யாரா இருக்கும் அது?

hc-clash26

’தமிழக அரசுக்கு எதிராக சதி’ முதல்வர் அறிக்கை

 • தமிழகம் முழுவதும் ஏற்பட்ட, மின்சார தட்டுப்பாட்டால், பொது மக்கள் பெரும் அவதி. பல சிறுதொழிற்சாலைகள் மூடப்பட்டன. பல தொழிலாளர்கள் வேலை இழப்பு.
 • உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு.

 • வீட்டு வாடகை, நிலம், கட்டுமானப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அவதி.
 • டாஸ்மாக் மதுக்கடைகளினால் பல குடும்பங்கள் சீரழிவு.

 • அரசு பேருந்துகளில் மறைமுக விலையேற்றம்.
 • ராஜா என்கிற தமிழக அமைச்சர், ஈரோட்டில் நிலமோசடி வழக்கில் ஈடுப்பட்டார், என்பதால் அமைச்சர் பதவி பறிப்பு.
 • திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தில் தேசிய ஊரக உறுதித் திட்டத்தில் பணிபுரிந்த மக்கள், முறையான கூலி கேட்டு மறியல் செய்த போது அவர்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு.

 • ஈழத் தமிழர்களை கொலை செய்யும், சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு உதவி. தமிழர்கள் தீக்குளிப்பு. தமிழகம் கொந்தளிப்பு.  தமிழகஅரசின் மெத்தனம்.

 • ‘ஈழத்தமிழர்களுக்கு எதிரானப் போரை நிறுத்து’ என்ற பொதுநோக்கில் தங்கள் நலன்களைப் புறம் தள்ளி தமிழர்களுக்காகப் போராடிய வழக்கறிஞர்கள் மீது தமிழக போலிசாரின் கொலைவெறித் தாக்குதல். படுகாயமுற்ற வழக்கறிஞர்கள் மீதே, கொலை முயற்சி வழக்கு.

ஆமாம், யாரா இருக்கும் அது?

அதாங்க, முதல்வர் கலைஞர் சொல்லி இருக்கிறாரே,  ‘தமிழக அரசுக்கு எதிராக சதி பண்றாங்க’ என்று.  அதுதான் யாருன்னு தெரியிலையே?

-வே. மதிமாறன்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

6 Responses to யாரா இருக்கும் அது?

 1. jp சொல்கிறார்:

  CIA or ISI… No one else dislikes his governence.!!

 2. kalagam சொல்கிறார்:

  ஒரு வேளை நக்சலைட்டா இருக்குமோ

 3. ஜிரா (எ) கோ.இராகவன் சொல்கிறார்:

  இந்தக் கேள்விக்கு விடை ரொம்ப லேசு. திமுக தலைமைகிட்ட இருந்து இந்தக் கருத்து வர்ரதால….. யாரா இருக்கும்னு நீங்க கேட்ட கேள்விக்குக் காரணம் அதிமுகன்னு சொல்லனும்.

  ஏன்னா கருணாநிதி எதிர்ப்புன்னா… அதைச் செய்ய அதிமுககாரங்களுக்கு மட்டுமே காரணம் இருக்குறதாத்தானே வருசக்கணக்குல சொல்லிக்கிட்டிருக்காங்க. திமுக எதிர்ப்பாளர்னா… அவங்க அதிமுக ஆதரவாளர்னு அசிங்கப்படுத்தி வாய மூட வெச்சாங்க. இனிமே அது முடியாதுன்னு நெனைக்கிறேன். அதிமுகவை எந்த அளவுக்கு எதிர்க்க வேண்டியிருக்கிறத்தோ… அந்த அளவுக்கு திமுகவும் எதிர்க்கப்பட வேண்டியதே என்பது என் கருத்து. காங்கிரசை மதிக்கவே கூடாதுங்குறதும் என்னோட கருத்து. மானமுள்ள தமிழன் இந்த மூனு கட்சிகளுக்கும் ஓட்டுப் போடவே கூடாது.

 4. Kelvi.Net சொல்கிறார்:

  உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

  கேள்வி. நெட்

 5. Mannavan சொல்கிறார்:

  வே.மதிமாறன்.

  என் பெற்றோர், பிறப்பு, வளர்ப்பு, படிப்பு என்று என்னை பற்றி தனிப்பட்ட முறையில் அறிவதைவிடவும் நான் என் கொள்கை சார்ந்து அறியப்படுவதையே விரும்புகிறேன்.

  நான் மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவன். இந்த உலகை இவர்களின் கண்களின் வழியாகத்தான் பார்க்கிறேன். அதற்குச் சாட்சி என் எழுத்துக்களே.

  Mathimaran Anna. arputham. thalaivanankukiren

 6. சுப்ரமணியசாமி சொல்கிறார்:

  சதி வாந்தி பேதி என்று எதையாவது கூறி பிரச்சினையை திசை திருப்பி நாம் என்ன சொல்ல வந்தோம் என்பதை நம்மையே மறக்க செய்வதில் நம் தாத்தாவுக்கு நிகர் தாத்தா தான் . அடித்து மண்டையை உடைத்து விட்டு யார் மேல் தவறு என்பதை கண்டுபுடிக்க டெல்லி படை வருகிறது . அது வந்து சொரியும் வரை காத்திருங்கள் என்று கூறுகிறார். ஆனால் ஒன்று. கருணாநிதி என்பவரிடம் நாம் நிச்சயம் தமிழனுக்காக எதாவது செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அவரை எதிர்பதாக நினைத்து எதிர் அணியை ஆதரித்தால் நிச்சயம் அது ராஜா பக்ஷே வை ஆதரிப்பது போல ஆகி விடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s