‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -3

நேர்காணல்; வே. மதிமாறன்

msv1.jpg

* உங்களைப் பற்றி சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன். ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில், ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை இனிமையாகச் சொன்னாலும், அதன் உள்ளே ஒரு சோக உணர்வு ஓடிக் கொண்டே இருக்கிறதே? அதை நீங்கள் திட்டமிட்டு செய்தீர்களா?

notes.jpg

அதான் மெலடி. காதல்ல, லவ் சாங்ல கச்சா முச்சான்னு கூத்தடிச்சிக்கிட்டு பாடமுடியாது. அப்படி மென்மையாதான் பாட முடியும். அதுல ஒரு சோகம் இருக்கும். அதான் மெலாடியோட இனிமை. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து… பார்த்த ஞாபகம் இல்லையோ… இந்தப் பாடல்களில் கூட அந்த உணர்வு இருக்கும். சோகத்துக்குள்ளே இனிமை இருக்கும். இனிமை உள்ளார சின்ன சோகம் இருக்கும். அதுதான் அந்தப் பாட்டின் சோக உணர்வுக்குக் காரணம்.

* ‘பாலிருக்கும்… பழமிருக்கும்… பசியிருக்காது….’ இந்தப் பாடலின் சிறப்பு, பெண் குரல் வார்த்தைகளால் பாடும். ஆண் குரல் பாடல் முழுக்க ‘ஹம்மிங்’ செய்து கொண்டே இருக்கும். இந்த வித்தியாசமான கற்பனையின் பின்னணி என்ன?

siva.jpg

அந்த ‘ஹம்மிங்’ என்னுடைய குரல்தான். புதுசா பண்ணணும்னு திட்டமிட்டு பண்ணதுதான். ஆண்-பெண் உறவுப் பற்றி, ஆண் பாடுனா பெண்ணுக்கு வெட்கம் வரும். பெண் பாடுனா ஆணுக்கு வெட்கம் வராது. அதானால ‘ஹம்மிங்’ ல பாடிடுறான்னு வச்சோம். புதுமை, புதுமை, புதுமை-பழமை மாறாதா புதுமை.

* இளம் விதவையின் சோகத்தை பாடலின் வார்த்தைகளையும் மீறி உருக்கியிருந்தீர்கள் ‘பாக்கியலட்சுமி’ படத்தில் ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ என்ற பாடலில். குறிப்பாக ‘கணவன் என்றால் அவன் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி’ என்ற முடிவுன் தொடக்கத்தில், ‘ஷெனாய்’, இசைக்கருவியைப் பயன்படுத்தியிருப்பீர்கள். அதுவரை மெட்டு கலக்கமான மனநிலையை உருவாக்கி அழவைத்திடுமோ என்ற நிலையில் இருக்கும்போது, அந்த ‘ஷெனாய்’ ஒலி அழவைத்தே விடுகிறது. நிற்கதியாய் இருக்கிற பெண்ணின் சோகம், ஏக்கம், விரக்தி என்று உணர்வுகளால் தளும்பி இருக்கிறது ‘சந்திர கவுன்ஸ்’ ராகத்தில் அமைந்திருக்கிற அந்தப் பாடல்….

notes.jpg

அதான் மூடு மியூசிக். அந்த மூடை இசையமைப்பாளர் உணர்வது மாதிரி கதையை விளக்கி சொல்ற இயக்குநரோட திறமையைப் பொறுத்துதான் நல்ல பாட்டு அமையும். கதையை சரியாப் புரிஞ்சுக்கிற இசையமைப்பாளன் அந்தக் கதாபாத்திரமாவே மாறிடுவான். கண்ணுல தண்ணி வந்ததுன்னு சொன்னீங்க இல்ல, கண்ணுல தண்ணி வரணும்னுதான் அங்க ‘ஷெனா’யை வச்சது.

* ‘ஷெனாய்’ மிகச் சிறந்த இசைக்கருவி. அதில் மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற உணர்வுகளைக் கூட தரமுடியும். ஆனால், ‘சோகம் என்றால் ஊது ஷெனாயை’ என்பது போல் அதைத் துக்க உணர்விற்கே நீங்கள் நிறையப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

notes.jpg

சோகம், துக்கம் என்றில்லை எல்லா உணர்வுகளுக்கும் ஷெனாயை கொண்டு வரலாம். பக்தி, மகிழ்ச்சிக்குக்கூட பயன்படுத்தலாம். ‘சரவணப் பொய்கையில் நீராடி’ என்ற பாட்டிற்கும் ‘ஷெனா’ யை பயன்படுத்தியிருக்கிறேன்.

தொடரும்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

3 Responses to ‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

 1. வே. மதிமாறன் சொல்கிறார்:

  பழைய பின்னூட்டங்கள்:

  venkat (05:07:19) :

  எம்.எஸ். விஸ்வநாதன்,இளையராஜா…இந்த வரிசையில் இன்று இருக்கும் கண்றாவிகளை நினைத்து கூட பார்க்க முடியவில்லை…

  1 02 2008
  kalyanakamala (12:28:47) :

  கணவன் என்றால் அவன் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி, பூமாலையில் ஓர் மல்லிகை, முத்துக்களோ கண்கள், பாலிருக்கும்… பழமிருக்கும்… பசியிருக்காது இதெல்லாம் இனிமையான நினைவுகளைத் தரும் மிக இனிமையான பாடல்கள் . கடவுள் தந்த வரப்பிரசாதம்.
  அன்புடன்
  கமலா

  2 02 2008
  Nakkeran (04:20:55) :

  இந்தக் காலத்துப் பாட்டுக்கள் ஒரே டப்பாங் கூத்து. அவற்றைச் செவிமடுக்கும் மேலை இனத்தவர்கள் தமிழர்களை ஆபிரிக்க காட்டுமிராண்டிகளோடு சேர்த்துப் பார்க்க வைத்துவிடும். பாட்டுக்களுக்குப் பொருளும் இல்லை இசையில் இனிமையிலும் இல்லை. துணை இசைக்கருவிகள் பாட்டை அமுக்கிவிடுகிறது. கண்ணதாசன் திரும்பி வந்து பாடல் இயற்றிக் கொடுக்க விசுவநாதன் அதற்கு இசை அமைக்க வேண்டும்!

  2 02 2008
  ஜிரா (எ) கோ.இராகவன் (10:46:41) :

  மெல்லிசை மன்னரின் இசைக்கோப்புகளும் கோர்வைகளும் இன்றும் கேட்கச் சுகமானவை. வலிக்கும் பொழுதும் களிக்கும் போதும் சுகிக்கும் போதும் சுவைக்கும் போதும் நினைத்துப் பாடச் சிறந்தவை.

  மெல்லிசை மன்னரின் ஹம்மிங் “பாலிருக்கும் பழமிருக்கும்” பாட்டில் மிக இனிமையாக இருக்கிறது. அவருடைய குரலும் மிக இனிமையானதே. சொல்லத்தான் நினைக்கிறேன் என்று அவர் இசையிலும்….வி.குமார் இசையிலும், இளையராஜாவின் இசையிலும், கங்கையமரன் இசையிலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் பாடியிருக்கிறார் என்றால் அவருடைய இசைத் தாக்கத்தை என்னவென்று சொல்வது.

  24 02 2008
  manimagan (13:44:17) :

  m.s.v evvalavu paadupattu, tune pottu ,,hit koduthurukkaru.
  indha amma ,athaan namma kalyana kamala amma,
  கடவுள் தந்த வரப்பிரசாதம்nu solli
  kaalipannittangale….

  thiramaiyai, ulaippai,aalndha eedupaattai madhikkum nilai
  endru varumo ?

  27 02 2008
  kalyanakamala (14:30:07) :

  எதிர் பார்த்தேன் இந்த பதிலை உங்களிடமிருந்து. வந்து விட்டது.உழைப்புக்கு என்றுமே மதிப்பு தர நான் பயந்ததில்லை. நான் சொன்னது வேற consept. ந‌ன்றி!
  கமலா

 2. RV சொல்கிறார்:

  மணிமாறன்,

  ஒரு பதிவுக்கும் அடுத்ததுக்கும் நடுவில இவ்வளவு தாமதம் பண்ணாதீங்க! ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கு! தொடரின் அடுத்த பகுதியை எதிர்பார்த்திருக்கிறோம். என்ன இனிமையான பாடல்களை நினைவுபடுத்தி இருக்கீங்க?

  இந்த பேட்டியை எப்ப எடுத்தீங்க? அந்த விவரமும் கொடுங்களேன்!

 3. ஜிரா (எ) கோ.இராகவன் சொல்கிறார்:

  மிக அருமையான தேர்ந்தெடுத்த கேள்விகள். அவைகளுக்குப் பொருத்தமான மெல்லிசை மன்னரின் விடைகள்.

  காதல் கட்டிப்புரளவது மட்டுமல்ல என்பதை இசையாலும் சொல்லியிருக்கிறார். சைவக் காதலுக்கான பாடலிது. அசைவக் காதலுக்கும் மெட்டிட்டிருக்கிறார் மெல்லிசை மன்னர். இன்பமே உந்தன் பேர் பெண்மையோ…. பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற வகைப் பாடல்களைச் சொல்லலாம்.

  ஷெனாய் என்பது வடக்கில் மங்கல வாத்தியம். நம்மூர் நாயனம் மேளம் போல. ஆனால் அதைச் சோகத்திற்குத் தமிழகம் தத்தெடுத்துக்கொண்டாலும்…. சரவணப் பொய்கையில் பாட்டிலும் ஷெனாய் இருக்கிறது என்ற செய்தியே வியப்பூட்டுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s