிட தயார் ஆகிட்டானுங்க போல!

 3. Fredrick சொல்கிறார்:

  இதை கண்டித்து எழுத எந்த முற்போக்கு எழுத்தாளருக்கும் நேரம் இல்லை . அதே பத்திரிகையில் கிழித்து கொண்டிருபவர்களுக்கு கூட இதை கண்டித்து எழுத நேரம் இல்ல . பாமர ஜனங்க என்ன செய்வாங்க ?

 4. மு.வி.நந்தினி சொல்கிறார்:

  வணக்கம் மதிமாறன்,
  இந்த ஆகக் கேவலமான தொடர் வெளியான முதல் வாரத்திலே இது பற்றி நண்பர்களிடன் பேசினேன், என்னைப்போல அத்தனை பேருக்கும் இது குறித்து என்ன எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இந்த தொடரை நிறுத்தச் சொல்லி வழக்கு தொடர்ந்தவருடைய முயற்சியை வரவேற்கிறோம்.

 5. கமல் சொல்கிறார்:

  இத் தொடரை கண்டித்து நோட்டிஸ் அனுப்பியுள்ள தோழர்களுக்கும், அதை இங்கே பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி.

 6. tamizachi சொல்கிறார்:

  //குமுதத்தின் ‘நான் தமிழன்‘ என்ற ஜாதி வெறி கட்டுரையை கண்டித்து, நிறுத்தச் சொல்லி, மன்னிப்புக் கேட்கச் சொல்லி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசந்தர் என்றகிற பாலா அவர்களின் முயற்சியில், சமூக அக்கறை கொண்ட 14 வழக்கிறஞர்கள் ஒன்று சேர்ந்து, பத்து நாட்களுக்குமுன் குமுத்திற்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்கள்.//

  நமக்கென்ன வந்தது என்ற அலட்சிய நோக்கம் இல்லாமல் சமூக நோக்கத்தோடு போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

 7. apaavi சொல்கிறார்:

  appadiyae Cho-vin Engey Brahmanan enginra nadagathaiyum
  nirutha vaendum

 8. Mohan சொல்கிறார்:

  செய்வோம் அல்லது செத்து மடிவோம் !
  mohankwt75@yahoo.com
  தமிழனால் முடியாதது எதுவுமில்லை! தமிழனுக்கு முடியாதது எதுவுமில்லை!!
  தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க!! தமிழர் நலம் வாழ்க!!! தமிழ்நாடு வாழ்க!!!!
  எல்லோரும் சமம்! எல்லாமும் சமம்!! எல்லோர்க்கும் சமம்!!!

  1. தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும். புகைப்படம் மற்றும் கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். பெற்றோர் விபரம், சொத்து விபரம், வருமானம் மற்றும் அனைத்து விபரங்களும் இதில் இருக்க வேண்டும். அனைத்து சேவைக்கும் இதுவே போதுமானது.

  2. இரண்டு குழந்தைக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசாங்க உதவிகள், வேலை வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்கு ரூபாய் 10,000/- கொடுக்கலாம். ரூபாய் 5,000/- கையிலும் ரூபாய் 5,000/- குழந்தை பெயரில் வங்கியில் சேமிக்கலாம்.

  3. அனைத்து மாவட்டத்திலும் 10,000 பேர் ஒரே இடத்தில் வசிக்க கூடிய நகரம் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்த அனைத்து தமிழனுக்கும் வீடு கட்ட 10 முதல் 25 சென்ட் நிலம் இலவசமாக வழங்க வேண்டும். 10 சென்ட் நிலம் இல்லாமல் ஒரு தமிழ் குழந்தை பிறக்கவும் கூடாது, 10 சென்ட் நிலம் இல்லாமல் ஒரு தமிழன் இறக்கவும் கூடாது. இந்த நிலம் விற்கவோ, வாங்கவோ அல்லது பிரிக்கவோ அனுமதிக்கக் கூடாது. அடிப்படை வசதிகள் அனைத்தும் இங்கு செய்து கொடுக்க வேண்டும். கண்ட கண்ட இடத்தில் வீடுகள் இருந்தால், இன்னும் 1000 வருடம் ஆனாலும் அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்க முடியாது. ஏன் அந்த ஆண்டவனாலும் முடியாது. இதனால் விளை நிலங்கள் வீடாவதை தவிர்க்கலாம். வயல் மற்றும் விளை நிலங்கள் வீடுகள் ஆவதை தவிர்க்க வேண்டும்.

  4. ஒரு குடும்பத்திற்கு 25 ஏக்கர் நிலத்திற்கு மேல் நிலம் வைக்க அனுமதிக்க கூடாது. பிரதான சாலை ஓரத்தில் ஒரு ஏக்கருக்கு மேல், ஒரு தனி நபர் வைக்க அனுமதிக்கக் கூடாது. அரசு போடும் சாலை அனைத்தும் அனைவருக்கும் பயன்பட வேண்டும். அதிகமான நிலத்தை அரசு கையகப்படுத்தி நிலம் இல்லாதவருக்கு வழங்க வேண்டும். இலவசமாக அரசு கொடுக்கும் நிலத்தை விற்கவோ வாங்கவோ அனுமதிக்கக் கூடாது. நிலத்தை குடியிருப்பு நிலம், விளை நிலம், வயல் நிலம் மற்றும் தொழிற்ச்சாலை நிலம் என பிரிக்க வேண்டும். நிலங்கள் அதன் பிரிவிற்கேற்ப பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

  5. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு மட்டும் அரசாங்க வேலை கொடுக்க வேண்டும்.

  6. அனைத்து சாலைகளுக்கும் 5 வருட உத்ரவாதம் மற்றும் 5 வருட பராமரிப்பு, சாலை போடும் நிறுவனமே செய்ய வேண்டும்.

  7. அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் 5 வருட உத்ரவாதம் அல்லது 5 வருட இலவச பராமரிப்பு, பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமே வழங்க வேண்டும். 5 வருடம் உத்ரவாதம் இல்லாத பொருட்கள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும்.

  8. நதிகள் அனைத்தும் தேசிய மயமாக்க வேண்டும். மத்திய அரசு நதி நீரை பங்கிட்டு அணைகளை பராமரிக்க வேண்டும்.

  9. நமது இயற்கை வளம் அனைத்தும் பயன்ப்படுத்த வேண்டும். இளநீர், கள் மற்றும் அனைத்து பானங்களும் பதப்படுத்தி குப்பியில் அடைத்து விற்க வேண்டும்.

  10. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பேருந்து நிலையம், ஒரு சந்தை, ஒரு காவல் நிலையம், ஒரு விளையாட்டு அரங்கம் ஒரு படிப்பகம் அனைத்தும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதியிலும் இது ஒரே விதமாக ஒரே வடிவத்தில் அமைய வேண்டும்.

  11. ஒரு மாவட்டத்திற்கு ஒரு கண்காட்சி அரங்கம் அமைக்க வேண்டும். அனைத்து பொருட்களின் கண்காட்சியும் வருடம் முழுவதும் இங்கு நடத்தலாம்.

  12. தனியார் பேருந்து மற்றும் வாடகை வண்டிகள் அனைத்தும் 10 வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

  13. சுகாதாரம் இல்லாத ஹோட்டல், உணவு விடுதிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

  14. அனைத்து பேருந்து நிலையத்திலும் கழிவறை சுத்தமாக பேண வேண்டும். பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் இலவசமாக கொடுக்க வேண்டும். தொண்டு நிறுவனம் அல்லது பெரிய கம்பெனி மூலம் இதை நிர்வாகப் படுத்தி, இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கம்பெனி விளம்பரங்கள் வைத்து செலவு ஈடு கட்டலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலைய கழிவறைகளும் மிகவும் மோசமாக உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் மாதம் ஒரு முறை கண்காணிப்பது நல்லது. அனைத்து பேருந்து மற்றும் பேருந்து நிலையத்தை இரவு நேரத்தில் சுத்தப்படுத்த வேண்டும்.

  15. பேருந்துகளில் ரீசார்ஜ் கார்ட் மூலம் பயணசீட்டு கொடுக்கும் நடைமுறையை அமல்ப்படுத்த வேண்டும். இதனால் சில்லறை பிரச்சினைய்யை தவிர்க்கலாம். பேருந்து, பேருந்து நிலையம் மற்றும் பயணசீட்டுகளில் விளம்பரம் செய்து பேருந்து கட்டணத்தை குறைக்கலாம்.

  16. வியாபாரம் பண்ணுவது அரசின் கடமை அல்ல. நல்ல நிர்வாகம் பண்ணுவது தான் அரசின் கடமை. முடிந்தவரை தனியாரிடம் விட்டு விட்டு நல்ல நிர்வாகம் பண்ண வேண்டும்.

  17. இரண்டு தடவைக்கு மேல் முதல்வர் ஆகவோ, மந்திரி ஆகவோ, பாராளுமன்ற உறுப்பினர் ஆகவோ, சட்டமன்ற உறுப்பினர் ஆகவோ இருக்க கூடாது. 75 வயதுக்கு மேல் அரசு பதவிகள் வகிக்க கூடாது. கடைசி வரை கட்சிப்பணி செய்யலாம்.

  18. பொது சேவை செய்யும் அரசியல்வாதிகள், அரசு ரேசனில் கொடுக்கும் உணவை உண்ண வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க வேண்டும். அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும். இதனால் அரசு நடத்தும் நிறுவனங்களின் தரம் உயரும். அப்படி செய்யாத அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும்.

  19. ஆறு, ஏரி மற்றும் குளங்கள் அனைத்தும் நன்றாக ஆழப்படுத்தி சுவர் எழுப்பி பராமரிக்க வேண்டும். பாசன வசதி பெறும் இடங்களில் வீடுகள் மற்றும் ஆலைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.

  20. விவசாயிகளுக்கு விவசாய நிலத்திற்கேற்ப வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். கல்வி கற்க வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

  21. சாலைகள் அனைத்தும் தனியார் நிறுவன பங்களிப்போடு செய்ய வேண்டும். ஒரு கிலோ மீட்டர் சாலை செய்ய ஆகும் செலவை தரும் தனியார் நிறுவனங்களுக்கு, அந்த நிறுவனத்தின் விளம்பர பலகையை அந்த சாலையில் வைக்க அனுமதிக்க வேண்டும். சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவுகள் அனைத்தும் நீக்க வேண்டும். அபாயகரமான வளைவுகளால் அப்பாவி உயிர்கள் பறிபோகக் கூடாது. சாலைகள் அனைத்தும் சர்வதேச தரத்துக்கு மாற்ற வேண்டும்.

  22. எதையும் இலவசமாக கொடுக்கக் கூடாது. குறைந்த விலை அல்லது மானியம் வழங்க வேண்டும். நல்ல தரமான பொருட்கள் பெட்டியில் அடைத்து ரேசன் கடைகளில் விற்க்கலாம்.

  23. ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு படிப்பகம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒரே வடிவத்தில் இது அமைய வேண்டும். இதனால் பராமரிப்பு செலவு குறையும்.

  24. முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்க்கு மறு வாழ்வு மையம் அமைக்க வேண்டும். பிச்சை எடுப்பதை தடை செய்ய வேண்டும். பிச்சையில்லாத, வறுமையில்லாத தமிழ்நாடு அமைய வேண்டும்.

  25. தமிழ்நாட்டின் தலைநகரத்தை திருச்சிக்கு மாற்ற வேண்டும்.

  இன்று சொல்வோம்! நாளை செய்வோம்!!
  நமக்காக அல்ல! நாளைய தலைமுறைக்காக!!

  இனியும் வரும்……………….

  இதை படிக்கும் நண்பர்களே, மேற் கூறிய கருத்துகளில் 50%, உங்களுக்கு உடன்பாடு இருந்தால், உங்கள் நண்பருக்கு அனுப்பவும்.

  உங்கள் கருத்துகளை எழுதுங்கள். நாளைய உலகை படைப்போம். mohankwt75@yahoo.com.

 9. மா.தமிழ்ப்பரிதி சொல்கிறார்:

  வணக்கம் மதி.

  தமிழர்களிடையே சாதி அடிப்படையில் பிளவினை ஏற்படுத்த முனையும் குமுதத்தின் முகத்திரையினைக் கிழிக்கும் தங்களின் பணிக்கு வாழ்த்துக்கள். வழக்குரைஞர் தோழர்.பாலா நல்லதொருப் பணியினை முன்னெடுத்துள்ளார் அவருக்கு தமிழினம் கடமைப்பட்டுள்ளது.

  மா.தமிழ்ப்பரிதி
  http://www.thamizhagam.net/

 10. periyar critic சொல்கிறார்:

  தமிழர் பண்பாட்டில் தாமரை என்ற நூலை சாத்தான்குளம் ராகவன்
  எழுதியிருக்கிறார். மதிமாறன் அதைப் படிக்க வேண்டும். தாமரை என்றால் பாஜக என்று நீங்கள் பிரச்சாரம் செய்யலாம்.ஆனால் பண்பாட்டில் தாமரையின் இடம் வேறு. கவிஞர் தாமரை என்று
  ஒருவர் இருக்கிறார். அவர் இந்த்துவ எதிர்ப்பாளர். அவர் பெயர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மதிமாறன் எழுதினாலும் அதில்
  வியப்பதற்கொன்றுமில்லை.

 11. periyar critic சொல்கிறார்:

  குமுதம் என்ற மலரும், தாமரையும் வெவ்வேறு மலர்கள். இதைக் கூட அறியாத மதிமாறனை எந்த ஆரம்பப்பள்ளியில் கொண்டு போய்
  சேர்ப்பது.

 12. Pingback: குமுதம் ‘நான் தமிழன்’ & தமிழ்நாட்டின் சாதி அபிமானம் « 10 Hot

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s