Monthly Archives: மார்ச் 2009

‘உடுமைலை நாராயணக்கவி, என்னை ஓங்கி அறைஞ்சார்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -5 நேர்காணல்; வே. மதிமாறன் * கண்டசாலாவின் குரல் தனித்த ஆளுமை மிக்கது. அவரின் குரலுக்கு மயங்கிய ஆந்திரமக்கள் ‘தன் உடமைகளைக் கூட அவருக்கு எழுதி வைக்கிற அளவுக்கு இருந்தார்கள்’ என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அவரைச் சுத்தமாக பயன்படுத்திக் கொள்ளவில்லையே? இசையமைப்பாளர் சுப்பராமன் இசைக்குழுவில் உதவியாளரா இருந்தப்ப, தேவதாஸ் படத்துல வர … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

‘பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு, மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -4 நேர்காணல்; வே. மதிமாறன் * எளிமையான மெட்டு. அதிகமான வாத்தியக்கருவிகள் இல்லாமல் உருவான ‘சக்கபோடு போடு ராஜா… உ(ன்) காட்டுல மழை பெய்யுது…’ இந்தப் பாட்டுக்கு இணையாக அதனோடே, எகத்தாளமானப் பேச்சு ( ஆமா, மழைபெய்யுது…நீ வந்து கொடை புடி… ஏன்டாங்…) என்று வித்தியாசமா அமைஞ்சிருந்தது… ஆமாம், வித்தியாசமாக செய்யணும்னுதான் அதை … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -3 நேர்காணல்; வே. மதிமாறன் * உங்களைப் பற்றி சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன். ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில், ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை இனிமையாகச் சொன்னாலும், அதன் உள்ளே ஒரு சோக உணர்வு ஓடிக் கொண்டே இருக்கிறதே? … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

‘பாலைய்யா என் முகத்த தரையில வைச்சி தேச்சாரு’

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு சொல்லத்தான் நினைக்கிறேன் -2 நேர்காணல்: வே. மதிமாறன் * அப்போ உங்க நடிப்பு ஆசை அதோட நின்னுப் போச்சா? டி.எஸ். பாலைய்யா அண்ணனோட பழக்கம் கிடைச்சது. அவருக்கு என்னை நடிகனாக்கிப் பாக்கணும்னு ஆசை. அவருகூட சேலம் பக்கத்துல ஆத்துர்ல ராமாயணம் நாடகத்தில நடிச்சேன். அதுல எனக்கு, சீதை … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

  மெல்லிசை மன்னருடன், வே. மதிமாறன் ரகுமானின் ஆஸ்கார் விருதுக்கு பின், இன்றைய இசை கூச்சல்களை முன்னிட்டும், எல்லாவிஷயங்களிலும் ‘தன்னை முன்னுறுத்திக் கொள்வதற்காகவே’ என்ற அற்ப காரணத்துக்காக மட்டுமே கருத்துச் சொல்கிற, எழுதுகிற – இசையைப்பற்றி ஒரளவுக்கு கேள்வி ஞானம் கூட இல்லாமல் உளறுகிற, முட்டாள் எழுத்தாளர்களின் ‘மேதை’ தனத்தைக் கண்டித்தும் மீண்டும் இதை வெளியிடுகிறேன். … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்

இளையராஜா பற்றி அ.மார்க்ஸ் + ‘தீராநதி’ அவதூறுகள்

தில்லை நடராஜன் மீது தீராத பத்தி கொண்டு இந்து மத அபிமானியாக – அப்பாவியாக வாழ்ந்தவர் நந்தனார். இருந்தும், `தீண்டப்படாதவர் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதவர் ஆயினர்?’ என்ற நூலில் டாக்டர் அம்பேத்கர், முதல் பக்கத்திலேயே பின்வருமாறு அறிவிக்கிறார்: `தீண்டப்படாதவரிடையே பிறந்து நமது பக்தியாலும், ஒழுக்க நலன்களாலும் அனைவரின் பெருமதிப்பைப் பெற்று புகழ்மிகு திருவருட்செல்வர்களாகத் திகழ்ந்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 35 பின்னூட்டங்கள்

இசைஞானி இளையராஜா மீதான அவதூறு!

தலித் முரசு இதழில் 2001 ஆம் ஆண்டில், நாட்டுப் புறப் பாடல்கள் ஆய்வாளரும், மிகச்சிறந்த மக்கள் பாடகரும், புதுச்சேரி பல்கலைகழத்தின் நாடகத்துறைத் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் கே.ஏ. குணசேகரன் இசைஞானி இளையராஜவின் இசையைப் பற்றிய தொடர் எழுதினார். அந்தத் தொடரின் இறுதிப் பகுதியில் இசைஞானி இளையராஜாவைப் பற்றி, இசைக்கு வெளியே சென்று கடுமையான விமர்சனங்களை எழுதி … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்